புதுகைக் கல்வித் துறையின் பெருவிழா


அசரவைத்த பிரமாண்டவிழா ஏற்பாடுகள்

29/06/2014 அன்று புதுகைக் கல்வி மாவட்டத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இந்த விழா பெருமதிப்பிற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் சீரிய செயல்பாட்டில் உதித்தது.

பணியாற்றும் ஆசிரியர்களை பாராட்டும் அதிகாரிகள் ஒரு அரிய நிகழ்தகவு. கொடுத்து வைத்தவர்கள் புதுகை ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. விழா மதிய உணவுடன் ஆரம்பித்தது அமர்க்களமாய் நடந்தேறியது.

அருமையான ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். வீட்டு விசேஷம் போல கவனிப்பு! அரசு விழா ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும்தானே என்கிற அலட்சியம் இல்லாமல் பந்தியை விழுந்து விழுந்து கவனித்தவர்கள் விழாப்புரவலர்கள்.

பிரமாண்டமான விழா ஏற்பாட்டின் இடையே மழை வேறு. இயற்கை வாழ்த்தியது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். மழை மிகச் சரியாக விழா துவங்கிய பொழுது நின்று விட்டது!

விழா ஏற்பாடு செய்தவர்களின் மனஓட்டம் எப்படி இருந்திருக்கும்? ப்ரஷர் கொஞ்சம் எகிறியிருக்கும். ஆனால் விழா மிக நல்ல முறையில் நடந்தேறியது.

முதன்மைக் கல்வி அலுவலர் பேசிய பொழுது

முதலில் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. மனோகரன் வர, சில மணித்துளிகளில் பிற்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் மாண்புமிகு சுப்ரமணியன் வந்தவுடன் விழா துவங்கியது. நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள், ஆயிரம் ஆசிரியர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். 

மாவட்ட வள ஆசிரியர்களின் ஒருவனாக இருந்தததால் நூறுசத ஆசிரியர்களுடன் கலந்துகொள்ளும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்தது.
நண்பர்களோடு விழாவில் கலந்துகொண்டது ஒரு மகிழ்வான நிகழ்வு..
ஆங்கிலப் பாடத்தின் மாவட்ட வள ஆசிரியர்கள்

சரி இதனால் என்ன புண்ணியம் என்று சிலர் வினவக்கூடும்.

வேலையைத்தானே பார்த்தார்கள் அவர்களுக்கு எதற்கு பாராட்டு என்றும் சிலர் எண்ணக் கூடும்.


 அவர்களுக்காக ....

எனது சக ஆசிரியை கடந்த ஆண்டு பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். இந்த ஆண்டு கற்றல் திறன் குறைபாடு உள்ள ஒரு மாணவர் அவர் பாடத்தில் தோல்வி அடைய அவரால் நூறுசததேர்ச்சி தர முடியவில்லை.


வருகின்ற ஆண்டு கற்றல் திறன் குன்றிய இரண்டு மாணவர்கள் அவர் வகுப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியை வகுப்பறையை விட்டு வெளியே வருவதே இல்லை! இந்த ஆண்டு சொல்லி அடிக்கணும் என்கிற வெறி அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெறிக்கிறது.

விழா நூறுசத வெற்றி அடைந்துவிட்டது! சரிதானே தோழர்களே.

அடியேனும் முடிவு செய்திருக்கிறேன். எனது வகுப்பின் எல்லா மாணவர்களையும் (சிலரை மாற்று சான்றிதழ் கொடுத்து விரட்டி விடாமல்) தேர்ச்சியடைய வைக்க முடியும் என்ற  நம்பிக்கை வந்திருகிறது.

நம்பிக்கைகளைத் தந்த முதன்மைக் கல்வி அலுவலருக்கு நன்றிகள். 
விழாப் புரவலர்கள் ஒரு சத்தமில்லாத கல்விப் புரட்சியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

ஒரு முகநூல் நிலைத் தகவல் 


2004 தங்கை திருமணம்.

பத்து நெடிய வேதனை மிக்க காத்திருப்பின் ஆண்டுகளுக்குப் பின்னர்
இன்று ஒரு தேவதையைப் பெற்றிருக்கிறார். (4/7/2014).

