திரை நட்சத்திரங்களை ரசிப்பது ஆதர்சமாக கொள்வது குறித்து எனக்கு எப்போதுமே உடன்பாடுகிடயாது. ஒரு நட்சத்திரத்தை தொடர்ந்து ரசித்து வருகிற பொழுது வெறும் திரை நட்சத்திரம் என்பதையும் தாண்டி ஒரு உணர்வு பூர்வமான பிணைப்பும் சற்றே வினோதமான நட்பும் ஏற்படுவதாக எனக்கு உணர்த்தியது ஒரு நட்சத்திர மரணம்.
பால் வாக்கர், அவர் எத்துனை படங்களில் நடித்திருக்கிறார் என்றுகூட தெரியாது ஆனால் அவருடைய பாஸ்ட் அண்ட் பியுரியஸ் முதல் பாகம் முதல் ஆறாம் பாகம் வரை விடாமல் துரத்தி துரத்தி பார்த்தவன் நான்.
படம் முழுதும் வெகு வேகமாய் கார்களை செலுத்தும் திருடர்களும் அவர்களை பிடிக்க வந்த அண்டர் கவர் போலிஸ் அதிகாரியாக பால் பிரைன் ஒ கார்னர் என்கிற வேடத்தில் நடித்தார் என்று சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை அந்தப் பாத்திரமாகவே பார்த்தேன் நான்.
பாஸ்ட் அண்ட் பியுரியஸ் படத்தை பார்த்துவிட்டு அதைபோல் காரை விரைவாக செலுத்த ஆசைப்பட்டவர்கள் பின்விளைவாக உடல் சிதைந்தவர்கள் உயிர் இழந்தவர்கள் ஏராளம்.
சென்னையில் கூட ரகசிய பைக் ரேஸ் உருவாக இந்தப் படம் ஒரு பின்னணி காரணம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. சென்னையில் இதன் விளைவாக ஏற்பட்ட மரணங்களும் உங்கள் நினைவில் வரலாம்.
ஒரு ரேஸ் பின்புலத்தில் வந்த படம், அதன் தொடர் வெற்றி (ஆறு பாகங்கள் ) படத்தின் ஏழாம் பாகத்தின் படபிடிப்பு இன்னும் முடிவடையவில்லை.
கடந்த நவம்பர் மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் தனது நண்பர் ரோட்ஸ் போர்ச் கரீரா ஜிடி காரை செலுத்த பால் பயணியின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். எப்படியோ கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு சிறிய கம்பத்தில் மோதி (பார்க்கிங் போல்?) எதிரே இருந்த மரத்தில் மோதி சுக்குநூறாகி எரிந்துவிட்டது. ரோட்ஸ் மற்றும் பால் இருவருமே உயிரிழந்தனர்.
நவம்பரின் கடைசி சனிக்கிழமையில் நான் மிகவும் ரசித்த ஒரு நட்சத்திரம், உதிர்ந்து போனது . அனேகமாக அடுத்த பாகத்திற்கான ஒத்திகையில் இருக்கும் பொழுது இது நிகழ்ந்திருக்கலாம். இப்போது அந்த படப்பிடிப்பு கைவிடப் பட்டுவிட்டது.
கிளைக் கேள்விகளாக எப்படி ஒரு ரேசர் (ரோட்ஸ் ஒரு ரேசர்) காரை மோதியிருப்பர், இது சதி என்று ஒரு சாரார் கருதுகிறார்கள். சற்றும் லாஜிக் இல்லாத காரணங்களை அவர்கள் கூறிவருகிறார்கள். சிலர் ஆறு இன்ச் விட்டமுள்ள ஒரு மரம் எப்படி அதிவேக கார் மோதி நிற்கிறது என்று கேட்கிறார்கள்.
ஒரு பதினெட்டு வயது பையன் உடைந்த காரின் பாகத்தினை எடுத்ததிற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். இன்னொருவர் சம்பவ இடத்தில் கிடைத்த சில கரித்துண்டுகளை ஒன்று நூறு டாலர் வீதம் விற்றுள்ளார்.
