சில முகநூல் நிலைத்தகவல்கள்


லீலாவதி என்றோர் ஆசிரியை 

வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் வஞ்சிக்கப் பட்டவர் ...


ஒரு பெண்ணை நொறுங்கிப் போகச் செய்யும் அத்துணை வேதனைகளையும் அனுபவித்தவர் ...


அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் ஒருவேளை உறைந்து போயிருப்பேன் ... செயல்படாத ஆசிரியராக பகடி செய்யப் பட்டிருப்பேன்

ஆனால் அம்மணி மணி ஒலித்ததும் வகுப்பிற்கு போகும் வேகம் விட்டிப்பூச்சியை நினைவூட்டும் ...

இரண்டாயிரத்தி பதினேழில் பணிஓய்வு பெறப் போகும் பெருமூச்சு ஏமாற்றம் பயம் எதுவும் இல்லை இவர்களிடம் ...

எனது வகுப்பில் ஓர் மாணவன் இருந்தான்

எப்போதும் சூனியத்தை வெறிப்பான்..
அடிக்கடி காணாமல் போவான்
பின்னர் வகுப்பிற்கு வந்து ஆசிரியர்களை அதிர்ச்சியூட்டுவான் ..

காரணம் எனக்குத் தெரியும் ...
அம்மா பாதியில் மரித்து போக ஒரே அக்காவும் மரித்துப் போக அவனைக் குறித்து கவலை கொள்ள யாரும் இல்லை

அன்புத் தேவைகள், பாதுகாப்பு தேவைகள் நிறைவேறிய பின்னரே கல்வி கற்றல் சாத்தியம் ...

நான் அவன் வருவதை விரும்பினேன் ஆறுதலாக பேசினேன் எனது வகுப்பில் மட்டும் ஒளி பொருந்திய கண்களோடு அவன் ஆனால் அவனது அடிக்கடி விடுப்பு எடுக்கும் பழக்கம் மட்டும் மாறவில்லை

இங்கே தான் சகோதரி லீலாவதி என்னை கடந்தார்

ஒருமுறை ஒரு அரைக்கிலோ பட்டாணியை வாங்கி அவனுக்கே அவனுக்கு என்று கொடுக்க ... 


இப்போ பயல் ரெகுலராக வந்துகொண்டு இருக்கிறான் ...
 

நன்றி சகோதரிக்கு ...
அவன் ரெகுலராக வந்து ராக்கெட் ஒன்னும் விடப் போவதில்லை .... 

பத்தாம் வகுப்பு தேறுவானா என்பதே தெரியாது ...
இருந்தாலும் அவன் கட்டாயம் வரவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் ... 

லீலா அக்கா இருக்கும் பொழுது என்ன கவலை ...

#வகுப்பறை_தண்டனைகள்

Comments

  1. வித்தியாசமான அனுபவம்தான் உங்களுக்கு! நல்ல அனுபவமும் கூட! லீலாவதி ஆசிரியை வாழ்க வளமுடன்! நல்ல ஆசிரியை! அது சரி பட்டாணிக்கும் அந்தப் பையனுக்கும் என்ன தொடர்பு? அவனுக்கு பட்டாணி என்றால் மிகவும் பிடிக்குமா?

    அன்புத் தேவைகள், பாதுகாப்பு தேவைகள் நிறைவேறிய பின்னரே கல்வி கற்றல் சாத்தியம் ... // ஆம் எல்லாக் குழந்தைகளுக்குமே இது பொருந்தும்! மனம் சந்தோஷமாகத் தெளிவாக இருந்தால்தான் கல்வி கர்றல் எளிது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா...

      Delete
  2. நெஞ்சை தொ(சு)ட்டது வார்த்தைகள்.

    ReplyDelete
  3. மாற்றம் வரலாம்...! வரும்...

    ReplyDelete
  4. பட்டாணியில் மறைந்து இருக்கும் அன்பு அவனை பள்ளிக்கு வரவழைத்து விட்டதே ! இதுதான் லீலா அக்காவின்
    லீலையோ?
    த ம 4

    ReplyDelete
  5. ஆரம்பத்தில் கட்டாயம் என்று வந்தாலும் வகுப்பில் தங்க, தங்க அவனுக்கு நிச்சயம் படிப்பில் ஆர்வம் வரும். நீங்கள் அவனது சூழ்நிலையையும் குறிப்பிட்டதால் சொல்கிறேன்... இப்போது அவனுக்கு தேவை ஆதரவு ! அந்த ஆதரவுக்கு நிச்சய்ம் நன்றியுள்ளவனாக இருப்பான் அந்த மாணவன். உங்களை போன்ற, லீலாவதியை போன்ற ஆசிரியர்களிடம் கல்வி கற்கும் பாக்கியம் பெற்றவன் நிச்சயம் தேறுவான்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogaspot.fr

    எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    ReplyDelete
  6. ரொம்ப சீரியஸான பதிவா எழுதிட்டு இருக்கீங்க, மது. நீங்களும் சீரியஸான ஆளா? இல்லை சாரோ? :) கஷ்டப்படும் ஏழை மாணவர்கள் பற்றி- கண் முன்னால் தெரியும்படி எழுதுறீங்க. அந்த லீலா டீச்சருக்கு அப்படி என்ன கஷ்டம்னு தெரியலை. யூகிக்க முடியலை. அவங்க பர்சனல் மேட்டர், சரி விட்டுடுவோம். கஷ்டப்படுறவங்களுக்குத்தான் அடுத்தவங்க கஷ்டம் தெரியுமாம்.

    வம்புப் பின்னூட்டமிடும் என்னைப்போல் ஆட்களெல்லாம், செருப்பை கழட்டி வைத்துவிட்டு தளத்திற்குள்ளே வரவேண்டும் போல் ஒரு உணர்வு உண்டாகுது. அதான் நான் கோயிலுக்கெல்லாம் போவதில்லை. :)

    ஆமா உங்க பெயரே மதுதானா? அப்போ கஸ்தூரி ரங்கன் என்பது உங்க அகத்துக்காரம்மா அப்பா பெயரானு என்னனு தெரியலை.

    இன்னும் உங்க தளம் எனக்கு பரிச்சயம் ஆகவில்லை. அதனால பின்னூட்டம்னு என்ன எழுதுறதுனு சரியாத் தெரியலை. :)

    மறுபடியும் வருவேன். :)

    ReplyDelete
  7. வணக்கம்

    அன்பும் பாசமும் அரவனைப்பும் எங்கே இருக்கே அங்குதான் நல்ல பண்பாடு இருக்கும் என்பது போலதான்... நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
    த.ம 5வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. தங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துகிறேன்
    தம 6

    ReplyDelete


  9. உதடுகளில் இருந்து அல்ல இதயத்திலிருந்து சொல்லி தரவிழைபவனே நல்லாசிரியர். அப்படி பட்ட நல்லாசிரிர்களை உங்களின் மூலம் அறிகிறேன். பாராட்டுக்கள் கஸ்தூரி ரங்கன்

    ReplyDelete
  10. ஒரு சில ஆசிரியர்கள் அம்மாதிரியான மாணவர்கள், பள்ளிக்கு வராமல் இருந்தாலே பரவாயில்லை என்று எண்ணுவார்கள், ஆனால் தங்கள் அம்மாதிரி இல்லாமல், அவன் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் பாருங்கள் அங்கே தெரிகிறது தங்களின் நல்லாசிரியப் பணி.

    தொடரட்டும் தங்களது இந்த நல்லாசிரியர் பணி.

    ReplyDelete
  11. பட்டால் திருந்துவான் என்று விட்டுவிடாமல் பட்டானியாலும் திருத்த முடியும் என்று நிரூபணம் செய்திருக்கிறார்... நன்றிகள் பல...

    ReplyDelete
  12. சகோதரா மனம் நெகிழ்ந்து போனது. அன்பும் ஆதரவும் எவ்வளவு இம்போர்டன்ட் எல்லோருக்கும் அது அற்றவர்களுக்கு இன்னமும் கொடுமை தான் அதை உணர்ந்து அவர்கள் எதிர்பார்ப்பையும் ஆதங்கத்தையும் கண்டறிந்து செயல் பட்டால். ஒவ்வொருவரையும் வெற்றியடைய வைக்கலாம் என்பதை இப் பதிவு அனைவருக்கும் உணரவைக்கும் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி ! வாழ்த்துக்கள்....! சகோ !

    ReplyDelete

Post a Comment

வருக வருக