வாழ்க்கையை தவறவிட்டவர்கள் சாலையில் திரிவார்கள்.
நாம் பேருந்துக்கு செல்ல விரைகையில், பணிக்கு பைக்கை திருகி முன்னேறுகையில் பாதையோரம் எத்தனையோபேரை பார்த்திருக்கிறோம். அவர்கள் குறித்து ஏதும் சிந்திக்காமலே விரைந்து போவோம்.
உலகின் பரபரப்பான நியூயார்க் நகர் ஒரு இளம் மென்பொறியாளர் வீடற்ற ஒரு ஏழையை தினம் பார்த்துக் கொண்டே கடந்து சென்றிருக்கிறார். ஒரு நாள் அவனை அழைத்து உனக்கு நான் நூறு டாலர் தருகிறேன் அல்லது ஒரு லாப்டாப் மற்றும் ஆப் எழுத பயிற்சி தருகிறேன் என்று கூற வீடற்ற அந்த ஏழை எனக்கு லாப்டாப்பும் பயிற்சியும் வேண்டும் நூறு டாலரை நானே சம்பாதித்துக் கொள்வேன் என்று சொல்லியிருக்கிறான்.
பாட்ரிக் மெக்கோன்லாக் என்கிற அந்த மென்பொறியாளர் லியோ என்கிற வீடற்ற ஏழைக்கு ஒரு சாம்சங் குரோம்புக், சோலார் சார்ஜர் ஒரு வயர் லெஸ் ஹாட்ஸ்பாட் மற்றும் தினம் ஒரு மணிநேரம் ஆப் எழுதும் பயிற்சியை தர இன்னைக்கு லியோ ஒரு ஆப்பை எழுதி வெளியிட தயார்! சரி அவர் ஆப் என்ன செய்யும் தெரியுமா? க்ளோபல் வார்மிங் குறித்து கணக்கிட்டு தரவுகளை தரும் என சூசகமாக தெரிவித்திருக்கிறார். மெட்லைப் நிறுவனத்தில் தனது பணியை இழந்தவுடன் தனது வீடு பறிபோனதை நினைவுகூர்கிறார் லியோ. இதை ஒரு அநியாமாக கருதியே பாட்ரிக் மெக்கோன்லாக் இவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியதாக கூறுகிறார்.
கரையோரம் கிடந்த நட்சத்திர மீன்களை கடலில் எறிந்த மனிதனின் நினைவு ஏனோ என் மனதில்.
ஒருவனின் பொருட்டு மழையும் வையமும் இருக்கும் என்பது விவிலியம், நெறையபேர் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.
அன்பன்
மது
ஐ எஸ் ஓ தரச் சான்று பெற்ற மகிழ்ச்சி ...
ReplyDeleteஇருக்கிறார்கள் நல்லவர்கள் ஆங்காங்கே. அவர்களினால் தான் மனிதம் இன்னும் மரித்துப் போகாமல் ஆங்காங்கே தலைக் காட்டுகிறது. தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
ReplyDeleteநன்றி பாண்டியன்
Delete