தலைவர் திரு.ஏவி.எம்.எஸ்.கார்த்திக் |
நிகில் நிறுவனர், ஜே.சி.ஐயின் பயிற்சியாளர்களின் பயிற்சியாளர் திரு.சோம.நாகலிங்கம் திடீரென தொடர்பு கொண்டு உங்க ஊரில் ஒரு பயிற்சி ஏற்பாடாகியிருக்கு நீங்கள் சில பயிற்சிகளுக்கு தோள்தர முடியுமா எனக்கேட்க சரி என்று சொல்லிவிட்டேன்.
வழக்கமான பயிற்சி என்றாலும் கொஞ்சம் ஸ்பெஷல் பயிற்சி இது. ஒன்று நான் படித்த இராஜகோபாலபுரம் பள்ளியில் காலை நினைவாற்றல், தொடர்பாற்றல் எடுத்துவிட்டு மதியம் காயாம்பட்டி பள்ளிக்கு சென்று பயிற்சி எடுக்கவேண்டும்.
ஜேசிஐ புதுக்கோட்டை சென்ட்ரலின் தலைவர் ஜேசி.கார்த்திக் திட்டத்தின் படி ஒரேவேளையில் மாவட்டத்தின் மூன்று பள்ளிகளில் நடைபெற்றது இந்தப் பயிற்சி. கிளையியக்கத்தின் உறுப்பினர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் இந்த நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பித்தனர். செயலர். வினோத், இயக்குனர் அன்பரசன் போன்றோர் துடிப்புடன் செயல்பட்டு நிகழ்வை நிறைவானதோர் அனுபவமாக்கினர்.
திரு.கோடீஸ்வரா அழகப்பன் பள்ளியின் நிகழ்வில் தலைமை ஆசிரியரோடு |
நான் படித்த பள்ளி ராஜகோபாலபுரம் உயர்நிலைப் பள்ளி, இப்பள்ளிக்கு வழங்கப்பட்ட பயிற்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு. கோடிஸ்வரா அழகப்பன், திரு. எம்.ஏ. அக்பர் இருவரும் மிகசிறப்பான அறிமுக உரையை தந்தனர். தலைமை ஆசிரியர் திருமதி. தனலஷ்மி மாணவர்களை ஊக்கப் படுத்தி விடைபெற்றார். எனது தோழர் திரு.ராஜேஷ் இப்பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பதும் நேர்த்தியாக வகுப்பெடுப்பதை பார்த்ததும் ஒரு நிறைவான அனுபவம்.
இதேவேளையில் காந்திநகர் உயர்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது இப்பயிற்சி. திரு. தயானந்தன், திரு.குமரகுரு இருவரும் ஆறுமுதல் எட்டுவகுப்புகளுக்கும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கும் பயிற்சி தந்தனர்.
நான் எனது பயிற்சியை முடித்துவிட்டு காயாம்பட்டி செல்வதற்கு முன்னர் காந்திநகர் பள்ளயில் தலைவர் ஏற்பாடு செய்த அறுசுவை மதியஉணவை அருந்திவிட்டு, காயாம்பட்டி நோக்கி பயணித்தேன். ஒரு கணக்கில் பொற்பனைக்கோட்டையை தாண்டினால் காயாம்பட்டி என்று வண்டியை முடுக்கினேன். சில ஆயிரம் வருட பழைய கோவில்கள் நிறைந்தது நான் பயணித்த பாதை.
திருக்கட்டளையை அணுகிய பொழுது ரோட்டில் இடம் வலமாக வேலி போடப்பட்ட நிலங்களை கடந்தேன். அவற்றின் அருகே எனக்கு பரிச்சயமான ஊதா கலர் போர்டுகள் இருக்க உடன் சில சந்தேககங்கள் முகிழ்த்தது.
