சத்தியமா நா எழுதலை வழக்கம் போல் ஜெயப்பிரபுதான்!
தார்ச் சாலை போடப்பட்ட பின்னர்,டெலிபோன் கேபிள் பதியவும், பாதாள சாக்கடை அமைக்கவும், குடி நீர் இணைப்பு வழங்கவும் தனித்தனியே ஒரே சமயத்திலோ அல்லது சற்றே இடைவெளி விட்டோ தோண்டப்படும் பள்ளங்கள்.
அதை நினைவூட்டுவது போன்று இருக்கின்றன, ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் CCE சார்ந்த பயிற்சிகள்.
ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் குறைந்தபட்சம் 5 பேரை இரு வேறு இடங்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சிக்கென அனுப்பிவிட்டால், மாணவர்களை கவனிப்பது யார்? வகுப்புகள் வீணாகாதா?
மீதமுள்ள ஆசிரியர்களாலும் தங்கள் வகுப்பினை கவனம் செலுத்தி நடத்திட முடியாது என்ற உண்மைகள் உணரப்படவில்லை.
பயிற்சி முழுமையாகவும்,சரியாகவும் வழங்கப்பட்டதா? பயனுடையதாக இருந்ததா?-என பங்கேற்ற ஆசிரியர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
CCE என்றால் என்னவென்றே இன்னும் புரியாமல் ஒரு சில இடங்களில் பள்ளிகள் நடைபெறுவதால், இப்பயிற்சி அவசியம் வழங்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
1 முதல் 5 வகுப்பு வரை -Activity Based Learning (ABL)
செயல் வழிக் கற்றல்
6 முதல் 9 வகுப்பு முடிய- Active Learning Methodology (ALM)
படைப்பாற்றல் கல்வி
-இவை இரண்டும் கற்பித்தல் முறைகள்.
CCE- என்பது மதிப்பீட்டு முறை.
மூன்று பருவங்களிலும் மாணவர்களை அவர்களது கற்றல் செயல்பாட்டை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யும் வழிமுறை.
இவற்றை இனிமேலும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என ஆசிரியப் பெருமக்களை அப்படியே விழுந்து கேட்டுக் கொள்கிறேன்.
ஏன் இந்த முறை மதிப்பீட்டு முறை?
ஒரு மாணவனின் கற்றல் முறை, கற்றலை வெளிப்படுத்தும் முறை பலவிதங்களில் இருக்கும்.
அதை நான் எழுத்துத் தேர்வின் வாயிலாக மட்டும் தான் நான் அளவீடு செய்வேன் என்பது உலக அளவிலான கல்வி நிலையிலிருந்து வேறுபட்டு நிற்பதாகும்.
மாணவனின் தனித் திறனை வெளிக் கொணரவும், ஆளுமைப் பண்பினை மேம்படுத்தவும் CCE முறை அளவற்ற வாய்ப்புகளை அள்ளித் தருகிறது.
இவ்வார ஆனந்த விகடனில் 11 ஆவது வாரமாக பாரதி தம்பி, CCE குறித்து மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.
ஒரு வகுப்பில் இரு மாணவர்களை அழைத்து கரும்பு குறித்து எழுதுக என ஆசிரியர் சொல்ல, ஒரு மாணவன் எழுதி காண்பித்து விடுகிறான். அவனுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இன்னொரு மாணவன் சரிவர எழுதத் தெரியாத காரணத்தினால் அப்படியே அமர்ந்திருக்கிறான்.
மறு நாள் ஆசிரியர் வகுப்புக்கு கரும்பினைக் கொண்டு வந்து காட்டி, இது என்ன?-என இரு மாணவர்களையும் கேட்கிறார்.
சரியான பதிலை நேற்று எழுதிக் காட்டி முழு மதிப்பெண் பெற்ற மாணவன் விழிக்கிறான்.
எழுதவே இல்லாத மாணவன் 'கரும்பு' என சொல்கிறான்.
இப்போது இரண்டாமவனுக்கு மதிப்பெண் உண்டா?இல்லையா?
ஏன் தர வேண்டும்?
தொடரும்...
#CCE_1
மிக மிக மிக அருமையான ஒரு பதிவு! நண்பரே! கை கொடுங்கள்! ஒரு மாணவனின் கற்கும் திறன் எழுத்தில் வெளிவருவதல்ல.....மிகச் சரியே....ஆனால் நம் பாடத்திட்டம் அதைத் தானே வழி மொழிகின்றது....மதிபெண் வாங்கிவிட்டால் அவர்கள் தான் புத்திசால் என்று பட்டம் சூட்டுகின்றது!....
