தஞ்சையில் பிறந்து புதுகையில் தவழும் தமிழ்த்தென்றல், மாதிரிப் பள்ளியின் துணைமுதல்வர் இந்த முன்மாதிரி ஆசிரியர்.
கவிஞர்கள் பலர் தமிழை படுத்திக் கொண்டிருக்க இவரோ முத்துபாஸ்கரன் என்ற தன பெயரை முத்துநிலவன் என தமிழ்ப்படுத்திக்கொண்டவர். தமிழில் முதுகலையும் , கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர்.
இவர் மனைவியார் திருமதி.மல்லிகா அவர்கள் புதுகை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சீனியர் டெல்காம் ஆபிசராக பணியாற்றும் பி.எஸ்.சி., பி.ஜி.டி.சி.எ பட்டதாரி. இவருக்கு சட்டமும், கணினியும் பயின்ற இருமகள்களும், பொறியியல் பயின்ற மகனும் உண்டு.
35 வருட இலக்கியப் பணியில் 5000 மேடைகளில் தமிழகம் மட்டுமின்றி தமிழ் வாழும் பிற மாநிலங்களிலும், நகரங்களிலும் தடம் பதித்திருக்கிறார்.
35 வருடத்தில் நியாயமாக முதன்மைக் கல்வி அலுவலர் பணியில் இருந்திருக்கவேண்டிய இவர் ஆசிரியராகவே பணிநிறைவு பெறுவது தனது ஆசிரியப் பணியை எவ்வளவு தூரம் இவர் நேசித்தார் என்பதற்கு ஒரு சான்று.
புதுகை கணினித் தமிழ்ச் சங்கத்தினை திறம்பட எடுத்து செல்பவர்.
கட்சி வேறுபாடின்றி பிரபல தொலைக்காட்சிகளிலும் காட்சி வேறுபாடு இன்றி உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றங்களிலும் பங்கேற்கிறார்.
1. புதிய மரபுகள் - கவிதைத் தொகுப்பு
2.20ஆம் நூற்றான்றின் இலக்கியவாதிகள்
3. நேற்று ஆங்கிலம் இன்று தமிழ்
4. நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவோம், பேசுவோம்
என்ற நான்கு நூல்களை எழுதி வெளியிட்ட இவர் தற்போது கவிதையின் கதை என்கிற பெரும் இலக்கிய நூலை எழுதிக்கொண்டிருகிறார்.
தினமணியில் பற்பல தலையங்கங்களும், கணையாழி, செம்மலர் போன்றவற்றில் இவரது வீரியம் மிக்க விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
திண்ணை.காம்., பதிவுகள்.காம், கீற்று.காம் போன்ற இணைய பத்திரிக்கைகளில் எழுதுவதோடு வளரும்கவிதை.ப்ளாக்ஸ்பாட்.காம்
என்கிற வலைப்பூவில் தனது கட்டுரைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
கவிஞர்.மு.மேத்தாவிடமிருந்து பாரதிதாசன் விருதை பெற்றவர். கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் இருமுறை பரிசினை வென்ற எழுத்தாளர்.
2003 சர்வதேச அளவில் நடந்த இணைய கவிதைப் போட்டியில் முதல்பரிசைப் பெற்றவர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் M.A தமிழ் வகுப்புக்களுக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது கவிதைக் தொகுப்பு பாடமாய்ச் சேர்க்கப்பட்டிருக்கிறது..
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் B.A, BSc, வகுப்புகளுக்கு இவரது சிறுகதை பாடமாக உள்ளது.
அறிவொளி காலத்தில் தமிழகம் முழுதும் களைகட்டிய இவரது சைக்கிள் ஓட்ட கத்துக்கனும் தங்கச்சி என்கிற பாடல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவர் இளம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் இளைஞர்.
சிறந்த பகுத்தறிவுவாதியும், கவிஞருமான இவர்தாம் நமது நேசத்துக்குரிய திரு.முத்துநிலவன்
தென் தமிழகம் முழுதும் கலந்து கொண்ட புதுக்கோட்டை ஜே.சி.ஐ. சென்ட்ரலின் திறன்மிகு பேச்சாளர் பயிற்சியின் துவக்க விழாவில் கவிஞர் முத்து நிலவனை நான் அறிமுகப்படுத்த தயார் செய்தது. (நினைவில் வந்ததை மட்டும் பேசினேன்)
திரு. முத்துநிலவன் ஐயா அவர்களின் சிறப்புகளை அனைத்தும் அறிந்தேன்... அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் சகோ
ReplyDeleteஅன்பு சகோவிற்கு வணக்கம்
ஆஹா! நமது முத்துநிலவன் ஐயா பற்றிய அற்புதமான அறிமுகம். இப்பதிவில் எந்த கருத்தும் மிகையாகக் கூறப்படவில்லை என்பதே உண்மை. இளைஞர்களை உற்சாகப்படுத்தும் இந்த இளைஞர் உத்வேகத்தால் தான் என்னுடைய அரும்புகள் மலரட்டும் வலைப்பூ மலர்ந்தது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது படைப்புகள் பன்மொழியில் வலம் வருவதும், பல்கலைக்கழகங்களில் பாடமாக இருப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை.. ஐயா பற்றிய தகவல்கள் திரட்டி பதிந்த விதம் அருமை. தலைப்பு அட்டகாசம் சகோ அசத்தி விட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி..
