முகநூல் நிலைத்தகவல்

ஒரு தீவிரவாதி உருவாக்கப்படுகின்றான்

June 25, 2014 at 1:42am
ஒரு தலைவர் பிரயாணம் செய்கின்றார்.


ஒரு கட்டடம் தானாகத் தீப்பற்றிக் கொள்கின்றது.
ஒரு மசூதி தானாகச் சரிந்து விழுகின்றது.
ஒரு எதிரி கட்டமைக்கப்படுகின்றான்.
ஒரு விண்கல் எதிரியின் இலக்கைத் துல்லியமாகத் தாக்குகின்றது.

ஒரு துறவி கொலை செய்கின்றார்.
ஒரு துறவி தூசண மொழி பேசுகின்றார்.
ஒரு ஓநாய் ஊளை இடுகின்றது.
ஒரு மனிதன் மிருகமாகின்றான்.

ஒரு பாதுகாப்பு அதிகாரி பார்வையாளராகின்றார்.
ஒரு பாதுகாப்பு அதிகாரி பதவி உயர்வு பெறுகின்றார்.
ஒரு சிங்கம் கொட்டாவி விடுகின்றது.

ஒரு பாதுகாப்பு அதிகாரி கைது செய்கின்றார்.
ஒரு பாதுகாப்பு அதிகாரி இடம் மாற்றப்படுகின்றார்.

ஒரு அரசியல்வாதி தளத்திற்கு விரைகின்றார்.
ஒரு மனிதன் ஏமாற்றப்படுகின்றான்.

ஒரு துறவி தன்னைத் தானே பின்னந்தலையில் தாக்கிக் கொள்கின்றார்.
ஒரு துறவி தனது கரங்களைப் பின்னால் கட்டி
ஓடும் ஊர்தியில் இருந்து தன்னைத் தானே தூக்கி எறிகின்றார்.
சட்டத்தின் ஒரு காவலன் சான்று பகர்கின்றான்.

நீதிக்காகப் போராடும் ஒருவன் குழப்பத்தை விளைவிக்கின்றான்.
அநீதி இழைக்கப்பட்டவன் ஒருவன் தண்டிக்கப்படுகின்றான்.

ஒரு மனிதன் ஒரு மனிதனைப் பகையுடன் பார்க்கின்றான்.
புன்முறுவல்கள் வெறுப்பாக மாறுகின்றன.
பக்கத்து வீட்டார்கள் பகைவர்களாகின்றனர்.

ஒரு பெண் விதவையாகின்றாள்.
குழந்தை ஒன்று அநாதையாகின்றது.
இன்னுமொரு குழந்தையின் உள்ளத்தில் விஷம் இடப்படுகின்றது.
ஒரு தீவிரவாதி உருவாக்கப்படுகின்றான்.

ஒரு தலைவர் உருவாகின்றார்.

தோழர்  அப்துலின் பகிர்வு

இது என்னுடையது

1.

நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிராமத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை .. அவர்களின் ஊருக்கு அருகே நெடுஞ்சாலையில் மோட்டல்களை திறக்க சொல்வது நல்லது..

சரியான விலைக்கு பானங்களும் உணவும் கிடைக்குமே பயணிகளுக்கு ...

இப்படி சிறுக சிறுகத்தான் பொருளாதார வளர்ச்சியை நாம் பெற முடியும்



2.
தேர்வுப் பணி
பத்தாம் வகுபிற்கான உடனடித் தேர்வு

இன்று ஒரு பெண் தேர்வின் பொழுது தொடர் வாந்தியினால் அவதியுற்றாள்.

பறக்கும் படை அலுவலர் அவளுக்குத் துணையாக போக வேண்டிய கட்டாயம்.

தேர்வு அறையோ முதல் மாடியில் நான்குமுறை கீழே இறங்கிப் போனதும் வியர்த்து விறுவிறுத்து விட்டது பறக்கும் படை அலுவலருக்கு.

சரி என்று பார்த்தால் அடுத்து ஒரு பெண் வயிற்றைப் பிடித்துக்கொண்டு உடனே போகவேண்டும் என்றாள்.

எனக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதலில் ஒருவன் இந்த மாதிரி பிரச்சனையை கொண்டு வந்தான்.

நான் புதிது என்ப்பதால் சரிப்பா கழிவறைக்கு போயிட்டு வா என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

துறை அலுவலர் வந்தபொழுது விவரத்தைச் சொல்ல ஆயிரம் வாட் மின்னதிர்சியை பெற்றவர் போல அலறினார்.

நான் ரூமில் இருக்கேன் நீங்க போய் அவனைக் கூட்டிகிட்டுத் தான் வரவேண்டும் என்று சொல்ல ...

வேறு என்ன செய்வது போய் கழிவறை வாசலில் அவன் எழுப்பிய நானாவிதமான ஓசைகளையும் கேட்டுக்கொண்டு காத்திருந்தேன்.

சொர்க்கவாசலில் கூட அப்படிக் காத்திருந்ததில்லை..

அவனையும் என்னையும் பார்க்கும் வரை பேய் அறைந்த மாதிரி காத்திருந்தார் துறை அலுவலர்..

3.

தத்தெடுக்கும் பெற்றோர் குழந்தைகளை அதீத நேசத்தோடு பார்துக்கொள்வார்கள்
கவனித்திருக்கிரீர்களா
நான் என் முதல் மகள் நிறைமதியை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்த கட்டத்தில் எங்க ஊர் பெரும் தனவந்தர் ஒருவரும் அவரது குழந்தையை பள்ளியில் சேர்த்திருந்தார்.

அவர் நீண்ட காத்திருப்பிற்கு பின் ஒரு குழந்தையை தத்தெடுதிருந்தார்.

ஒவ்வொரு முறை பள்ளியை நெருங்கும் பொழுதும் எனது குழந்தை வண்டியின் பெட்ரோல் டாங்கில் உட்கார்ந்த படி அழுவாள்.

எனது இதயத்தை அசைக்கும் அழுகை அது.

இப்படி ஒரு தண்டனையை என் குழந்தைக்குத் தந்தே ஆகணுமா? என்று என்னைக் கேட்டுக் கொண்டு மனதை கல்லாகிக் கொண்டு அவளை பள்ளியில் விட்டுவருவேன்.

சில நாட்களுக்குப் பின்னர் அந்த தனவந்தர் பள்ளிவருவதை நிறுத்தி விட்டார். குழந்தையின் அழுகை அவரை கரைத்திருக்க வேண்டும்.

என்னைவிட அவர் ஒரு நல்ல தந்தைதான் சந்தேகம் இல்லாமல்.


4. 
இன்று ஒரு புத்தக பரிந்துரை
இந்திய கலாச்சரா வரலாற்றை அறிய,
மனுவைத் துல்லியமாக புரிதுகொள்ள
பேசப்படாத கீழ்பிறப்புகளின் (பெண்கள்) கடந்தகாலப் பாடுகளை அறிய..
இந்திய முஸ்லீம்கள் குறித்தும் அவர் இந்திய கலாச்சாரத்திற்கும் சமூக அமைப்பிற்கும் வழங்கிய உன்னதமான கொடைகளை அறிய
புராணக் கதைகளை அறிவியல் பூர்வமாக அணுக ...
மனிதத்தை நேசிக்கும் மனிதர்களுக்கு மட்டும் நான் பரிந்துரைக்கும் நூல்
http://www.malartharu.org/2013/02/blog-post_28.html


5.  
இப்போதுதான் முடிந்த புதியதலைமுறை நேர்படப் பேசு ...
தமிழக அரசு மசூதிகளுக்கு நோன்பு கஞ்சிக்கு அரிசி கொடுத்தற்கு எதிர் வினையாக இந்து மதக் காவலர் அய்யா ராம கோபாலன் அவர்களின் கோவிலுக்கு கூழ் கேட்டதை குறித்த விவாதம் .. நான் பெரிதும் மதிக்கும் பேரா. அருணன் அவர்களும் கிழக்கு பத்திரி அவர்களும் நேர்மையாக விவாதித்தனர்.

அதிமுக சமரசம் ஒரு பழுத்த அரசியல்வாதி என்பதை மட்டுமே காட்டினார். இன்னும் வாதாடியிருக்கலாம்..

அருணன் எல்லா சாதி மனிதர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பற்றி அய்யா ராஜ கோபாலன் ஏன் பேசவில்லை என்று கேட்டார். (அவுக எப்படி பேசுவாக)

எனது கருத்து இதுதான்.

அதிமுக ஏன் இப்போது மசூதிகளிடம் திடீர் பாசம் காட்ட வேண்டும் ?
மத்திய அரசின் ஆளும் கட்சி முஸ்லீம் சகோதரர்களிடம் ஒரு உளவியல் அழுத்தத்தை உண்டாக்கியிருகிறது ...

இப்போது அவர்களுக்கு ஆறுதலூட்டும் ஒரு செயல் அவசியம். மிகச் சரியாக இதை உணர்ந்த முதல்வர் செம்மையாக செயல்பட்டிருக்கிறார்.

சமூக சமநிலைக்கு இந்த மாதிரியான ஆறுதலூட்டும் அரசியல் செயல் பாடுகள் அவசியம்.

இதை நான் மனம் திறந்து கைகூப்பி வரவேற்கிறேன் நன்றி அம்மா.

சரி அய்யா ராமகோபாலன் ஏன் எதிர்க்கிறார்?

அவரது வேண்டுகோளை உண்மையில்
மரியாதையாக இரு. மத்திய ஆட்சி நான். என்ற நேரடி மிரட்டலாகத்தான் நான் பார்கிறேன்..

நான் இந்த விசயத்தில் அம்மாவை ஆதரிக்கிறேன்..

Comments

  1. வணக்கம்
    அம்மாவின் ஆட்சி மக்களுக்கு சென்றடைந்ததன் விளைவுதன் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி கிடைத்தது... செய்யும் உதவிகளை நீங்கள் நேரடியாக அனுபவிக்கின்றீர்கள் நாங்கள் செய்திவழி பார்க்கிறோம் அன்றாடம்.

    முதல் பகுதியில் அமைந்த கவிதையும் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் ரூபன்

      Delete
  2. //நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிராமத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை .. அவர்களின் ஊருக்கு அருகே நெடுஞ்சாலையில் மோட்டல்களை திறக்க சொல்வது நல்லது..சரியான விலைக்கு பானங்களும் உணவும் கிடைக்குமே பயணிகளுக்கு ...இப்படி சிறுக சிறுகத்தான் பொருளாதார வளர்ச்சியை நாம் பெற முடியும்///

    மிக சிறப்பான எல்லோரும் வரவேற்க கூடிய ஐடியா? பாராட்டுக்கள்.....அம்மவிற்கு யாரவது தகவல் கொடுக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுழல் கேள்வி நாயகரே...

      Delete
  3. நிலைத்தகவல்கள் இங்கே பகிர்வாய்...
    நிறைய செய்திகளைத் தாங்கி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் முகநூலிலும் நிறைய இருக்கிறதே...

      Delete
  4. தங்களது தேர்வு பணி அனுபவம் !!! உண்மையில் நீங்க ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பீங்க .
    சில நேரம் உண்மையான காரணமாகவே இருந்தாலும் சந்தேகப்பட வேண்டிய சூழல் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரகளுக்கு
    .
    பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு சிறிது நேரம் அவர்களுடனே அங்கேயே இருக்க வைப்பார்கள் வெளிநாட்டில்
    விளையாட்டு பாட்டு என வீட்டில் இருக்கும் சூழ்நிலை அங்கிருக்கும் ..அப்போ குழந்தைகள் அழ வாய்ப்புக்கள் குறைவு !

    ReplyDelete
  5. நன்றி தோழர்

    ReplyDelete
  6. ஆஹா, அரசியல் பதிவா...
    வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

    நன்றாக அலசி ஆரய்ந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. தேர்வுப் பணி அனுபவம்
    ஆகா

    ReplyDelete
  8. வித்தியாசமான அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  9. அனைத்து பதிவுகளுமே அருமை, அதிலும் நேர்படப் பேசு நிகழ்சி நன்றாக இருக்கிறது. ஆயுத எழுத்தில் வரும் பாண்டே மிகவும் திறமைசாலி. பார்த்திருப்பீர்கள்...

    ReplyDelete
  10. நல்ல அலசலும் பதிவும் வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  11. சிந்திக்கும் பகிர்வு.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குடும்ப உறவுகளுக்கு.

    ReplyDelete

Post a Comment

வருக வருக