முதன்மைக் கல்வி அலுவலரின் விளக்கஉரை |
சித்தன்ன வாசலின் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஆனால் இன்னும் அறியப்படாதா ஓவியங்களும் அங்கு இருக்கின்றன என்றால் வியப்பாக இருக்கும் அல்லவா? ஆம் நண்பர்களே இன்னும் சரிவர அறியப்படாத ஒரு சித்தன்னவாசல் இருக்கிறது. அது ஒரு மீட்பருக்காக பல நூற்றாண்டுகளாக காத்திருந்திருக்க வேண்டும்! இதோ மீட்பர்!
சில மாதங்களுக்கு முன்னர் திருமயம் கோட்டையில் இருந்த தொல்பழங்கால பாறை ஓவியங்களை கண்டறிந்து எங்கள் மாவட்டத்தின் வரலாற்றை பெருமைப் படுத்திய முதன்மைக் கல்வி அலுவலர், பெருமதிப்பிற்குரிய முனைவர். அருள் முருகன் அவர்கள் பொங்கல் வெளியீடாக தற்போது சித்தன்னவாசல் பாறை ஓவியங்களை கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.
இதுவரை அறியப்படா பாறை ஓவியங்கள்! அனைவரும் அறிந்த சித்தன்னவாசலில்! இது குறித்து தனது விளக்க உரையில் எப்படி ஓவியங்கள் வரையப்பட்டன என்று விரிவாகவே விளக்கினார் முதன்மைக் கல்வி அலுவலர். முதலில் பாறையை தயார் செய்தல். சரிவான பாறையில் வழியும் மழைநீரை தடுக்க ஒரு நீண்ட வேலிபோன்ற வெட்டு ஒன்று. பின்னர் பாறையை சமன் செய்தல். அதன் மீது சுக்கான் பாறை சுண்ணாம்பு கலந்த ஒரு கலவையை ஏற்றுதல். இதன்பின்னர் அதன் மீது ஓவியங்களை வரைதல் என மிக நுட்பமாக திட்டமிட்டு பணியாற்றியிருக்கிறார்கள் சமணத் துறவியர்!மிக விரிவான தெள்ளிய தரவுகளுடன் கூடிய அந்த உரை கேட்டோர் பிணித்த ஒன்று!
மாவட்ட கல்வி அலுவலர்கள் நிகழ்வைப் பார்வையிட்ட பொழுது |
தமிழ் அறிஞர்கள் திரு.மகா சுந்தர் மற்றும் அண்ணா ரவி மற்றும் சுரேஷ் மான்யா |
ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கனகசபாபதி, இலக்கிய விமர்சகர் திரு ராசி பன்னீர் அவர்களுடன் |
தனது இளமைப் பருவத்தில் இருந்த ஓவியங்கள் கூட அங்கு இப்போது இல்லைஎன வருந்திய அவர் ஓவியங்கள் காணமல் போன கதைகளை சொன்னபொழுது எங்களுக்கு அதிர்ச்சி! மதிப்பறியா சிறுவர்கள் சோளம் பொரித்தது முதல், வண்ணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்விற்கு சுரண்டியது வரை விரிவான தகவல்களை தந்தார்.
காமிராவிற்கு அருகே நண்பர். திரு மாரியப்ப பிள்ளை |
தங்களுக்கே உரிய நேர்த்தியுடன் ஆசிரியர்கள் திரு. மீனாட்சி சுந்தரம், திரு. ராஜேஷ் மற்றும் ஓவியர் தனபாலன் அணி கண்காட்சி அரங்கை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்து.
மகிழ்வுடன்
மீண்டும்
சந்திப்போம்...
அன்பன்
மது..
மேலும் சில தளங்கள்
ஜமாலன்
ஜெயபாரதன்
ஜெயபாஸ்கரன்
ஜெயமோகன்
நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளிர்கள்... தங்களின் சந்திப்பும் இனிதே நடைபெற்றது.... வாழ்த்துக்கள்
ReplyDelete-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி தோழர் ரூபன்..
Deleteஓவியங்கள் காணாமல் போகிறதா.
ReplyDeleteமக்களின் அலட்சியத்தின் விளைவு
ஆமாமா மக்கள் ரொம்ப விழிப்புணர்வு கொண்டவர்கள்தானே
Deleteதொல்பொருள் துறையாவது விழிப்புடன் இருந்தால் போதும்,
அருமையான தகவலுக்கு நன்றி...இதைக் கண்டுபிடித்த முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு பாராட்டுகள்! அதைப் பற்றி கலந்து ஆய்ந்தரியும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteஓவியங்கள் சிறுவர்களின் அறியாமையாலும் வண்ணம் தயாரிக்கும் நிறுவனங்களின் வர்த்தக ஆணவத்தாலும் அழிக்கப்படுவது வருத்தம் தருகிறது..
நன்றி ... சகோதரி
Deleteதிருச்சியில் இருந்து இம்மலை செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்லுங்களேன் மது! நன்றி!
ReplyDeleteதிருச்சி- புதுக்கோட்டை ஒன்னரை மணிநேரப் பயணம்
Deleteபுதுகை திண்டுக்கல் (மணப்பாறை) வழியில் இருக்கிறது..
புதுகையில் இருந்து சுமார் முப்பது நிமிடங்களில் செல்லலாம் ..
வேறு வழிகளும் உள்ளன...(திருச்சி -விராலிமலை - இலுப்பூர் - அன்னவாசல் - சித்தன்ன வாசல் வழி)
மிக்க நன்றி மது!
Deleteபாறை ஓவியங்களைப் பற்றி அருமையாக தொகுத்துள்ளீர்கள். நன்றி
ReplyDeleteநன்றி தோழர்...
Deleteநிகழ்வை அழகாக காட்சிப்படுத்தியமைக்கு நன்றி சகோ. இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற விழாவைப் பற்றி எனக்கு தகவல் வராமல் போய்விட்டதே. தெரிந்திருந்தால் கலந்து கொண்டிருப்பேன். பகிர்வுக்கு நன்றி சகோ..
ReplyDeleteஅலைபேசியில் பேசுகிறேன்..
Deleteநன்றி சகோ..
நல்ல விடயம் ! முதன்மைக் கல்லூரி அலுவலர்க்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஅத்தகைய பெருமை வாய்ந்த ஓவியங்கள் காணாமல் போவது வருத்தத்திற்கு உரியதே.
நன்றி மது ! தொடர வாழ்த்துக்கள்...!
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி
Delete