பழனியப்பன் என்கிற வலைப்பூ மந்திரன்
Prof. Palniyappan |
புதுகை பயிலரங்கில் முதலில் வலைபூக்களை ஆரம்பிப்பது எப்படி என்கிற தலைப்பில் தமிழ்த் துறை தலைவர் பேரா. பழனியப்பன் அவர்கள் ஓரு பயிற்சியைத் தந்தார்.
வெகு நேர்த்தியாக செய்யப்பட்ட ஒரு பவர் பாய்ன்ட் காட்சி வழியே அவர் பங்கேற்ற புதியவர்கள் அனைவரையும் சிறப்பாக வலைப்பூ ஒன்றை ஆரம்பிக்க வைத்துவிட்டார்.
ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுமார் இருபது வலைப்பூக்கள் ரெடி. நட்பான குரலும் ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவும் இவரது அடயாளங்கள்.
வலைப்பூ துவங்கினால் போதுமா. அதில் என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியவேண்டாமா? அதற்குதான் அடுத்த பயிற்சி.
மதிவாணன் என்கிற சத்தமில்லாத பெருவெடிப்பு
Prof. Mathivanan |
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் மதிவாணன் அவர்கள் என்ன எழுதலாம் வலைப்பூவில் என்கிற தலைப்பில் பல பயனுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.
எல்லோரும் எங்கும் ஒரு வரம்பிற்குள்ளாகவே செயல்படுகிறோம். வரம்பிற்குள் அதற்கு உட்பட்டு எழுதுவது தமிழ் இலக்கிய மரபு. பல்வேறு இலக்கியங்கள் இருந்தாலும் இந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள்தான் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகின்றன.
பாரதி தாசன் ஃபில்கனியம் என்கிற ஒரு பாலியல் இலக்கியத்தை தழுவி எழுதிய புரட்சிக் கவி என்கிற நூல் கிஞ்சிற்றும் பாலியல் சாராது நிற்பதை குறிப்பிட்ட அவர் இணயம் வழங்கும் கட்டற்ற சுதந்திரத்தை நேர்மறையாக பயன்படுத்தினால் காலத்தை வென்று நிற்கலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.
பாலியல் சார்ந்த கூளப்ப நாயக்கன் கதையை இப்போது யார் படிக்கிறார்கள்? எல்லோரும் எல்லாக் காலத்திலும் படிக்கும் படைப்புகள் ஒரு வரம்பிற்கு உட்பட்டு எழுதுவதால் மட்டுமே சாத்தியம் என்றார் அவர்.
சர்மா சொன்னா சரிம்மா
Sarma Press Stars |
தொடர்ந்து வந்த சர்மா பிரஸ் வாசுதேவன் எப்படி கணிப்பொறியில் எண்களைக் கொண்டே தமிழ் தட்டச்சு செய்வது என்பதை விரிவாக விளக்கினார்.
கி பாடில் உள்ள எண்களைக் கொண்டே ஆல்ட், ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளைக் கொண்டே தமிழ் மொழியைத் தட்டச்சு செய்யும் வித்தையை மென்பொருளாக்கியிருந்தார்.
அருமையான மென்பொருள் புதிதாக வருவோர்க்கு.
எங்கள் பிரின்ஸ் என்ராசு பெரியார்
Prince NRS Periyar |
பிரின்சுக்கு இது இராண்டாம் வருகை. [முதல் வருகை]. இம்முறை கிடைத்த காப்பில் அடித்ததெல்லாம் சிக்ஸ்!
விக்கியின் ஒவ்வொரு பகுதியாக அவர் புட்டு புட்டு வைக்க நண்பர் ரவி சுந்தரமும், நடராஜனும் அந்த அரங்கிலேயே தங்கள் பங்களிப்பைத் தொடங்க ஆரம்பித்தனர்!
பாண்டியன் நிகழ்ச்சி முடிவில் பிரின்சிடம் எனக்கு விக்கி குறித்து இருந்த பிரமாண்டத்தை தகர்த்துவிட்டீர்கள் என்று கை கொடுத்தார்.
இந்த நிகழ்வின் காரணமாக விக்கி பங்களிப்புகள் கொஞ்சம் அதிகரித்தால் சரிதான்.
வெகு பயனுடைய பங்களிப்பு பிரின்சுடையது.
ராஜ ராஜன் பெருவழி
Dr. Arulmurugan - Raja Rajan Trunk Road |
கடந்த பயிற்சியின் பொழுது மேட்டுப் பட்டி அருகே கிடந்த ஒரு பழைய மைல் கல்லைத் கண்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்தக் கூட்டத்திற்கு முன் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று இலக்கு ஏதும் வைத்திருப்பார் போல.
கடந்த வீதி இலக்கிய கூட்டத்திற்கு வரும் பொழுதே வெகு களைப்பாக இருந்தார். அவருடன் சென்ற திரு.ராசி பன்னீர் செல்வம் அண்ணன் அவர்களின் ஒரு கண் முற்றிலும் சிவப்பாக இருந்தது.
ஏன் என்பது இந்த பயிலரங்கில்த்தான் தெரிந்தது! கி.பி 1800 வாக்கில் புதுகையில் இருந்த ராஜராஜன் பெருவழியைத் தனது களஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார். அக்னி நட்சத்திர வெயிலில் இப்படி ஒரு ஆய்வு? ஆனால் வச்ச குறி தப்பவில்லை.
ராஜராஜன் பெருவழி போர்ப்படைகள் பயன்படுத்திய ஒருஅவசரகால வழி! இந்த வழியை இந்த நூற்றாண்டில் அதற்கான நூறு சதவீத நம்பகமான தரவுகளுடன் நிறுவியிருகிறார் இவர். பார்க்க இணைப்பு.
அக்னி வெயிலை பொருட்படுத்தாது அய்யாவுடன் இந்தக் களப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் புதுகைநகர வாசிகளின் சார்பாக ஒரு பெருநன்றி.
மூங்கில் காற்றும் திண்டுக்கல் பூட்டும்
Double Impact |
வெடிச்சுது பார் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பது மாதிரி திரு. முரளீதரன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் இருவரும் வெகு நுட்பமான டிப்ஸ்களைத் தந்தனர்.
எப்படி ப்ளாக்கிற்கு பூட்டு போடுவது. எப்படி திரட்டிகளில் இணைப்பது. ஹெச்.டி.எம்.எல், ஜாவா ஸ்கிரிப்ட் என புகுந்து புறப்பட்டனர் இருவரும்.
மொத்தத்தில் இந்த நிகழ்வு நீண்ட நாட்களுக்கு நமது நினைவில் நிற்கும்!
அனைவருக்கும் எனது நன்றிகள்.
விழாவில் பங்குபெற வாய்ப்பைத்தந்த அண்ணன் முத்து நிலவனுக்கும் என்னுடைய நன்றிகள்.
வணக்கம்
ReplyDeleteபயனுள்ள பல விடயங்கள்சொல்லப்பட்டுள்ளது.. மனதில் சேமித்து வலைப்பூவை தொடங்கினால் சரிதான்...எந்த வித எதிர்பார்ப்பும்இல்லாமல் கற்பித்துகொடுத்த தமிழ் உணர்வாளர்களுக்கு எனது நன்றிகள் பல
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் வேகம் அசாத்தியமானது ரூபன்...
Deleteநான் கற்றுக்கொள்ள வேண்டியது
இனி மேல் வரும் விரிவாக - பூட்டு பகிர்வு...!
ReplyDeleteதொகுப்பு ரசிக்கும் வகையில்... நன்றி...
வரட்டும் பலர் பயன் பெறட்டும்
Deleteநன்றி அண்ணா
என்னைப்போன்ற பாமரனுக்கு பயனுள்ள தகவல்கள் நன்றி.
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
வருகைக்கு நன்றி
Deleteஅலோவ் ரொம்பதான்
உங்கள் தளவடிமைப்பைப் பார்த்து அரண்டுபோய் இருக்கேன்..
ரொம்பதான் லொள்ளு உங்களுக்கு ...
இப்படிஒரு பயிற்சி அமைப்புக்குழுவில் இருந்து பங்கெடுத்துக்கொண்டது என்போன்றோருக்கு
ReplyDeleteபயனுள்ளதாக இருந்தது மிக்கநன்றி சார்.
நன்றி கவிஞரே...
Deleteதங்கள் பங்களிப்புகள் தொடரட்டும்..
வணக்கம் சகோ
ReplyDeleteமிக நேர்த்தியாக பயிற்சியில் நடந்த விடயங்கள் அனைத்தையும் பகிர்ந்துள்ளீர்கள். முதலில் நாம் முத்துநிலவன் ஐயாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பல புதிய விடயங்கள் அறிந்து கொண்டேன். தங்களோடும் நமது நண்பர்களோடும் இரண்டு நாள் இணைந்திருந்த காட்சி இன்னும் கண்முன்னே நிழலாடுகின்றன சகோ. இது போன்ற பயிற்சி மாதம் ஒரு முறை நடந்தாலும் மகிழ்ச்சி தான் சகோ. தங்கள் அன்பிற்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றினு சொல்லி நமது நட்பை சிறுமை படுத்திக் கொள்ள விரும்பவில்லை. விரைவில் இந்த விடுமுறையிலேயே சந்திப்போம்.
வலையுலக வசந்தமே வருக...
Deleteசந்திப்போம்...
அழகாக கூறியுள்ளீர்கள்....நல்லா கதை விடுவீகளோ...மன்னிக்கவும் சொல்வீகளோ...நாங்களும் கலாய்ப்போம்ல.மொத்தத்தில் பயனுள்ள பயிற்சி.நன்றி சார்
ReplyDeleteஒரு ஜாலி மூடில் நான்குமணி நேரத்தில் ஒரே மூச்சில் எழுதியதால் இப்படி இருக்கலாம்...
Deleteநன்றி தோழி..
தலைப்புகள் அருமை, சிறுதலைப்புகள் அருமையோ அருமை. படங்கள் அழகு, விளக்கங்கள் அழகோ அழகு. அப்பறம் என்னத்தச் சொல்ல? கண்ணையும் கருத்தையும் கவர்ந்த காட்சிகளையெல்லாம் காணாதவர்க்கும் காட்டிய கட்டுரை.மந்திரன் எந்திரன்...? மொழியாக்க முயற்சியும் அழகாத்தான் இருக்கு. பாராட்டுகள் தொடர்க மது.
ReplyDeleteநன்றி... அண்ணா...
Deleteஅருமையான பயிற்சியாக இருந்திருக்கும் போல. இதனை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரா.
ReplyDeleteஇந்த பயிற்சியாளர்களில் - முனைவர். திரு. பழனியப்பன் அவர்களை காரைக்குடி கம்பன் கழகத்தில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பாத்தீங்களா நீங்கள் காரைக்குடி வந்தது தெரியாமலே போய்விட்டது...
Deleteநன்றி உண்மையின் நேசரே...
தமிழ் இணையப் பயிற்சி வகுப்பில் என்ன பேசினார்கள், எப்படி பயிற்சி நடந்தது என்பது குறித்து நன்றாகவே தொகுத்துச் சொன்னீர்கள். நன்றி!
ReplyDeleteவாருங்கள் அய்யா
Deleteஉங்களின் வலைப்பூ படங்கள் ஜோர்...
நன்றி...
அரிய பல செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், நண்பர்களைப் புதுக்கோட்டையில் சந்திக்கவும் இந்த நிகழ்வு அதிகம் உதவி புரிந்தது. இவ்வாறான முயற்சியை மேற்கொண்ட திரு முத்துநிலவன் அவர்களுக்கும் பிற நண்பர்களுக்கும் தங்களுக்கும் நன்றி.
ReplyDeleteவிபரமாக அனைத்தையும் பகிர்ந்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். நானும் கலந்து கொள்ளமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும். கலந்து கொண்டது போல் உணர்வு பெற்றேன். மிக்க நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்த
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள்.!
தங்கள் மேலான வருகைக்கும்
Deleteகருத்துக்கும் நன்றி..