காந்திநகர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பேசுகிறார் |
நினைத்தது சரிதான். திருக்கட்டளை கிராமம் முழுவதும் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில்! கரந்தையார் இருந்தால் ஒரு மூன்று பதிவுகளாவது இந்தக் கிராமத்தினைப்பற்றி எழுதியிருப்பார். என்னை நினைத்து எனக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது. (சீக்கிரம் எழுதுகிறேன்)
இதற்கு மேல் இன்று அங்கு நின்றால் காயாம்பட்டி நிகழ்வு பணால். எனவே மீண்டும் வண்டியை முடுக்கி பொற்பனைக்கோட்டையை அடைந்தேன். முன்பு ஒவ்வொரு வாரமும் சென்ற இடம். இப்போது அடையாளமே தெரியாது மாறியிருந்தது. நான் முதலில் வந்த திருப்பத்தில் வலப்புறம் திரும்ப அது நேரே போய் எனக்கு பிடித்த ஆதி பொற்பனைக்கோட்டையில் போய் நின்றது. மகிழ்வுடன் சிறிது திருநீரை எடுத்துக்கொண்டு காயம்பட்டி நோக்கி விரைந்தேன்.
மிரட்லானஅத்துவானக் காட்டுப் பாதை |
காயாம்பட்டியில் மதிய பயிற்சியை நேரத்திற்கு எடுக்க முடிந்தது ஒரு நல்ல அனுபவம். புதுகையின் சிறந்த தலைமை ஆசிரியர்களில் ஒருவர் பிரபாகரன் அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் குறைகளை தங்களது உழைப்பினால் நிறைகளாக்கிக்கொண்டிருந்தனர். நல்ல தலைமையாசிரியர் நல்ல ஆசிரிய ஆசிரியைகள். ஆனால் பாதி வகுப்புகள் மரத்தடியில்தான் நடத்தப்படுகின்றது. விசாரித்ததில் விரைவில் கட்டடம் வர இருப்பதை சொன்னார்கள். மகிழ்வாக இருந்தது. மாணவர்கள் நல்ல ஆரவத்துடன் பங்கேற்றனர். நான் மீண்டும் காந்திநகர் விரைந்தேன்.
ஆசிரியர் செந்தில் பயிற்சிக் கையேட்டினை அளிக்க பின்னணியில் தலைமை ஆசிரியர் பிரபாகரன் |
காந்திநகர் நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் சமூக நல மருத்துவர் அய்யா. ராமதாசு அவர்கள் இந்தப் பயிற்சியை வள்ளலார் இல்ல மாணவர்களுக்கு தர இயலுமா? எனக்கேட்டார். மருத்துவர். இராமதாஸ் புதுகையின் முன்னனி குழந்தைகள் நல மருத்துவர். யாரும் உரிமை கோராத, கேட்போர் இல்லாத, அனாதைச் சடலங்களை உரிய சடங்குகளோடு அடக்கம் செய்து வரும் சர்வஜித் அறக்கட்டளையின் நிறுவனர். அய்யா இன்னும் எத்தனையோ நல்ல பணிகளை சமூக அக்கறையோடு செய்துவருபவர். அவர் கேட்டால் மறுத்தல் முறையா என்ன?
மருத்துவர். இராமதாஸ் பின்னணியில் காத்தமுத்து சாமிகள் மற்றும் செயலர் வினோத் |
நிகில் நிறுவனத்தின் தலைமைப் பயிற்சியாளர் திரு. ஆர்.ஆர்.கணேசன் அவர்கள் உடனே நிறுவனர் திரு.நாகலிங்கம் அவர்களைத் தொடர்புகொண்டு அனுமதிகோர நல்லா செய்யுங்கள் என்று ஊக்கமூட்டும் வார்த்தைகளால் அனுமதி தந்தார் நிறுவனர்.
ஞாயிறு அன்று வல்ளலார் இராமலிங்க அடிகளார் இல்லத்தில் மருத்துவர்.ராமதாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் எழுபத்தியொரு மாணவர்களுக்குப் பயிற்சி. திரு.ஆர்.ஆர்.கணேசன் அய்யாவுடன் அடியேனும் பயிற்சியாளராக பயிற்சியளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெற்றனர்.
திரு, ஆர்.ஆர்.ஜி நினைவாற்றல் விளயாட்டு! |
மாணவர்கள் முன்பே பயிற்சிகளை தந்துவந்த நான் இப்பயிற்சியில் தலைமை பயிற்சியாளர் திரு. ஆர்.ஆர். கணேசன் (எனது குருமார்களில் ஒருவர்!), தலைவர் திரு. ஏ.வி.எம்.எஸ். கார்த்திக் இல்லத்தின் பொறுப்பாளர் மருத்துவர் இராமதாசு இல்ல ஒருங்கிணப்பாளர் காத்தமுத்து ஸ்வாமிகள் மற்றும் எமது கிளையியக்க செயலர் திரு. வினோத் முன்னிலையில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தது ஒரு வித்யாசமான அனுபவம்.
விழாவின் நிறைவில் காத்தமுத்து சாமிகள் சொன்ன நெய்காரன்பட்டி ஜமீன் கதை ரொம்பவே அசத்தல். அதைவிட விருந்தினர்களுக்கு பொன்னாடை போற்றும் பொழுது மாணவர்கள் கரவொலி எழுப்பவில்லை! பதிலாக அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி என்று மெல்லப்பாடினார்கள்! காதுகள் அறையும் கரவொலிகளையே கேட்டவர்களுக்கு இது எப்படிப்பட்ட புது அனுபவமாக இருக்க முடியும் என்பது அனுபவித்தால் மட்டுமே தெரியும்.
மிக அற்புதமான ஒரு நிகழ்வாக இது அமைந்தது. இதற்கு காரணமான ஜேசி. ஏவி.எம்.எஸ். கார்த்திக் அவர்களுக்கும், மருத்துவர் அய்யா திரு. ராமதாஸ் அவர்களுக்கும் எனது நெகிழ்வான நன்றிகள்.
நிகில் இன்னும் எத்துனை முறை உனக்கு நான் நன்றி சொல்வது. அத்துணைக்கும் நன்றி நிகில்
அன்பன்
மது.
கரந்தையார் அவர்களும் பகிர்வுகளை தொடரட்டும்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன்னென்னவோ செய்றீங்க...வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி கவிஞரே.
Deleteவிருந்தினர்களுக்கு பொன்னாடை போற்றும் பொழுது மாணவர்கள் கரவொலி எழுப்பவில்லை! பதிலாக அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி என்று மெல்லப்பாடினார்கள்! காதுகள் அறையும் கரவொலிகளையே கேட்டவர்களுக்கு இது எப்படிப்பட்ட புது அனுபவமாக இருக்க முடியும் என்பது அனுபவித்தால் மட்டுமே தெரியும். - உண்மைதான் மது.
ReplyDeleteகண்ணதாசன் சொல்வது போல “உணர்ந்தவர் உணர்வாராக” உங்களின் இதுபோலும் அனுபவங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்... பின்னர் இது அருமையான புத்தகமாகலாம்!
அண்ணா,
Deleteஒரு சிறு அனுபவப் பகிர்வு, இதுவும் புத்தகம் ஆகுமா? என்ன ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
ஒரு நல்ல நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி முனைவரே...
Deleteநான் இன்று காலை புகைவண்டியில் வரும்போது,என் வலைப்பூவின் டாஷ்போர்டில், தங்களின் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது. ஒரு நொடி கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன், அதாவது நான் தலைப்பை படித்த விதம் அப்படி - "திகிலோடு இரு நாள்" என்று படித்தது தான். என்னடாது, நண்பர் அப்படியென்ன திகிலோடு இரு நாட்களை செலவழித்திருக்கிறார்ன்னு ஒரே ஆச்சிரியம். பதிவிற்குள் போய் படித்தபோது தான், தலைப்பை தவறுதலாக படித்தது
ReplyDeleteதெரிந்தது.
நிறைய நல்ல விஷயங்களை சத்தமேயில்லாமல் செய்துக்கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள்
பயணங்கள் இனிமை அதுவும் படித்துக்கொண்டே பயணிப்பது அதனினும் இனிமை..
Deleteஅருள் கூர்ந்து நல்ல ஆடியோ புத்தகங்களை கேட்டுக்கொண்டு பயணியுங்கள், பயணத்தில் படித்தால் விழிகள் சீக்கிரம் சோர்வடைந்துவிடும்...
அப்புறம் பொற்பனைக்கொட்டை காட்டில் கொஞ்சம் திலோடுதான் பயணித்தேன்... ஹா ஹா ஹா
தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி. பயணங்களில் படிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்கிறேன். நன்றி சகோ.
Delete