“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்!
“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி வெட்டும்
தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்!
“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
-வே. மதிமாறன்
மதிமாறனின் இந்தக் கவிதை எனது நினைவில் தொடர்ந்து ஓர் நினைவு யுத்தம் நடத்திக் கொண்டிருந்து.
தோழர் எம்.ஏ. அப்துல்லா இதை முகநூலில் பகிர சுட்டு தளத்தில் வைத்துவிட்டேன்..
-----
இந்தக் கடிகாரம் எப்படி இருக்கு ?
அப்படீனாக்கா சுட்டதா ?
ReplyDeleteஎஸ் யுவர் ஆனர்
Deleteகேள்வி கேட்பதே பெரியார் தந்த துணிவால்...
ReplyDeleteஆம்
Deleteநன்றி
நல்ல பகிர்வு சார்.. இதைப்படிக்கும் போது நான் முகநூலில் படித்த ஒரு கவி நியாபகம் வருகிறது.
ReplyDeleteஎன்ன செயதார் எனக்காக பெரியார் என வீதியில் போராடுகிறார்கள் சிலர்...
அவர்களுக்கு உறைக்கவில்லை இன்று வீதியில் இறங்கி போராட காரணமே அவ்ர்தான் என்று...
உறைக்காது...
Deleteஉணர்கிறவரை
முந்தைய தலைமுறை அனுபவித்த கொடுமையை பற்றி அறியாத முட்டாள்கள்தான் இப்படி கேட்பார்கள் !
ReplyDeleteத ம 1
வருகைக்கு
Deleteநன்றி அய்யா ...
சுட்ட கவிதை உண்மை உரைக்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சுட்டது என்றாலும் மனத்தில்
ReplyDeleteசட்டென்று ஒட்டிக்கொண்டது.
கடிகாரம் சூப்பர்!
ReplyDeleteநன்றி தோழர்
Deleteஅருமை! நல்ல பகிர்வு சகோதரரே! கடிகாரம் உட்பட!..:)
ReplyDeleteநன்றி சகோதரி
Deleteஇவ்வளவு நன்றாக எளிமையாக அருமையாக அந்தப் பெரியாரே ஏற்றுக்கொண்ட பாரதியை எதற்குப் போட்டு வாங்குகிறார் என்பதுதான் தெரியவில்லை மது?
ReplyDeleteஎனக்கும் தெரியவில்லை அண்ணா ...
Delete