பீகாக் வரிசை பயிற்சிகளை நடத்தி முடித்துவிடுவோம் என்று தலைவர் திரு. ஏ.வி.எம்.எஸ். கார்த்திக் உறுதியாக இருப்பதால் இவ்வாண்டு ஜே.சி.ஐ. புதுக்கோட்டை சென்ட்ரலின் சார்பில் பயிற்சி திருவிழா ஒன்று ஏற்பாடு செய்துவிட்டார்.
முதல் பயிற்சியை முன்னாள் மண்டலத் தலைவர் ஜே.சி. கோடீஸ்வரா அழகப்பன் அவர்கள்தர இசைந்தார். இவருக்கு ஒரு தனிப் பாணி உண்டு என்பதாலும் பயிற்சி பலனிக்கும் என்பதாலும் இது ஒரு முக்கிய நிகழ்வாக வைத்திருந்தேன்.
பயிற்சி விஜய் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனக்குரிய மார்கெட்டிங் இன்னோவேசன்ஸ் தலைப்பை குறித்து என்ன சொல்லப் போகிறார் என்கிற ஆர்வம் எல்லோருக்குமே இருந்தது.
மிகச் சரியாக ஆறு ஐந்துக்கு தனது பயிற்சியினை தொடங்கினார்.
வியாபாரத்திற்கு தேவை என்ன ? என்று முதல் கேள்வியினை எழுப்பிய அவர் எங்களிடம் இருந்து பல்வேறு பதில்களைப் வாங்கிவிட்டு கடைசியில் சொன்னார் வாய்.
வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பது முற்றிலும் உண்மை. அடுத்த சில நிமிடங்களில் படிக்கும் பொழுதே எப்படி பொருள் ஈட்டினேன் என்று சொல்ல சொல்ல நாங்கள் சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தோம்.
சலவை சோப் வியாபாரம், திண்ணை சினிமா என்று அப்போதே வணிகத்தில் ஒரு பெரும் நாட்டமாக இருந்திருக்கிறார் அழகப்பன். இன்று புதுகையில் அவர் செய்யாத தொழில்களே இல்லை.
தனது தற்போதைய கேட்டரிங் தொழிலில் எப்படி மார்கெட்டிங் நுட்பத்தை பயன்படுத்துகிறேன் என்பதை விளக்கினார். நூற்றி இருபது ரூபாயில் ஒரு சாப்பாடு இரண்டு பலகாரம் என்று வரும் ஓர் வாடிக்கையாளரிடம் ஒன்பது பலகாரம் நூற்றி ஐம்பது என்று பேசினால் நூற்றி நாற்பதுக்கு பேரம் முடியும். ஆனால் உண்மையான லாபத்தை அவர் சொன்னபோது நாங்கள் வியந்துபோனோம்.மார்கெட்டிங் வித்தை!
மாடு ஒன்று உங்களிடம் இருந்தால் பாலை விற்காதீர்கள் பாலை தயிராக மாற்றி வெண்ணை எடுத்து மோராக்கி விற்றால் நிறைய லாபம் கிடைக்கும் என்றது தலைவருக்கு(கார்த்திக் அவர்களுக்கு) நிறைய சிந்தனைகளை தந்தது என்றார்.
தனது கல்யாண ஆர்டர்களில் முன்கூட்டியே எல்.ஐ.சி விரிவாக்க அதிகாரியிடம் பேசித் திருமணத் தேதியில் ஒரு ஆயிரம் ரூபாய் பாலிசியை தம்பதியர்க்கு அன்பளிப்பாக வழங்குவது இவரது வழக்கம். ஒரு ஆயிரம் முதலீடு. தொடர்ந்த வருவாய்க்கு ஒரு வழியும்கூட. அவர்கள் எல்.ஐ.சி என்றாலே அப்புறம் யாரைக் கூப்பிடுவார்கள்?
அடடா இது என்னமாதிரியான ஒரு செண்டிமெண்டல் மார்கெட்டிங்!
1989இல் புதுகையில் அருண் ஐஸ்க்ரீம் வணிக அனுபவங்கள் அதைவிட புதுமை. அப்போதெல்லாம் திருமண வீடுகளில் ஐஸ்க்ரீம் கிடையாது. இருந்தாலும் இவர் இரண்டு பைசா செலவில் ஒரு வாழ்த்து அட்டை அதில் பத்து பைசாவில் ஒரு சாக்லேட் என தனது மார்கெட்டிங்கை தொடர்ந்திருக்கிறார். போதாக் குறைக்கு வெளியில் ஒரு வெள்ளை போர்டில் திருமணத் தம்பதிகளின் பெயரை எழுதி வாழ்த்துவது அருண் ஐஸ்க்ரீம் என்று கலக்கியிருக்கிறார். இன்று அருண் இல்லாத திருமணங்கள் இப்பகுதியில் இல்லை.
