மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுகையில் மாணவர்
திருவிழா இந்தக் கோடையில் நடந்தது. அறிவியல் இயக்க பொறுப்பாளர்களின் நேர்த்தியான
ஏற்பாட்டில் விழா வெகு சிறப்பாக நடந்தது.
திடீரென அண்ணன் முத்து நிலவன் அழைக்க நான் விழா நடந்த எஸ். எப். எஸ்
பள்ளிக்கு சென்றேன். நாங்கள் போகும் பொழுது திரு.சதாசிவம் மாணவர்களுக்கு ஒரிகாமி
பயிற்சியைத் தந்துகொண்டிருந்தார்.
சில நிமிடங்களில் தங்களுக்கு தரப்பட்ட ஒரு சிறிய காகித்தை அவர்
சொன்னபடி மடித்து ஒரு பேசும் காகத்தை உருவாக்கினார்கள்.
அடுத்தது நிலவன் அண்ணாவிற்கான நேரம். நிகழ்சிக்கு முன் ஒரு மூன்றடிக்
கம்பை கேட்டார் அவர். எதற்கு என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நீண்ட
கம்புடன் களம் இறங்கினார் அண்ணன்.
களம் இறங்கியவர் எல்லோருக்கும் வணக்கம் சொன்னார்.
குழந்தைகளும் குதுகலமாய் வணக்கம் சொன்னார்கள். பின்னர் அவர் அந்தக் கம்பைக் காட்டி
இது ஒரு கம்பு ஆனால் உங்க கற்பனையில் இதை எப்படி வேண்டாலும் மாற்றலாம் எங்கே வந்து
இந்தக் கம்பை வைத்து நடித்துக் காட்டுங்க பார்க்கலாம். என்று சொன்னதுதான் தாமதம் ஒருவன்
எழுந்து வந்து ஈட்டி எறிதல் போல் நடித்துக் காட்டினான். ஒரு பெண் எழுந்து லத்தியாக
சுழற்றினாள்.
இத்துணை நிகழ்வுகளின் பொழுதும் ஒரு குழந்தை அவள் இடத்தில் உட்காராமல் அண்ணனின்
கூடவே ஒட்டிக்கொண்டு நின்றாள். நடு நடுவில் மைக்கினை பிடுங்கி பேசவும் செய்தாள்.
நானாக இருந்தால் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகியிருப்பேன். ஆனால் அண்ணன் ரொம்ப கூலாக
இருந்தார். இதுவம் ஒரு ஆச்சர்யம்தான் எனக்கு.
ஹாரி பாட்டர் பறக்கும் விளக்கமாறு, வெய்ட் லிப்டிங், ஒட்டடைக் கம்பு, விளக்கமாறு, போல்
வால்ட், கண்கள் இல்லாதோரின் கழி என அனைவரும் அசத்தினர்.
ஒரு கம்பு இத்துணை பயனுடைய கற்றல் நிகழ்வுகளைத் தருமா என்று நான்
வியந்து போனேன். நிலவன் அண்ணாவிடம் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து ஆதிவாசியகவே மாறி அசத்தினார் அண்ணன். மாணவர்கள்
அனைவருக்கும் தனது பங்களிப்பாக ஒரு பேனாவைக் கொடுத்துவிட்டு அமைப்பளர்களுக்கு
நன்றி கூறி விடைபெற்றார் அண்ணன்.
இன்னும் எவ்வளவு படிக்க வேண்டியிருகிறது என்கிற ஆச்யர்த்துடன் நானும்
விடைபெற்றேன்.
கவிஞர் முத்து நிலவன் அவர்கள் ஒரு கல்விச் சுரங்கம்
ReplyDeleteதோண்டத் தோண்ட நல்லவை கிடைத்துக் கொண்டே இருக்கும்
மாணவர் திருவிழாவினைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
விரைவிற்கும் வாக்குக்குக்கும் நன்றிகள்..
