ஆம் இன்னொரு கொசுவத்திதான்

எதற்காக நின்றேன் ஏன் நின்றேன் என்று நினைவில்லை. ஆனால் அந்தப் பெண்ணை நினைவில் இருக்கிறது. இழுப்பூரில் நான் ஒரு மின்கம்பத்தின் அருகே நின்றுகொண்டிருந்தேன். 

அப்போதுதான் அவளைப் பார்த்தேன். எனது மாணவிகளில் ஒருத்தி. அப்போதுதான் பத்தாம் வகுப்பு முடித்தவள். பதினோராம் வகுப்பில் இருக்கவேண்டும். 

என்னைப் பார்த்ததும் வணக்கம் சொன்னாள். அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவள் என் வகுப்பில் படிக்கும் பொழுது மரியாதையை வெளிக்காட்டியதில்லை. நன்கு படிக்க கூடிய மாணவிகளில் ஒருத்தியாக இருந்தாலும் என்னை வெகு கவனமாக தவிர்த்தவள். ஆங்கில ஆசிரியர்களுக்கே உள்ள சாபம், நம்ம பாடம் அப்படி என்று நானும் கண்டுகொண்டதில்லை.

எனவே வணக்கம் தெரிவித்தது எனக்கு வியப்பாக இருந்தது. ஏதோ சொல்ல வந்தாள். அவள் வயோதிக அப்பா மிக மெதுவாக சாலையின் கடைசியில் இருந்து நடந்து வந்துகொண்டிருந்தார். ஒரு வெற்றுச் சிரிப்புடன் எங்களைக் கடந்தார்.

சார் அப்பா சார். என்றாள்.

வணக்கம் ஐயா என்றேன். வயோதிகத்தின் பிரத்தியோக சலுகைகளில் ஒன்றான சிறு தலையசைப்புடன் கூடிய வறட்டு சிரிப்புடன் வேறு ஒன்றும் சொல்லாமல் நகர்ந்தார்.

அதற்கு மேல் அவளுடன் நடுரோட்டில் என்ன பேசுவது? சரிம்மா நீ அப்போவோட போ. என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

இருந்தும் எனது மரமண்டையில் ஏதோ நம நம என்றது. படிக்கும் பொழுது எந்தவிதத்திலும் ஒரு ஆசிரியரைக் கண்டுகொள்ளாத பெண் எதற்கு படிப்பு முடிந்தவுடன் நடு ரோட்டில் அதே ஆசிரியரிடம் அவன் கிஞ்சிற்றும் எதிர்பாரா மரியாதையைத் தரவேண்டும்?

புதிதாக பிறந்த பாதிக் கண்திறந்த நாய்குட்டியாட்டம் ஏன் அப்படி முழித்துக் கொண்டு நின்றாள்?

என்ன சொல்ல விரும்பினாள்?

சில வாரங்கள் கழித்து எங்கள் பள்ளிக் கணித ஆசிரியர் சகோதரர் செல்வராஜ்சொன்னவுடன்தான் என் மரமண்டைக்கு உரைத்தது.

தம்பி நம்ம சல்மா (பேர் மாத்தீட்டேன்) அவ்வளோ அருமையாக கணக்கு போடுவாப்பா. அவங்க அப்பா படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லீட்டாராம்!

எனக்குப் புரிந்தது. பள்ளியின் பிள்ளை பிடிக்கும் பணி எனக்கு தந்திருந்த பிம்பம் அது. என்னை ஒரு மீட்பனாக நினைத்திருக்கிறாள்! அவளுக்கு கல்வி மறுக்கப்பட்டது பற்றிய தகவல் என்னை எட்டியிருக்கும் என நினைத்திருக்கிறாள்.

ஒரு கணித ஆசிரியர் கிட்டத்தட்ட கண்ணீர்விட்டு அழும் நிலையில் இருந்தார் என்றால் அவள் கணிதத்திறன் எப்படி இருந்திருக்கும்?

