நட்சத்திரங்களுள் சிலர் ... |
ஒரு மாவட்டத்தின் பல தமிழாசிரியர்கள் வலைப்பதிவர்களாக இருந்தால்
மாற்றங்களை முன்னெடுக்கும் ஒரு நல்ல முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு வாய்த்தால் என்ன விளையும் என்பதற்கான பதில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை 2014.
இனிய நண்பர்களே 17/05/2014 தொடங்கி 18/05/2014 வரை புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பல்தொழில் நுட்பக் கல்லூரியில் ஒரு இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை நலமே நடந்தது.
முனைவர்.மதிவாணன், ஜோசப் விஜூ, கரந்தை ஜெயக்குமார், முனைவர். ஜம்புலிங்கம், மூங்கில்காற்று முரளிதரன், திண்டுக்கல் தனபாலன் தமிழ் இளங்கோ, என்கிற நட்சத்திரங்களை ஒருங்கே சந்திக்கும் பெரிய வாய்ப்பை தந்தது இந்த நிகழ்வு.
அவர்களின் விழா பேருரைகளை ஒரு தனிப்பதிவாகவே போடலாம். விரைவில் வரும்.
தனது சகோதரை சிலநாட்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் இழந்த திரு. பிரின்ஸ் என்ராசு பெரியார் இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஆனால் மனிதர் வந்ததும் இல்லாமல் விக்கி பயிற்சியை மிகத்சிறப்பாக பங்கேற்பாளர்களுக்கு தந்தது ஒரு மன நிறைவு.
இன்றைய அவரது முகநூல் நிலைத் தகவல் வேறு மிகுந்த வேதனையத் தந்தது
அண்ணா...
முதல் முறையாகக்
கால் பதிக்கிறேன்.
நீ இல்லாத
சென்னையில்! #பெரியார்_சாக்ரடீசு
முதல் முறையாகக்
கால் பதிக்கிறேன்.
நீ இல்லாத
சென்னையில்! #பெரியார்_சாக்ரடீசு
அவரது இழப்பிற்கு காலம்தான் பெருமருந்தாக இருக்கவேண்டும்.
கடந்த பயிற்சியின்பொழுது சாலை ஓரத்தில் கிடந்த ஒரு மைல் கல்லை திரு ராசி பன்னீர்செல்வம் முதன்மைக் கல்வி அலுவலருக்குக் காட்ட இந்தப் பயிற்சியில் அந்தக் கல்லைப் புரட்டி அதன் பின்னால் இருந்த ராஜராஜன் பெருவழியை கண்டறிந்த செய்தி ஒரு ஆச்சர்யம். அவரது உழைப்பும் ஆய்வும் பின்பற்றதக்கது.
தமிழக தலைமை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திரு.சாமி சத்யமூர்த்தி, ஆசிரியர் திரு. ரவி சுந்தரம் திரு.கபிலன் என்று புதிய வலை ஆர்வலர்களுடன் எனது நண்பர் நடராஜன் தனது பையனோடு கலந்துகொண்டது மகிழ்வு.
புதுகையின் பெரும் இலக்கிய ஆளுமைகள் முன்னெடுத்த இந்த விழாவின் நேர்மறை விளைவிற்காக அவர்களுக்கு என் நன்றிகள்.
விழாவில் பங்குபெற்ற எல்லா சிறப்பு விருந்தினர்களையும் தொடர்ந்து தொடர்பு கொண்டு அவர்களை புதுகைக்கு வரவழைத்தவர் அய்யா முத்துநிலவன்.
கவிஞர்முத்துநிலவன், மகாசுந்தர், கவிஞர் ராசி பன்னீர் செல்வன், பேச்சாளர் ஜெயலக்ஷ்மி, கவிஞர் கீதா, கவிஞர் பாண்டியன் தனித்தமிழ் வித்தகர் குருநாத சுந்தரம், கவிஞர் கு.மா. திருப்பதி, கவிஞர் சுவாதி, இணயத் தென்றல் ஸ்டாலின் சரவணன், பாவலர் பொன்.கருப்பையா ஆகியோரின் முன்னேடுப்பால்தான் இந்த பயிற்சி சாத்தியமானது.