Deleteசத்தியமாகச் சொல்கிறேன் மது, பெரியவர்களிடம் கற்றுக் கொண்டதைவிடவும் குழந்தைகளிடம்தான் அதிகமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன்... இன்னும் கற்கவேண்டியது இருக்கும்போது அவர்களிடம் பேசும்போதுதான் எனக்கு நடுக்கம் வருகிறது. ஆனாலும் அவர்களின் உற்சாகம் நம்மைத் தொற்றிக் கொள்வதால் ஏதோ சமாளிக்க முடிகிறது. நீங்கள் ரசித்து அப்படியே எழுதியதைப் பார்த்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteநீங்கள் ஆதிவாசியாக மாறிய பொழுது ஒரு மந்திரம் நடப்பதைப் போல் இருந்தது
Deleteஅதுவும் மிகவும் சேட்டை செய்த மாணவர்களை நோக்கி ஓடி குடுத்த டெரர் லூக்கில் அவர்கள் பேய் அறைந்த மாதிரி உட்கார்திருந்தார்கள்... அவர்கள் மட்டுமா நானும் தான்
வணக்கம் சகோ
ReplyDeleteதங்களின் பதிவால் கவிஞர் முத்துநிலவன் ஐயாவின் பன்முகம் கண்டு மகிழ்ந்தேன். ஐயா அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நமக்கு நிறைய இருக்கிறது. பல நிகழ்வுகளை நான் தவற விடுவதை எண்ணும் போதெல்லாம் நானும் புதுக்கோட்டையின் மையப்பகுதியில் இருந்திருக்கலோமோ என்று தோன்றுகிறது. அழகான நிகழ்வும் குழந்தைகளுக்கு அவசியமான நிகழ்வும் கூட. பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
மணவை இதுமாதிரி மாறவேண்டும் என்பதே சரி... சகோ..
Deleteநடந்த நிகழ்வை மிக தெளிவாகவும் அழகாகவும் எடுத்து சொல்லி இருப்பதற்கு பாராட்டுக்கள்.. எழுத்து நடை மிக அருமையாக இருக்கிறது...பாராட்டுக்கள்
ReplyDeleteவாங்க வாங்க ... கருத்துக்கு நன்றி..
Deleteநடை குறித்து சொன்னதிற்கு நன்றி...
இப்போத்தான் பழகுகிறேன்..
வாழ்த்துகள்.........பதிவுப்பணி தொடரட்டும்...
ReplyDeleteவாங்க மணி. நலமா
Deleteவருகைக்கு நன்றி..
உங்கள் மாவட்ட அறிவியல் கழகத்தினருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete// ஒரு கம்பு இத்துணை பயனுடைய கற்றல் நிகழ்வுகளைத் தருமா என்று நான் வியந்து போனேன். நிலவன் அண்ணாவிடம் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.//
உண்மைதான்.
த.ம.4
காமிரா காதலருக்கு நன்றிகள்
Deleteஉண்மை தான் கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
ReplyDeleteஇந்த நிகழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி சொக்கன்..
Deleteஆஹா நான் கலந்துகொள்ளவில்லையே என்ற வருத்தம் வருகிறது.பயனுள்ள ,குழந்தைகள் விரும்பும் பயிற்சி என்பதில் சந்தேகமில்லை
ReplyDeleteநீங்கள் எல்லாம் கருத்தாளராக எளிய கவிதைகளை மாணவர்கட்கு அறிமுகம் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது சகோதரி..
Deleteகம்பிலே கலைவண்ணம் கண்ட நிலவன் ஐயாவின் திறமை போற்றுதற்குரியது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றிகள் திரு. சுரேஷ்..
Deleteஅடடடா....அந்த நிகழ்ச்சிக்கு நான் வராமல் போயிட்டேனே........இன்னும் நிலவன் அய்யா அவர்களிடம் நிறைய ஒளிந்திருக்கிறது....பதிவிற்கு நன்றி!
ReplyDeleteஆகாக, வருக அண்ணா,
Deleteஅடுத்தமுறை நீங்கள் கலக்குங்கள்..
நன்றி..