இன்னொரு நிகில் நிகழ்வு...

கரூர் மாவட்டத்தில் எம்.ஏ.எம். ராமசாமி பள்ளியில் ஒரு வாழ்வியல் திறன் பயிற்சி என்று நீங்கள் பங்குபெற வேண்டும் என நிறுவனர் சொல்ல நான் மறுப்பேதும் சொல்லாது ஒப்புக்கொண்டேன். காலை நாலரை மணிக்கு தேவராஜன் அண்ணா எழுப்பி வண்டியில் வரேன் ஸ்டேசன் வந்துருங்க என்றார். நான் ஸ்டேசனை அடைந்து ஒரு தேநீரை அருந்தி தொடர் வண்டிக்காக காத்திருந்தேன்.


பல ஆண்டுகளாக புதுகை தொடர்வண்டி நிலயத்தை பார்த்துவரும் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யம் காலை நாலரை மணிக்கே ஸ்டேசன் பரபரப்பாக இருந்தது. ஒரு ஒட்டுக் கொட்டகையில் அது இருந்தபோது இரு லைன் தண்டவாளங்களுக்கு இடையே விரிந்து கிளை பரப்பிய மரங்களும் அவற்றை நிரப்பிய பறவைகளும் காணாமல் போய் வெளிறிய கான்க்ரீட் சதுரங்களால் நிரம்பியிருந்தது ஸ்டேசன்.

தேவராஜன் அண்ணா மிகச்சரியாக அலைபேசி டிநான்கிற்கு வந்துருங்க என்றார். பல்லவன் விரைந்து வர அண்ணா இறங்கி வாங்க என்றபடி நின்றார். வண்டியில் ஆட்களே இல்லை. வண்டி நகர்ந்த சில நிமிடங்களில் ஒரு வடஇந்தியர் சத்தமாக பாடிகொண்டே தேநீரை விற்றுக்கொண்டு வந்தார். பல மைல் தூரத்தில் தனது ஊரை விட்டு ஒரு மொழி தெரியாத மாநிலத்தில் பணியாற்றும் அவரின் மகிழ்வு எங்களையும் பற்றியது. திருச்சியில் இருந்து பேருந்து மூலம் கரூர் சென்றோம். அதற்குள் இரண்டு முறை நிகழ்வை ஏற்பாடு செய்த திரு.கார்த்திக் அலைபேசி எங்கே இருக்கீங்க வந்தவுடன் சொல்லுங்க. சிமின்ட் கம்பனிக்கு அடுத்த புலியூர் ஸ்டாப்பில் இறங்குங்க என்று நினைவூட்டினார். இறங்கினோம். தனது குழந்தையுடன் காத்திருந்தார் கார்த்திக்.

மதுரை கோச்கள் வந்த டவேராவும்வர ஒன்றாய் திரு கார்த்திக் வீட்டிற்கு பயணப்பட்டோம். வீட்டின் மேல்தளத்தில் அண்ணன் வைகையுடன் கொஞ்சம் அர்த்தமுள்ள  அரட்டை. வெகு சிறப்பான ஒரு காலை உணவுடன் பள்ளி நோக்கி நகர்ந்தோம். சிறப்பு விருந்தினர்கள் வந்தவுடன் நிகழ்வு துவங்கியது. எம்.ஏ.எம். நாங்கள் பார்த்ததில் இன்னொரு நல்ல பள்ளி, நல்ல ஆசிரியர்கள். இடைவெளியில் கார்த்திக் நீங்க எப்படி நிறுவனரை தொடர்பு கொண்டு பயிற்சியை ஏற்பாடு செய்தீர்கள் என்று கேட்டேன்.

நிறுவனர் நாகலிங்கம் ஒரு மனித வள மேம்பாடு பயிற்சியில் அரசுப் பள்ளிகளுக்கு நிகில் நிறுவனம் தரும் வாழ்க்கை திறன் பயிற்சிகளை குறித்து கூறியதையும் அதை தொடர்ந்து அவருக்கு பேசி தான்பயின்ற கவுண்டம்பாளையம் எம்.ஏ.ம் ராமசாமி பள்ளி மாணவர்கட்கு பயிற்சியை ஏற்பாடு செய்ததையும் சொன்னார்.

ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட எண்ணூறு பேரிடம் சொல்லப்பட்ட ஒரு தகவல் ஒரு மனிதனைத்தான் செயல்பட தூண்டியிருகிறது என்கிற உண்மை வெறும் நாற்பது பேர் கொண்ட வகுப்பில் அனைவரையும் முதல்தர மாணவர்களாக எதிர்பார்க்கும் என்னுடய புத்தியில் புதிய செய்தி ஒன்றை பதிவிட்டது. நிகழ்வின் தலைமைப் பயிற்சியாளர் வைகை அண்ணாவின் பாணி ரொம்ப புதுசு. நிகழ்வு ரொம்ப அருமையாக நடந்தேறியது.

பயிற்சி நடந்த அதே பள்ளியில் எனது நண்பர்கள் நிறைய பேர் பல கல்வித் துறை அலுவல்களிலும், முன்னோடி திட்டங்களிலும் பணியாற்றிக்கொண்டிருந்தது ஒரு இனிய ஆச்சர்யம். தமிழாசிரியை திருமதி,உமா, திரு. சுரேஷ் என கரூரில் மாவட்டத்தின் வள ஆசிரியர்களை சந்தித்தது பெருமகிழ்வு. சி.சி.இ. மென்பொருள் முருகேசனையும் சந்தித்தேன்.

மதியம் ஒரு மணிக்கு ஒரு அழைப்பு நீங்க கரூரில் இருக்கீங்களா? முதல் நாள் எப்.பி நிலைத்தகவலின் விளைவு. அங்கேயே இருங்க நான் சாமி பேசுறேன் என்று அன்புக் கட்டளையிட்டது. சாமிநாதன் சும்மா இருக்காது சகட்டுமேனிக்கு சக ஆசிரியர் களுக்கு  போன் செய்து நான் தப்பி ஓடிவிடாது இருப்பதினை உறுதி செய்தார். நிகழ்வின் நிறைவிற்கு பின்னர் சாமி அவருடை ஸ்பார்க்கில்வர, வண்டியில் நண்பர் தமிழும் இருந்தது ஒரு இனிமையான ஆச்சர்யம். நானும் தேவராஜ் அண்ணாவும் சாமியின் வீட்டில் ஒரு அருமையான தேநீருடன் இன்னொரு நண்பர் ராஜசேகரை

சந்திக்க சென்றோம். ராஜை நான் நிறைய நாட்கள் கழித்து சந்திக்க போகிறேன். எனக்கு ஒரு ஸ்பெஷல் ஈவன்ட் அது. 

மனம் 2004ஆம் ஆண்டில் நாங்கள் கலந்து கொண்ட பெங்களூர் பயிற்சியை அசைபோட ஆரம்பித்தது.  நான்கு மாநில ஆசிரியர்களிலும் நமது ராஜசேகர் ரொம்ப பாப்புலர்.

அப்போது அவர் ஒரு வட்டார வள மையத்தில், ஆசிரிய பயிற்றுனர். தனது அனுபவங்களின் சாரத்தை மாலை ஆறுமணிக்கு மேல் ஒரு வகுப்பறையில் பகிர்ந்துகொள்வார்.

அறை நிரம்பி வழியும். யோசித்து பாருங்கள் ஐந்து மணிவரை பேராசிரியர்களின் வகுப்பு அதற்கு பின்பு தன்னார்வத்தில் வரும் ஆசிரியர்களுக்கு மட்டும் இலக்கண வகுப்பு.

சேம் பிளட் என்றெல்லாம் அப்பீட் ஆகமா அறை கற்றல் தாகமுடைய பிறமாநில ஆசிரியர்களால் நிரம்பி வழியும்! ராஜ் அப்படி ஒரு நேர்த்தியான பிரஸண்டர். கடந்த

ஆண்டு ஒரு விபத்தின் பின்னர் இப்போதுதான் நேரில் சந்திக்க போகிறேன். அய்யா வழக்கம் போல ஒரு முதன்மை கல்வி அலுவலர் பயிற்சியில் பிசி.