நன்றி சகோ..
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
முத்துநிலவன் ஐயாவைப் பற்றிய பதிவு அருமை!
ReplyDeleteநன்றி எழுத்தாளரே..
Deleteஅறியாதவர்களிடம், அறியாத இடத்தில் சொல்வதற்காக (கல்லூரிகளிலும், ஜேசி, ரோட்டரி போலும் அமைப்புகளிலும் பேச அழைக்கும் போது அவர்கள் கேட்பதற்கிணங்க அனுப்புவதற்காகவும் தயாரித்த என் சுய விவரத்தை கொஞ்சம் தயாரித்து) வைத்திருந்ததை இப்படி உலகறியப் போட்டு உடைத்துவிட்டீர்களே மதூ! ”இவ்வளவுதானா இவன்?!!?” என்று பலரும் உச்சுக் கொட்டப் போகிறார்கள். இன்று இந்தநேரம் நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் நம் இன்றைய ஆளுமை முழுமையாக வெளிப்படும் என்று நம்புகிறவன் நான். மற்றபடி எழுதிவைத்திருப்பதெல்லாம் கடந்தகாலச் சுவடிகள்தான். எனினும் உங்கள் அன்புக்கேற்ப இனி நடந்துகொள்ள முயல்வேன் அதுதான் “இன்றைய நிலவன்” (1980இல் நான் வாங்கிய எம்.ஏ.,பட்டத்தை இன்றும் போட்டுக்கொள்ளத் தகுதி இருக்கிறதா? என்று இப்போதும் என்னைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்... நான் இ்ன்னும் வளர, வளர்க்க நினைக்கிறேன். அதனால்தான் நம் ஊரில் ஆண்டுதோறும் “சாதனையாளர்“ விருது தரும் திரு முத்து.சீனிவாசன் பல முறை என்னை அணுகியும், “நான் இன்னும் நிறைய சாதிக் வேண்டி உள்ளது, இப்போதே சாதனையாளர் பட்டியலில் சேர்த்து என்னை ரிடையராக்கி விடாதீர்கள்” என்று அன்போடு மறுக்கவும் காரணமாக இருக்கிறது. நாம் போக வேண்டிய தூரமும் பாரமும் அறிந்தவன் நான். தொடர்ந்து பயணிப்பேன் - உங்களைப் போலும் இளைய இனிய துணையுடன். நன்றி வணக்கம்.
ReplyDeleteதொடர காத்திருக்கிறேன்....
Deleteநன்றி அண்ணா
இத்துணை விசயங்களையும் மேடையில் சொல்ல முடியவில்லை என்பதும் எனக்கு வருத்தமே..
Deleteஎத்துனை முறை மேடை ஏறினாலும் எப்படி பயிற்சி எடுப்பது என்பதையே கற்றுக்கொண்டிருகிறேன்.
என்னோவொரு தன்னடக்கம் பாருங்க அண்ணனுக்கு !!!
Delete//இப்போதே சாதனையாளர் பட்டியலில் சேர்த்து என்னை ரிடையராக்கி விடாதீர்கள்”//இந்த வரிகள் எங்களுக்கு ஒரு பாடம். நன்றி நிலவன் அண்ணா.
நண்பரே! முத்துநிலவன் அவர்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் சிறப்பாகக் கொடுத்து அறிய உதவி உள்ளீர்கள்! அவரது படைப்புகள் பாடமாக இருப்பது பெருமையே! ஆசிரியர்களுக்கெல்லாம் பெருமையே! அருமையாகத் தகவல்களைத் தொகுத்துள்ளீர்கள்!
ReplyDeleteநன்றி! அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
நன்றி
Deleteசிலேட்டையும் பலபத்தையும் மறக்காமல் வாக்களியுங்கள்..
முத்துநிலவன் ஐயா பற்றிய அருமையான பதிவு...நன்றி மது.
ReplyDeleteநன்றி கவிஞரே..
Deleteதலைப்பும், கட்டுரையும் அருமை.
ReplyDeleteஇது என்ன குருதட்சனையா!?
