எக்ஸ்.மென் டேய்ஸ் ஆப் தி பியூச்சர் பாஸ்ட்


வாடா செந்தில்  நல்லாகீரியா,இந்த வெயில்ல என்னடா இந்தப்பக்கம்.? என்றான் கிருஷ்ணன். 

சும்மா வெயிலுக்கு ஒதுங்கலாம்னு நாம்ம ஏ .சி சோனா தியட்டரில் எக்ஸ்.மென்  படம் பார்த்துட்டு வந்தேன்.

ஒதுங்கலாமா வேண்டாமா படம் தேறுமா என்றான் கிச்சன். 

எனக்கு ஓகே. உனக்கு எப்டீன்னு நீதான் சொல்லணும் என்றான் செந்தில். 

சரி என்ன கதை. கொஞ்சம் சொல்லு.  

அது வந்து கிருஷ்  2023இல்  திரியுற எல்லா மியுடண்ட்களையும் அழித்தொழிக்கும் சென்டினல் ரோபாட்கள் வந்துவிடுகின்றன. அனேகமாக உலகில் இருந்த அத்துணை எக்ஸ்மேன்னும் காலி. 

முற்றிலும் அழியப் போகும் நிலையில் மக்னீட்டொவும் , ப்ரொபசர். சார்லஸ் சேவியரும் சேர்ந்து செயலாற்றுகிறார்கள். 

டேய். மிச்சத்த சொல்லாத. எனக்கே தெரியும். மனசாட்சிய தொட்டு சொல்லு படம்  ஓக்கேயா ஆச்யர்மாக கேட்டான் கிச்சன். 

எனக்கு டபுள் ஓ க்கே  கிருஷ்.

எப்படிடா எக்ஸ் மென்  லாஸ்ட் ஸ்டாண்டில் மேக்நீட்டோவின் காந்தசக்தியே போயுருமே . அப்புறம் எப்படி இந்தப் படத்தில் திரும்ப மெரட்டுறார் சொல்லுடா குண்டா என்றான் கிருஷ் .  

லே இப்டியெல்லாம் கேள்விகேட்டால் இந்தப் படம் பார்க்காதே. எனக்கு படம் நல்லா இருக்கு கிருஷ்.

சரி அப்படி என்னதான்  உனக்கு பிடித்திருக்கு. அதாச்சும் சொல்லு மாமு.

சென்டினல் ரோபாட்களை உருவாகிய போலிவர் டிராஸ்க் என்கிற விஞ்ஞானியை  மிஸ்டிக் என்கிற பெயரில் மாறியிருக்கும் ரேவன் கொல்வது மியுடன்ட்களை மொத்தமாக அழிக்கும் விஷயதில் வந்து நிற்கிறது. 

அப்போ காலத்தில் பயணம் செய்து மிஸ்டிக் ட்ராஸ்கை கொல்லாம தடுக்கணும் இல்லையா செந்தில் என்றான் கிருஷ். 

இந்தப் போராட்டம் தான் கதை வெகு பரிதாபமாக மியுட்ட ன்ட்கள் இறப்பது அவர்களின் போராட்டம் ரகளையாக இருக்கு கிருஷ்.

அப்போ பெரிய கதாபாத்திரங்கள் எல்லாமே காலியா? செந்தில்.

அதுதான் இல்லை போதாக் குறைக்கு போன பார்ட்டில் போட்டுத் தள்ளிய அணைத்து எக்ஸ்மேன்கள் அனைவரும் இந்தப் பார்ட்டில் ஆஜர். 

ரொம்ப பேஜார் பண்ணாத எனக்கு புரிலைடா  குண்டா. 

காமிக்ஸ் திரைப்படம் ஆகும் பொழுது இதெல்லாம் சகஜம் சும்மா வீட்டில் இருக்கிறதுக்கு கொஞ்ச நேரம் போய் ஏ.சி தியேட்டரில் உட்ட்கார்ந்துபாரேன். இது ப்ரிகுவ்ல்.

நீ சொல்றத பார்த்த டை ஹார்ட் எக்ஸ்.மென்  ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் போல. 

அப்படியில்லை கிருஷ் என்னதான் வீட்டில் 1080 பி யில் பார்த்தாலும் தியேட்டர் மாதிரி வராது. நம்ம விசிலடிச்சான் குஞ்சுகள் ஹியுஜ்  ஜாக்மேன் வருகிற பொழுது தியட்டர் கூரையைக் கிழிக்கிறார்கள். 

என்னடா சொல்ற வுல்வரின் அவ்வளவு ரசிகர்களை வைத்திருக்கிறானா?
அப்ப ஒரு தபா பார்க்க வேண்டியதுதான். 

கட்டாயம் பாரு என்று சொல்லிய செந்தில் கிருஷ் டேபிளில் இருந்த பவன்டோவை காலிசெய்துவிட்டு புறப்பட்டான்.

Comments

  1. வணக்கம் சகோ
    ஒரு படத்தினைப் பற்றிய விமர்சனத்தை இப்படியெல்லாம் சொல்ல முடியுமா என்று இமைக்காமல் பார்க்கிறேன். விமர்சனத்தை எடுத்துச் சொல்ல நீங்கள் எடுத்துக் கொண்ட சூழ்நிலை வித்தியாசமான முயற்சி. விமர்சகர்களிலேயே நீங்கள் எடுத்துக் கொண்ட களம் புதிது. வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். தொடர்ந்து பயணியுங்கள் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ பாண்டியன் ...

      Delete
  2. // அப்படியில்லை கிருஷ் என்னதான் வீட்டில் 1080 பி யில் பார்த்தாலும் தியேட்டர் மாதிரி வராது.//

    ஈடுபாட்டுடன் ஒரு திரை விமர்சனம். உங்கள் சினிமா ஆர்வம் புரிகிறது. பத்துக் கட்டளைகள், பென்ஹர் போன்ற ஆங்கிலப் படங்களை திருச்சி சிப்பி தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்ற நாட்கள் ஞாபகம் வந்தது.
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் திரு காமிரா கலைஞரே..

      Delete
  3. சினிமா விமர்சனத்தை இப்படியும் சொல்ல முடியுமா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.கரந்தையாரே

      கருத்துக்கும் வாக்குக்கும்

      Delete
  4. வித்தியாசனமுறையில் சினிமா விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி என் தோப்புக்கு வந்த தனிமரம்..

      Delete
  5. புதிய பாணியில் விமர்சனம்! அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.சுரேஷ்.

      Delete
  6. நன்றி என் தோப்புக்கு வந்த தனிமரம்..

    ReplyDelete
  7. புதிய பாணியில் நன்றாகவே உள்ளது விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் கவிஞரே...

      Delete

Post a Comment

வருக வருக