மோடி வளர்ச்சி என்னும் முகமூடி - மக்கள் கலை இயக்க வெளியீடு

 இந்தியாவின் ஒளிவீசும் மாநிலம் குஜராத் என்கிற பொய்ப்பிரச்சார மாயையை களைந்திருக்கும் ஒரு நூல்.தோழர். மருதையனின் திருச்சி உரை நூல்வடிவில்.


பகீர் திகீர் தகவல்கள், மோடி பலூனை ஊதுவோர் யார்? ஏன்? என்று இவர் நிறுவுகிற பொழுது நமக்கு அதிர்ச்சி ஏற்படும் . யார் மன்மோஹனை ப்ரொமோட் செய்தார்களோ அவர்கள் எல்லாம் அணி மாறி இப்போது மோடியை தூக்கிவிட துணிந்திருக்கிறார்கள். ஏதாவது புரியுதா மக்கா? இப்போ இருக்க சீரழிவு பத்தாது என்று இதைவிட சீரழிக்கும் ஒரு அடிமை அவர்களுக்கு தேவை. ஒரு நல்ல அடிமை அவர்களுக்கு கிடைத்து விட்டார். நமக்கு எப்போ ஒரு நல்ல தலைமை கிடைக்கும் என்றுதான் தெரியவில்லை.

காலி பிளவர் வயல்களில் உழும் பொழுது வெளிவந்த மண்டையோடுகள், நதிக்கரையில் புதைக்கப்பட்ட கணக்கில் வராத பிணங்கள், முள்ளிவாய்க்காலுக்கு ஒரு நியாயம் குஜராத்துக்கு ஒரு நியாயம்? எப்டி ராசா இவர்களை மனிதர்கள் என்று அழைப்பது.

ஷோராப்தீன் கொலைவழக்கு ஏன் எதற்கு என்று தெளிவாக புரியவைக்கும் ஒரு உரை.

என்ன நடக்கிறது என்று ஏதும் புரியாமல் கொதிக்கும் சட்டியில் இருந்து அடுப்பில் குதிக்கும் எத்தனிப்பில் நாடு. வேற ஆப்சனே இல்லை என்பது தான் நமது அறுபதாண்டுகால ஜனநாயகத்தின் வெற்றியா?

ஒரு தபா படிங்க மக்கா

வாழ்க வளமுடன்.

வேறு என்னத்த சொல்ல.

அன்பன்
மது

இந்தப் பதிவின் கவிதை 


ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் - அமெரிக்கா 


ஈராக் அழிந்து

சிதைந்த பிறகுதான்

தெரிந்தது

பேரழிவு ஆயுதங்கள்

எவர் கையில்

இருந்ததென்பது?




Comments

  1. Replies
    1. விவரம் தெரிந்தவர்களின் நேர்மையான பின்னூட்டம்...
      நன்றி அண்ணா

      Delete
  2. அன்பு சகோவிற்கு வணக்கம்
    மீடியாக்களின் அதிகப்படியான விளம்பரம் தான் மோடியை வளர்க்கிறது. நம்மவர்களுக்கு இருக்கும் அரசு மீது வெறுப்பு வேறொரு தலைமை தேவைப்படுகிறது. அதை கண்மூடித்தனமாக தேர்ந்தெடுக்க முற்படுகின்றனர். தாகம் எடுக்கும் போது எந்த தண்ணீர் கிடைத்தாலும் குடித்து விடுவோம் அது போல. நன்கு சிந்தித்து தலைவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாடு உருப்படும். அது வரை இந்நிலையே தொடரும்..
    ------
    நறுக்கென்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதை அருமை. தொடருங்கள் சகோ. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. இதுகுறித்து ஒரு சமூக அறிவியல் ஆய்வும்
      விழிப்புணர்வு பிரசாரமும் அவசியம் என்று கருதுகிறேன் சகோ.

      Delete
  3. நன்றி நல்லதெர்ரு பதிவு. நான் ஏற்கெனவே - திருச்சிக்கு அவர் வந்தபோதே- மோடிவித்தை பராக் என்று ஒரு பதிவை இட்டு வைததிருக்கிறேன். இந்த இரண்டும் இல்லாத மாற்று வழியை மருதன் காட்டமாட்டார் நீங்கள் முயன்றால் காணலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா
      விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்க தவறி விட்டோம்
      வருத்தம்தான் எனக்கு

      Delete
  4. திரு.பாண்டியன் தன் வலைத்தளத்தில் உங்களை அறிமுகப்படுத்தி இருந்தார். அதன் மூலம் உங்கள் தளம் அறிந்தேன். ஃப்ளோவராக சேர்ந்து இருக்கிறேன்.மீண்டும் நிதானமாக வந்து பதிவுகளை படித்து என் புத்திக்கு எட்டிய மாத்திரத்தில் கருத்துகளை பதிகிறேன். இந்த பதிவில் மூ.மேத்தா அவர்களின் கவிதை உண்மையை சொல்லி சென்றுஇருக்கிறது. சில வரிகளில் மிகப் பெரிய உண்மை அடங்கி இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மதுரை தமிழ்ப் பையனுக்கு வந்தனம்..
      வருக
      வருக
      நன்றி..

      Delete
  5. ஹ்ம்ம் என்னத்த சொல்றது...

    ReplyDelete
    Replies
    1. இதே நிலைதான் இங்கும்...
      மாற்றங்களை உருவாக்கி முன்னெடுக்கும் ஒரு ஆக்கபூர்வமான ஒரு தலைமை இப்போதைய தேவை..

      Delete
  6. Replies
    1. இன்னாத்துக்குப்பா? உண்மைய சொன்னதுக்கா?

      Delete

Post a Comment

வருக வருக