மகிழ்ச்சியான சந்திப்பு. ராஜுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது எங்கள் நண்பர் கர்நாடக ஆசிரியர் ஆஞ்சநேயா அவர்களின் அலைபேசி நம்பரை தந்தார். சித்தூர் சுதாகர் நம்பரையும் கேட்டுப் பெற்றேன். வழியில் நண்பர் தமிழ் கொஞ்சம் வேகமாக நடக்க சாலையில் சென்ற ஒரு ஆசிரியர்(அலெக்ஸ்) வாகனத்தை திருப்பிக் கொண்டு வந்து எங்கே போறீங்க என் வண்டியில் வாங்க என்றார். கடமை உணர்வுக்கு நாங்கள் சிரித்தோம் நல்ல மனிதர் அவர். சங்கப் பணிகளில் அயராது சுழன்று வேலை பார்ப்பவர் என்றார்கள்.  சிறிது நேர உரையாடலுக்கு பின்னர் எங்களுடன் ஸ்டேசன் வரை வந்தார். என்னை டிக்கெட் கூட எடுக்க விடாது சாமி வரிசையில் நின்று வாங்கி வந்தார்.

நாங்கள் ஒரு அரைமணிநேரம் ஸ்டேசனில் பேசிக்கொண்டிருந்தோம்.

வண்டிவர பிரிய மனமின்றி அவர்களை பிரிந்தேன். நண்பர்களால்தான் என் உலகம் இயங்குவதை ரொம்ப அழுத்தமாகவும், நெகிழ்வாகவும் எனக்கு உணர்த்திய தருணம் அது.

வண்டியில் ஒரு ஆச்சர்யம். கடமை உணர்வு அலெக்ஸ் உள்ளே! எனக்கு ஒரு இருக்கையை தந்தார். பின்னர் நீங்கள் புதுக்கோட்டையா என்றார். எனது நண்பர் அறிவுடைநம்பி அங்கேதான் இருக்கார் என்றார். யோசிக்காமல் அலோவ் நான் கஸ்தூரி ரெங்கன் என்று சொல்ல ஓமகுச்சி மாதிரி இருந்தீங்க என்று பக்கத்தில் வந்து உட்கார்ந்து தொண்ணூற்று ஆறில் எங்களுடன் பயின்ற அத்துணை பேர் அலைபேசி எண்களையும் தந்தார்.

என்ன ஒரு நாள் இது எதற்கிந்த இனிய பரிசுகளும் ஆச்சர்யங்களும். ஆசிர்வதிக்கப்பட்ட தினம் அது. நன்றி நண்பர்களே...

என்னை என் நண்பர்களிடம் சேர்த்து என்  நினைவு பெட்டகத்தில் நிரதரமாய் தங்கிவிட்ட ஒரு பெருமகிழ்வான  அனுபவத்தை தந்த நிகில் உனக்கு எனது நெகிழ்வான நன்றிகள்.

அன்பன்

மது.


வேண்டுவோர்க்கு மேலும் சில துளிகள்..
அது என்னாப்பா நிகில்...
திருமங்கலம் நிகில் நிகழ்வு...


ஒரு பாப்பா கதைக்கு இவ்வளவு செலவு செய்ய நம்ம ஆட்கள் ரெடியா? காப்டன் அமரிக்கா பார்ட் 2




Comments

  1. இனிமையான அனுபவம்...

    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி...வருகைக்கும் ...

      Delete
  2. வணக்கம் சகோதரரே.
    நண்பர்களைக் கண்டு நல்லதொரு பயிற்சியையும் அளித்து வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி. அருமையான பதிவிற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
    அன்பு சகோதரருக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் பர்சனல்தான் இருந்தாலும் பரவாயில்லை என்று பகிர்ந்தேன்.. நன்றி சகோ..

      Delete

Post a Comment

வருக வருக