புவியிலிருந்து எண்பது ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு புதிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணிரெண்டு மிலியன் வருடங்களுக்கு முன்பு பிறந்த ஒரு புதிய கோள் இது. மிகுத்த கிளர்வை தரும் கண்டுபிடிப்பு இது என கருதப்படுகிறது.
இக்கோள் எந்த நட்சத்திரத்தையும் சுற்றிவரவில்லை என்பது ஒரு ஆர்வமூட்டும் தகவல். வெகு நாட்களாக விண்வெளி ஆய்வாளர்களிடம் இருந்த ஒரு விடைதெரியா கேள்விக்கு விடை. இப்படி ஒரு சுற்றுப் பாதை இல்லாத கோள். கடந்த பத்து ஆண்டுகளில் நமது வெளிக்கு அப்பால் உள்ள கோள்களை பல்வேறு முறைகளை பயன்படுத்தி கண்டுபிடித்துவருகின்றன விண்வெளி ஆய்வுக் குழுக்கள். எனினும் சில கோள்களே நேரடியாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. PSO J3 18.5-22 குறைந்த நிறையும், சுற்றுப் பாதை இல்லாத பண்பும் விண்வெளி ஆய்வின் புதிய சாளரங்களை திறந்துள்ளன.
சுற்றுப் பாதையில் இருக்கும் கோள்களை ஆய்வு செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அவற்றின் நட்சத்திர மையங்கள் (நமக்கு சூரியன்போல்) வெளிவிடும் ஒளி ஆய்வை தடை செய்கிறது. ஆனால் சும்மா சுற்றும் கோள்களை நாம் நன்கு ஆய முடியும். இப்படி கண்டறியப் படும் கோள்கள் பல ரொம்பவும் இளமையானவை. இரநூறு மிலியன் ஆண்டுகளுக்குள் தான் இவற்றின் வயது. (ஹ ஹ விண் ஆய்வில் இளமையின் வயது ?). தற்போது வகையாக மாட்டியிருக்கும் PSO J3 18.5-22 ஒரு வாயுவினால் ஆனா மிக குறைந்த நிறையுடைய கோள். இதை ஆய்வு செய்வதின் மூலம் நமது ஜுபீட்டர் சின்ன வயசில் செய்த சேட்டைகளை நாம் உணர முடியும்!
அன்பன்
மது

அறியாத தகவல்... நன்றி...
ReplyDeleteஒளியாண்டுகளை விஞ்சும் வேகம் உமது...
Delete