கேள்விகள் (ஒரு சிறுகதை?)

மெக்காலே கல்வித் திட்டத்தை விமர்சிப்பவர்கள் குறித்து நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்றார் சிராஜுதீன்.

சார் மெக்கலே கல்விமுறை மனப்பாடத்தை மட்டும்தான் சோதிக்கும், அது ஆங்கில அரசுக்கு கிளார்க்குகளை தர உருவாக்கப்பட்ட கல்விமுறை என்று நீங்க தானே சார் சொன்னீங்க என்றான் வசந்த்.

வசந்த் வகுப்பின் துரு துரு மாணவர்களில் ஒருவன். சதா கேள்விகளை மட்டுமே கேட்பான். சிராஜோ கேள்விகள் மூலமாக பாடங்களை நடத்த வேண்டும் என்று உறுதியாக நம்பும் இளம் ஆசிரியர்.

மற்ற மாணவர்கள் ஆவலோடு வசந்திடம் மாட்டிக்கொண்ட  சார் என்ன சொல்ல போகிறார் என்று பார்த்தனர்.

உண்மைதான் மெக்காலே கல்வித் திட்டம் குறைபாடுகளை உடையதுதான், ஆனால் இந்தியாவில் முதன் முதலாக அனைவரையும்  பள்ளியில் ஒரே தளத்தில் அமர வைத்தது மெக்காலே பிரபுதான்! ஆங்கில ஆட்சியில் தான் இது சாத்தியமானது.

ஏன் சார் இப்படி சொல்றீங்க இன்னைக்குமாறி அன்னைக்கு எல்லோரும் ஒண்ணா உட்கார முடியாதா?

ஆம். நமது இந்திய சமூக சூழல் அப்படித்தான் இருந்தது.  கல்வி கற்க சமூகத்தின் மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. இந்த அவலத்தை மாற்றியவர் மெக்காலே பிரபுதான்.

அப்போ இது ரொம்ப ரொம்ப நல்ல திட்டம்தானே அப்புறம் ஏன் எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்றாள் அனுமிதா.

இன்றைய காலகட்டத்தில் நாம் புதிய உலகிற்கு புதிய கல்வி முறைகளை உருவாக்கவேண்டியது அவசியம் இல்லையா அனு என்றார் சிராஜ்.

சார் புரியல. சார் மெக்காலே கல்விதிட்டம் நல்லதா அல்லது கெட்டதா என்றான் வின்சென்ட்.

லேய்! புரியிறமாறி சொல்றேன். இந்தக் கல்வித் திட்டம் இல்லையினா நான் வாத்தியாராக வந்திருக்க முடியாது, நீங்களும் பள்ளிக்கு வந்திருக்க முடியாது. ஆனால் இதை பழங்காலத் திட்டம் என்று சொல்லிவிட்டு மீண்டும் சமூகத்தை பின்னுக்கு இழுக்கும் நோக்கோடு ஒரு கல்வித் திட்டம் வந்தால் அதை நாம் அனுமதிக்கக் கூடாது.

அப்படி வர வாய்ப்பிருக்கிறதா சார் என்றாள் முத்துமீனா. அவள் கண்களில் இருந்த பயம் கலந்த குழப்பத்தை கவனித்த சிராஜ் நிச்சயமாக இல்லை முத்து ஆனால் விழிப்பாக இல்லையென்றால் வந்துரும்.

வந்தால் என்ன சார் பண்ணுவது? என்றாள் குழப்பம் தீராத முத்து.

அதற்கென போராட சிலர் இருக்கிறார்கள். சிலர் துறைக்குள்ளேயும் பலர் துறைக்கு வெளியேயும் இருக்கிறார்கள்.

துறைக்கு உள்ளே உள்ள ஒருத்தரை எங்களுக்குத் தெரியும். வெளியே யாருசார் இருக்கா என்றான் ஹபீப்.

பொதுவாக சமூகத்தை குறித்து பொறுப்புடன் சிந்திபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஹை அப்போ அவுகள்லாம் ஹீரோல்ல? ஒருத்தர் பெயர சொல்லுங்க சார் என்றான் சுப்பிரமணி.

துறைக்கு வெளியில் இருப்பவர் பெயர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.  கல்வி குறித்து அத்துணைத் தகவலும் இவருக்கு அத்துப்படி. ஒடுக்கப்ப் பட்டோருக்கான கல்விக்காக விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். இவரைப்போல இந்த சமூகத்தை நேசிக்கும் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் யாரோ போராடுவாங்க யாரோ நல்லது செய்வாங்க என்று நாம் சும்மாத்திரிவது தவறு.

உண்மைதான் சார். நாமும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் இல்லையா சார் என்றான் நாகமணி.

ஒரு திருப்தியான புன்னகையோடு ஆம், ரொம்ப சரியாய் சொன்ன நாகு என்ற சிராஜ் சரி இப்போ கொஞ்சம் குடிமையியல் இரண்டாம் பாடத்தை  பார்ப்போமா...

Comments

  1. வணக்கம் சகோ.
    வகுப்பறைச் சூழலை கதையாக வைத்து கல்விக்காகப் போராடும் ஒரு உன்னத மனிதரை அறிமுகப்படுத்திய விதம் மிகவும் கவர்கிறது. காலத்திற்கேற்ப கல்வி முறையில் மாற்றம் வேண்டும் தான் சகோ. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாண்டியன்..

      Delete
  2. நல்லதொரு மாற்றம் வந்தால் சரி...

    ReplyDelete
    Replies
    1. வரும் என்றே நம்புவோம்...

      Delete
  3. கதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.குமார்.

      Delete
  4. நல்லதொரு பதிவு நண்பரே
    நன்றி

    ReplyDelete
  5. நல்ல பதிவு சகோ! இது எனக்கு புதிது தான். யாரோ போராடுவாங்க யாரோ நல்லது செய்வாங்க என்று நாம் சும்மாத்திரிவது தவறு. நிச்சயமாக தவறு தான் . உன்னத மனிதரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி! வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி

      Delete
  6. இந்த பதிவை சொன்னாவிதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உண்மையானவரே

      Delete
  7. கதை மூலம் ஒரு நல்ல மனிதரை அறிமுகம் செய்தது சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.சுரேஷ்..

      Delete
  8. Anonymous9/4/14

    ஆம் ஐயா உண்மைதான், நமது கல்விமுறையும் மாறவேண்டும்! எத்தனை நாளுக்குத்தான்........ update செய்யாமலே இருக்கின்றனர் 50 வருடங்களாக!



    http://pudhukaiseelan.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா ..
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. nice story to recall our education and battle for human righs .

    ReplyDelete

Post a Comment

வருக வருக