ReplyDeleteஎங்களில் கீதாவின் மகன் கற்றல் குறைபாடு உள்ளவர். அதாவது எழுதுவது என்பது அவருக்கு மிகவும் கடினமான ஒரு விடயம். சிறு வயதிலிருந்தே....பள்ள்யில் பல பிரச்சினைகள் அவருக்கு....ஒரு வரி, அல்லது இரண்டு வரிதான் எழுதுவார்...எத்தனை பெரிய பதிலாக இருந்தாலும்......இறுதித் தேர்வு வரை ஜஸ்ட் பாஸ் இல்லைஉஎன்றால் தோல்வி என்றுதான் ....ஆனால் மிகவும் புத்திசாலி....காமென்சென்ஸ் அதிகம்....படிப்பதை யதார்த்த ரீதியில் உபயோகிப்பதிலும், அதில் லேட்ரல் திங்கிங்க் வகையில் பரீட்சனம் செய்வதிலும் திறமையானவர்......ஆனால் ம்கவும் மெதுவாகத்தான் படிப்பார்......நிறைய நேரம் எடுத்துக் கொள்வார், கராத்தே கற்று ப்ளாக் பெல்ட் டான் 2 ராங்க்.......வீணை வாசிப்பார்...கர்நாடகசங்கீதத்தில் புலமை.....முதலில் மொழி அறிவில் சிறிது குறை இருந்தாலும் ...தற்போது பெற்றோரின் ஊக்கத்தாலும், அன்பாலும் அதிலும் நன்றாக ஆகிவிட்டடார்......படிக்கும் நேரம் கூடுதல் என்பதால் சிறிது சோசியல் மிங்கிளிங்க் குறைவாக இருந்தாலும் நாம் பேசினால் மிகவும் அழகாக பேசுவார் பல விஷயங்களைப் பற்றி...அப்படிப்பட்டவர் கால்நடை மருத்துவத்தில் சிறு வயது முதல் ஆர்வம்...அதை பெற்றோர் உற்சாகப் படுத்தி...மருத்துவராக்கி....இதோ கனடாவில் க்ளினிக்கல் ட்ரெய்னிங்க் எடுத்து வருகிறார். இந்தியாவிலிருந்து இதுவரை யாரும் வாங்காத ஒரு பட்டத்த்டை வாங்க முயற்சி...என்று அவரது பயணம் பல கஷ்டங்களுக்கு இடையில்...அவரைத் தனியாக சமைத்து, தன் வேலைகளையும் பார்த்துக் கொள்ள டைம் மேனஜ்மென்ட் கீதா அவருக்கு கூடவே இருந்து கற்றுக் கொடுத்து...... இப்போது ....கனடாவில் தனியாக.....கீதா அவருக்கு ஒரு அம்மா மட்டுமல்ல மிக நல்ல தோழி....அவருடன் அவர் மகன் தனது அனுபவங்களைச் சொல்லி ஷேர் செய்து என்று.....எங்கள் வலைத் தளத்தில் கூட அவர் தன் மகனது கற்றல் குறைபாடு பற்றி எழுதியிருந்தார். எனவே நமது அணுகுமுறையும், புரிந்து கொளலும் தான்......
//ஒரு மாணவனின் தனித் திறனை வெளிக் கொணரவும், ஆளுமைப் பண்பினை மேம்படுத்தவும் CCE முறை அளவற்ற வாய்ப்புகளை அள்ளித் தருகிறது.// உண்மை!
மிக நல்ல பயனுள்ள தொடர்.....தொடர்கின்றோம்.
கீதா அவர்களுக்கும் அவர்களின் மகனுக்கும் வாழ்த்துக்கள்!
Deleteஉங்கள் அனுபவம் எனது வகுப்பறையை செளுமையாக்கு ம் நன்றி திரு.துளசீதரன்
DeleteCCE அறிந்துகொண்டேன்..
ReplyDeleteமாறுமா மதிப்பீட்டு முறை? பகிர்விற்கு நன்றி அண்ணா
தமிழகத்தில் மாறிவிட்டது
Deleteபயனுள்ள பதிவு சார், தொடரு உண்மையிலேயே மாணவர்களின் திறமை படிப்பது, அதை தேர்வில் எழுதுவது என்பது மட்டும் தான் என சொல்லும் நிலை உண்மையிலேயே மாறவேண்டும். படைப்பாற்றல்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். விசயங்கள் தெரியும் அளவாவது இருக்க வேண்டும்..
ReplyDeleteநன்றி ஜெய்
Deleteமிகவும் பயனுள்ள தொடர் - தமிழ் மீது பற்று ஏற்பட்டு, தன்னார்வல தமிழ் ஆசிரியராக இருக்கும் எனக்கு இந்த தொடர் மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteதொடருங்கள் - தொடர்கிறேன் நானும்.
நன்றி உண்மையானவரே
Delete