அப்பாவோடு போ~!

நான் அறியாமலே அவளை சிலுவையில் அறைந்துவிட்டேன்.
வேறு என்ன சொல்வது.

இழுப்பூரில் நான் அவளைப் பார்த்ததுதான் கடைசி. இன்னொரு கிராமத்திற்கு நகர்ந்துவிட்டது அவள் குடும்பம். எனது தொடர்பெல்லைக்கு வெளியே.

தெரிந்தோ தெரியாமலோ செய்கிற பாவம் என்று சொல்வார்களே அது இதுதான் என்று நினைக்கிறேன்.

பள்ளியை விட்டு விடுதலையானவர்கள் குறித்த நினவுகள் இன்னும் தொடரும் ...

Comments

  1. சில தயக்கங்கள் இப்படித்தான் எதிர்மறையாகி விடுகின்றது!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்

      Delete
  2. கிடைத்த கடைசி வாய்ப்பும் தவறிப்போய்விட்டதே..!

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரி...

      நினைவில் உறுத்திய தவறவிட்ட பல வாய்ப்புகளில் ஒன்றுதான் இது..

      நன்றி

      Delete
  3. **எதற்காக நின்றேன் ஏன் நின்றேன் என்று நினைவில்லை** எதற்காக ஏன்னு யோசுச்கிட்டு அப்புறம் எனக்கு மட்டும் சொல்லங்க பாஸ்:)
    பத்து இருபது வருடம் கழித்து சந்திக்கிற மாணவர்களை கூட அத்தனை விரிவாய் விசாரிக்கும் உங்கள் பாணி அன்று அவள் வைத்த அந்த வணக்கத்தால் மறந்து போயிருக்கிறது:(
    எல்லா சிலுவைகளையும் நாமே சுமக்க முடியாது. வருத்தத்தை விடுத்து அந்த பாடத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள நான் சொல்லவேண்டியதில்லை தான். என்றாலும் மற்றொரு விஷயம் இந்த பதிவில் என் கவனத்தை கவர்ந்திருக்கிறது!!!! அது மேலும் செழுமை பெற்று, கொஞ்சம் புதுமையும் பெற்றிருக்கும் உங்கள் நடை:) (வீட்டுக்குள்ளேயே இவ்ளோ டப் காம்பட்டீன்சன் இருந்த எப்பிடி பாஸ் முடியும்..அஆவ்வ்வ் )

    ReplyDelete
    Replies
    1. யாருடைய வாகனத்திற்காவோ நின்றதாகத்தான் நினைவு..

      Delete
    2. சபாஷ்! சரியான போட்டி! :)

      Delete
  4. Anonymous24/8/14

    தவறவிட்ட அந்த தருணம் இன்றும் நினைவில் இருப்பதே பெரிய விசயம் தான் ஐயா !! உங்கள் போன்ற ஆசிரியர்கள் எல்லா ஊர்களிலும் இருந்திருந்தால் பல மாணவர்களின் கனவு வாழ்க்கை நனவாகி இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்களை ரிசல்டுக்காக அதீதமாக அழுத்தவில்லை என்றால் இது சாத்தியமே..

      Delete
  5. இதில் தாங்கள் வருத்தப்பட ஏதுமில்லை நண்பரே
    சில மாணவ மாணவியர் இப்படித்தான் வாய்திறந்த பேச
    தயங்குவார்கள். அவர்கள் பேசினால்தானே அவர்களின் துயரங்களைத் தெரிந்து கொள்ள முடியும், துயரில் இருந்து வெளிவர வழி காட்ட முடியும்

    ReplyDelete
    Replies
    1. எப்படி இப்படி அசராது கமெண்ட்ஸ் ...
      பெரிய விசயமாக இருக்கிறது எனக்கு
      ஒரு வலைபூக்காரர் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கிறீர்கள்.
      நானும்தான் இருக்கேன்...

