ஒரு சுபம் ஒரு ஆரம்பம் சில வார்த்தைகள்

 கலவையான உணர்வுகளோடு மீண்டும் உங்களுக்களுக்கு ஒரு பணிவான வணக்கங்களுடன் மது...


தங்கையை சந்திக்க ஒரு நீண்ட பயணம், துறையில் புதிதாக அறிமுகம் ஆகவிருக்கும் இணையம் மூலம் வகுப்பறைகளை இணைக்கும் பயிற்சிக்கான கூடுதல் பயணம், மீண்டும் ஒரு மருத்துவ பயணம் என்று இடைவிடாது பயணங்கள் இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தை கற்பூரமாய் கரைக்க புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க கணிப்பொறியை திறந்தவன் அதிர்ந்தேன். நம்மாழ்வாரின் விடைபெறல் தோழர் எட்வினின் நிலைத்தகவலாக.



நம்மாழ்வாரை மிக நீண்ட காலமாக அவரது விவசாய சேவைகளுக்காக மட்டுமின்றி சுற்றுப்புற சூழல் போராட்டத்திற்காகவும் ஆதர்சமாக ரசித்துவந்தவன் நான். ஒருமுறை என் பள்ளிக்கு அய்யா வந்திருந்த பொழுது மூத்தவள் நிறையை அழைத்து சென்று அய்யாவிடம் நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

நம்மாழ்வார் ஒரு விவசாய வித்தகர். இயற்கை உரங்களை அறிமுகம் செய்தும் ஆதரித்தும் ஆண்மையோடு ஓங்கி ஒலித்த ஒரு ஒற்றைக் குரல். சந்தேகமே இல்லமால்  ஒரு ஆல்பா மேல். மஞ்சளையும் வேம்பையும் அயல்நாட்டு குள்ளநரி பேடன்டுகளை உடைத்து மண்ணின் மைந்தர்களுக்கு  மீட்டுத் தந்தவர். இதற்காகவே நாம் அவருக்கு ஏழு தலைமுறைகளுக்கு கடன்பட்டிருக்கிறோம்.

மஞ்சளையும் வேம்பையும் மீட்டர் அய்யா. அவருக்கான மெய்யான அஞ்சலி நமது பாரம்பரிய விவசாயத்தைக் காப்பதும், நமது உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதும்தான். இவ்வாண்டின் தீர்மானங்களில் ஒன்றாக இதை நான் வைத்திருக்கிறேன். பாசுமதிக்கான போராட்டம் இன்னும் பாக்கியிருக்கிறது.   



எங்கல்ஸ் ராஜா போன்ற எம்.பி.ஏ பட்டதரிகளை தனது ஞானவாரிசுகளாய் விட்டுவிட்டு தான் அய்யா சென்றிருக்கிறார். எங்களது குடும்பத்தில் வரும்  அடுத்த ஆண்மகவிர்க்கு பெயர் நம்மாழ்வார்தான். இயற்கை தனக்காக பேசிய தனக்காக செயல்பட்ட ஒரு ஆன்மாவை தனதாக்கிகொண்டது. சுயநலம்மிக்க நமது உலகில் எந்தப் பலனும் இல்லாது அய்யா ஆற்றிய பணிகள் ஒரு மனிதன் எப்படி தனது வாழ்வை பொருள் பொதிந்ததாய் ஆக்கிக் கொள்ளமுடியும் என்பதற்கு ஒரு மிக நல்ல உதாரணம். கண்ணீருடன் ஒரு சுபம் அய்யாவின் இகவாழ்விற்கு. உங்கள் போராட்டங்கள் எங்களால் தொடரப்படும். உங்கள் ஆன்மா நிம்மதியாய் உறங்கட்டும்.


இன்னொரு அதிர்ச்சி.

கணக்கில்லா முறை எப் ஒன் சாம்பியன் பட்டம் பெற்ற சூமேக்கர் தனது மகனுடன் பனிச்சருக்கில் ஈடுபட்ட பொழுது தலையில் அடிபட்டு கவலைக்கிடம் என்பது எவ்வளவு விசித்ரமான வேதனை. தோழர் பாண்டியனின் பதிவு இங்கே.

 நலம்பெற பிரார்த்திப்போம் ..


பேரன்புடன் (நம்மாழ்வார் குறித்து எழுதியதால் தானாக விழுந்த வார்த்தை)

அன்பன்
மது

நம்மாழ்வாரின் படத்தை தனது முகநூல் படமாக வைத்திருக்கும் அத்துணை உணர்வாளர்களுக்கும் நன்றி ..



Comments

  1. நம்மாழ்வார் ஐயாவிற்கு ஈடுஇணை அவர் தான்... பல இயற்கை வேளாண் விளைநிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. பெரும் இழப்பு அரசாங்கங்கள் கைவிட்ட விவிசாயிகளுக்கு ... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா

      Delete
  3. சகோதரருக்கு வணக்கம்
    ஐயா நம்மாழ்வார் அவர்களின் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அவர் எழுப்பிய கரகரப்பான ஒற்றைக்குரல் காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும். சுற்றுச்சூலலைப் பேணிக் காப்பதும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும், விவசாயிகளுக்கு உரிய பலனைக் கிடைக்கச் செய்வது தான் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
    --------
    வேகப்புயல் சூமாக்கர் விரைவில் குணமடைய வேண்டுவோம். எனது பதிவையும் பதிலுக்கு பதிலாக சமயோசிதமாக பகிர்ந்தமை கண்டு வியக்கிறேன். அருமை சகோ. பகிர்வுக்கு நன்றி. 5 ஆம் தேதி நேரில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ
      நிச்சயம் சந்திப்போம்

      Delete

Post a Comment

வருக வருக