நேற்று இங்கிலீஷ் இஸ் பன் என்கிற முகநூல் பக்கம்
போனேன். ராபின் வில்லியம்ஸ் சொன்ன சில வார்த்தைகளை அவர் புகைப்படத்தில்
போட்டு ஒரு ஸ்டேட்ஸ் இருக்க நான் வெகு எளிதாக கடந்தேன்.
இன்று காலைதான் விசயம் தெரிந்தது.
இன்று காலைதான் விசயம் தெரிந்தது.
தற்கொலை ?
பொதுவாக திரை நட்சத்திர ஆராதனைகளை வெறுப்பவன் நான். இருந்தாலும் கேவிக் கதறி அழவேண்டும் போல உணர்ந்தேன். என்னுடைய பல பொழுதுகளை மகிழ்வான அனுபவமாக மாற்றிய மாபெரும் கலைஞன் அவன். உன் சாவை என்னைப் பார்க்க வைத்துட்டீயே என்கிற மானசீக அரட்டல் நாள் முழுதும் தொடர்ந்தது.
மிசஸ். டவுட் பயர்(ஔவை சண்முகி), ஜுமாஞ்சி, பைசென்டினல் மேன்(எந்திரன்), பாட்ச் ஆடம்ஸ்(வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்) என்னொரு வெற்றிப்பட வரிசை அது.
ப்ளப்பரில் அசாத்திய அசத்து மறக்க முடியுமா?
டெட் போயட் சொசைடியில் ஒரு ஆங்கில ஆசிரியராக அசத்தியிருப்பார்.
இதெல்லாம் தாண்டி ஒரு மிக நல்ல மனிதர். நிறைய நல்ல காரியங்களுக்கு நிதிஉதவி.
சக நடிகர் சூப்பர் மேன் கிறிஸ்டபர் ரீவ் ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த பொழுது ஒரு கோமாளி வேஷத்தில் அவரை மருத்துவமனையில் சந்தித்து உற்சாகப்படுத்தியவர்.
தனது முதல் திருமண முறிவுகளுக்கு (2) பணம் கொடுத்து நொடித்துப் போனதாக சொல்கின்றன இணைய செய்திகள். தொடர் மன அழுத்தம் ஒரு காரணம். செலவுகளை சமாளிக்க டி.வி வாய்ப்புகளை பயன்படுத்தினார்.
உலகையே நகைச்சுவையால் அடிமைப்படுத்திய ஒருவரது மரணம் இப்படி துன்பியல் நிகழ்வாக இருந்திருக்கக் கூடாது.
வாழ்க்கை ரொம்பவே விநோதமானதுதான்.
வணக்கம்
ReplyDeleteஅறியாத தகவலை அறியத்தந்தமைக்கு பாராட்டுக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இவ்வளவு விரைவு ...
Deleteநன்றி தோழர்
கமலஹாசன் காப்பியடித்த அவ்வை ஷண்முகி படத்தை பார்த்தாராம் ராபின். அதன் பின் தற்கொலை செய்துகொண்டாராம். இப்படி சிலர் சொல்கிறார்கள். உண்மையாக இருக்குமோ?
ReplyDeleteரொம்பத்தான் குசும்பு..
Deleteவருகைக்கு நன்றி
நடிகர்களின் சிரிப்பின் பின் இருக்கும் சோகம் தெரிவதில்லை..வாழ்க்கை விநோதமானதுதான்.
ReplyDeleteRIP Robin Williams
நன்றி சகோதரி
Deleteதுன்பகரமான விடயம் அத்தனை துக்கத்தோடு பகிர்ந்தமை பாராட்டுக்குரியது. நானும் அறிவேன் அந்தப் படங்கள் நானும் பார்த்துள்ளேன். திறமையான நகைச்சுவை நடிகர் ஒருவரை இழந்து விட்டது உலகு.
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள் சகோ ....!
வருகைக்கு நன்றி சகோதரி ..
Deleteஇவரது மரணத்திலிருந்து ஒன்று மட்டும் விளங்குகின்றது...உலகையே தங்கலது நகைச்சுவையால் மகிழ்விக்கும் கலைஞர்களின் பெர்சனல் லைஃப் பல துன்பங்களைக் கொண்டது, மன அழுத்தம் மிக்கது என்பது. ஒரு வேளை அதையெல்லாம் மறப்பதற்குத்தான் நகைச்சுவையைக் கையிலெடுத்து தன்னைச் சுற்றி உள்ளோரை மகிழ்வித்தனரோ/மகிழ்விக்கின்றனரோ??!!
ReplyDeleteஇவர் ஒரு மாபெரும் கலைஞர் என்றால் அது மிகையல்ல...சான்று மிசஸ் டவுட் பயர்,பாட்ச் ஆடம்ஸ்....மற்றும் தாங்கள் குறிப்பிட்டவை.....
அவரது தற்கொலை மரணம் னீங்கள் சொல்லித்தான் அறிகின்றோம்......வாழ்க்கையே வினோதமானதுதான்!
எல்லோரும் வாழ நம்பிக்கை தருபவை அவர் படங்கள் தோழர் ..
Deleteஅர்த்தமற்றுப் போய்விட்டது அவரது கலைவாழ்வு.
புதிய விசயங்கள்.
ReplyDeleteதன் நடிப்பால் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியவருக்கு, தன் வாழ்வில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது
ReplyDeleteதோழர் அவர் பெர்கின்சன் வியாதியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் ... அதனால் தான் இப்படி
Deleteதம 2
ReplyDeletemirror is my best friend
ReplyDeletebecause
when I cry it never laughs என்கிற சபிளினின் வார்த்தைகளை நினைவு படுத்துகிறது Robinஇன் மரணம்:( RIP
மறுமுறை ஜுமாஞ்சி பார்க்கும் போது நிறைகுட்டி க்கு நிறைய விளக்கம் சொல்லவேண்டியிருக்கும்.
எஸ்.
Delete