      Delete
  6. பாவம்... வெளியில் சொல்ல முடியாத தயக்கம்...
    படிக்க முடியாத நிலை...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நான் தெரிந்து வைத்திருப்பேன் என்பது அந்தப் பெண்ணின் நம்பிக்கை..

      ஆனால் எல்லா விசயத்தையும் நான் அறிந்து வைத்துக்கொள்ள முடியாது என்பதை புரிந்துகொள்ளவில்லை ..

      Delete
  7. நான் அவள் படிக்க உதவி செய்தேன். என்றெல்லாம் கூறாமல் யதார்த்தத்தை பதிவு செய்தது பாராட்டுக்குரியது.
    நாம் ஏதாவது செய்திருக்க வேண்டுமோ என்ற குற்ற உணர்வு டன் அழுத்தமாகவே சொல்லி இருகிறீர்கள்
    உண்மையில் M க்கு K.R டஃப் காம்பெடிஷன்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆகா ... வாருங்கள் அய்யா நலம்தானே ..?
      நான் எழுதுவதில்தான் எம்குக்கு போட்டி
      எம் மாதிரி ஆசிரியராக நான் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்பதே உண்மை..
      எம் எனது ஆதர்ச ஆசிரியர்களில் ஒருவர்...

      Delete
  8. வணக்கம் வைத்தவள் ஒரு வார்த்தை அப்பாவிடம் படிக்க வைக்கச் சொல்லுங்கள் சார் என்று சொல்லியிருந்தால் கட்டாயம் முயற்சி செய்து இருப்பீர்கள், உங்கள் மேல் தவறொன்றும் இல்லை..

    ReplyDelete
    Replies
    1. உணமைதான் சொல்லி புரியவைக்க முடியமல் போயிருந்தால் கூட வருதப்பட்டிருக்க மாட்டேன் ...
      முயற்சிக்க கூட ஒரு வாய்ப்பு இல்லாமல் போனதுதான் வலி

      Delete
  9. மது சார்! ஏன் வீண் வருத்தம்? பொதுவாக பல மாணவ, மாணவிகள் தற்போது கம்யூனிக்கேஷனின்ல வீக்காகத்தான் இருக்காங்க....மாணவி வாயைத் திறந்திருந்தால் நீங்கள் உதவாமலா போயிருப்பீர்கள்?! அவரை வேறு எந்த மர்கத்திலாவதுத் தொடர்பு கொள்ள முடியுமா என்று முயற்சி செய்யுங்கள். தங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். இது பிடிப்போர் என்று சொல்லுவதை விட நீங்கள் ஒரு குழந்தையின் வாழ்வில் கல்வி எனும் எதிர்கால வெளிச்சம் ஏற்றுகின்றீர்கள் என்பதுதான் எங்கள் தாழ்மையான கருத்து!

    அது சரி வீட்டில் போட்டி பலமா இருக்கு போல?!!!!ஹாஹ்ஹ...

    ReplyDelete
    Replies
    1. அது சில ஆண்டுகளுக்கு முன்னர்.
      இந்நேரம் அந்தப் பெண் ஒரு இல்லத் தலைவியாக இருப்பாள் ...
      வருண் சொன்னது போல் நல்ல தலைவியாகத்தான் ...
      என்ன அவள் குழந்தைகள் எக்காரணம் கொண்டும் பள்ளியை விட்டு நிற்காது நடு ரோட்டில் ஆசிரியரை பார்த்துத் தேம்பாது

      Delete
  10. தோழர்,
    கொசுவத்திப் புகையில் கண்கலங்குகிறதே!
    மீட்பனாக நினைத்திருந்தால் “ கேளுங்கள் தரப்படும் “ என்பதை நினைத்திருக்கலாம்.
    வழிதவறிப்போன ( வலிந்து இழுத்துப்போன ?) ஒரு ஆட்டுக்குட்டிக்காக மந்தையை விட்டு அந்த ஒற்றை ஆட்டைத் தேடி வரும் மேய்ப்பனாக நினைத்திருப்பாளோ உங்களை?

