கூகிள் தேடு பொறிக்கு புரியும் விதத்தில் பதிவிடுவது கொஞ்சம் மெனக்கெடல் உள்ள வேலை. ஆனால் இது ரொம்ப பலனளிக்கக் கூடியது.
கொஞ்சம் சுருக்கா பாப்போம்
படங்களை பதிவிடும் பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை
1. படம் சும்மா dsc223.jpg என்றுதான் இருக்கும். முதலில் இதை பெயர்மாற்றம் செய்ய வேண்டும். படம் ஒரு நிகழ்வை பற்றி என்றால் அந்த நிகழவை படத்தின் பெயராக மாற்ற வேண்டும். ஒரு தனிநபர் என்றால் படம் அவர் பெயருக்கு மற்றப்பட வேண்டும்.
இந்தப் பதிவிற்கு காரணமான தாரா பாரதி படத்தை எடுத்துக்கொண்டு கொஞ்சம் படிப் படியாக பார்ப்போம். நாணல் கலைஇலக்கிய பெருமன்றம் அனுப்பிய கவிஞரின் படம் இப்படி இருந்தது.
மிக நீண்ட ஒரு எண் இதன் பெயராக இருப்பதை கவனியுங்கள். பொதுவாக முகநூல் நீங்கள் என்ன பெயரில் கொடுத்தாலும் அதற்கு ஒரு பெயரை எண்களை வைத்தே தரும். (கூகிள் பிளஸ் என்கிற சமூக வலைத்தளம் நீங்கள் தரும் பெயரை அப்படியே பராமரிக்கும்!). சரி இப்போது இந்தப் படத்தை இப்படி மாற்ற வேண்டும்.
ரொம்ப சிரமம் அல்ல படத்தை தேர்ந்தெடுத்து எப் டூ (F2)அடித்தால் படத்தின் பெயர் மாற்றும் வசதியை அறியலாம். இப்படி மாற்றலாம்.
தாரா பாரதி படத்துக்கு என்னுடைய பரிந்துரைகள்

அப்புறம் நீங்கள் இடுகின்ற பெயர் மிகச் சரியானதாக எழுத்துப்பிழை இல்லமால் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் என்ன சாத்தியமோ அத்துணை பெயரையும் ஒருங்கேவும் இடலாம்.
எப்படி அடித்தாலும் இந்தப் படம் வந்துவிழும். சரி தோழர்களே அடுத்த படியில் நீங்கள் உங்கள் வலைப்பூவிலோ, தளத்திலோ இந்தப் படத்தை இணைத்தால் சில வேலைகளை செய்தால் தான் கூகிள் ஆண்டவருக்கு புரியும்.
அவை
உங்கள் படம் உங்கள் வலைப்பூவில் தரவேற்றம் செய்யப்பட்டஉடன் அந்தப் படத்தை சுட்டியால் அழுத்தினால் ... இப்படி வரும்.
ஸ்மால், மீடியம், லார்ஜ், எக்ஸ்-லார்ஜ், ஒரிஜினல் சைஸ், என்று படத்தின் அளவை கூட்ட குறைக்க வசதிகள் வரும்.
பின்னர் லெப்ட், சென்டர், ரைட் என்ற வசதிகள். இதன் பின்னர் ஆட் காப்சன் என்ற வசதியை பயன்படுத்தி படத்தின் பெயரினை தரவும். ஒரு சிறிய பெயர் போதும். அடுத்து உள்ள பிராப்பர்டீஸ் ரொம்ப முக்கியம். இதை கிளிக் செய்தால் இப்படி ஒரு பெட்டி வரும்.
இங்கே நீங்கள் இடும் படம் குறித்த விவரங்கள்தான் கூகிள் ஆண்டவருக்கு புரியும். எனவே நன்கு சிந்தித்து இந்த தரவுகளை விரிவாக இருமொழியிலும் இடவும்.
தாரா பாரதி, தமிழ், தமிழ் கவிஞர், புதுக்கவிதை, புதுக்கவிஞர், தாரா, பாரதி, திண்ணையை இடித்து தெருவாக்கு
இதை அப்படியே ஆங்கிலத்திலும்
thaaraa bharathi, thaaraa, bharathi, tamil poet, puthukkavithai, tamil, poem, thinnaiyai idiththu theruvaakku
என அடித்து மொத்தமாக
thaaraa bharathi, thaaraa, bharathi, tamil poet, puthukkavithai, tamil, poem, thinnaiyai idiththu theruvaakku, தாரா பாரதி, தமிழ், தமிழ் கவிஞர், புதுக்கவிதை, புதுக்கவிஞர், தாரா, பாரதி, திண்ணையை இடித்து தெருவாக்கு
டைட்டில் டெக்ஸ்ட் மற்றும் ஆல்ட் டெக்ஸ்ட் பட்டிகளில் போட்டால் கூகிளார் புரிந்துகொள்வார். அப்புறம் ஒரு 12 மணிநேரம் காத்திருக்க வேண்டும். கூகிள் தனது தேடலினை மேம்படுத்தி தாரா என்று கேட்போருக்கெல்லாம் கொடுக்கும்.
பயனுடையதாக இருந்ததா
உங்கள் கருத்தரிய
காத்திருக்கிறேன்
அன்பன்
மது
ஒரு கவிதை
புதிய பதிவர்களுக்கு மிகவும் உதவும் விளக்கமான பதிவு...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
அருமை அண்ணா. பயனுள்ளத் தகவலைக் கொடுத்து அசத்தி விட்டீர்கள். கண்டிப்பாக என்னைப் போன்ற புதியவர்களுக்கு பயன்படும். பகிர்வுக்கு நன்றீங்க அண்ணா.
ReplyDeleteஇது மட்டும் போதாது பாண்டியன் சமயங்களில் கூகிள் நமக்கு பல்ப் கொடுக்கும் பிரச்னை என்னவென்றால் தேடுவோர் நாடுவதை முந்தித் தரும் கூகிள்...
Deleteவிக்கியில் பதிவேற்றம் செய்தால் நலம்...
பயனுள்ள தகவல்... எனக்கும் புதிது....
ReplyDeleteபயனுள்ள பதிவு சகோ ஆசிரியர் அல்லவா அழகாக தெளிவாக படங்களோடு விளக்கம் தந்துள்ளீர்கள். ஏற்கனவே இவைகளை செய்துள்ளேன். ஆனால் அதில் எழுத்துகளின் வடிவங்களையோ நிறங்களையோ மாற்ற வசதி இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்கள் .அத்துடன். இவை படத்தின் அருகிலும் உள்ளே கேசரைகொண்டு செல்லவும் தான் வரும் இல்லையா ?எப்போதும் தெரியும்படி எப்படி படத்தினுள் வாசகங்களை எழுதுவது என்று தெரியவில்லை. ஒரு வேளை word ல் வைத்து செய்துவிட்டு படத்தை காப்பி பேஸ்ட் செய்கிறார்களா தெரியவில்லை. அப்படி இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதை முடிந்தால் தெரியப் படுத்துங்கள் சகோ. மிக்க நன்றி ! தொடர வாழ்த்துக்கள்....!
ReplyDelete