மறுபக்கம்

கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் சாத்தானிடமிருந்துகூட நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ளலாம் என்றுஒரு வெற்றி இலக்கிய நூலில் படித்தது  எனக்குள் சில சிந்தனை சாளரங்களை திறந்தது.

சாத்தானிடமிருந்து நாம் விடாமுயற்சியை கற்றுக்கொள்ளமுடியம் என்று சொன்னது அந்த புத்தகம். உண்மைதான். இப்படி நிறய விசயங்கள் நாம் அதிகம் வெறுக்கப்பட்டவர்களிடம் இருந்தும் விமர்சனம் செய்யப்பட்டவர்களிடம் இருந்தும் பெறமுடியும். நாம் பார்வை மட்டும் கொஞ்சம் மாறினால்.

மனித இனத்திலேயே அதிகம் வெறுக்கப்பட்ட தலைவர்களின் ஒருவன் ஹிட்லர். கொடூரங்களின் ஒட்டுமொத்த  உருவமாக பார்க்கப்பட்டவன். இன்றும் இனவெறிக்காக வெறுப்போடு நினைவுகூரப்படுபவன்.

கொஞ்சம் யோசித்தால் உலகெங்கும் பிரிவினைவாதத்தையும், ஒருசாராரின் வெறுப்பை இன்னொரு சாராரின் மீது திருப்பி அதை அரசியல் அறுவடை செய்யும் வித்தையையும்  உலகிற்கு வெற்றிகரமாக அறிமுகம் செய்தவன். இன்றைய மொழி, மாநில, மத பிரிவினைவாதிகளின் வெற்றிகரமான முன்னோடி.

இன்னொரு பக்கமும் உண்டு ஹிட்லருக்கு.

பென்ஸ்
தனது நாடு மட்டுமே தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று தீராத வெறி கொண்டவன். இதற்காக தனது நாட்டின் பென்ஸ் நிறுவனத்திற்கு சுமார் ஆயிரம் கோடிரூபாய்களை வாரி வழங்கினான். விளைவு இன்று வரை பாதுகாப்பான சொகுசு கார் என்றார் முதலில் நினைவுக்கு வருவது பென்ஸ்தான்.




ஆடி
மேலும் ஜெர்மனின்  ஆடி, டி.கே.டபிள்யூ, ஹோர்ச் மற்றும் வாண்டரர் என்கிற நான்கு கார்தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவானதுதான் ஆடி.  இந்த நிறுவனமும் ஹிட்லரால் ஆயிரம் கோடிரூபாய்கள் நிதியளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.

இன்றளவும் ஹிட்லரை அறவே வெறுப்பவர் கூட வாஞ்சையுடன் பார்க்கும் உச்சகட்ட தொழில்நுட்பங்கள் நிறைந்த கார்களாக திகழ்வது குறிபிடத்தக்கது. ஹிட்லர் வழங்கிய நிதியை தங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கு (R&D)பயன்படுத்திக் கொண்டதால் இந்நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களைவிட ஒளியாண்டுகள் முன்னே நிற்கின்றன.

இன்னும் பார்ப்போம்,

அன்பன்
மது


பி.கு
லேய் நாங்க இந்த ரெண்டு வண்டியையும் வாங்கமாட்டோம் ஆனால் பி.எம்.டபிள்யூவைத்தான் வாங்குவோம் என்போர் கவனத்திற்கு அதுவும் ஜெர்மன் தயாரிப்பே. 

Comments

  1. சகோதரருக்கு வணக்கம்.
    புதிய தகவலைத் தெரிந்த கொண்ட மகிழ்ச்சி நெஞ்சில் குடியேறியிருக்கிறது. அதிகமான வாசித்தலின் விளைவு இப்பதிவு என்று நினைக்கிறேன். தொடருங்கள் சகோ. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விரைவு இதே பாணியில் போனால் பின்னூட்ட தாதா DDயை விஞ்சிவிடும் என்று நினைக்கேன்...
      வருகைக்கு நன்றி சகோ

      Delete
  2. மிகப் புகழ்பெற்ற பீட்டில் கார் என்றழைக்கப்படும் ஜெர்மானிய காரை வடிவமைத்ததே ஹிட்லர்தான் என்ற கருத்து உண்டு. அமெரிக்காவின் மோட்டார் தொழில்நுட்பத்தை ஹிட்லர் வெறுத்ததே இதற்கு காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வலைப் எப்போதும் பார்க்க வசதியாக இருந்தால் நன்றாக இருக்கும்... ரொம்ப மகிழ்ச்சி நீங்கள் வந்தது...

      Delete
  3. ஹிட்லரின் தன்னம்பிக்கை மிகவும் பிடிக்கும்.கொடுமைக்காரன் என்பதை ஏற்றுக்கொண்டாலும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக