இந்தத் தலைமுறைக்கான ஜப்பானிய அம்புலிமாமா கதை. எந்தத் தளம் கிடைத்தாலும் முழுத் திறனயையும் காட்டும் ஒரு படக் குழுவிடம் இந்தக் கதை மாட்டி இருக்கிறது. சும்மா பிரிச்சி மேய்ந்திருக்கிறார்கள்.
கடந்த படம் மாதிரி இல்லாமல் இந்தப் படத்தில் காட்சிலா ஹீரோ. அப்போ அதன் சைசிர்க்கு வில்லன் வேணுமே. அது மோட்டோ. ஒன்று பறக்கிறது ஒன்று நகர்கிறது.
உலகை அழிக்கும் இந்த கொடூர மிருகங்களிடமிருந்து மக்களைக் காக்கும் பணி ஓலக போலீஸ்காரர்களுக்கு. பாத்ரூம் குழாய் அடைத்துக்கொண்டாலே குழாயிலே ஒரு குட்டி அணுகுண்டை அனுப்பலாமா என்று யோசிக்கும் அமேரிக்கர்களுக்கு அதிர்ச்சி தருகின்றன இவை. இவற்றின் உணவே அணு ஆயுதம்தான்!
ஏகப்பட்ட சாகசங்களுக்குப் பிறகு உலகை மீட்கும் வல்லமை காட்சிலாவிற்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை உணர்கிறார்கள். அதே நடக்கிறது.
காட்சிக்கு காட்சி பிரமாண்டம். த்ரீ டி படம் என்பதால் குறைந்த வண்ணங்களையே திரையில் பயன்படுத்த வேண்டிய ஒரு கட்டுப்பாடு. இவற்றை எல்லாம் அனாயாசமாக கடந்த ஒரு படைப்பு. சகோ பாண்டியனோடு படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்திற்குள் நம்மை அமிழ்த்திவிடுகிரார்களே என்று வியந்தார். இதற்கான காரணிகளை யோசிக்கும் பொழுதுதான் படத்தின் குறைவான வண்ணங்களும், டைட் க்ளோசப் காட்சிகளும் காரணம் என்று உணரமுடிந்தது.
கட்டாயம் திரி டியில் பார்க்க வேண்டிய படம்!
சில காட்சிகள் நெகிழ வைப்பவை. மனைவிக்காக அணு உலையின் கதவின் அருகே காத்திருக்கும் கணவன் அந்த கடைசி வினாடிகளில் அலறிக்கொண்டே அணுஉலையின் கதவை சாத்தும் கொடூரம்.
ஒளியையும் ஒலியையும் கையாண்ட நேர்த்திக்காவே படத்தை ஒருமுறை பார்க்கலாம். குறிப்பாக அந்த பார டைவிங் ஜோர்.
சில வினாடிகளில் முற்றிலும் தகர்ந்து போகும் அணுஉலை மிக மர்மமாக அணுக்கதிரியக்க பாதிப்பு ஏதும் இல்லாமலே இருக்கும் அதிசயம் என படம் பல முடிசுகளைப் போட்டு அவற்றை ஒரு நிலநடுக்கத்தோடு அவிழ்க்கிறது.
இந்தப் படத்தின் ஒரே நன்மையாக நான் கருதுவது ஒரு அணு உலை விபத்தில் என்ன ஆகும் என்று காட்டியதும் அணுக்கழிவுகளைக் கொட்ட ஒரு கட்டுமானத்தை திரையில் காட்டியதும்தான்.
அணு உலை குறித்த ஒரு சின்ன புரிதலையாவது இந்தப் படம் ஏற்படுத்தலாம்.
அணுக கழிவுகளை கொட்டிவைக்க ஒரு பாதாள நகரம் இந்தியாவில் எங்குமே இல்லை. அது நிர்மாணிக்கப் படவே இல்லை. கேட்டால் நாங்க இந்த வேஸ்டை எடுத்து அடுத்த அணு உலையைக் கட்டுவோம் என்கிறார்கள்.
ஒருவேளை நமது அணு பாதுகாப்பு துறையினர் இந்தப் படத்தில் வரும் காட்சிலவை நம்பித்தான் இருகிறார்களோ என்னவோ.
சரி சரி கொஞ்சம் ரிலாக்சாக படத்தை குழந்தைகளோடு த்ரீ டியில் பாருங்க.
அன்பன்
மது
நல்ல படம் போலருக்கே
ReplyDeleteநல்ல படம் தான் குழந்தைகளுக்கு
Deleteஅன்பு சகோவிற்கு வணக்கம்
ReplyDeleteஇரவு தான் படம் பார்த்தோம். இரவு முடிவதற்குள் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். படத்தைப் பற்றிய ஆழமான நுட்பம் தங்களோடு இணைந்து பார்த்ததில் புரிந்தது. ஹாலிவுட் பட விமர்சனம் எழுதுபவர்களில் தனித்து நிற்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி சகோ. இரண்டு நாட்கள் தங்களோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியும் தங்கள் உபசரிப்பில் நெகிழ்ச்சியும் அடைகிறேன். நன்றி சகோ.
நன்றி சகோ
Deleteவணக்கம்
ReplyDeleteபடம் பற்றி எழுதிய தங்களின் கருத்து நன்றாக உள்ளது.. கருத்தை பார்க்கும் போது படத்தை பார்க்கசொல்லுகிறது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி திரு ரூபன்
Deleteபகிர்வுக்கு நன்றி ஐயா!
ReplyDeleteநன்றி தோழர்..
Deleteசில காட்சிகள் அறுபதுகளில் வந்த முதல் படத்தை ஒத்திருந்தாலும் நல்ல படம் தான் ...
ReplyDeleteமிக முக்கியமாக சமீபத்தில் வந்த பசுபிக் ரிம் மாதிர்யும் சில காட்சிகள் உண்டு.. சரி இரண்டு பதிவுகளுக்குப் பின்னர் ஏன் வேறு ஒன்றும் எழுதவில்லை பதிவரே