அருமையான மனிதரை பற்றி அறிந்து கொண்டேன்! பதிவர் சந்திப்பில் அன்பரை சந்தித்து இருக்கிறேன்! பதிவுகளை வாசித்தும் வருகிறேன்! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. திரு. சுரேஷ்
Deleteதானும் வளர்ந்து தன்னை சுற்றிலும் உள்ளவர்களையும் வளர்க்கும் பண்பு எல்லோருக்கும் வராது மனம் உள்ளோருக்கே வரும் .அதில் அய்யாவும் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுவார்கள்.பெண்ணியம் பேசுவது மட்டுமல்ல செயலிலும் ...இவருடைய கூடுதல் சிறப்பு
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteகவிஞரே...
ஐயா திருமிகு முத்து நிலவன் அவர்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி திரு.குமார்..
Deleteகவிஞர் முத்து நிலவன் ஐயா பற்றி நான் அறியாத பல செய்திகளை வழங்கியமைக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteவிழா மேடைகளில் அய்யாவை அறிமுகம் செய்ய எழுதியது நான் கொஞ்சம் எனக்குத் தெரிந்த தகவல்களை சேர்த்தேன்...
Deleteநன்றி அய்யா..
வணக்கம் சகோதரா!
ReplyDeleteதங்கள் நல்ல குணத்தையும் பரந்த மனப்பான்மையையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. நல்ல உள்ளங்களை சந்தித்தது என் பாக்கியமே. நன்றியும் வாழ்த்துக்களும் சகோ பதிவுக்கு.....!
சகோதரர் நிலவன் அவர்களை பற்றிய விடயங்களை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவர் நட்பு கிடைத்ததும் என் பாக்கியமே.அவர் ஊக்கம் கொடுத்துதவியவர்களில் நானும் அடங்குவேன். என்பது எனக்கு பெருமையே .
அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகட்டும். அவர் எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.....!
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி..
Deleteஐயாவின்அறிமுகம் இருந்தும் நான் அறியாத விஷயங்கள்இவற்றில்சில, அறிமுகம் அருமைநன்றிsir .
ReplyDeleteநன்றி... கவிஞரே..
Deleteமுதலில் தாமதமான கருத்துக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஇந்த பதிவை படித்த பிறகு, மிகப் பொருத்தமான ஒரு தலைப்பைத்தான் கொடுத்திருக்கிறீர்கள் என்று எண்ணத் தோன்றியது.
இந்த பதிவின் மூலம் நான் ஐயாவைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.அதற்கு மிக்க நன்றி.
இல்லை நண்பரே, தலைப்பு ரொம்ப ஓவர்தான்
Deleteஇலக்கணத்தில் உயர்வு நவிற்சி அணி என்றும் இல்பொருளை உவமை என்றும் சொல்வோம். என்றாலும், சங்க இலக்கியங்களைப் பார்த்துப் பலமுறை என் பேராசிரியர் அய்யா தி.வே.கோபாலய்யர் அவர்களிடம் “இப்படியெல்லாம் இருந்ததா அய்யா?“ என்று கேட்டபோது,“இருந்தா நல்லா இருக்கும்லடா?” என்னும் பதிலைப் பெற்றிருக்கிறேன். அதுபோலத்தான் தம்பி கஸ்தூரி, “இனிமேலயாவது ஏதாவது நல்லதாப் பண்ணு அண்ணே” என்று உரிமையோடு சொல்லியிருக்கிறார். நானும் முயற்சி செய்கிறேன். நன்றி
நான் தெளிவாக இருக்கிறேன்...
Deleteப்ளாக் ஒரு வாழ்வின் ஒரு பகுதி...
கொஞ்சம் நேரம் என்கிற லக்சுவரி கிடைக்கும் பொழுது மட்டும் செய்கிறேன்...
அதையே உங்களிடமும் எதிர்பார்கிறேன்.. எனவே மன்னிப்பு அவசியமற்றது..
********
நிலவன் ஐயாவின் பதிலைப் பார்த்தீரா? நான் என் கமெண்டை போனில் சொல்லிவிட்டேன். ...
ஓராண்டுக்கு முன்னர் முத்து நிலவன் ஐயா அவர்களை பட்டிமன்ற பேச்சாளர் என்ற அளவில்தான் அறிந்தவன். பதிவுலகில் அவரது பதிவுகளைப் படித்த பின்பு அவரது பிற பரிமாணங்களையும் அறியமுடிந்தது. அவர் என்னிடமும் நட்புபாராட்டுவார் என்று நினைக்கவில்லை.
ReplyDeleteஅவரது அடக்கமும் விரும்தோம்பல் பண்பும் என்னை ஆச்சர்யப் படுத்தியது, இளையவர்களாய் இருந்தாலும் அவர்களிடம் கற்றுக் கொள்ள என்ன கிடைக்கும் என்று தேடி அறிந்து தானும் கற்று பிறரையும் கற்கத் தூண்டுபவர்
இந்தப் பாராட்டுப் பத்திரம் பொருத்தமானதே