பால் காரை ஓட்டும் ஸ்டைலுக்காவே அவருடை ரசிகனான எனக்கு அவரது அதிவேக கார்ப்பயணமே நாற்பது வயதில் அவருக்கு முடிவு கட்டியது பெரும் அதிர்ச்சி.
ரெஸ்ட் இன் பீஸ் மை டியர் பிரின்ஸ் ... அவ்வளவு தான் சொல்ல முடியும்.
சூப்பர் கம்பியூட்டரை வடிமைத்த சாமுவேல் கிரே கடவுளுக்கு சமமாக வர்ணிக்கப் பட்டார். கார் விபத்துகளில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் ஒரு ஆய்வை செய்து கொண்டிருந்தார். அவருடைய காரில் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனாலும் அவர் அதே காரில் ஒரு சாலை விபத்தில்தான் இறந்தார். காரின் மேற்கூரை குழிந்து வந்து அவரின் தலையில் தாக்க சம்பவ இடத்திலேயே பலியானார்.
படங்களில் விசில் சத்தம் காதை கிழிக்க கார் ஒட்டிய பாலின் மரணம் கூட ஒரு செய்தியை தான் உலகிற்கு சொல்லியிருப்பதாக படுகிறது எனக்கு.
வாழ்க்கை ஒரு வளைவுகள் மிகுந்த மலைப்பாதை என்று தோன்றுகிறது. கொஞ்சம் சூதானமாத்தான் இருக்கோணும்.
பாப்போம்
அன்புடன்
மது
விபத்தின் சிலபடங்கள்

சகோவிற்கு வணக்கம்
ReplyDeleteபால் வாக்கரின் மரணச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்து எனது சகோதரன் கூறிய போது உண்மையாகவா என்று மூன்று முறையாவது கேட்டிருப்பேன். அதிர்ச்சியால் விளைந்த விளைவு அது.
//வாழ்க்கை ஒரு வளைவுகள் மிகுந்த மலைப்பாதை என்று தோன்றுகிறது. கொஞ்சம் சூதானமாத்தான் இருக்கோணும்.// மிகச் சரியாக கூறியுள்ளீர்கள். வருத்தங்களைத் தாங்கிய பதிவு. அவரின் ரசிகர்களுக்கு அவரது இழப்பு பேரிழப்பு தான்.
உங்களுக்கு தெரிந்த பின்னர் தான் எனக்கு தெரிந்திருக்கிறது....
Deleteமிகத் தாமதமாக ...
என்னுடைய பெரும்துயர்களில் ஒன்றாக மாறிவிட்டிருகிறது இந்த மரணம் ....
அதிர்ச்சி தரும் சம்பவம்...
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்...
ஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteஉண்மையைச் சொல்கிறேன். நீங்கள் எழுதிய பிறகுதான் இந்தத் திரைக்கலைஞரைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன். நீங்கள் இந்த அளவுக்கு வருந்துகிறீர்கள் என்றால், அவர் உயர்ந்த கலைஞராகத் தான் இருக்கவேண்டும். அவரது படங்கள் ஒன்றிரண்டைச் சொல்லி, கிடைத்தால் யுட்யூப் ஐடியும் தரலாம்ல? பயனுள்ள பதிவுக்கு நன்றி கஸ்தூரி.
ReplyDeleteஅண்ணா ஊப்பி கோல்ட்பெர்க் என்கிற ஓர் நடிகை கோஸ்ட் ஆப் மிசிசிப்பி என்கிற படத்தில் கலக்கியிருப்பார்...
Deleteடாம் ஹாங்க்ஸ் சேவிங் பிரைவேட் ரயன் படத்தில் அருமையாக நடித்திருப்பார்...
இவர்கள் அளவிற்கு தரமான அற்புதமான திரைப்படங்களில் பால் நிறைய நடிக்கவில்லை ...
இவர் இளசுகள் விரும்பும் ரேஸ் கார் வித்தகராக நடித்தவர்... நடிப்பும்... ஸ்டைலும் எனக்கு பிடிக்கும்...
http://youtu.be/o8UCI7r1Aqw