இதயம் நல்லெண்ணெய் ஒருகாலத்தில் நான்கு லெட்சம் வாடிக்கையாளர்களோடு இருந்தது. ஒரு கட்டதில் அது ஒரு லட்சமாக சுருங்கியது. நிறுவனம் எடுத்த ஆயில் புல்லிங் மார்கெட்டிங் முயற்சியினால் இன்று பத்துலெட்ச்சதிர்க்கும் அதிகமானோர் பயன்படுத்தும் ஒரு பொருளாக மாறியுள்ளது இதயம்.
தொழிளார்களுக்கு நிறுவனங்கள் செய்து தரவேண்டிய சலுகைகள் என்று அவர் சொன்னார்.
ஒரு வருடம் பணியாற்றிய தொழிலாளிக்கு குழந்தையின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளலாம். இரண்டு ஆண்டு என்றால் வீட்டு வாடகையை தரலாம். மூன்றாம் ஆண்டில் ஒத்திக்கு ஓர் வீடு. இப்படி சலுகைகளைத் தந்தால் அவர்கள் உழைப்பில் ஒரு வேகம் இருக்கும்.
தற்போது ஒரு பெருநகரில் ஒரு புதிய உணவகம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன் மேலாளருக்கு மாத சம்பளம் அறுபதாயிரம் ரூபாய்! அவர் இதற்கு முன்னாள் சென்னை சரவணபவனில் வேலைபார்த்தவர். அவர் ஒரு நாள் தனக்கு கீழே உள்ள பணியாளருக்கு தரும் ஊதியம் அறுபதாயிரம் ரூபாய். ஓர் நாள் வணிகம் இரண்டு லெட்ச ரூபாய். ஆனால் பணம் போட்டு நிறுவனத்தை நடத்துபவருக்கு முதலீட்டைத் தவிர வேறோன்றும் வேலை இல்லை. அவர் கடைக்கு கணக்கு பார்க்க மட்டுமே வருவார்.
அந்த மேலாளர் முப்பத்தி இரண்டு சதவிகிதத்தில் உற்பத்தியையும் பதினெட்டு சதவிகித்தில் பணியாளர் ஊதியத்தையும் வைத்திருப்பதே காரணம்.இன்னும் அவரது நுட்பங்களை சொன்ன பொழுது (ஜீரோ இன்வெண்டரி சிஸ்டம்) எங்கள் வியப்பின் எல்லை விரிந்தது.
முத்தாய்ப்பாக இவரது ஒரு வங்கி அனுபவதினைக்கூறினார். தனதுஆரம்ப கால கட்டத்தில் ஒரு வங்கிக்கு லோன் கேட்டுச் சென்றுள்ளார். பலமுறை அலைய விட்டிருக்கிறார் வங்கிமேலாளர்.
ஒருமுறை இவர் அவரது அறையில் இருந்து வெளியில் வரும் பொழுது காலடியில் கிடந்த குண்டூசியை எடுத்து பின்குஷனில் குத்திவிட்டு வந்திருக்கிறார். மீண்டும் அழைத்த மேலாளர் அவரை அமரச் சொல்லி முழுத் தொகையையும் வழங்கியிருக்கிறார். ஒரு குன்டூசியினைக்கூட வீணாக்காத நீர் நிச்சயம் கடனை திரும்பக் கட்டிவிடுவீர் என்கிற நம்பிக்கை இருக்கு எனக்கு என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.
மொத்தத்தில் நல்ல பயனுள்ள ஒரு பயிற்சி.
ஜே.சி.ஐ. புதுக்கோட்டை சென்ட்ரல், தலைவர் கார்த்திக் மற்றும் பயிற்சியாளர் அழகப்பன் அவர்களுக்கும் எனது நன்றி .
Very interesting...! Arun Ice cream posters - நினைவிருக்கிறது . சமயங்களில் கல்யாண வீடுகளில் விசிறி கொடுப்பார்கள் ...
ReplyDeleteவாருங்கள் ஜீவன் ...
Deleteவருகைக்கு நன்றி..
வணக்கம்
ReplyDeleteநல்ல பாடப்பரப்பை கற்பித்துள்ளார்கள் இறுதியில் சொல்லிய குண்டூசிக்கதை நன்றாக உள்ளது....வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
போட்டிகளால் இணையத்தை தூள் பரத்தும் ரூபன் அவர்களே வருக ..
Deleteகருத்துக்கு நன்றி...
வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
ReplyDeleteதங்களை பயிலரங்கில் சந்திக்கலாமா?
Deleteநமது பயிற்சியில் அசத்துவோமா...?
ReplyDeleteI miss this
ReplyDeleteI miss this
ReplyDeleteஎங்களுக்கும் இது பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு - இன்காா்ப் ரவி - கோவில்பட்டி
ReplyDeleteநல்ல பயனுள்ள கருத்து
ReplyDeleteநல்ல பயனுள்ள கருத்து
ReplyDeletehttp://swthiumkavithaium.blogspot.com/
ReplyDelete