காப்டன் பிலிப்ஸ்

ஊரே ஓகோன்னு சொல்லிச்சே என்று ஆவலாய் பார்த்த படம். எப்படி ஒரு உண்மைச் சம்பவத்தை படமாக எடுப்பது யாரவது தெரிந்து கொள்ள விரும்பினால் என்றால் இந்தப் படம் அதற்கு உதவக்கூடும்.


டாம் ஹாங்க்ஸ் ஒரு கப்பல் காப்டன். ஒரு பெரிய சரக்கு கப்பலை கடற் கொள்ளயர்கள் நிறைந்த பகுதியைத் தாண்டி செலுத்தி செல்லவேண்டிய பணி.  எதிர்பார்த்த மாதிரியே சம்பவங்கள். கடற்கொள்ளையர்கள் வர இவர்கள் சாதூர்யமாக தப்ப அவர்கள் எப்படி திறமையாக இவர்களை நெருங்கி கப்பலில் ஏற முடிந்தது என்று நாம் அதிர்ச்சியும் வியப்புமாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே விரியும் காட்சிகள்.

டாம் ஹாங்க்ஸ் தன்னுடைய செழுமையான ஆளுமையால் காப்டன் பிலிப்ஸ் பாத்திரத்தில் ஒன்றி நடித்திருக்கிறார். அவர்மட்டுமா ஒன்றிப் போகிறார். நாமும்தான்.

இவர்தான் இப்படி என்றால் பர்கத் ஆப்டி தன்னுடைய நோஞ்சான் உடம்பை வைத்துக்கொண்டு அவ்வளவு பெரிய கப்பலை பிடிப்பதாகட்டும், அகப்படுவோரை மிரட்டுவதாகட்டும் நோஞ்சான் சும்மா மிரட்டியிருக்கிறார். 

குறிப்பாக ஏறவே முடியாத கப்பலின் தளத்திற்கு தாவி இரும்பு ஏணியில் ஏறுவது பூட்டுகளை சுட்டுத் திறப்பது என பர்கத் ஆப்டி, அடி ஆத்தி!

காப்டன் பதவிக்கு எத்துனை ஐக்.கியு தேவைப்படும் என்பதை நிறுவும் சில துரத்தல் காட்சிகள். டாம் ஒரு மைக்கில் குரலை மாற்றி இன்னும் ஐந்து நிமிடங்களில் அங்கு இருப்போம் என்று மில்டரி போல் அவரே சத்தாய்ப்பது, அதை தங்கள் ரேடியோவில் கேட்கும் கடத்தல்காரர்கள் சிதறி ஓடுவது என சில காட்சிகள் ரசனைக்குரியவை.

தன்னைப் பிடித்து அடிக்கும் கும்பலில் உள்ள ஒரு சிறுவனுக்கு காப்டன் மருந்து போட்டுவிடுவது, பதிலுக்கு அவன் இவருக்கு  பருக நீர் தருவது என மனிதம் முகிழ்க்கும் இடங்கள் நிச்சயம் போடவைக்கும் அடடா!

துரத்தும் வறுமை, வெடிக்கும் துப்பாக்கிகள், ஏழைகளை வஞ்சகமாக பயன்படுத்தும் முகம் காட்டா முதலாளிகள், இவற்றின் நடுவே ஆங்காங்கே இனிய ஆச்சர்யங்களாக மலரும் மனிதத்தை படம் பிடித்துக் காட்டியிருப்பதில் இருக்கிறது படத்தின் கொண்டாட்டமான வெற்றி.

ஒரே ஒரு காப்டனுக்காக இயங்கும் விமானம் தாங்கி கப்பல்கள், ஸ்னைப்பர்கள்,  என்று வியந்தபொழுது நினைவில் இடறினார்கள் எனது மீனவச் சகோதரர்கள். நம்மிடமும் உண்டு இவையெல்லாம் ஆனால் ஒரு குட்டித் தீவைகூட மிரட்டக்கூட வேண்டாம், மரியாதையாகவாது சொல்லலாம். அதைக்கூட செய்ய முடியவில்லை இவர்களால்.

சரி நீங்க இந்தப் படத்தை கட்டாயம் பாருங்க!

அன்பன்

மது

மேலும் சில நட்சத்திரவலைகள் 


எஸ்.ராமகிருஷ்ணன்

கடற்கரய்

கலாப்ரியா

கவிக்கோ அப்துல் ரகுமான்

Comments

  1. அருமையான விமர்சனம். ஏற்கனவே ஆங்கிலப் படங்கள் அதிகம் பார்ப்பதுண்டு, இந்த தங்கள் விமர்சனம் பார்க்கத்தூண்டிவிட்டது!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆசிரியரே..

      Delete
  2. நாங்களும் ஒன்றிப் போக உடனே பார்க்க வேண்டும்... நல்ல விமர்சனம்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா

      Delete
    2. நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்...

      Delete
  3. அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக