ஒன்னும் தெரியாத கிராமத்து சிறுவர்கள் கண்ட்ரீ என்று பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள். கிராமத்து சிறார்கள் உண்மையிலே அறிவிலிகளா?
நீங்கள் ஏ.சி அறையில் இறுமாப்புடன் அமர்ந்து ஆமா என்று சொல்வதற்கு முன் உங்கள் கனிவான கவனத்திற்கு சில வரிகள்.
வயலில் எப்படி நாற்று நடவேண்டும், எப்படி அறுவடை செய்யவேண்டும், ஒரு கால்நடை சுணங்கினால் என்ன காரணம் என்று துல்லியமாக சொல்வார்கள்.
வெறும் களிமண்ணை செங்கலாக்கி அவர்களின் ஆண்டைகளின் வங்கிக்கணக்கை நிரப்புவர்.
வானில் எந்தப் புறம் மேகங்கள் திரண்டால் எங்கு மழைவரும் என்று சரியாக சொல்வார்கள்.
ஒரு ஏக்கர் வயலைக் கூட ஒண்டியாய் அறுவடை செய்வார்கள்.
உங்கள் தட்டில் உள்ள காய்கறி இப்படி ஏதோ ஒரு கிராமத்து சிறார்களின் வியர்வையைப் பருகித்தான் வந்திருக்கிறது.
நீச்சல் தெரியாத நகரத்து குழந்தைகள் போல் அல்ல அவர்கள், அயிரை மீன் குஞ்சுகள்.
அவர்கள் யோகா, ஹிந்தி, கர்நாடிக் என்று எந்த சிறப்பு வகுப்பிற்கும் போவதில்லை. அவர்களின் எளிய குரலால் ஒரு திரைப்பாடலால் வெளியை நிரப்பும் தருணத்தில் நீங்கள் அங்கு இருக்கவேண்டுமே. அதுக்கு கொடுப்பினை வேண்டும் தோழர்களே.
இப்படி "எதுவுமே தெரியாத" சிறுவர்களை என்னுடைய ஏ.பி.சி.டி காயப் படுத்தாமல் பார்த்துக்கொள்வதே போதும் . வேறொன்றும் வேண்டாம் இந்தக் கல்வியாண்டிற்கு.
வருக கல்வியாண்டே ...
அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம்.
கடற்கரையில் அசைந்து பறந்த கொக்கு ஒரு மீனவச் சிறுவனை ராஷ்டிரபதி பவனுக்கு அனுப்பியிருக்கிறது எனில் எமது மாணவர்களாலும் முடியும்.எமது குளக்கரையில் எவ்விப் பறக்கும் நாரைகள் எமது மாணவர்களில் யாருக்காவது சிறகுகளைத் தரலாம்.
இந்த நம்பிக்கையுடன் உங்களின் ஆசிகளுடனும் துவங்கிறது இந்தக் கல்வி ஆண்டு.
நலமே விளையட்டும்.
வணக்கம் சகோ!
ReplyDeleteமிகச் சிறப்பாக சொல்லி விட்டீர்கள். ஒரே கருப்பொருளை மையமாக இருவரும் பதிவிட்டுள்ளோம் மகிழ்வாக இருக்கிறது. இந்த கல்வியாண்டு நமக்கும் மாணவர்களுக்கும் இனிமையானதாக அமையட்டும். நாம் பயணிக்கும் தொலைவும் மாணவர்களுக்கு நாம் செய்யும் கடமைகளும் மிகப் பெரியது. தொடர்ந்து பயணிப்போம். தங்களைப் போன்ற ஆசிரியர் மாணவர்களுக்கு கிடைத்து விட்டால் அவர்கள் விண்ணைத் தொட்டு விண்மீன்கள் பறிப்பார்கள். பகிர்வுக்கு நன்றீங்க சகோ!
தங்கள் பதிவினையும் படித்தேன்...
Deleteசகோ நல்ல கவிதை
அவர்கள் மனிதர்களாக மனித நேயத்தோடு வாழ்வார்கள் என்பதைக் கூறவில்லையே.கிராமத்து குழந்தைகளை இழக்கிறேன் நான்.
ReplyDeleteஉண்மைதான் சகோதரி ...
Deleteஅது தான் நீங்கள் சொல்லிவிட்டீர்களே
சிறந்த பயன்தரும் பகிர்வு
ReplyDeleteவாருங்கள் அய்யா.
Deleteகருத்துக்கு நன்றி
எமது குளக்கரையில் எவ்விப் பறக்கும் நாரைகள் எமது மாணவர்களில் யாருக்காவது சிறகுகளைத் தரலாம்.- நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை. நாமும் பொய்ப்பதில்லை. அருமையான பதிவு. நன்றி.
Deleteநன்றிகள் குருஜி ...
Deleteவருகைக்கும்
வாழ்த்துக்கும்
நகர்ப்புற சிறுவர்களை விட கிராமப்புற சிறுவர்கள் திறமையானவர்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.வசதி வாய்ப்புகள் கிடைத்தால் அனைவரையும் மிஞ்சும் திறமை உடையவர்கள் என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteகல்வி ஆண்டு சிறப்பாக தொடங்க வாழ்துக்கள்
எனக்கு அவர்களின் திறமையைக் கண்டு வியந்த அனுபவம் இருக்கிறது
Deleteநிறைய பதிவுகள் வரும்..
நன்றி அய்யா..
// எமது மாணவர்களாலும் முடியும்... // கண்டிப்பாக... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபாராட்டுக்கள்...
நன்றி, அண்ணா
Deleteபுதிய ஆண்டு நலமுடன் தொடங்கட்டும்
ReplyDeleteமாணவர்களுக்காக இன்னும் உத்வேகத்துடன் உழைப்போம்
நன்றி நண்பரே
வாழ்த்துக்கும் கருத்துக்கும்
Deleteநன்றி அய்யா...
தம 4
ReplyDeleteமண்ணை மரத்தை நேசிக்கவும் வாசிக்கவும் செய்யுமொரு பேருன்னதத்தை.... கயிற்றுக் கட்டிலில் நிலாச் சோறுண்ணும் இரவுகளை.... காயங்களை இயல்பென ஏற்கும் நெஞ்சுரத்தை....ஏழ்மையை ஊடறுத்துச் செல்லும் உழைப்பை....எந்தப் பள்ளியும் கற்றுத்தர முடியாத பாடங்களை உங்கள் மாணவரிடமிருந்து கற்றுக் கொண்டாக வேண்டும் நாகரிக A, B, C, D க்கள்..! வேண்டுதல் பலிக்கும் தோழரே!
ReplyDeleteநன்றி தோழர்..
Deleteநல்ல பதிவு! நகரத்துக் குழந்தைகள் குரோட்டன்ஸ் செடிகளைப் போல. பார்ப்பதற்கு தொட்டியில் வளர்க்கப்படும் செடிகள் மிக அழகாகத் தெரியலாம். ஆனால் எங்கள் கிராமத்துக் குழந்தைகள் காட்டு மரங்கள்...மண்ணிற்குக் கீழே வேர்களை ஆழப்படுத்தவும் தெரியும்! விண்ணை நோக்கி கிளை பரப்பவும் தெரியும்!.நம் கல்வி அவர்களுக்கு உரமாக,வரமாக இருக்குமாறு நம் பணி அமையட்டும்!.ஆண்டின் தொடக்கத்திலேயே நம் உண்மையா பணி எது என்பதை நினைவுபடுத்திய சகோதரருக்கு நன்றி...!
ReplyDeleteஅண்ணா இப்படி சின்சியர கமெண்ட்ஸ் போட்டீர்கள் என்றால் இந்த ஆண்டின் மாபெரும் வலைபதிவர்களில் ஒருவராக இருப்பீர்கள். (எல்லோருக்குமே சின்சியர் கமெண்ட்ஸ் அவசியம்)
Deleteநன்றி
கல்வி ஆண்டில் நலமே விளையட்டும்.
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteமிகச்சிறப்பான பதிவு! கிராமத்து சிறுவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை! சரியான வழிகாட்டி அமைந்தால் விண்ணையும் தொடுவர்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஸ்வாமி !
Deleteஉண்மையில் கிராமப்புற மாணவர்களிடத்தில் தான் அந்த பணக்கார வெட்டி பந்தா எல்லாம் இருக்காது,
ReplyDeleteமாணவர்களுக்கு இந்த ஆண்டும் ஒரு சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
நல்லதொரு சிந்தனை தரக்கூடிய விஷயத்தை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி.
நன்றி சொக்கன்.
Deleteமுயன்றால் முகில்கூட கைக்கெட்டும் யாரும் சளைத்தவரில்லை பாரில், பாரீர் நாளை அவரும் போவர் தேரில்....
ReplyDeletewww.killergee.blogspot.com
நன்றி கில்லர்..
Deleteதேர்கனவு கவிதை அழகு..
கிராமத்து சிறார் எல்லாம் சுட்டிகள் தான் கெட்டிகார குட்டிகள் தான் அதை நானும் நன்கு அறிவேன். அவர்களுக்கு சுய புத்தியும், புரிந்துணர்வும் கூட அதிகம் இருக்கும். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள். தங்கள் மாணவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் தான்.. நிச்சயம் தங்கள் மாணவர்கள் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ReplyDeleteநன்றி ! வாழ்த்துக்கள் ....!
