ஒரு பெண், அவளுக்கு ஒருத்தன் மீது தீராக் காதல். ஒருமுறை அவனைச் சந்தித்து தன் காதலைச் சொல்ல அவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான். அவளை விட பல வயது மூத்த அவன், உன் வயது என்ன என் வயது என்ன என்று சொல்லி அவளை நிராகரிக்கிறான். அவனைக் கடுப்பேற்ற இவள் அந்த இடத்திலேயே இன்னொருவனை மணக்கிறாள். மணமான கையோடு அவன் போர்க்களம் சென்று அங்கே அம்மை வந்து இறக்கிறான்.
விரட்டும் சந்தர்பங்களில் சூழலில் இவள் இன்னொருவனை மணக்கிறாள். பின்னர் மீண்டும் ஒரு மணம். ஆனால் அவளின் முதல் காதல் மட்டும் இன்னும் காலஓட்டத்தில் நிறம்கரையாமால் அப்படியே இருக்கிறது. வாழ்வின் எதாவது ஒரு திருப்பத்தில் அவனை அடைந்துவிட மாட்டோமா என்று உருகிக் காத்திருக்கிறாள்.
இப்படி ஒரு கதையுடன் திரைப்படம் இயக்க இன்றய இயக்குனர்களே தடுமாறுவார்கள். வெளிவந்தால் கலாச்சரா கழுகுகள் படத்தை திரையரங்கில் ஓட விடுவார்களா என்ன?
ஆனால் விசித்திரமான உண்மை என்னவென்றால் இந்தப் படம் வந்து சுமார் எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகப் போகிறது. இன்றுவரை ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது!
கான் வித் த வின்ட் என்ற திரைப்படம்தான் இது. அமெரிக்க உள்நாட்டுப் போரை பின்புலமாக கொண்டு ஒரு பெண் எதிர்கொண்ட பொருளாதார சமூக சிக்கல்களை அற்புதமாக திரைப்படுத்தியதால் கிடைத்த வானளாவிய வெற்றி இது!
மிக நீண்ட படம் டைட்டிலே பத்து நிமிடம் ஓடும் என்று நினைக்கின்றேன். மூன்று பாகங்கள், ஒரே படம். அமெரிக்க வரலாரையும் சேர்த்துக்கொண்டு சுழலும் திரைப்படம் தருவது ஒரு தனி சுகானுபவம்.
பல காட்சிகளை பேசிக்கொண்டே இருக்கலாம். முதல் கணவன் இறந்த பின்னர் ஒரு ஏலத்தில் பங்குபெற்று துக்க உடையான கருப்பு கவுனுடன் ஆடும் பால் ரூம் நடனம், யுத்தம் விசித்திரமான விதைவைகளை உருவாகுகிறது என்ற வசனம், சான்சே இல்லாத படம், சான்சே இல்லாத இலக்கியத் தரம் வாய்ந்த அனுபவங்கள். மேற்கண்ட காட்சியில் கிழவிகள் ஐயோ கர்த்தாவே என்று அலறுவது என தலைமுறை இடைவெளியையும், நவீன தலைமுறை பெண்ணின் பெண்ணியச் சிந்தனைகளின் வெளிப்பாடாகவும் அசத்தலாக பதிவு செய்ததில் இருக்கிறது படத்தின் அதிரி புதிரி வெற்றி. தளைகளை தகர்க்கும் பெண்மையின் குறியீடு கதாநாயகி. படம் பார்த்து விட்டு சொல்லுங்க நான் சரியாகத் தான் சொன்னேனா என்று!
கர்ப்பமாக இருக்கும் தனது தோழியை ஒரு வண்டியில் வைத்து தனது வீட்டிற்கு அழைத்துவரும் காட்சியும் ஒரு அழுத்தமான பதிவு. உள்நாட்டுப் போரில் பற்றி எரியும் பகுதிகளைக் கடந்து தனது வீட்டை நோக்கி பயணிக்கும் தீரம் வாவ். குதிரைகள் செத்துவிழ தனது வீட்டினை அடைந்தவள் அதிர்ந்து நிற்கிறாள். ஒரு பெரும் அரண்மனை பாதி எறிந்த நிலையில்!
பசி விரட்ட வீட்டின் கொல்லைப் புறம் ஓடி தவழ்ந்து கைக்கு கிடைத்த காரட்டை எடுத்து கடித்த மறுகணம் சுயம் நினைவுக்கு வர இறுக்கப் பற்றிய காரட்டுடன் வான் பார்த்து முழங்குவாளே பார்கனும். சாமி சத்தியமா இனி பசித்திருக்க மாட்டேன்! என்று அடிவயிற்றிலும் இதயத்தின் அடித்தளத்தில் இருந்தும் ஓங்கி ஒலிக்கும் அக்குரல்!