கவிஞர்முத்துநிலவன், மகாசுந்தர், கவிஞர் ராசி பன்னீர் செல்வன், பேச்சாளர் ஜெயலக்ஷ்மி, கவிஞர் கீதா, கவிஞர் பாண்டியன் தனித்தமிழ் வித்தகர் குருநாத சுந்தரம், கவிஞர் கு.மா. திருப்பதி, கவிஞர் சுவாதி, இணயத் தென்றல் ஸ்டாலின் சரவணன், பாவலர் பொன்.கருப்பையா ஆகியோரின் முன்னேடுப்பால்தான் இந்த பயிற்சி சாத்தியமானது.
மேலும் அதி முக்கியமாக இரண்டாம் முறையும் தனது பல்தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தை தந்து விழா சிறக்க உதவிய வெங்கடேஸ்வரா நிறுவனர்கள் திருமிகு.கதிரேசன் அய்யா, திரு.பி.எஸ்.கே அய்யா மற்றும் ஆர்.ஏ. குமாரசாமி அவர்களுக்கும் எனது நன்றிகள்.
உண்மை முத்துநிலவன் அய்யாவின் உழைப்பு இந்த பயிற்சியின் வெற்றிக்குப் பின்னால்..தேவையான பயிற்சி.பலனுடைத்தாக ஆக்கும் பொறுப்பை உணர்கிறேன்.நன்றி சார்
ReplyDeleteஅவரின் கடும் உழைப்பும் திட்டமிடலும் சரியான அணுகுமுறையும் நாம் (நான்) கற்றுக்கொள்ள வேண்டியது..
Deleteவணக்கம்
ReplyDeleteநல்ல முயற்சி. பாடங்களை கற்பித்த அனைவருக்கும் எனதுவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்..
உள்ளதைச் சொல்வது அறிவியல், உணர்ந்தது சொல்வது கலை என்பார்கள். அது எப்படி மது? கலையும் அறிவியலும் இணைந்த இளைஞர்கள் என்காலத்திலும் வாழ்கிறார்கள் என்பதை உன் பதிவு பார்த்து மகிழ்ந்து போனேன். மிகச்சிறப்பாக உன் உணர்வுகளைப் பதிவுசெய்ததற்குப் பாராட்டுகள். அதிலும் எடுத்த எடுப்பிலேயே - ஒரு மாவட்டத்தின் பல தமிழாசிரியர்கள் வலைப்பதிவர்களாக இருந்தால்
ReplyDeleteமாற்றங்களை முன்னெடுக்கும் ஒரு நல்ல முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு வாய்த்தால் என்ன விளையும் என்பதற்கான பதில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை 2014“ எனும் சுருக்கம், ஏராளமான ஆழம் கொண்ட வரிகள். உன் பணிகள் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். என் வயது காரணமாக எனக்குக் கிடைக்கும் பாராட்டுகள் உண்மையில் உன்னைப்போலும் இளைஞர்களையே சாரும். உனக்கு என் வந்தனம். வேறென்ன சொல்ல? உன்னைப் போலும் அன்பானவர்கள் இருந்தால் நான் இன்னும் 25ஆண்டுகள் உழைப்பேன். இணைந்தே!உழைப்போம். பிரின்சைப் பற்றி நான் நினைத்ததைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.. நீ சொல்லிவிட்டாய்.. நம் பணிகள் தொடரட்டும்.
உங்களை விட மூத்த பலருக்கு கிடைக்காத மரியாதை உங்களுக்கு கிடைக்க காரணம் நான் அறிவேன்
Deleteபுதிய திறமைகளை கண்டு அவர்களை வயது வித்தியாசம் பார்க்காமல் சரிநிகர் சமானமாக நடத்துவதும்
புதிய களங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வதும் என ஒரு நல்ல தலைவனுக்கு உள்ள குணம் அனைத்தும் உங்களிடம் இருப்பதால்
மரியாதை வருவதில் என்ன வியப்பு இருக்கிறது
விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது கண்டு மகிழ்ச்சியடைகிறேன் ! தம்பி முத்து நிலவன் அவர்களுக்கும் ,மற்ற அனைவருக்கும் நன்றி!
