சில ஆண்டுகளுக்கு முன் டிரைவிங் கற்றுக்கொள்வதற்காக புதுகையின் ஈஸ்வரி டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்திருந்தேன். வாழ்வின் பல்வேறு தளங்களில் இருந்த அனைவரும் ஒன்றாய் ஒரே இடத்தில் கூடியது ஒரு வித்யாசமான அனுபவம். ஒருவர் நல்ல அத்தேலட், படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். இன்னொருவர் ஆட்டோ ஓட்டுனர். எப்படியும் பெரிய வண்டி ஒட்டவேண்டும் என்று வந்தவர்.
இவர்களில் பெரியார்பாண்டி கொஞ்சம் சுவாரஸ்யமானவர். ஒருமுறை ஒரு நால்ரோட்டின் அருகே இவரை ஒரு உணவகதில் இறக்கிவிட்டு எங்கள் பயிற்சி ஆசிரியர் சொன்னார் "இந்தப் பயன் இந்தக் கடையில் புரோட்டா மாஸ்டர், சம்பளம் ஒரு நாளைக்கு எழுநூறு." வண்டியில் பாதிபேர் ஆகா நல்ல சம்பளமாச்சே என்றனர். பயல்கிட்ட திறமை இருக்கு கடை நல்லா ஓடுது குடுக்குறாங்க என்று பொதுவாய் சொன்னார் ஆசிரியர்.
அதன் பின்னர் அந்தக் கடைக்கு போகும் போது நட்பாய் சிரித்து நண்பரானார் பெரியார் பாண்டி. சுவையும் தரமும் நன்றாக இருந்ததால் நானும் ஒரு ரெகுலர் கஸ்டமர். சில வருடங்களுக்கு பின்னர் பாண்டியை கடையில் காணவில்லை. எங்கே என்று கேட்டபோது சொன்னார்கள். அவனுக்கு கிட்னி பிரச்சினை மருத்துவத்திற்கு சென்றுஇருக்கிறான் என்றார்கள்.
அப்படி ஒன்னும் கெட்டபழக்கம் இல்லாத ஆளாச்சே என்ன ஆச்சு என்று கேட்டவுடன் என்ன சார் தோசைக்கல்கிட்ட இரவு முழுதும் நிக்கிற வேலை இடுப்புக்கு கீழ எப்பவும் சூடுதான். தினம் எண்னை வைச்சு குளிக்கணும், தினம் இளநீர் குடிக்கணும். என்ன செய்தாலும் சூடு வேலைய காட்டிடும் சார் என சொல்லிவிட்டு பார்சலை கட்ட ஆரம்பித்தார்.
ஒரு நாளுக்கு எழுநூறு ரூபாய் சம்பளத்திற்கு பாண்டி கொடுக்கும் உண்மையான விலை எனக்கு அன்றுதான் புரிந்தது. நான் புரோட்டவிற்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு திரும்பினேன்.
என்னோமோ தெரியலை அன்றிலிருந்து புரோட்டவை பார்த்தாலே பக் என்று இருக்கிறது எனக்கு. புரோட்டவை மட்டும்தான் உண்கிறோமா?
ஒரு பெருமூச்சுடன்
அன்பன்
மது.
**************
**********
*****
குழந்தை சொன்னால் தெய்வம் சொன்ன மாதிரி
*****
********
**********
புரோட்டா மாஸ்டரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது...
ReplyDeleteஅண்ணா இதற்கு முன் அந்தக் கடையில் இருந்த ஒரு பரோட்டா மாஸ்டர் திடீரென இறந்துவிட்டார் ,, அப்பன்டிஸ் வெடித்துவிட்டது என்று சொன்னார்கள்.... ஒரு காரணம் கல்லின் சூடு...
Deleteமனசு வருத்தமான பதிவு.ஒவ்வொருவரும் ஒரு விலை கொடுக்கிறார்கள்.நாம் தான் புரிந்து கொள்வதில்லை.
ReplyDeleteஉண்மைதான் சகோதரி... புரிந்த சிலரும் இருகிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல்...உங்களை மாதிரி..
Deleteமனசு வலிக்கும் பகிர்வு தான் சகோததரே. வயிற்று பொழப்புக்கு ஒவ்வொரு வரும் ஒரு விலை கொடுக்க வேண்டி உள்ளதை அழகாக உணர்த்தியுள்ளீர்கள். இனி பரோட்டோ முதல் கொண்டு எந்த பொருளுக்கும் அதன் தயாரித்தவன் அதற்காக கொடுத்த வலியும், விலையும் தெரியும் எனக்கு, நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோ..
Deleteஒரு நாளைக்கு சுமார் முப்பது கி மி நடக்கிறார் ஒரு சர்வர் என்பதுவும் தெரியுமா ... வாங்கிற கூலிக்கு உழைக்கிறான் என்று சிலர் பேசலாம் ... ஆனால் நமது சம்பள விகிதங்களுக்கிடையே உள்ள இடைவேளி ரொம்ப அதிகம்... நாம் ஒரு ஆதிக்க சமூகத்தின் எச்சமாகவே தொடர்கிறோம்... மாறும் என்றே நம்புவோம் ...
ரொம்ப கஷ்டம்...
ReplyDeleteஆம்...
Deleteஐயோ!.. கொடுமை சகோ...
ReplyDeleteசாதாரணமாகவே தாங்க முடியலை..
தெரிந்து பழகியவர் என்னும்போது உங்களுக்கு உண்டான
மனக்கவலையை உணரமுடிகிறது..
உழைப்பென்று உயிரையே தானம் பண்ணுகிறார்களே...:(
உணர்வுபூர்வமான கருத்துக்கு நன்றி சகோதரி.
Delete//நான் புரோட்டவிற்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு திரும்பினேன்.//
ReplyDelete//புரோட்டவை மட்டும்தான் உண்கிறோமா?//
Superb lines ....
நன்றி ... திரு ஜீவன்..தங்கள் முதல் வருகை எமக்கு மிக்க மகிழ்வு..
Delete