    காப்பாற்ற வாய்ப்பிருந்தும் மீட்க முடியாத இறப்பின் தருணங்களை எண்ணுவது வேதனைதான்!
    பள்ளிப்பருவத்தில் உங்களை அறியாமல் தவிர்ப்பின் சிலுவையில் அறைந்த தருணங்களின் விளைவுதான்
    “ அப்பாவோடு போ“
    என்று நீங்கள் சொன்னது ,
    என்று அந்தச் சிறுமி எங்கோ இருந்து இன்னும் நினைத்துக் கொண்டிருக்கக் கூடுமோ?
    இப்பொழுதும் உங்களை அறியாமல்......?

    ReplyDelete
    Replies
    1. இந்தியா ஒளிர்கிறது தோழர் ....
      வேறு என்ன ம***த சொல்ல..

      Delete
  11. I understand how you feel..You must believe me here, K R!

    என்ன? அப்பா படிக்க வைக்கவில்லை. நிறுத்திவிட்டார். அவர்களுடைய சூழல் அப்படி. கலாச்சாரமோ இல்லை பணப்பிரச்சினையோ..ஏதோ ஒண்ணு அல்லது ரெண்டும்

    என் அம்மாவையும் அந்தக்காலத்தில் எஸ் எஸ் எல் சி க்கு அப்புறம் படிக்க வைக்கவில்லை. ரொம்ப நல்லாத்தான் படிச்சாங்களாம். என்னைவிட பலமடங்கு நல்லா. :) அவங்க தந்தை சொல்படி கேட்டு இருப்பார்கள். அப்பானா மரியாதை. அவர் எல்லாம் நல்லதுக்குத்தான் செய்வார்னு நம்பிக்கை. ஆனால் படிக்காததாலே அவங்க வாழ்வில் அவர்கள் வீண் போனதாக நான் நினைக்கவில்லை.

    ஒரு வேலைக்குப் போகும் தாய் செலவழிக்கும் நேரத்தைவிட பலமடங்க்கு எங்களுக்கு அவர்கள் எந்நேரமும் கிடைத்தார்கள். எங்களுக்கு நல்ல சமையல் சமித்துப்போட்டது மட்டுமன்றி, நல்ல மாரல்ஸ் கற்றுக்கொடுத்தார்கள். ஏழையாக நாங்க இருந்தாலும் உளவியலாக எவ்வித பயமும் இல்லாமல் நாங்கள் வளர்ந்தோம். எங்களோட அதிக நேரம் செலவழித்தார்கள். உலகுக்கு உதவிசெய்து காந்திபோல் கொலை செய்யப்பட்டு சாகாமல், பலரிடம் கெட்டபேர் பெறாமல் இன்றும் நன்றியுடன் இருக்கு எங்களுக்கு உதவி ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல அம்மா பட்டம் பெற்றார்கள்! :)

    I strongly believe studies are not everything. Did not Kamaraj make a difference without education???

    I know..There are people who loved chemistry and physics and science earned a PhD in that subject but later they quit science. Today they did do some SAP course to get a pay check to pay their bills! They left the Science which they loved once! Their parents did not ask them to quit here! They can not blame their father or mother for quitting the subject they loved. They did it for MONEY and to make their living! They might not enjoy the job they are doing today. So, life goes on like that. We all sacrifice our life for others one time or other. So we all have to quit something we love one day or other just like the girl who quit her 11th grade.

    Let us not forget. She is very young. This is not the end of her world. She can study later if she wishes. For now, she will use her skills elsewhere just like my mom did after she quit to satisfy her dad's wish . She will make a difference in others' life in the future if she is really good and skillful! :)

    I dont think education is the only path to grow intellectually and for living a happy life! Don't we see highly educated morons in our day to day life??
    I believe she made her dad happy by quitting at least. Let me wish her good luck! :)

    ReplyDelete
    Replies
    1. அட இது கூட ஒரு வித்தியாசமான சிந்தனைதான்......ரொம்பவே சிந்திக்க வைக்கின்றது! படிக்காத மேதைகள் உருவானதில்லையா என்ற கேள்வி எழுகின்றது. அந்த மாணவியும் நினைத்தால் பள்ளி செல்லாமலேயே ஒரு மேதையாக உருவாம முடியுமோ?!!

      Varun your reply paves way to a wide and broad thinking....it may be possible in a country where you live. but is it possible in india where even erudite people are not recognized and people even with a degree certificate is not able to find a job? very few like kamaraj have made it. as you say we fully agree that education is the only path to grow intellectually and for a happy life....and all those who are highly educated donot get what they want.....

      என்றாலும் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்புதானே...இங்கு கற்றோர்க்கு என்று சொல்லுவது ஏட்டுப் படிப்பை அல்ல....அறிவுச் செறிவு....அந்த அறிவுச் செறிவுக்கு வழி உண்டா மது சார் குறிப்பிட்டது போல உள்ள, இது போன்ற மாணவிகளுக்கு? அந்தச் சூழ்நிலை உண்டா? ஒரு சில சமூகத்தினர்க்கு மட்டுமே பள்ளி செல்லாவிட்டாலும் அறிவு கிடைக்க வழி உள்ளது. எல்லா சமூகத்தினருக்கும் அல்ல.....இல்லையா?

      Delete
    2. இன்றைய சூழலில் ஒரு கிராமத்துப் பெண் குழந்தை கல்வி மறுக்கப் பட்டால் வாழ்வு மறுக்கப்பட்டதாகத்தான் உணர்கிறேன்.

      பொறுப்பான பெண்தான் அவள். நல்ல இருப்பாள் விடுங்க ...

      Delete
    3. புத்லி பாய் என்ன படித்தார் என்று தெரியாது. ஆனால் சிலவேளை சந்திரன் விரதம் இருந்தால் சந்திரனை பார்க்கவிட்டால் இன்னொரு நாட்களுக்கு தொடருமாம் கொலைப்பட்னி. (விரதம்)...(காந்தியார் எங்கிருந்து உன்ணாவிரதத்திர்க்கான வலிமையை பெற்றார் என்று புரிகிறதா)
      இப்படி படிக்காத குடும்ப விளக்குகள் ஏற்றி வைத்த ஜோதிகள் உலகை வெளிச்சப் படுதியிருகின்றன.
      நம்ம பெண்ணும் அவர்களில் ஒரு குடும்ப விளக்காகத் தான் இருப்பாள் ... விடுங்க .

      Delete
  12. திரு. துளசிதரன்,

    முகுந்த் அம்மானு ஒரு பதிவர் இருக்காங்க. அவர்கள் ஒரு பதிவில் சொன்னது.. அவங்க அப்பாவும் இதேபோல்தானாம். பெண்கள் படிக்கக்கூடாதென்று நம்புபவராம். ஆனால் தன் மகள், அவள் படிப்பு என்று வந்தபோது தன் பிடிவாதத்தை மகள் விருப்பத்தை மதித்து தளர்த்திக்கொண்டாராம். இப்போ அவர் பி எச் டி முடித்து அமெரிக்காவில் ஆராய்ச்சி நிபுணராக இருக்கிறார். இதுபோல் நம்மில் சில தந்தைகள் இருக்காங்க. ஆனால் அவர்கள் அரிது.

    பொதுவாக நம் கலாச்சாரத்தில் பெரியவர்களை மதிக்கணும், பெரியவர்களுக்கு எது சரி எது தவறென்று தெரியும் என்பதுதான் வேரூண்றி இருக்கு. அதை எதிர்ப்பது பண்பற்ற செயல்னு நாம் நம்புகிறோம். இதை நீங்க பதிவுலகில்கூடப் பார்க்கலாம். பெரியவர்கள் தவறை சுட்டிக்காட்டுவதுகூட தவறென்றுதான் கருதப்படுகிறது.

