பதிவர் கவனத்திற்காக ஜம்ப் ப்ரேக்

நீங்கள் ஒரு பதிவை இடும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்களில் ஒன்று ஜம்ப் பிரேக். ஏன் என்பதை பின்னர் பார்ப்போம். எப்படி என்பதை இப்போ பார்ப்போம்.


ப்ளாகரை பொறுத்தவரை பதிவின் மேல்புர  மென்யூபாரில் ஜம்ப் ப்ரேக் ஐக்கான் இருக்கும். ஒரு பதிவை முடித்த பின்னர் செய்ய வேண்டிய முக்கியமான வேளைகளில் ஒன்று ஜம்ப் ப்ரேக் முதல் பாராவில் ஜம்ப் ப்ரேக் இடுவது.சரியான இடத்தில் ஜம்ப் பிரேக்கை இட்டபின்னர் பதிவை சேமிக்கவும்.
ஜம்ப் ப்ரேக் ஐக்கான்

ஜம்ப் ப்ரேக் உள்ளிட்டால்




செட்டிங்க்ஸ் பகுதியில் போக வேண்டிய இடம்
பின்னர் ஒரு முக்கியமான அமைப்பு மாறுபாட்டையும் செய்ய வேண்டும். செட்டிங்க்ஸ் சென்று அதர்ஸ் என்கிற பிரிவிற்கு செல்க.  சைட் பீட் என்கிற தலைப்பில் அலோவ் அண்டில் ஜம்ப் ப்ரேக் என்பதை தேர்ந்த்டுத்து மீண்டும் சேமிக்கவும்.அவ்வளோதான் ரொம்ப சிம்பிள்..
மாற்றப் பட்ட செட்டிங்க்ஸ்

ஏன்?

இந்த செட்டிங்க்ஸ் இல்லை என்றால்?
வாசகர்கள் தளவோடை, ஆர்.எஸ்.எஸ். ரீடர் போன்ற கருவிகள் மூலமும் பல்வேறு சமூக புக் மார்க்கிங் தளங்கள் மூலமாகவோ   உங்கள் பதிவை உங்கள் தளத்திற்கு வராமலேயே படிக்கலாம்.

உங்களை பின்தொடரும் வாசகர்கள்  நான் வாசிக்கும் வலைப்பூக்கள் (Blogs I follow) பகுதியிலேயே முழுமையாக உங்கள் பதிவை படிக்க முடியும். நான் எனது பீட்லி (Feedly) கணக்கிலிருந்தே உங்களின் முழுப்பதிவையும் படித்துவிடுவேன்.

ஆனால் இந்த செட்டிங்க்ஸ் ஒருமுறை செய்யப்பட்டுவிட்டால் பீட்லியில் முழுப்பதிவையும் காட்டாது. ஜம்ப் பிரேக் இடப்பட்டவரைதான் காட்டும். சமூக புக் மார்கிங் தளங்களிலும், ரீடர்களிலும் ஜம்ப் பரிக் உள்ளவரைதான் காட்டும்  எனவே பதிவை படிக்க பின்தொடர்பவர்கள் தளத்திற்கு வந்துதான் ஆகவேண்டும். இது தளத்தின் பார்வையாளர் வருகையை அதிகரிக்கும்.


இப்போதைக்கு இவ்வளவுதான்

அன்பன்
மது


தகவல் திரு திண்டுக்கல் தனபாலன் அய்யாவின் வகுப்பொன்றில் பெறப்பட்டது எனவே நன்றிகள் உங்கள் நன்றிகள் அவருக்கே ...

Comments

  1. சிறந்த தகவல் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வகுப்பை வீட்டில் அசைபோட்ட பொழுது தோன்றியது ...

      Delete
  2. நமது தள முகப்பிலும் (Home page) பதிவுகள் பார்க்க அழகாக இருக்கும்...

    விளக்கம் பலருக்கும் உதவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ....

      இது ஒரு முக்கியமான விஷயம்.. ஆனால் நான் ஆரம்ப காலங்களில் ஜம்ப் பிரேக் பயன்படுத்தி விட்டு அப்புறம் விட்டுவிட்டேன்.

      செட்டிங்க்ஸ் மாற்றம் நீங்கள் சொன்னபின்னர் தான் தெரிந்தது... நன்றி..

      Delete
  3. தெரிந்திராத தகவல். சிறப்பு!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ... வருகைக்கும் ... வாழ்த்துக்கும்...

      Delete
  4. நல்ல தகவலுக்கு நன்றி மது! திரு.தனபாலன் அவர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு ...நன்றி ...கிரேஸ்

      Delete
  5. ஒரு சந்தேகமும்..'மேலும் படிக்க ' என்பதைச் சொடுக்கிப் பார்க்க பொறுமை இருக்குமா எல்லோருக்கும்? :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு முக்கியமான கேள்வி இது. அதற்காக தான் ஜம்ப் ப்ரேக் இடும் பகுதி ஒரு கொக்கி மாதிரி வாசகரை இழுக்க வேண்டும் அப்புறம் ஜம்ப் ப்ரேக் இட்டால் ... ஒகே..

      Delete
    2. ஆமாம் அது சரிதான்...பதிலுக்கு நன்றிங்க மது.

      Delete
  6. சகோதருக்கு வணக்கம்.
    சிறப்பான தகவலை அனைவருக்கும் பயன்படும்படி பகிர்ந்தது சிறப்பு. பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் வழிகளில் இதுவும் ஒன்று என்பதால் அனைவரும் பின் தொடரலாம். பகிர்ந்த தங்களுக்கும் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. சகோ ,,

      நன்றி இதுமாதரி தொடர்வது எனக்கு நிரம்ப உவப்பான விசயம் ... தொடர்வேன்..

      Delete
  7. நீண்ட பதிவுகளை எழுதுபவர்களுக்கு Jumb break அவசியமானது. இல்லாவிட்டால், feedburner இவர்களின் feeds இனை புதுப்பிக்கிறது. நன்றி!!

    ReplyDelete
  8. பயனுள்ள,தேவையான தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக