எப்படியும் சொல்லலாம்

எப்படியும் சொல்லலாம்
இரா. எட்வின்

கவிதை என்ன செய்யும்.

புதுகையின் முன்மாதிரி ஆசிரியர்களில் ஒருவர் சோமசுந்தரம். ஒருமுறை கீழராஜவீதியில் நடந்து சென்ற பொழுது பழைய மாணவர் ஒருவர் நிறுத்தி நலம் விசாரித்திருக்கிறார்.



நல்லாருக்கீங்களா சார்?

நல்லா இருக்கேன்பா, நீ நல்லா இருக்கியா. என்ன பண்ற?

சார் இன்ஜினியரிங் முடிச்சுட்டு கட்டாரில் ஓர் நல்ல வேலையிலே இருக்கேன் சார். மாதம் எண்பதாயிரம் ரூபாய் சம்பளம்.
 
ரொம்ப மகிழ்ச்சிப்பா. நல்ல இரு.

வேறு எதை எதையோ பற்றி பரவிய பேச்சு ஒருகட்டத்தில் வியப்பான ஒரு தகவலில் வந்து நின்றது. பொறியாளர் தயங்கி தயங்கி ஒரு விஷயத்தை வினவியிருக்கிறார்.

சார் நீங்க பள்ளிச் சுவரெங்கும் நிறைய கவிதைகளை எழுதிப் போடுவீங்களே. இன்னும் அதை செய்றீங்களா?

அன்னைக்கு அடிக்கடி செய்த மாதிரி இப்ப செய்யறது இல்லை. ஏன் அதைக் கேட்கிறே?

இல்லை சார். ஒரு நாள்  நீங்க யாரோ ஒரு கவிஞரோட ஒரு கவிதையை எழுதிப்போட்டிங்க. அதுதான் சார் என்னுடைய இந்த நிலைக்கு காரணம்.
வியந்துபோய் வினவியிருக்கிறார் சோமு அய்யா அது என்ன கவிதைப்பா ?

ஒட்டிய வயிறுடன்
புல்வண்டி
இழுத்தது மாடு


எங்கம்மா பத்துபாத்திரம் தேச்சு என்ன படிக்க வச்சாங்க சார். அந்த மாடு எங்க அம்மாவின் உருவகமாக வலியோடு மனசுல பதிந்திருச்சு சார். அப்புறம்தான் நான் வேகமாக படிக்க ஆரம்பித்தது. இன்னைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கேன்னா அதுக்கு அந்த கவிதைதான் சார் காரணம்.

இன்னும் நிறைய கவிதைகளை எழுதிப் போடுங்க சார். என்ற வேண்டுகோளோடு விடைபெற்றிருக்கிறார் அந்த மாணவர்.

 ஆம் நண்பர்களே கவிதைகள் காய்ந்துபோன காடுகளை கொளுத்தும், நம்பிக்கையற்ற மனதிற்கு ஆசுவாசம் அளிக்கும், அடர் இருட்டில் கூட சுடர்விடும் நம்பிக்கை ஒளிபாய்ச வல்லவை அவை.

கவிதைகள் வார்த்தை செதுக்கல்கள், அவை வாழ்வையும் செதுக்கும், சமூகத்தையும் செதுக்கும்.

சமூக அக்கறையோடு, அதன் அவலங்களை நம்மை கையைப் பிடித்து அழைத்துச் சென்று என்ன செய்யலாம் நாம் என்று நம்மை வினவும்  கவிதைகள் வருவது அரிது. வந்தாலும் கவனம் பெறுதல் அரிது.

அப்படி ஒரு கவிதை தொகுப்பே வந்தால் கொண்டாடியே ஆகவேண்டும் தோழர்களே. வாருங்கள் தோழர் எட்வினின் எப்படியும் சொல்லலாம் தொகுப்பை கொண்டாடுவோம்.

துரத்தும் நகர வாழ்வின் இயந்திரகதியில் வாழ்வை நாம் தொலைப்பதை
பால்,பூ
கணக்குகளுக்குள்
தேதியும்
 
என்று வெகு எளிதாக பகடி செய்கிறார் தோழர்.

இன்னொரு கவிதையில் மனைவியின் பெயரில்  கணவன் எழுதுவது குறித்து
எல்லாம் பறித்த நீ
எனக்கே எனக்கென மிச்சமிருந்த
என் பெயரையும்
இறுதியாய்
 என்று ஒரு பெருமூச்சாய் வெளிப்படுகிறது!
(இக்கவிதை என்னையும் சேர்த்தே பகடி செய்தாலும் சிரிக்கமட்டுமல்ல சிந்திக்கவும்வைக்கிறது )

பத்து தேய்க்கும் தாய் வேலைபார்க்கும் வீட்டில் மாம்பழம் பார்த்து மகனுக்கு இல்லை என ஏங்குகிறது ஒரு கவிதை. நிற்காமல் போன ஏழு பேருந்துகளை திட்டாமல் நீட்டிய கைக்கு நின்ற எட்டாவது பேருந்தை சனியன் என்று விளிக்கும் கவிதை என ஆச்சர்யங்களை நிறைத்து வைத்திருகிறது இந்தத் தொகுப்பு.

மலம் தின்ன சொல்லும் கவிதையை படிதிருக்கிறீர்களா? கவிதையும் எழுதிய கவிஞனையும்  எங்கோ உயரத்தில் தூக்கி நிறுத்தும் கவிதை. ஆகா ஆகா.
உங்கள் பார்வைக்கு அந்தக் கவிதை

ஆயிரம் பேர் கூடி நிற்க
ஆதிக்கம்
ஆணவம்
ஜாதித் திமிர்
ஏளனங்கள்
எகத்தாளங்கள்
இவற்றிடையே 
அவமானம்
என்னைத் தின்னத் தின்ன
நான்
மலம் தின்றால் மட்டுமே
கிடைக்கும்
நீ
மலம் தின்ற அவஸ்தை


ஆம் தோழர்களே இப்படி நாம் வாழும் சமூகத்தின் கீழ்மைகள் குறித்து விசனப்படும் விவாதிக்கும் கவிதைகள் தொகுப்பெங்கும் நிறைந்திருகின்றன.

கானலில் நீந்த விரும்பும் கவிதைகளும், மிளகின் நிழலை எறும்பிற்கு தரவிளையும் கவிதையும் தொகுப்பின் ரசனை மிக்க கவிதைளில் சில.
எப்படியும் சொல்லலாம் தவிர்க்கவே கூடாத ஒரு அருமையான கவிதை தொகுப்பு.

சந்தியா பதிப்பக வெளியீடு
விலை 65/ வெறும் காகிதத்திற்கும் அச்சுக்கும் மட்டும் மற்றபடிஇந்தக் கவிதைளுக்கு விலை பேச முடியாது.
ISBN : 978-93-81343-65-4

Comments

  1. அவரது கவிதைகள் எல்லாம் சிந்திக்க வைப்பவை...

    நூல் விமர்சனத்திற்கு நன்றி...

    திரு. இரா. எட்வின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவிதையோ அல்லது கட்டுரையில் உள்ள சில கருத்து வரிகளோதான் பலரின் வாழ்க்கையை அப்படியே மாற்றி போடுகின்றன.. அது போலதான் ஒட்டிய வயிறுடன்
    புல்வண்டி
    இழுத்தது மாடு என்ற வரிகள் அந்த மாணவனை நன்றாக படிக்க வைத்து இருக்கின்றன.


    பதிவு எழுதி சென்ற விதம் மிகவம் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா..
      தரமான ஒரு படைப்பை தரமாக அறிமுகம் செய்ய கொஞ்சம் உழைத்தேன் அவ்வளவே..

      Delete
  3. சரி இவ்வளவு தூரம் சொன்னதுக்கப்புறமும் கண்டுக்காம இருக்கிறது சரி இல்லை, நான் ஒரு எட்டு போய் பார்த்திட்டு வருகிறேன். உங்களுக்கு நல்ல மனசு இப்படி தான் இருக்கணும். வாழ்க வாழ்க....!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே..

      Delete
  4. //கவிதைகள் வார்த்தை செதுக்கல்கள், அவை வாழ்வையும் செதுக்கும், சமூகத்தையும் செதுக்கும். //
    நல்ல விமர்சனம்..பகிர்விற்கு நன்றி மது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே..

      Delete
  5. நீங்கள் பகிர்ந்துக்கொண்ட கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.
    தங்களது இந்த பதிவின் மூலம் இந்தப் தொகுப்பை வாங்கிப் படிக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. முகவரி தாருங்கள் vathiyar@gmail.com நான் அனுப்புகிறேன்..

      Delete
  6. நல்ல நூல் அறிமுகம்.நானும் படித்தேன்.அருமை.நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள்தான் அவருக்கே வாங்கி வந்து தந்தது என்று குறிப்பிட்டார் அய்யா...
      மகிழ்ச்சி...

      Delete
  7. கவிதைகள் காய்ந்துபோன காடுகளை கொளுத்தும், நம்பிக்கையற்ற மனதிற்கு ஆசுவாசம் அளிக்கும், அடர் இருட்டில் கூட சுடர்விடும் நம்பிக்கை ஒளிபாய்ச வல்லவை அவை.

    அழகான கவிதை வரிகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  8. வாழ்க்கையை மாற்றிப்போடும் வல்லமை எழுத்துக்கு உண்டு என்பதை அழகான சந்திப்பு நிகழ்ச்சி மெய்பித்திருக்கிறது. அருமையான கவிதை தொகுப்பைப் பற்றி அலசியிருப்பதற்கும், அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி சகோ.
    --------------
    விலை 65/ வெறும் காகிதத்திற்கும் அச்சுக்கும் மட்டும் மற்றபடிஇந்தக் கவிதைளுக்கு விலை பேச முடியாது. கலக்கிட்டீங்க சகோ. தொடருங்கள். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. சகோ நீங்கள் தொகுப்பை கட்டாயம் படிக்க வேண்டும்...

      Delete
  9. தஞ்சை புத்தகக் கண்காட்சியில் தோழர் இரா.எட்வின் அவர்களின் இந்நூலை வாங்கிப்படித்தேன்.
    அத்தனையும் முத்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தனது முப்பத்தி ஐந்து வருட கவிதைகளை தேர்ந்தெடுத்து போட்டதாக சொன்னார் அய்யா ...
      தொகுப்பின் சில வரிகள் சாமான்யமாய் மறக்காது ...

      Delete
  10. சிறந்த கவிதை நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. கவிதைக்கு விலையிட முடியாது என்ற தங்கள் கருத்து மிகச் சரியானதே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவரே...

      Delete

Post a Comment

வருக வருக