    இந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் சின்னவர்களைஎன்றுமே பெரியவர்களாக விடுவதில்லை- சினிமா வசனம்- படம் வசந்த மாளிகை!
    ---------------------------
    தந்தை பெரியார் சொல்லுவாராம்.. பிள்ளைகள் தன் தாய் தந்தை சொல்படி நடக்கணும், அது எப்போதென்றால்..தாய் தந்தையர் குழந்தைகளைவிட புத்திசாலியாக இருந்தால் மட்டுமே! என்று. பெரியவர்கள் குழந்தைகளைவிட புத்திசாலியாக இல்லை என்றால், அவர்களை எதிர்த்து முடிவு எடுக்கணும் என்று. பெரியார் என்றாலே விதண்டாவாதம், கெட்ட வார்த்தை ஆக்கிவிட்டார்கள் இன்றைய ஆச்சார புருஷர்கள். ஆனால் பெரியார் சொன்னது இது போல் ஒரு சூழலை உணர்ந்துதான். 10ம் வகுப்பே படித்த அனுபவம் குறைந்த மகளுக்கு படிப்பு முக்கியம் என்று தெரிகிறது. வயதில் மூத்த தந்தைக்குத் தெரியவில்லை! பெரியார் சொன்னதுபோல் செய்து விதண்டாவாதப் பட்டம் பெறாமல் தந்தை மனம் கோணாமல் பண்புடன் நடந்துகொள்கிறாள் மகள்! பெரியவர்களை திருத்துவது கஷ்டம். அதனால அவர்கள் சொல்ப்படி நடந்து பெரியவர்களாகிறார்கள் இதுபோல் சிறுமிகள்..

    இப்படிப் பேசிக்கொண்டே போகலாம். ஆனால், it is sort of a personal issue between a daughter and father. I dont think we can cross the line here. Neither can we advise the dad about what is good for his daughter. We can only suggest him. I think some of her relatives/friends might have suggested him "not to stop her from studying". The father might not have listened to them. yeah our fate is written based on our parents to some extent.

    It is not just in our culture. i tis happening in west too. here is a case I came across in US.

    என்னுடைய கலீக் ஒருத்தி இருக்கிறாள். அவள் அம்மா மணமான இன்னொருவருடன் உறவு வைத்து இவளை ஈன்றெடுத்து இருக்கிறாள். She knew what she was doing. She wanted a child and had an affair with a married guy and brought her to this world. இவளுக்கும் இவள் அப்பாவுக்கும் எந்த உறவுமே இல்லை. Her dad lives somewhere. இவள் அம்மா தெரிந்தே செய்த "தவறு" இது. Her mom brought her up without a dad ...

    and my colleague is doing fine now. But sometimes she says that she did not come from a"normal family" and she does not have a "dad" just like others.She gets depressed when she says that. She managed fine. But I am sure, she has been psychologically affected by this kind of "birth". My question is It is her mom who decided that her child does not need to have father or a normal family. Her mom wrote her "fate" or "thalai ezuththu"!

    I think my colleague deserves a dad just like others. Can I get her one? I can only feel sorry for her. That's all. We can not fix so many problems in the world. We can only learn to live with it or not?

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒரு பர்சனல் இஷ்யுதான்

      மேலே மேல படித்தால் மாப்பிள்ளை கிடைக்காது ...
      கிடைத்தாலும் சீர்முறை செய்ய முடியாது

      எங்கள் பள்ளி பெண்கள் அனைவருக்கும் இது ஒன்று தான் பிரச்னை

      அதற்கு மேல் அதில் ஆசிரியர் தலையிட முடியாது...

      Delete

Post a Comment

வருக வருக