மாப்பிள்ளை செந்திலுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
தாயும் சேயும் நலம் ..

சோதனைகள் சுழற்றி அடித்த பொழுது நமக்கு ஆறுதலாக பல நல்ல இதயங்களை அனுப்புகிறார் கடவுள்.  இப்படி எங்கள் குடும்பத்துடன் இரண்டறக் கலந்து எங்கள் சோதனைகளை அவர்களும் தாங்கி இன்றைய மகிழ்வை சாத்தியப் படுத்திய அண்ணன் ஆனந்த், அண்ணி கலா பெரியமனிதர்கள் செய்ய முடியாத உதவிகளை செய்து எங்களை நன்றிப் பெருக்கில் நனைய செய்த குட்டீஸ் பிரியா, ஸ்மார்ட் மணி இருவருக்கும் எப்படி நன்றி சொல்லப் போகிறோம் என்பதே தெரியவில்லை.

நெடுநாட்களுக்குப் பின்னர் புலம்பல்கள் இல்லமால் தூங்குவார்கள் எனது அன்னை.

பயணம், மனசு என்று பலகட்ட தாக்குதலில் கடும்சுரம் ஒன்று இப்போதுதான் விடைபெறத் துவங்கியிருகிறது என்னிடம் இருந்து.

நலம்பெற்று வருகிறேன் தோழர்களே..
மகிழ்வுடன் உங்கள் நண்பன்
கஸ்தூரி ரெங்கன்

Comments

  1. நான்தான் கலந்துகொள்ள முடியாத பாவியாயிட்டேன்... தமிழ்ப்பாடக் கையேடு தயாரித்த குழுவிற்கு வழங்கிய பரிசையும் இன்னும் நான் வாங்கல... (அன்று நம்ம தமுஎகச மாநிலச் செயற்குழு குற்றாலத்தில்...தொடர்ந்து நிகழ்ச்சிகள்....) அப்புறம்.. புதிய தேவதையின் வரவுக்கு என் வாழ்த்துகள்.. உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்குபெறுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா உங்கள் தங்கை வலைச்சர பணிக்காக எனது லாப் டாங்கில் என அனைத்தையும் சென்னை கொண்டுசென்று விட்டதால் தாமதமான
      நன்றிகள்

      Delete
  2. வணக்கம் சகோ.விழா மனநிறைவளிக்கும் ஒன்று.கள்வித்திருவிழா அல்லவா 208பள்ளிகள் 1200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்.அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும் என நினைக்கும் அதிகாரி...எல்லோரும் இப்படி இருந்தால் அரசுபள்ளியில் நிச்சயம் முன்னேற்றம் வரும் என்பது உண்மை.நீண்ட வருடங்களுக்கு பின் மருமகள்...வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நண்பரே! ஆசிரியர்களைக் குறித்த பதிவு அருமை! ஆசிரியர்கள் தான் ஒரு நல்ல மாணவ சமுதாயத்தை, மட்டுமல்ல சமுதாயத்தையும் உருவாக்குபவர்கள். ஆசிரியர்கல் பாராட்டப்படவேண்டியவர்கள்.. நன்றாகப் படிக்கும் மாணவர்களை விட, கற்றல் திறன் குறைபாடு உள்ள மாணவர்களை கற்க வைத்து வெற்றி அடையச் செய்வதுதான் ஒரு ஆசிரியரின் சாதனை! கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் மொழிக் கல்வியில் கொஞ்சம் அதிகமாகவே கஷ்டப்படுவார்கள். தங்கள் சக ஆசிரியைக்கு வாழ்த்துக்கள், தங்கள் முயற்சிக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! அது ஒரு உன்னதமான சேவையும் கூட....

    முகநூல் தகவல்... ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை எத்தனை சோதனைகள்!? நண்பர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் நலம் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தில்லையகம்

      Delete
  4. பாராட்டுக்கள் தான் மனிதனை இன்னும் நன்றாக வேலை செய்ய வைக்கும். பாராட்டுக்கள் தான் மனிதனுக்கு உற்சாக டானிக்.
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சொக்கன்

      Delete
  5. ஆசிரியப்பெருமக்களுக்கு எமது வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்

      Delete
  6. பாராட்டு எல்லா மனித மனமும் ஏங்கும் ஒன்று. கடமையை செய்தாலும் அதை பாராட்டும்போது இன்னும் சற்று ஊக்கம் கிடைக்கும்! விழா பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தான் சுரேஷ்
      நன்றி

      Delete
  7. குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் நண்பரே
    உடல் நலத்தினைக் கவனித்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா வாழ்த்துக்களுக்கு

      Delete
  8. விழா பகிர்விற்கு நன்றி. //தேர்ச்சியடைய வைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருகிறது. // வாழ்த்துக்கள்!

    உங்கள் தங்கைக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. குறிப்பாய் வாழ்த்தியதற்கு நன்றி சகோதரி..

      Delete
  9. உலகின் மிக அழகிய பணி ஆசிரிய பணி ! உங்களால் கல்வி பெறுவது குழந்தைகள் அல்ல, பல‌ தலைமுறைகள் ! நிச்சயமாய் உங்கள் முயற்சி வெற்றிபெறும்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr


    எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    ReplyDelete
    Replies
    1. வந்து படித்துவிடுகிறேன்
      வருகைக்கு நன்றி

      Delete
  10. விழாப் பகிர்வு ரசிக்கும்படி இருந்தது. மன பாரத்தை இறக்கிய பதிவு பகிர்ந்ததால் உங்களுக்கும் குறைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவரே..
      தங்கள் களஆய்வுகள் தொடரட்டும்
      வரலாற்றில் வெளிச்சம் பாயட்டும்

      Delete
  11. விரைவில் நலம் பெறுங்கள்...
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் குமார்

      Delete
  12. நன்றி கரந்தையாரே

    ReplyDelete
  13. //வேலையைத்தானே பார்த்தார்கள் அவர்களுக்கு எதற்கு பாராட்டு என்றும் சிலர் எண்ணக் கூடும். ///

    அப்படி எண்ணுபவர்கள் அல்லது அப்படி கேட்பவர்களிடம் ஒரு கேள்வி அப்படியென்றால் தமிழக முதல்வர், பிர்தமர் போன்றவர்களுக்கு பாராட்டுவிழா எதற்கு அவர்களும் அவர்களுடைய வேலையைத்தானே பார்த்தார்கள்

    ReplyDelete
  14. //வருகின்ற ஆண்டு கற்றல் திறன் குன்றிய இரண்டு மாணவர்கள் அவர் வகுப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியை வகுப்பறையை விட்டு வெளியே வருவதே இல்லை! இந்த ஆண்டு சொல்லி அடிக்கணும் என்கிற வெறி அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெறிக்கிறது. ///

    மேலே சொன்ன வரிகளில் "சொல்லி அடிக்கணும் என்கிற வெறி அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெறிக்கிறது.'' இந்தவரியை படிக்கும் போது என் மனது சிலிர்த்து எழுந்தது.....
    இப்படி ஒரு ஆசிரியர் நினைத்து செயல்படுகிறார் என்றால் அவர் தெய்வத்திற்கு சமம்தான் அந்த ஆசிரிரைஸ் சந்தித்தால் எனது வாழ்த்தையும் பாராட்டுதலையும் நேரில் எனது சார்பாக சொல்லுங்கள்,,


    இப்படி சுயனலம் கருதாமல் உழைக்கும் ஆசிரியர்களை நீங்கள் உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தி பெருமைபடித்தியது உங்களின் மிக உயர்ந்த பண்பை வெளிக்காட்டுகிறது, உங்களுக்கும் எனது மனம் கனிந்த பாராட்டுக்கள்

    ReplyDelete

  15. வணக்கம்!

    கல்வி சிறந்த தமிழ்நாடு காண்கின்றேன்!
    சொல்லிய யாவும் சுவை!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. அய்யாவின் வருகை
      அகமகிழ்வு...

      Delete

Post a Comment

வருக வருக