வீதி இலக்கிய களத்தின் ஏப்ரல் மாதக் கூட்டம் புதுகை ஆக்ஸ்போர்ட் சமையற்கலை கல்லூரியில் 20/04/2014 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு புதுகை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். என். அருள் முருகன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார்.கூட்டத்தின் வரவேற்புரையை கவிஞர் சுவாதி அவர்கள் சந்தம் முழங்கிடவழங்கியது மிக அருமை. அவர்களின் தளத்தில் இந்த வரவேற்புரையை பதிவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். கடந்த மாத கூட்ட அறிக்கையை புலவர்.பொன்.கருப்பையா அவர்கள் வாசித்தளித்தார்.
தொடர்ந்து முனைவர்.வீ.கே. கஸ்தூரி நாதன் அவர்கள் ஒரு நல்ல கவிதையை தர, இலக்கிய விமர்சகர் திரு. ராசி பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு அருமையான அறிவியல் புனைவு சிறுகதையை அளித்தார். எழுநூற்றி ஐம்பது ஆண்டுகள் கழித்தும் சாதிய கட்டுமானங்கள் தொடரும் என்பதை அறிவியல் புனைவாக மிக அருமையாக தந்தார். அவையோரின் பெருத்த பாராட்டை பெற்றது இவரது சிறுகதை.
நான் சிசிலியன் நாவல் எப்படி பீமாவாகவும், சுப்ரமணியபுரமாகவும் மாறியது என்பது குறித்து ஒரு கட்டுரையை வாசித்தேன்.
ஊடறு என்கிற ஈழப்பெண் கவிஞர்களின் தொகுப்பை கவிஞர் கீதா அருமையாக விமர்சித்தார். சுரேஷ் மான்யா தொடர்ந்து ஒரு கவிதையை தர
கு.மா. திருப்பதி அய்யா தாழ்ந்த என் தாயகமே என்கிற நூலை அறிமுகம் செய்தார்.
இறுதியாக முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையுரை வழங்க திருமிகு. பிர்யதர்சினி அவர்களின் நன்றியுரையோடு விழா இனிதே நிறைவுற்றது.
ராசி அவர்களின் கதையின் மீது எழுந்த விமர்சனங்களும் கருத்துக்களும் விழாவின் சிறப்புக்கள். சுஜாதா மாதிரி இருக்கிறது ஆனால் சுஜாதா தொட விரும்பாத சாதியம் குறித்து பேசும் ஒரு அறிவியல் புதினம் என்று ஸ்டாலினும், சுரேஷ் மான்யாவும் சொல்ல கஸ்தூரி நாதன் ஐயாவோ சுஜாதா தொடாத விஷயம் ஏதும் இல்லை என்றார். தொடர்ந்த திருமிகு.முத்துநிலவன் பல இடங்களில் ராசி சுஜாதவை விஞ்சிச் சென்றிருப்பதை அழகாக எடுத்துச் சொன்னார்.
திருமிகு. கவிஞர் தங்க மூர்த்தியும், கம்பன் கழகத்தின் திருமிகு. சம்பத்தும் வந்திருந்தது ஒரு கூடுதல் நிறைவு.
போகவேண்டிய பயணத்தின் நோக்கங்களையும் விதிமுறைகளையும் முனைவர்.என்.அருள்முருகன் மீண்டும் ஒருமுறை தெளிவாக விளக்கியது சிறப்பு.
இந்தமுறை அரங்கு கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. விழா ஏற்பாடு கவிஞர்.திருமிகு. கீதா. வெகு நேர்த்தியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர்களின் பணி நிச்சயமாக பாராட்டுக்கு உரியது.
அழைப்பிதழை அச்சகத்தில் அச்சிட்டது முதல் பலமுறை குறுஞ்செய்திகள், அழைப்புகள் என நிறயவே மெனக்கடல்கள். மூன்று மணிநேரம் நடக்கும் கூட்டத்திற்கு நீர், கோதுமைப் பால், பிஸ்கட் என சின்ன சின்ன விசயங்களை பார்த்து பார்த்து நேர்த்தியாக செய்திருந்தார் கீதா.
அடுத்த கூட்டத்தை நடத்தப் போவது வலைப்பதிவர் பாண்டியன் மற்றும் கவிஞர் மகாசுந்தர்.
அவர்களுக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி! அடுத்த கூட்டம் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி தோழர் சுரேஷ்..
Deleteஉங்களின் -சிசிலியன் ஆங்கில நாவல்- பற்றிய ஒப்பீட்டுக் கட்டுரை வெகுசிறப்பு மது. அதையே முன்னதாக நகல்எடுத்து அனைவர்க்கும் தந்துவிட்டு, கட்டுரையில் இல்லாத சில விவரங்களைப் பேசியது அதனினும் சிறப்பு. ஆங்கிலமறியாத என்னைப் போன்றவர்கள் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அன்பு கூர்ந்து உங்கள் வலையில் அதை ஏற்ற வேண்டுகிறேன். (சில தமிழ் எழுத்துப் பிழைகள் இருந்தன. கவனித்துத் திருத்தி வெளியிட வேண்டும்)
ReplyDeleteஅண்ணா
Deleteரொம்ப ஓட்ட வேண்டாம் ....
அது யுனிகோட் செய்த சதி..
சரி செய்து வெளியிடுகிறேன்.
சின்னச் சின்ன விசயங்களைக் கூடக் கவனித்து நேர்த்தியாய் செய்திட்ட கவிஞர் கீதா அவர்களையும் கவிஞர் சுவாதி அவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
ReplyDeleteநைனிசிங் குறித்த கட்டுரை ரொம்பவே அருமை அய்யா ...
Deleteஎப்படி உங்களால் மட்டும் இப்படி அசத்தல் பதிவுகளை தர முடிகிறது..
வணக்கம் சகோ
ReplyDeleteநமது நண்பர்களிடம் அப்பவே சொல்லி விட்டேன் மது அண்ணா நான் வீடு போய் சேருவதற்குள் பதிவிட்டு விடுவார் என்று. தங்களின் சுறுசுறுப்பு நான் கற்றுக்கொள்ள வேண்டியது. சிசிலியன் ஆங்கில நாவல் ஒப்பீடு மிக அருமை அண்ணா. நிகழ்வுகளை அப்படியே பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். நன்றீங்க அண்ணா. நிகழ்ச்சிக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
நேற்று கொஞ்சம் விரைவாக பார்த்தால் நன்றாக இருக்கும் என்பதால் பார்த்தேன்.
Deleteஅடுத்த கூட்டம் சும்மா மிரட்டலாக இருக்கும் என்று நினைக்கிறன்.
பாராட்டுக்கு நன்றி.பாராட்டவும் மனம் வேண்டும்,நீங்க அழகாக கதையைக் கூறி கூட்டத்தை ரசனையுள்ளதாக ஆக்கி விட்டீர்கள்.பங்கேற்பாளர்கள் சிறப்புடன் பங்களித்ததே கூட்டம் சிறக்க காரணம்.நன்றி சார்
ReplyDeleteஉங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteஉங்கள் கட்டுரைப் பகிர்விற்கு காத்திருக்கிறேன்.
உளம் கனிந்த வாழ்த்துக்கள்
ReplyDelete