திகைப்பு ...

ஈரமான ஒரு பதிவு, பகிர்வு...
சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறையைப் பார்த்து திகைத்த பொதுஜனங்களில் நானும் ஒருவன்.. ஈவு இரக்கமற்ற அந்தக் கொடுமையைப் பார்த்து நிலைகுலைந்து போனேன்.. பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தாண்டி உண்மைகள் என்ன என்பதை விசாரித்தறிந்தபோது நான் மேலும் விதிர்விதிர்த்தும் அருவெறுத்தும் போனேன்.. அந்த வன்முறைக்குப் பின்னால் ஊடோடி இருந்த சாதியத்தை கேள்விப்பட்டு நான் மனம் கூசிப் போனேன்..



பிரியத்துக்குரிய நண்பர் ஒருவர் மலேசிய பள்ளியொன்றில் ஒரு மாணவியை இன்னொரு மாணவி கொடுஞ்சொற்கள் பேசி அடிப்பதையும் அதை மற்ற மாணவிகள் ரசித்துப் பார்த்து வீடியோ எடுப்பதையும் பதிவிட்டிருந்தார்.. பார்த்ததும் மனம் பதைத்துப் போகிற வீடியோதான் அது..

ஆனால் அதில் ஒலிக்கும் குழந்தைகளின் வார்த்தைகளை கவனிக்கிறபோது எனக்கு சட்டக்கல்லூரி சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகின்றன..

இதை விட சின்னஞ்சிறுமியர் இதைவிட கெட்ட கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பதையும் இதைவிட வன்மத்துடன் நடப்பதையும் எங்கள் ஊர்ப்பக்கம் பார்த்தவன்தான் நான்..

இந்த வீடியோவைப் பொறுத்த வரை அதன் அடிப்படையில் இருக்கும் பிரசசினையைப் பார்க்காமல் வெறும் வீடியோவைப் பார்த்து மட்டும உணர்ச்சிவசப்பட நான் தயாராக இல்லை..

ஏனென்றால் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்று நான் தீவிரமாக நம்புகிறேன்..

அடிக்கப்பட்ட குழந்தை, அடித்த குழந்தை இருவருக்குமான வருத்தங்களுடனும் பிரியங்களுடனும்..

நானேதான்..


நந்தன் ஸ்ரீதரனின் எழுத்து ஈரத்திற்காக பகிர்ந்தேன்..
தோழரின் வலைப்பூ...
http://asistantdiraktar.blogspot.in/

Comments

  1. என்னவொரு கொடுமை இது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

      Delete
  2. கொடுமைகள் பலவிதம். அதில் இதுவும் ஒருவிதம்...:(

    நண்பரின் பக்கமும் சென்றேன். உங்கள் பகிர்விற்கும் நன்றி சகோ!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இது பெருவாரியின் மனநிலை மாற்றத்தை வேண்டும் ஒரு பதிவு... இன்னும் சரியாக கல்வியறிவு அடையவில்லை நம் சமூகம் என்பதே எனது நிலைப்பாடு...
      நன்றி...

      Delete
  3. Anonymous18/12/13

    வணக்கம்

    நினைக்கும் போது மனவேதனையாக உள்ளது.
    ----------------------------------------------------------------------
    தங்களைப் பற்றியும் வலைப்பூ பற்றியும் சிறப்பு அறிமுகம் சகோதரி இளைய நிலா அவர்களின் தளத்தில் பகிர்ந்துள்ளார் சென்று பாருங்கள்..http://ilayanila16.blogspot.com/2013/12/blog-post_17.html?showComment=1387308991877#c3406811066530387648

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...
      சகோதரியின் தளம் சென்றேன் பார்த்தேன்...
      ஒரு இன்ப அதிர்ச்சி...
      நன்றிகள் சகோ...

      Delete
  4. எத்தனை வகையான கொடுமைகள் உலகில் வேதனையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சில மாற்றங்களை முன்னெடுத்தல் அவசியம்...
      கல்வி சரியாக வடிவெடுக்கவில்லை என்பதன் வடிவம் இது..

      Delete
  5. கொடுமை கண்டு அதிர்ந்தேன்.
    ஆனால், நமது ஊர்களில் (சேரிகளில்) நமது தீண்டாமை நாற்றமடிக்கும் விஷயங்களை நீங்கள் அறியவிலலை போலும்... ஆனாலும் உங்கள் “சாதியற்ற சமூகத்திற்கான“ தாகம் தெரிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் நானும் சாதியற்றவனாக வாழவே -என்பிள்ளைகளை சாதியற்றவராக வளர்க்கவே- விரும்புகிறேன்.
    உங்கள் பதிவில் -“ஈரதிர்க்காக“ எனும் சொல்லின் பொருள் புரியவிலலையே... எழுத்துப் பிழையா? என் புரிதலில் பிழையா தெரியலயே கஸ்தூரி..?

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நந்தன் குறித்து உங்களுடன் பேசியது நினவில் இருக்கா?
      ...
      சரி செய்திருக்கிறேன்... சுட்டிக் காட்டியதை...

      Delete

Post a Comment

வருக வருக