முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் கருவி நூல்கள் பட்டியல்
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
ஒரு
வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டுமென பார்த்து
வாங்குகிறோம்.அழிந்து போகும் பொருட்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கிறோம். தமிழ் செம்மொழி உயர்மொழி என பெருமை பேசும் நாம், நம்
வீட்டில் அழியாச்செல்வத்தை தரக் கூடிய நம் தாய்மொழியின் சிறப்பை
உனர்த்துகின்ற தமிழ்நூல்கள் சிலவற்றையாவது வைத்திருக்க வேண்டாமா?
அப்படியெனில் என்னென்ன நூல்கள் நாம் வைத்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு
தமிழாசிரியர் வைத்திருக்க வேண்டிய தரமான நூல்கள் எவைஎவை என்ற என்
தேடல்களுக்கு விடையாக இன்றைய கணினி பயிற்சியில் எங்கள் முதன்மைக் கல்வி
அலுவலர் அவர்கள் தந்த கருத்துக்கள் அமைந்தன.
உங்கள் வீட்டில் அவற்றில்
சிலவாயினும் கட்டாயம் இருக்க வேண்டும்.நம் தாய்மொழியின் பெருமை உணர்த்தும்
நூல்கள் நீங்கள் வைச்சுருக்கீங்களா? பாருங்க.. இலக்கிய நூல்கள்
திருக்குறள் சங்க இலக்கியம் பதினெண்கீழ்க்கணக்கு சிலப்பதிகாரம் மணிமேகலை கம்பராமாயணம் நீதிநூல்கள் தனிப்பாடல்திரட்டு
கவிதைகள்
பாரதியார் பாரதிதாசன் கண்ணதாசன் வைரமுத்து அப்துல்ரகுமான் காசிஆனந்தன் பட்டுக்கோட்டையார் தமிழ் ஒளி
தொல்காப்பியம் நன்னூல் யாப்பருங்கலக்காரிகை தண்டியலங்காரம் நம்பியகப்பொருள் புறப்பொருள் வெண்பா மாலை நற்றமிழ் இலக்கணம் அடிப்படைத்தமிழ் இலக்கணம் தமிழ் இலக்கணம் இலக்கணகொத்து
சிறந்த தமிழ் பற்றுள்ள மனித நேயமிக்க முதன்மைக்கல்வி அலுவலர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.ஒரு அதிகாரி என்ற பயமின்றி நாங்கள் இருந்தோம்.தமிழ் தண்மையானது என்பதற்கு இவரே உதாரணம்
.முகப்பூச்சு இல்லை .தமிழை நேசிப்பவள் என்பதால் உணர்ந்து கூறப்பட்ட
பதங்கள்.இதன் மூலம் என் மனம் நிறைந்த நன்றியை அவர்களுக்கு
தெரிவித்துக்கொள்கிறேன்.
மாங்கு மாங்கு என்று நீங்கள் தட்டச்ச நான் சும்மா காபி பேஸ்ட் செய்துவிட்டேன்.... இருந்தாலும் கோபப் படாமல் வாழ்த்தும் நன்றியும்... நன்றி நாங்களும் சொல்லணும் இல்லையா.
உடனடியாகவும் சரியாகவும் பதிவேற்றிய கவிஞர் கீதாவின் படைப்பிலக்கியச் சுறுசுறுப்புக்குப் பாராட்டுகள். அதை -சும்மா காதுல பொக விட்டுக் காலத்தப் போக்காம- பெருந்தன்மையாகப் பகிர்ந்துகொண்ட கஸ்தூரியின் பண்பிற்குப் பாராட்டுகள். ஆனா...ரெண்டு கேள்வி தொக்கி நிக்குதே!... இதை கீதா எதுல எழுதியிருந்தாங்களோ அந்த இணைப்பைத் தந்திருக்கலாம் என்பது ஒன்று. அவர்கள் ஏன் தனது வலைப்பக்கத்தில் இதை எழுதவில்லை என்பது (மற்றொன்று... சரியா தப்பான்னு தெரியாம இப்படி மனசுல பட்டத படக்குன்னு சொல்லிச் சொல்லியே கெட்டபேரு வாங்கிக்கிறது உனக்குப் பொழப்பாப்போச்சுடா முத்துநிலவா... )
அது ஒரு முகநூல் பதிவு எனவே நான் இணைப்பை தரவில்லை அவர்கள் அப்லோட் செய்த அடுத்த நிமிடமே நான் சுட்டதால் அவர்கள் அவர்கள் வலைப்பூவில் பிரசுரிப்பதை தவிர்த்திருக்கலாம் ... ஓ கேயா அண்ணாத்தே
நல்ல கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteமாங்கு மாங்கு என்று நீங்கள் தட்டச்ச நான் சும்மா காபி பேஸ்ட் செய்துவிட்டேன்.... இருந்தாலும் கோபப் படாமல் வாழ்த்தும் நன்றியும்... நன்றி நாங்களும் சொல்லணும் இல்லையா.
Deleteநல்லதொரு சிறப்பான தொகுப்பு...
ReplyDeleteகவிஞர் கீதா அவர்களுக்கு பாராட்டுக்கள்... நன்றிகள்...
நல்லதொரு பின்னூட்டம். தொகுப்பு முனைவர். நா. அருள் முருகன், முதன்மை கல்வி அலுவலர், புதுக்கோட்டை
Deleteதட்டச்சு கவிஞர் கீதா இருவரையுமே தாங்கள் பாராட்டியிருப்பது எனக்கு மகிழ்ச்சி ...
nandri sir
Deleteசகப்பதிவாளரின் பதிவைப் படித்ததும் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பகிர்வது என்பது ஆரோக்கியமான விசயம், தொடரட்டும் தங்கள் பணி.
ReplyDeleteகவிஞர் கீதா சகோதரி அவர்களுக்கும் அன்பார்ந்த நன்றிகள். அவர்களின் வலைத்தளச் சுட்டியை கொஞ்சம் சொல்லுங்களேன் அய்யா.
ReplyDeletehttp://www.velunatchiyar.blogspot.in/
Deleteசகோதரி கீதா அவர்களின் வலை..
உடனடியாகவும் சரியாகவும் பதிவேற்றிய கவிஞர் கீதாவின் படைப்பிலக்கியச் சுறுசுறுப்புக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஅதை -சும்மா காதுல பொக விட்டுக் காலத்தப் போக்காம- பெருந்தன்மையாகப் பகிர்ந்துகொண்ட கஸ்தூரியின் பண்பிற்குப் பாராட்டுகள்.
ஆனா...ரெண்டு கேள்வி தொக்கி நிக்குதே!...
இதை கீதா எதுல எழுதியிருந்தாங்களோ அந்த இணைப்பைத் தந்திருக்கலாம் என்பது ஒன்று.
அவர்கள் ஏன் தனது வலைப்பக்கத்தில் இதை எழுதவில்லை என்பது
(மற்றொன்று... சரியா தப்பான்னு தெரியாம இப்படி மனசுல பட்டத படக்குன்னு சொல்லிச் சொல்லியே கெட்டபேரு வாங்கிக்கிறது உனக்குப் பொழப்பாப்போச்சுடா முத்துநிலவா... )
அது ஒரு முகநூல் பதிவு எனவே நான் இணைப்பை தரவில்லை அவர்கள் அப்லோட் செய்த அடுத்த நிமிடமே நான் சுட்டதால் அவர்கள் அவர்கள் வலைப்பூவில் பிரசுரிப்பதை தவிர்த்திருக்கலாம் ... ஓ கேயா அண்ணாத்தே
Deleteayya udane eluthiten
Delete