ReplyDeleteபுலவருக்க பணிவான வணக்கங்கள்...
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
"//அவர்களின் விழா பேருரைகளை ஒரு தனிப்பதிவாகவே போடலாம். விரைவில் வரும். //" - சீக்கிரம் வெளியிடுங்கள்.. படிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்.
ReplyDeletevalarumkavithai.blogspot.com உரைகளைக் கொண்டிருக்கிறது...
Deleteஅங்கே போகலாம்..
நான் எழுத சில நாட்கள் ஆகும்...
இனிய நண்பர்களுக்கு என்னுடைய நன்றி கலந்த வணக்க்ம். என்னால் இன்று தமிழில் எழுதுவதற்கும் வலைப்பதிவு செய்வதற்கும் தமிழ் விக்கிபீடியாவில் இணைவதற்கும் காரணம் 17,18 இல் நடந்த பயிற்சியே நன்றி! நன்றி!! நன்றி!!!
Deleteவாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி...
ReplyDeleteஉங்கள் அற்புதமான பங்களிப்புக்கு நன்றி
Deleteதமிழ் இணையப் பயிற்சி சிறப்பாக நடைபெற்று இருக்கும் என்று நினைக்கின்றேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும், பயிற்சி வழங்கிய அன்பர்களுக்கும் எமது வாழ்த்துகள், பாராட்டுக்கள். இதுபோன்ற பயிற்சி தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும்.
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...
Delete// ஒரு மாவட்டத்தின் பல தமிழாசிரியர்கள் வலைப்பதிவர்களாக இருந்தால் ... ... //
ReplyDeleteநன்றாகவே சொன்னீர்கள்! புதுக்கோட்டையில் நடைபெற்ற ”இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை” மற்ற மாவட்டங்களுக்கு ஒரு முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை. நானும் எனது பங்கிற்கு புதுக்கோட்டை இணையப் பயிற்சி குறித்து ஒரு பதிவு ஒன்றினை எழுதியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்..
உங்கள் பதிவைப் படித்துவிட்டேன்...
Deleteகல்லூரியை நீங்கள் படம் எடுக்கும் பொழுது மணி எட்டுத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்...
லைட்டிங் அருமை...
உங்கள் படப்பிடிப்பு ஆர்வம் என்னை ரொம்பவே கவர்ந்தது..
நல்ல முயற்சி கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ! திறமை யுள்ளவர்களை பாராட்டுவதும் ஊக்கம் கொடுப்பதும் மெச்சத்தக்க விடயமே. அதற்கு தங்களையும் சகோதரர் நிலவன் அவர்களையும் பாராட்டாமல் நிச்சயம் இருக்க முடியாது. அத்துடன் சகோதரர் நிலவன் அவர்களுடைய நற்குணங்களை நானும் புரிந்துள்ளேன் நிச்சயம் பாராட்டத் தக்கவரே மிக்க மகிழ்ச்சி சகோ ! வாழ்க வளமுடன்.....!
ReplyDeleteவாங்க வாங்க நலமா சகோதரி...
Deleteநீங்கள் நிலவன் அண்ணாவைப் பற்றி சொன்னது நூறு சதம் சரி..
நிகழ்வு விரிப்பு மகிழ்வைத் தருகிறது.
ReplyDeleteஇந்நிகழ்வை மேலும் விரிவுபடுத்தினால்
உலகெங்கும் தமிழ்பரப்ப இலகுவாயிருக்கும்.
நிகழ்வை நடத்தியோர்
நிகழ்வின் பங்காளிகள் என
எல்லோருக்கும் நன்றிகள்!
கருத்துப் பதிவிற்கும்
Deleteவருகைக்கும்
நன்றிகள்
மாவட்டத்தில்
மீண்டும்
ஒருமுறை நிகழும்..
நன்றி..
நல்லதொரு பணி! தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி திரு.சுரேஷ்.
Deleteகோட்டை வில்லன்
ReplyDelete