இப்படி "எதுவுமே தெரியாத" சிறுவர்களை என்னுடைய ஏ.பி.சி.டி காயப் படுத்தாமல் பார்த்துக்கொள்வதே போதும் . வேறொன்றும் வேண்டாம் இந்தக் கல்வியாண்டிற்கு.
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள்.
நன்றி முனைவரே..
Deleteதங்கள் வருகை மகிழ்வு..
கவிதைகளாய் குரு, பாண்டியன், மகாவும் கவித்துவம் மிக்க கட்டுரையாய் நீங்களும்..வேறுவேறு கோணத்தில் கல்வியாண்டுத் தொடக்கத்தைக் கொண்டாடிவிட்டீர்கள்... உண்மையிலேயே அருமை (என் தங்கை மட்டும்தான் பாக்கி)
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteஇப்படி "எதுவுமே தெரியாத" சிறுவர்களை என்னுடைய ஏ.பி.சி.டி காயப் படுத்தாமல் பார்த்துக்கொள்வதே போதும் . வேறொன்றும் வேண்டாம் இந்தக் கல்வியாண்டிற்கு.
ReplyDeleteகடற்கரையில் அசைந்து பறந்த கொக்கு ஒரு மீனவச் சிறுவனை ராஷ்டிரபதி பவனுக்கு அனுப்பியிருக்கிறது எனில் எமது மாணவர்களாலும் முடியும்.எமது குளக்கரையில் எவ்விப் பறக்கும் நாரைகள் எமது மாணவர்களில் யாருக்காவது சிறகுகளைத் தரலாம்//
அருமையான ஆசிரியராகிய உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!!!
கிராமத்து சிறார்கள் நகரத்துச் சிறார்களை விட மேலானவர்கள் தான்! கல்வியிலோ கலைகளிலோ மட்டுமல்ல மனிதனுக்கு எது வேண்டுமோ முக்கியமாக வெள்ளந்தி மனதுடன் தரும் விருந்தோம்பலும், அன்பும் யாருக்கய்யா வரும்?!!! நாங்களும் சிறு கிராமத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் தங்களின் இந்தப் பதிவை மிகவும் ரசித்துப் படித்தோம்!
காந்திய் சொல்லுவார்...இந்திய கிராமங்களும், விவசாயிகளும்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று ஆனால்...இந்தியாவோ தற்போது எதையோ சாதிப்பது போல பன்னாட்டு அரங்கில் உயர வேண்டும் என்று எதையோ நொக்கிச் சென்று கொண்டிருக்கின்றது! முதுகெலும்ப்பு இருந்தால்தனே உயர்ந்து நிற்க முடியும்?
பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, தங்கள் கருத்து மிக்க மகிழ்வு
Deleteஎன்னைப் பொறுத்தவரை நகரில் உள்ள குழந்தைகள் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் மிளிர்கிறதை சிலாகிக்கிற நாம்
கிராமத்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்கிற முடிவிற்கு வந்துவிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது.. எனவே சமயங்களில் நானுமே இந்தத் தவறைச் செய்திருக்கிறேன் என்பதால் பிராயச்சித்தமாக இந்தப் பதிவு ..
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில் என்கிற பாடலின் அடுத்த வரி ..
அன்னைமட்டும் தான் வளர்க்கிறாளா?
நாமும்தானே?
நன்றி நண்பரே..
நாமும்தான் வளர்க்கிறோம், கடையில் பால்வாங்கித் தந்து அன்னை தன் ரத்தத்தையே அல்லவா -பாலாகக்- கொடுக்கிறாள்! சரி விடுங்கள். பெண்குழந்தைகள் அப்பாவிடம்தான் அதிகப் பாசம் என்பது உலகஉண்மை.
Deleteவாழ்த்துக்கள்.புதிய கல்வியாண்டில் கல்வியால் காயப்படுத்தாமல் அவர்களை உயர வைத்து ஊக்குவிப்போம்.
ReplyDeleteநானும் கூட மகிழ்வாய் உணர்கிறேன் சகோதரரே
ReplyDeleteகிராமத்துச் சிறார்கள் வெள்ளை மனமும் கொள்ளை அறிவும் கொண்டவர்கள்..
ReplyDeleteஉங்களிடம் வந்து விட்டார்கள் அல்லவா? சிகரம் தொடுவார்கள்...உங்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த கல்வி ஆண்டு நன்றாய் அமையட்டும்.