ஜாக்கியின் அதிரடி நகைச்சுவை நிரம்பிய பல திரைப்படங்களுக்கு தீவிர ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உண்டு. அநேகமா திரையரங்கில் அறிமுக காட்சியில் தமிழ் ஹீரோக்களுக்கு பின்னர் காசு எறியப்பட்டு வரவேற்கப்பட்ட அயல் மொழி ஹீரோ இவராகத்தான் இருக்கும்.
சீரியஸ் சண்டைக் காட்சிகளில் ஒரு நிமிடம் வயிறு வலிக்க சிறிது முடிக்கும் நொடியில் ரசிகர்களை பதற வைப்பதும், பதட்டம் உச்சம் அடைகின்ற பொழுது மீண்டும் வயிறு வலிக்க சிரிப்பு என்று ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் இவரது தனிப் பாணி.
பலத்த எதிர்பார்பிற்கிடையே வெளியாகிய போலிஸ் ஸ்டோரி மூன்றாம் பாகம் நன்னா இருக்கும் என்றுதான் நினைத்தேன். அது ஒரு குத்தமாய்யா?
ஜாக்கி முதல் காட்சியிலேயே சுட்டுக் கொண்டு செத்துவிழுகிறார். நல்லவேளை ரசிகர்களிடம் துப்பாக்கி இல்லை. இல்லாவிட்டால் படம் முடிந்த பொழுது நிறையபேர் சுட்டுக்கொண்டு செத்திருப்பார்கள்!
புதிய திரைக்கதை பாணி ரொம்பவேபடுத்தி எடுக்கிறது. முதலில் ஜாக்கி தன்மேல் கோபமாக இருக்கும் மகளை வூபார் என்கிற க்ளப்பில் சந்திக்க செல்கிறார். அல்ட்ரா மாடனாக இருக்கும் அவர் உடையும் டாட்டூவும் ஜாக்கியை ரொம்பவே டிஸ்டர்ப் செய்கிறது.
திடீரென அந்த பாரின் ஓனரை நான் மணந்துகொள்ள போகிறேன் என்று சொல்கிறாள் மகள். தொடரும் களபரத்தில் முகம் தெரியாத ஒருவனால் பின்மண்டையில் தாக்கப்பட்டு மயங்கி விழுகிறார் ஜாக்கி.
ஒரு சிலந்தியைப் போல் வில்லன் மிக நேர்த்தியாக ஒவ்வொரு பாத்திரத்தையும் பிடித்து ஒரே நேரத்தில் பாருக்குள் அடைத்து வைத்து பிணையாக என்ன கேட்கிறான் என்பதில் தொடர்கிறது கதை. நல்ல முயற்சிதான்.
எத்துனை உழைப்பு. எத்துனை மெனக்கெடல். ஜாக்கி தன் பங்கை சற்றும் சமரசமின்றி தந்தும் பிரசன்டேசன் சொதப்பலில் அத்துணையும் வீண்.
புதிய திரைக்கதை வடிவம். இருந்தாலும் ஜாக்கியின் அகில உலகபிம்பத்தை முற்றாக சிதைத்துவிட்டது இந்தப்படம்.
நாளய இயக்குனர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம். அப்போதான் ஏன் இது சொதப்பியது என்று தெரிந்து கொள்ளலாம். ஆக்சன் படம் எதிர்பார்த்து வந்தவர்களிடம் மைன்ட் கேம் ஆடினால்?
படத்தின் மற்றொரு மாபெரும் சொதப்ஸ் இசை. கொலையாக கொன்னுட்டான்.
ஒருவேளை நம்ம அரசியல்வாதிகள் யாரும் ப்ளாக்மணிய ஒயிட்டாக்க பைனான்ஸ் செய்திருப்பார்களோ என்று கூட தோன்றுகிறது! அவ்ளோவு சொதப்பல் படம்.
இயக்குனர் டிங் ஷெங் அவரே எழுதி இயக்கிய படம். ஹிம். ஜாக்கிமேல் ரொம்ப கோபம் போல!
திரைத்துறையில் புதுமையை வேண்டும் நபர்கள் மட்டும் பார்க்கலாம்.
அன்பன்
மது..
பைனான்ஸ் மட்டுமில்லாமல் கதையையும் சொல்லி இருப்பார்களோ...?
ReplyDelete