படத்தின் அற்புதமான காட்சிகளில் இது ஒன்று! அப்படியே மெல்ல நகரும் காமிரா ஒரு மண்மேட்டின் மீது கைகளை வான்நோக்கி உயர்த்தி சபதம் எடுக்கும் ஹீரோயினைக் காட்டியபடி பின்னால் நகரும். விரியும் பிரேமும் நிறைக்கும் இசையும்.... சினிமான்னா என்ன என்று தெரிய வேண்டும் என்றால் சினிமாக்கார்கள் பார்க்க வேண்டிய படம் இது. பார்த்து பல நாட்கள் ஆகியும் என் மனதில் அவளின் கோபமும் சபதமும் கேட்டுக் கொண்டே இருகின்றது.
படம் கொஞ்சம் மாற்று கருத்துகளையும் சொல்லிப் போகும், எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் அமெரிக்காவில் அடிமைகளை எல்லோரும் கேவலமாக நடத்தவில்லை, அவர்கள் மரியாதையாக நடத்தப் பட்டனர் என்கிற நகைப்பூட்டுகிற ஒரு இடைச்செருகளும் உண்டு! அமெரிக்க வீரர்களில் ஒரு பிரிவினர் கதாநாயகியை துரத்த காப்பாற்றுவது ஒரு நீக்ரோ அடிமை!
மிக நீண்ட, மிக அருமையான, பெண்ணியச் சிந்தனைகொண்ட ஒரு படத்தை என்னிடம் கேட்டால் யோசிக்காம சொல்லுவேன் இந்தப் படத்தை.
நிறைய நேரமும், வாசிப்பும், ரசனையும் உள்ளவர்கள் தவிர்க்கக் கூடாத படம் இது.
அன்பன்
மது
விமர்சனம் அருமை நண்பரே
ReplyDeleteநன்றி கரந்தையாரே...
Deleteதிண்டுக்கல்காரை முந்திவிட்டீர்கள்..
விரைவில்...
சிட்டிசன் கேன், மற்றும் கான் வித் தி வின்ட் இரண்டும் உலக சினிமாக்களின் உன்னதப் படைப்புக்கள். முன்பு ஒரு முறை பார்த்தது. மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் உங்கள் பதிவுக்கு நன்றி
ReplyDeleteநீங்கள் எழுதுகிற சிரத்தையைப் பார்த்து என் மனம் என்னைக் கேட்கும் உனக்கு இந்த பதிவிடுகிற வேலை தேவையா? என்று..
Deleteஉங்கள் எழுத்து ஒரு தரக்கோல்... மறைந்த கானம் குறித்து ...இப்படி சொல்கிறேன்.. நான்
இந்தப் படத்தைப் பற்றி நான் முன்னர் கேள்விப்பட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை ஆங்கிலப்படங்களில் மிகச் சிறந்தது என நான் நினைப்பது Ten Commandments மட்டுமே. தங்களின் விமர்சனம் மூலமாக பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். நன்றி.
ReplyDeleteநன்றி அய்யா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
Deleteவணக்கம் சகோ
ReplyDeleteஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அலசியிருப்பது அசாத்திய துணிச்சல். வெற்றி உங்களுக்கே.. எனக்கு ஒரு சந்தேகம் சகோ இந்த படத்தை எத்தனை பார்த்து பதிவு போட்டீங்க (ஒரு முறை என்றே தெரிந்தே கேள்வி கேட்ருக்கேன்). உங்கள் ரசனையும் இங்கு கவனிக்க வைக்கிறது. அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றி சகோ.
வணக்கம் சகோ,
Deleteடீ.என்.டீ. என்று ஒரு அருமையான சானெல் ஒரு காலத்தில் இருந்தது ... சரியாக ஒன்பது மணிக்கு கார்டூன் நெட்வொர்க் இப்படி மாறிவிடும்! இதில் பார்த்ததுதான் பென்ஹர், வேர் ஈகிள்ஸ் டேர், காசாபிளாங்கா... ஆனால் இந்தப் படத்தை டொராண்ட்டில் பதிவிறக்கம் செய்தேன்.. தரமான குறுவட்டுகளும் கிடைகின்றன சகோ..
பொதுவா நான் தங்களின் ஆங்கிலப் படத்தின் விமர்சனங்களை மேலோட்டமா பார்துவிட்டு போவேன். ஆனால் இந்த பதிவின் ஆரம்ப வரிகள் என்னை படிக்க தூண்டியது.
ReplyDeleteவிமர்சனம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
1970களில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் எடுத்த படங்களில் நிறைய படங்கள் இந்த மாதிரி எதிர்மறை கருத்துக்கள் உள்ள படம் தானே.
வருக உண்மையானவரே...
Deleteமேலோட்டம் என்று உண்மையைச் சொன்னதற்கு நன்றி..
Delete