விகடன் விருதுகள்

விருதுகள் இன்றய நிலையில் நேர்மையாக தரப்படுவதோ, பெறப்படுவதோ இல்லை என்பது நிதர்சனம். ஒன்று விருது பெறுவோரின் "பொருள்" வெளிச்சம் தம்மீதும் பாயவேண்டி நடத்தபெறும் விருது விழாக்கள், அல்லது விருது பெறுவோரின் நலன் விரும்பிகள் நடத்தும் காவடியாட்டமாக இருக்கும்.

இருந்தும்  சில விருதுகள் நேர்மையாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஆனந்த விகடனின் விருதுகள் எப்போதும் என் கவனமீர்ப்பவை. இம்முறை விருதுப் பட்டியல் பெரும் ஆளுமைகளால் நிரம்பியிருந்தது. வழக்கம்போலவே.

திரைவிருதுகளைத்தாண்டி குமாரசெல்வா என்கிற எழுத்தாளர் குறித்து விருதுகளின் மூலமே நான் அறிந்தேன். குன்னிமுத்து எங்கே கிடைக்கும் என்று தேடிக்கொண்டிருக்கிறேன். அதேபோல் செல்வராஜ், சிறுகதைக்கும் , லிபி ஆரண்யா, கவிதைக்கும், சா.காந்தி, கட்டுரைக்கும், விழியன், சிறுவர் இலக்கியதிற்கும்,   சி.மோகன் மற்றும் சா. சுரேஷ் மொழிபெயர்பிற்கும்,  என்.சி.பி.ஹச் வெளியீட்டிற்கும் விருதுகளை இவ்வாண்டு பெற்றுள்ளனர்.

காலம் சிறு பத்திரிக்கைக்கான விருதினை பெற்றுள்ளது. பாபா அபராஜித் இவ்வாண்டின் கிரிகெட் வீரர். தீபிகா தடகளப் பெண்! பலன் எதிர்பாராமல் ஏழைக் குடும்பங்களை  சேர்ந்த ஆர்வமும் திறமையும் உள்ள வீரர்களுக்கு பயிற்சியளித்துவரும் பாலாஜி என்கிற கிரிகெட் கோச் என்னை வெகுவாக கவர்ந்தார்.

இந்த விருதுகளுக்குப் பின்னரே நான் ஆறு மெழுகுவர்த்திகளை பார்த்தேன். எப்படி மிஸ் பண்ணினேன் என்று வருந்திய படம்.

என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவ்விருதில் எழுத்துப் பிரிவில் குறிப்பிடப்பட்ட எவரையும் எனக்கு சுத்தமாக தெரியாது. விகடன் என்கிற வெகுஜனப் பத்திரிக்கை தனது மாபெரும் தளத்தை பயன்படுத்தி எழுத்துக்கார்களின் செழுமையை உலகறியச் செய்கிறது.  செழுமைப்படுவது வாசகர்களே. இது விகடனின் ஒரு வால்யு ஆடடட் அடிசன்.

ஈழம் குறித்த நிலைப்பாடுகளில் எனது உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பது விகடன் மட்டுமே. எந்த சமரசமும் இன்றி உணர்வாளர்களின் குரலை உரக்க கூறி வருகிறது விகடன். தொடர்ந்து.

விருதுபெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

அன்பன்
மது

இந்தப் பதிவின் அயல்மொழி வார்த்தை 


profligate - ஆடம்பரமாக செலவு செய்துவாழ்பவர், தனது வளங்களை முறைதலை இல்லாது செலவிடுபவர். (வார்த்தையின் லிங்கில் எப்படி உச்சரிப்பது என்பதைப் பார்க்கலாம்)

பொதுவாக குடிகாரர்களை குறிக்க பயன்படுத்தலாம்
தண்ணிதொட்டி  தேடிவந்த கண்ணுகுட்டிகள் (பாடல்)


 


Comments

  1. ஈழம் குறித்த நிலைப்பாடுகளில் எனது உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பது விகடன் மட்டுமே. எந்த சமரசமும் இன்றி உணர்வாளர்களின் குரலை உரக்க கூறி வருகிறது விகடன். தொடர்ந்து.

    இந்த செய்தி மனதுக்கு இதமாக இருக்கிறது . நன்றி ...!

    தொடர வாழ்த்துக்கள்...!

    வலை பக்கம் வரலாமே கட்டுரை போட்டிக்காக எழுதியுள்ளேன் முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
    Replies

    1. இணயஅரசியின் வருகைக்கு நன்றி

      Delete
  2. விகடன் விருதுகள் பற்றிய சிறப்பான பார்வை. நல்ல பதிவு...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

    அகவியின் வழியாக மட்டுமே இணையம் உளாவுவதால் இணைப்பு வழங்கினால் மட்டுமே வரை முடிகிறது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருக சரித்திரத்தை நாவலில் தரும் வெற்றி...
      நல்லா எழுதுறீங்க ...

      Delete
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனியபொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக