உங்கள் பதிவிற்கு பார்வையாளர்களை அதிகரிக்கும் மிக எளிய வேளைகளில் ஒன்று நல்ல பதிவர்களை இனம்கண்டு அவர்களுக்கு பின்னூட்டம் இடுவது.
பலர் வெறும் பின்னூட்டம் மட்டுமே இடுகின்றார்கள். ஆனால் நமது வலைப்பூ முகவரியும் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஏன்?
வலையுலகம்
ஒரு மாபெரும் கடல். இதில் நாம் போகும் இடமெலாம் நமது வலைப்பூ முகவரியை
விட்டுவருவது அவசியம். இது கூகுள் ஆண்டவருக்கு ரொம்ப பிடிக்கும்.
நான்
பின்னூட்டம் இடும் பதிவர்களில் பலர் அந்த பதிவின் முகவரிகளை தொடர்ந்து
வந்து வெகு சின்சியராக பின்னூட்டமும் இடுகிறார்கள். இது ஒரு கூடுதல் நலம்.
எனது நோக்கம் நிச்சயமாக அவர்களை படியுங்கள் என்று கையைப் பிடித்து
இழுப்பதல்ல.
நான் கூகிள் ஆண்டவர் எனது வலைப்பூவை எளிதாக மதிப்பீடு செய்து கொள்வதற்காவே இப்படி செய்கிறேன்.
அடுத்தவர் வலைப்பூவில் நமது முகவரி அநாகரீகம் இல்லையா?
இல்லை. இது பதிவர்களுக்கான ஒரு பால பாடம். ஆங்கிலப் பதிவர்கள் அனைவரும் செய்வதுதான் இது.
நான் பதிவினை என் நேரத்தை செலவிட்டு படிக்கிறேன். அதற்கு பின்னூட்டம் இடுகிறேன். செலவிடப்பட்ட எனது நேரத்தை நேர்மறையாக வரவாக்கிக்கொள்கிறேன். அவ்வளவே.
அவர்கள் வெளியிடவில்லை என்றாலும் வருத்தம் இல்லை. இது கூகிளின் நேசத்திற்குரிய பாணி. அவ்வளவே.
பேஜ் ராங்கிங், கிராவ்லிங் என்று ஜல்லியடிக்காமல் அனைவருக்கும் புரிகிற மாதிரி சொல்லியிருக்கேன் என்று நினைக்கிறன்.
நல்லது நண்பர்களே
சந்திப்போம்
அன்பன்
மது
ஒரு முக நூல் நிலைத் தகவல்
சில நடிகைகள் தன்னை பற்றி ஒரு பரபரப்பை கிளப்ப வேண்டும் என்பதற்காக ஏதாவது செய்வார்கள்.
அது என்னை இவர் மிரட்டுறார் என்று எளிமையாக ஆரம்பித்து தன்னுடைய நிர்வாணப் படத்தை வெளியிடுவது வரை போகும்.
ஜே.மோ வும் இப்படித் தான் தன்னை குறித்து அனைவரும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காவே எதாவது செய்வது இவரது வாடிக்கை ..
வலைப்பூ ஆரம்பித்த புதிதில் நாங்கள்(மலையாளிகள் என்று இவர் சொல்வார்) அப்பளத்தை ஒட்டிக்கொண்டு நடிக்கும் நடிகர்களின் படத்தை காமடிப் படங்களாகவே கருதுவோம் என்றார் (குறிப்பிட்ட நடிகர் ஒருவர் முதல்வர், இன்னொருவர் பீச் ரோட்டில் சிலையானார்)
விளைவு இவரது வலைப்பூ சில நாட்களில் சில லெட்சம் பார்வையாளர்கள் என்று எகிறியது.
சமீபத்தில் தமிழ் எழுத்துரு
இப்போ படைப்புலகின் பெண்கள்
ஒய்யால எங்க அடிச்சா எங்கே வலிக்கும்னு நல்ல தெரிஞ்சு வைச்சுகிட்டே பண்றார் அவர்.
நாம் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறோம்.
உண்மையில் அவர் நோக்கம் மட்டும் தவறாமல் நிறைவேறிவிடுகிறது!
நானும் நிறைவேற்றிவிட்டேன்.
அது என்னை இவர் மிரட்டுறார் என்று எளிமையாக ஆரம்பித்து தன்னுடைய நிர்வாணப் படத்தை வெளியிடுவது வரை போகும்.
ஜே.மோ வும் இப்படித் தான் தன்னை குறித்து அனைவரும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காவே எதாவது செய்வது இவரது வாடிக்கை ..
வலைப்பூ ஆரம்பித்த புதிதில் நாங்கள்(மலையாளிகள் என்று இவர் சொல்வார்) அப்பளத்தை ஒட்டிக்கொண்டு நடிக்கும் நடிகர்களின் படத்தை காமடிப் படங்களாகவே கருதுவோம் என்றார் (குறிப்பிட்ட நடிகர் ஒருவர் முதல்வர், இன்னொருவர் பீச் ரோட்டில் சிலையானார்)
விளைவு இவரது வலைப்பூ சில நாட்களில் சில லெட்சம் பார்வையாளர்கள் என்று எகிறியது.
சமீபத்தில் தமிழ் எழுத்துரு
இப்போ படைப்புலகின் பெண்கள்
ஒய்யால எங்க அடிச்சா எங்கே வலிக்கும்னு நல்ல தெரிஞ்சு வைச்சுகிட்டே பண்றார் அவர்.
நாம் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறோம்.
உண்மையில் அவர் நோக்கம் மட்டும் தவறாமல் நிறைவேறிவிடுகிறது!
நானும் நிறைவேற்றிவிட்டேன்.
ஒரு படம்
பதிவுலகில் நினைவூட்டிக்கொண்டே இருப்பது நல்லதுதான். அக்கறையான பதிவர்கள் பின்னூட்டக்காரர்களின் பெயரைச் சொடுக்கியே பின்தொடர்ந்து வரவும் முடியும் என்பதால் -முதலில் அப்படிச் செய்துகொண்டிருந்த- நான் இப்போது அப்படிச் செய்வதிலலை. “காலமறிந்து கூவும் சேவலைக் கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது, கல்லைத் தூக்கி பாரம்வைத்தாலும் கணக்காய்க் கூவும் தவறாது” -ம.க.ப.கோ.க. அடுத்து, ஜெயமோகனைப் பற்றி நீங்கள் சொன்னதுதான், விளம்பரஉள்நோக்கமன்றி வேறில்லை. அவரது எழுத்துகளின்மேல் எனக்குப் பெரிய ஈர்ப்பும் இல்லை. மனித எந்திரம்போல் எழுதுவது ஒரு பாராட்டுக்குரிய செய்தியாக நான் கருதவில்லை.
ReplyDeleteவருகைக்கு நன்றி அண்ணா
Deleteபடைப்புலகில் அவர் அடைந்த உயரம் அதிகம்
டாக்டர் ஜான்சன் ஆங்கில அகராதியின் தந்தை. இவர் தெருவில் நடந்தால் விளக்கு கம்பங்களைத் தொடாமல் போகமாட்டார். தப்பி தவறி ஒன்றை விட்டுவிட்டாலும் திரும்பி வந்து தொட்டுவிட்டு போவார்.
இது ஓர் எக்சன்றிக் மனநிலை.
ஜெ.மோ இதுமாதிரி என்பது என் கணிப்பு.
நல்ல தகவல். உங்கள் தகவலை உங்கள் தளத்தில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.
ReplyDeleteஎமது தளத்தில் தமிழில் முதலீடு தகவல்கள் எழுதப்பட்டு வருகிறது. .www.revmuthal.com
வருகைக்கு நன்றி...
Deleteஉங்கள் முகவரி இடுகைக்கும் நன்றி..
வணக்கம்
ReplyDeleteதாங்கள் சொல்வது உண்மைதான் சரியான கருத்தை பகிரந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ ரூபன்
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல ஆலோசனை..
ReplyDeleteஇரண்டாம் பாதி எனக்கு ஒன்றும் புரியவில்லை... :) இருந்தாலும் உங்கள் முகநூலில் இணைந்து விட்டேன்..
வருகை மகிழ்வு சகோதரி..
Deleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteபயனுள்ள அருமையான தகவல்கள்!
பிரபலமாவதற்கு எத்தனை வழிகள்...:)
”சில” முயற்சிகள் சிரிப்பையும் அதிர்ச்சியையும் தருகின்றனவே...
அருமையான அணிற்பிள்ளை!
மனதைக் கொள்ளை கொள்கிறது படம்!
பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!
வருக சகோதரி
Deleteபின்ட்ரஸ்ட் தயவு படம் ...
ReplyDeleteவணக்கம்!
மலா்த்தரு தந்த மணமிகு சொற்கள்
உளம்புகும் நன்றே ஒளிா்ந்து!
தமிழ்மணம் 4
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
நன்றி கவிஞரே..
Deleteவருகைக்கும் வாக்குக்கும்
நல்ல ஆலோசனை..சகோ .ஆனால் இந்த face bookஐப் பத்தி எப்போ சொல்லித் தரப்போறிங்க...?
ReplyDeleteஅண்ணா வணக்கம் ...
Deleteஎப்போது வேண்டுமென்றாலும்
அழைக்கவேண்டியது தானே
இப்படி செய்வது அவர்களை வலுக் கட்டாயப் படுத்துவது போல் இருக்குமோ என்று நான் தயங்கினேன் நீங்கள் இட்ட பதிவின் பின் அது சரி என்றே தோன்றுகிறது. இது கூடுதல் வசதி தானே பதிவர்களுக்கு. அத்துடன் நன்றி சொல்லும் நேரத்தை இதில் செலவு செய்யாமல் அங்கேயே போய் சொல்வதால் மேலும் பல தளங்களை பார்வையிடவும் வழி செய்யும் என்றும் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சகோ. நானும் இனி தங்கள் வழி தொடர்கிறேன். நன்றி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteசரிதான் சகோதரி..
Deleteமுத்துநிலவன் ஐயா சொன்னதும் சரி... ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், g+ profile இல்லாமல் blogger profile இருந்தால், அந்தந்த தளத்தை உடனே கண்டு தொடர வசதியாக இருக்கும்... இதோ எ.கா. : https://www.blogger.com/profile/05232943809680695408
ReplyDeleteஅப்புறம் முகநூல் friend request அனுப்பி உள்ளேன்... நன்றி...
ரசிக்க வைக்கும் படம்...
உண்மைதான் அண்ணா..
Deleteவருகைக்கு நன்றி
அருமையான ஆலோசனை நண்பரே
ReplyDeleteமுயற்சித்துப் பார்க்கிறேன்
தம 6
நன்றி தோழர்..
Deleteஆஹா நல்ல ஐடியா .இதுதான் காரணமா?பின்பற்றலாமேன்னு தோணுது.
ReplyDeleteஆஹா நல்ல ஐடியா இது தான் காரணமா.நானும் யோசித்தேன் முகவரி வருதே ஏன்னு.பின்பற்றலாமேன்னு தோணுது
ReplyDeleteபின்பற்றலாம்
Deleteகூகிள் உங்கள் தளத்தின் மதிப்பை கூட்டும்
அருமையான கருத்து கூறியுள்ளீர்கள். இவ்வாறான சிந்தனை பாராட்டத்தக்கதே. இனி கருத்து கூறும்போது எனது வலைப்பூக்களின் முகவரிகளையும் இணைத்துப் பார்க்க முயற்சிக்கிறேன். எனது வலைப்பூக்களைக் காண அன்போடு அழைக்கிறேன். (1)http://ponnibuddha.blogspot.in/2014/06/l.html
ReplyDelete(2) http://drbjambulingam.blogspot.in/2014/05/2014.html
வணக்கம் மது,
ReplyDeleteநான் நலம். தாங்களும் நலம் தானே!
பின்னூட்டத்தில் இனைப்பை அளிப்பது தவறல்ல. நானும் அதன் வழியாகத்தான் இங்கு வந்தேன்...
நன்று..
வருக வெற்றி ...
Deleteவருகை
மகிழ்வு
நல்லதுதான்! நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் செய்து கொண்டிருந்தேன்! இது கொஞ்ச காலத்திற்கு சரி! அப்புறம் தவிர்த்து விடுங்கள்! நன்றி!
ReplyDelete