ஒரு புதிய திட்டம்


தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்பாட்டு நெறிமுறைகளின்படி  பங்கேற்று கற்றலின் மூலம் வகுப்பறைகளை இணைக்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் எல்லைபட்டி கிராமத்தின் அரசினர் உயர்நிலைப் பள்ளி, நகரில் உள்ள அரசினர் முன்மாதிரிப் பள்ளியுடன் காணொளி மூலம் இணைக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த செயல்பாட்டில் முதற்கட்டமாக ஸ்கைப் பயனர் கணக்கின் மூலம் எல்லைபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி அரசு முன்மாதிரிப் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. சோதனை நிகழ்வாக கடந்த 05/03/1214, புதன் அன்று முன்மாதிரிப் பள்ளியின் அறிவியல் ஆசிரியை திருமதி. கே.சுசிலா முதல் கற்பித்தல் நிகழ்வை செய்தார். அதேபோல எலைப்பட்டி பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் திரு. ஸ்ரீனிவாச நாராயணன் மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடத்தை நடத்தினார். சோதனை நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுற்றது.

பின்னர் மாநில திட்ட வழிகாட்டுதலின்படி 06/03/2014, வியாழனன்று மீண்டும் இருபள்ளிகளும் இணைக்கப்பட்டு முன்மாதிரிப் பள்ளியின் அறிவியல் ஆசிரியை திருமதி. கே. சுசிலா அவர்கள் எட்டாம் வகுப்பின் ஒலியியல் மற்றும் ஒளியியல் பாடத்தை மிகச் சிறப்பாக நடத்தினார். பல்வேறு கற்றல் கற்பித்தல் கருவிகளுடன் படத்தை எல்லைப்பட்டி மாணவர்கள் ஆர்வமுடன் கவனிக்கும்வண்ணம் சிறப்புடன் நடத்தினார். நகரத்தின் வடக்கு எல்லையில் உள்ள முன்மாதிரிப் பள்ளியில் இருந்து அவர் ஒலித்த இசைக்கவையின் “உயிங்” என்ற ஒலி மாவட்டத்தின் மேற்கு எல்லையின் ஆரம்பத்தில் இருக்கும் எல்லைப்பட்டி மாணவர்களால் கேட்டுஉணரப்பட்டது. இது தொழில் நுட்பம் குறித்தும் அதன் கல்விப் பயன்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு ஒரு நேரடி அனுபவத்தைதந்தது.

இந்நிகழ்வின் பின்னர் எல்லைப்பட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் திரு. ஸ்ரீனிவாசநாராயணன் வேலூர் புரட்சியை குறித்து விரிவாகவும் சிறப்பாகவும் நடத்தினார். பல கற்றல் கருவிகளை பயன்படுத்தி பாங்குற வேலூர் புரட்சியையும், ஹைதர் அலியையும், திப்புசுல்தானையும் குறித்து செய்திகளை பகிர்ந்தார். இதனை அரசினர் முன்மாதிரிப் பள்ளியின் மாணவர்கள் நன்கு கவனித்துப் பயன்பெற்றனர்.

பங்காற்றிய ஆசிரியர்கள்

திருமதி. கே. சுசிலா, அறிவியல் ஆசிரியை அரசினர் முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.
திரு. ஸ்ரீமலையப்பன் (தொழில் நுட்ப உதவி), அரசினர் முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.
திருமதி. எம். ஜெயலக்ஷ்மி, அறிவியல் ஆசிரியை, அரசினர் உயர்நிலைப் பள்ளி, எல்லைப்பட்டி புதுக்கோட்டை.
திருமதி. ஆர். ராணி, அறிவியல் ஆசிரியை, அரசினர் உயர்நிலைப் பள்ளி, எல்லைப்பட்டி புதுக்கோட்டை.
திரு. ஸ்ரீனிவாசநாராயணன், சமூக அறிவியல் ஆசிரியர், அரசினர் உயர்நிலைப் பள்ளி, எல்லைப்பட்டி புதுக்கோட்டை.

பங்கேற்ற மாணவர்கள் விவரம்

அரசினர் உயர்நிலைப் பள்ளி, எல்லைப்பட்டி புதுக்கோட்டை.

1. ௧. பிரிதிவிராஜா
2. ப. முருகேசன்
3. குணசேகரன்
4. மணிகண்டன்
5. சிவக்குமார்
6. சே. ஆர்த்தி
7. க. நந்தினி
8. க. ஐஸ்வர்யா
9. ஆர்யா
10. சி. ஆஷாப்பிரியா

அரசினர் முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

1. ஏ. சாதனா
2. தாரணி
3. யோகேஸ்வரி
4. ரிச்சர்ட்
5. பர்வீன் பானு
6. கே.கீர்த்தனா
7. எ. மகாலட்சுமி
8. பி. சுரேஷ்

Comments

  1. நல்லதொரு திட்டம்... தொடர்ந்து செயல்படட்டும்...
    மாணாக்கர்கள் பயன்பெறட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா..

      Delete
  2. தொடரட்டும்... மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடரும் ... நன்றி அண்ணா!

      Delete
  3. இந்த அளவிற்கு அரசாங்கப் பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்திருக்கிறது என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.

    இப்படி உயர்ந்த தரம் மற்றும் தகுதியான ஆசிரியர்கள் என்று எல்லாம் இருந்தும், நம் மக்களுக்கு தனியார் பள்ளிகளின் மீதுள்ள மோகம் மட்டும் குறையவே மாட்டேங்குதே!!!

    ReplyDelete
    Replies
    1. தொழில் நுட்பம் அறிமுகம், மகிழ்வு
      உங்களின்
      நீண்ட கருதும்
      மகிழ்வு...

      Delete
  4. நல்லதொரு திட்டம்
    பங்கேற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நல்லசிரியரே

      Delete
  5. நவீன முறையில் நல்லதொரு கல்வித் திட்டம் சிறப்புற வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே..

      Delete
  6. நல்ல திட்டம்.எங்கள் பள்ளியும் இராணி மகளிர் மேல் நிலைப்பள்ளியும் இணைந்து செயல் பட்டது.வாழ்த்துக்கள் ஆசிரியர்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே...

      Delete
  7. வணக்கம் சகோ
    தங்களின் இந்த பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கல்வி நுட்பவியல் பற்றி எல்லாம் பேசி விட்டு வகுப்பறையில் கரும்பலகையைக் கட்டிக்கொண்டு பாடம் நடத்தும் சூழல் தான் தொடர்கிறது எனும் ஏக்கத்தை நீக்கியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி. பதிவில் தேதியிட்ட இரு இடங்களும் திருத்தம் செய்ய வேண்டி உள்ளது தானே சகோ. நாளை சந்திப்போம்..

    ReplyDelete

Post a Comment

வருக வருக