கொஞ்சம் நுட்பம், கொஞ்சம் கவிதை, கொஞ்சம் முகநூல்

ஒரு எளிய பதிவு நுட்பம்

தமிழ் பதிவர்களின் பதிவுகள் பெரும்பாலும் www.nameofblog.blogspot.com/blog_post20.html என்றுதான் இருக்கும். முதலில் இருக்கும்

www.nameofblog.blogspot.com/ என்பது உங்கள் முகவரி.



பின்னர் வருவது பதிவின் முகவரி, இங்கே அது   blog_post20.html.

இப்படி வருவது கூகிள் ஆண்டவருக்கு பிடிக்காது. அதற்கு பதில் அந்தப் பதிவின் தலைப்பை தமிழில் தட்டிய உடன் ஆங்கிலத்திலும் தட்டிவிட்டால் பதிவின் முகவரி சரியாக உருவாகும்.

நீங்கள் மழையை பற்றிய ஒரு கவிதையைப் பதிவிட்டால் தலைப்பில் மழை என்று தமிழில் மட்டும் தட்டினால் ப்ளாக் போஸ்ட் என்றுமட்டுமே ஹெச் டி எம் எல் முகவரி உருவாகும்.

ஆனால் தமிழைத் தொடர்ந்து மழை mazhai என்று தட்டி பப்ளிஷ் செய்தால் உங்கள் பதிவின் முகவரி mazhai.html என்று உருவாகும்.

சரி இதனால் என்ன லாபம்.

கூகிளார் மழை என்று யார் தேடினாலும் நமது பதிவையும் காண்பிப்பார். அவ்வளவே.

இதை பெர்மாலிங்க் மூலமும் செய்யலாம்.

ஆனால் மேல்குறிப்பிட முறை கொஞ்சம் எளிது. ஆனால் தலைப்போடு ஆங்கில வார்த்தையும் இருக்கும்.

தலைப்போடு இருக்கும் ஆங்கில வார்த்தையை பிடிக்காதவர்கள் இதை ஒரு முறை எடிட் செய்து அழித்துக் கொள்ளலாம். மீண்டும் அப்டேட் கொடுத்தால் தமிழ் எழுத்துக்கள் மட்டும் தலைப்பில் இருக்கும்.

கவனமாக எடிட் செய்யுங்கள். ரிவர்ட் செய்தால் ஹெச். டி. எம்.எல். கோப்பு அழிந்துவிடும். ரிவர்ட் செய்யக்கூடாது. எடிட் மட்டுமே செய்ய வேண்டும். கவனம் தேவை.

ஒரு கவிதை 

ராசுவின் இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

 உங்களுக்கு ?









உடல் பாகமெங்கும் 
யோனி தேடியலைந்த 
குறி நீண்ட கண்களையும் 
பேருந்து
நெரிசல் சாக்கில் 
தடவலிலும் தீண்டலிலும் 
புனர்ச்சி சுகம் பெற்று 
மீண்டும் ஒரு வாய்ப்பு தேடி 
பிறிதொரு இடம் நகர்ந்த 
வன்கரங்களையும் 

சொல்லும் வழியறியாது
வார்த்தை திக்கி
நான் நிற்கையில்
என் கணவா...

அலுவலக அழைப்பொன்றை
உன் செவித்திறன் எல்லை தாண்டி
பேசிய என் ஊமை உரையாடல்களுக்கு
பொருள் வினவ நீயும் நிற்கிறாய்
சந்தேகம் மறைத்த
சாமர்த்திய புன்னகையோடு
வார்த்தை கிடைக்காமல் .

விட்டு விடலாம் !

இரண்டுமே
தீரப்போவதில்லை எனும் போது
அதைத்தான் செய்ய முடியும் .

https://www.facebook.com/rasu.rasu.56


எனது முகநூல் பதிவொன்று 


ஆயிட்டு அறுபத்தி எட்டு வருஷம் .. 
இன்னும் பள்ளியை விட்டு ஓடிப்போகின்றன குழந்தைகள்.
இன்னும் வறுமைக்கு பலியாகிறது பெண்குழந்தைகளின் கல்வி.
இன்னும் எங்கள் பகுதியில் பேருந்துகளின் கூரைப் பயணங்களை பார்க்க முடிகிறது.
இன்னும் இருக்கிறது சா"தீ" உணர்வு. 
இன்னுமோர் ஆயிரம் இல்லைகள் வந்தாலும்..
நம்பிக்கைகளை தரும் தினம் இன்று 
விடுதலைநாள் விழா வாழ்த்துக்கள் தோழர்களே ...


இரண்டு 


முன்னாள் மாணவர்களோடு நட்போடு இருப்பது எனக்கு பல அனுகூலங்களைத் தந்திருக்கிறது. 

குறிப்பாக அவர்கள் பளிச்சென இன்றைய டிரண்டை சொல்லிவிடுவார்கள். 

மாணவர்கள் எப்படி ஒரு விஷத்தை அணுகுகிறார்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பதை தயக்கங்கள் இல்லாமல் சொல்லக்கூடியவர்கள். 

இதைவிட ஒரு படி மேலே அவர்கள் எமது பள்ளிக்கு பலவிதத்தில் உதவியிருக்கிறார்கள். 

முதல் முறை பள்ளிக் கணினிகளை வலையமைப்பு செய்த De'nsh MKRusso Ponnusamy

பள்ளிக்கு பலமுறை புத்தகங்களை மேசைகளை வழங்கிய Praveen Kumar

நூலக புத்தகங்கள் சேதமுற அவற்றை மாற்றித் தந்த Saathik Ali Raja Dravidan

நாளைய விழாவிற்கு புத்தகங்களைப் பரிசுப் பொருட்களாக வாங்கித் தந்த Anna Malai

இது ஒரு முடிவுறாப் பட்டியல்
அனைவருக்கும்
நன்றி நன்றி நன்றி

Comments

  1. தங்களின் முன்னாள் மணவர்களின் செயல்பாடு போற்றுதலுக்கு உரியது
    பாராட்டுவோம்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகை விரைவு
      நான் பின்பற்ற வேண்டிய பாடம்

      Delete
  2. பகிர்ந்த கவிதை பிடித்திருக்கின்றது!

    தங்கள் முக நூல் பதிவில் நம் நாட்டின் யதார்த்தத்தம் அப்பட்டம்.
    தங்கள் மாணவர்களின் சேவை மிகவும் பாராட்டபட வெண்டிய ஒன்று! அந்த மாணவர்களுக்கும், இனியும் பள்ளிக்கு உதவ இருக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. டிப்ஸுக்கு நன்றி! கவிதைகள் இரண்டும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete

Post a Comment

வருக வருக