எப்.பி ஸ்டேட்டஸ் அதகளம்..

1.
தமிழக கல்வித்துறைக்கு ஒரு ஆரோக்கியமான வரவு Silambu Arasu 
காவல் துறையில் இருந்து கல்வித்துறைக்கு ... இனிய வரவேற்புகள் அன்பு இளவலுக்கு...
கொடுத்துவைத்தவர்கள் உனது பள்ளி மாணவர்கள் ...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சிலம்பு ...


2.
ஒரு உள்ளூர் கவுன்சிலர் முன்னால்  ஊடகவியலாளர்  இப்படி கால் மீது கால் போட்டு அமர முடியுமா என்ன? 



3.
இதுவும் அடியேனே...

http://thamizhkalanjiyam.blogspot.in/

4.
பெரிய பிளாக்ஸ் அடித்து பள்ளி திறந்தவுடன் வாசலில் வைக்க வேண்டும்...
எங்க கிராமத்தில் நிலைமை சொல்லும்படி இல்லை
வாழ்த்துக்கள் ...



5.
புலியின் பலி ... எஸ்.ரா வின் பார்வையில் ...
http://www.sramakrishnan.com/?p=4217

6.

ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பாட்டைக் கேட்டு ...
எனக்கு பிடித்திருக்கு
ஒரு இசைக் காலை வணக்கம்



7.

அப்பா உங்களுக்கு ஹான்ட் ரைட்டிங் மாத்த தெரியுமா?

நோட்பாடில் பார்மட் போகணும் அப்புறம் பான்ட் எடுத்து மாத்த வேண்டியது தான்

உங்களுக்கு தெரியாதாப்பா ?

குழந்தை தட்டிய கதை...

8.
http://gaana.com/nowplaying/playlist/gaana-dj-us-top-50 
அனேகமா பல தமிழ் பாடல்களை இங்கே பிடிக்கலாம்

9.
மங்கள்யானின் வெற்றியோடு ஒரு காலை வணக்கம் தோழர்களே ...

அறிவியல் சமூகத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

10.
கிண்டில் வாங்கலாம் என்று இருக்கிறேன்...

படிக்க மட்டுமே என்பதால் என்ட்ரி வெர்சன் போதும் என்று நினைக்கிறன்... ஏதேனும் 
தகவல் இருக்கிறதா இது தொடர்பாக...

இதற்கு வந்த பின்னூட்டங்களில் சில 


  



11.
டாப்லெட் வாங்கப் போறீங்களா?

ஒரு தபா பார்க்கலாமே.

12.
ஏழாம் வகுப்பு சிறுமியின் மொழிபெயர்ப்பா இது வாவ் 

ஆசிரியர் நாணலுக்கும் மாணவி தர்ஷினிக்கும் வாழ்த்துக்கள் 

http://malaigal.com/?p=5560

13.
Anna Malai ஒருமுறை யுடியூப் வீடியோ ஒன்றைப் பார்த்து செல்போன் ஒன்றை

சரிசெய்தார்.
என் நோக்கியா என் எய்ட் பாட்டரி காலியாகி என்னைப் படுத்திவிட்டது.

எதற்கும் நாமும் பார்ப்போமே என்று நீ குழாயை நோண்டியதில் கிடைத்த வீடியோவை

வைத்து நானே பாட்டரியை மாற்றி விட்டேன்...

நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் !
அந்த காணொளி 
14.
சமயங்களில் ரொம்ப அருமையாக செய்ய வேண்டும் என்று கருதி சில விசயங்களை

தள்ளிப்போடுவது வழக்கம். அனுபவம் என்னவென்றால் ஆண்டுகள்

உருண்டோடினாலும் அந்த வேலை நச்சுனு செய்யனும்னு சொல்லி காத்திருக்கும்!

இது ஒரு மோசமான வியாதி என்று வெற்றி இலக்கியங்கள் சொல்கின்றன.

சிறப்பாக செய்யவேண்டுமா செயலைத் துவங்கு என்பதே சரி... என்கின்றன...

அண்மையில் எனது கரங்களுக்கு வந்த கவிஞர் நெப்போலியனின் காணாமல் போன

கவிதைகள் படித்தேன் இன்னும் ஒருமுறை படித்தவுடன்தான் தொகுப்பை பற்றி எழுத

வேண்டும் என தள்ளி தள்ளி ....

15.

ஞாநி பிராமணன் ?

எனது பிரியத்திற்குரிய எழுத்தாளர் சிந்தனையாளர் ஞாநி குறித்த அபத்தமான

விமர்சனங்களில் ஒன்று அவர் இரத்தத்தில் பூணூலைப் போட்டிருக்கிறார் என்பது!

இத்தனைக்கும் தீவிரமான பி.ஜெ.பி எதிர்ப்பாளர் அவர். கல்கியில் அவர் எழுதிய ராமர்

கோவில் குறித்த கட்டுரையை படித்தால் இதுபுரியும். என்னிடம் ஆங்கிலம் படிக்க வந்த

பொறியியல் மாணவர்களுடன் இந்தக் கட்டுரையை பகிர்ந்துகொண்டேன். அது குறித்த

விவாதம் தொடர்ந்தது ஆங்கிலத்தில்.

இப்படி தனது மனசுக்கு பட்டதை உரக்கசொல்லும் நியாயம் சார்ந்து செயல்படும் 

ஒருவரை பிராமணன் என்று கேவலப் படுத்துவதைவிட கீழ்த்தரமான செயல் (அரசியல்) 

இருக்க முடியாது.

அன்று ஞாநி இன்று நந்தன் ஸ்ரீதரன் ..

மதங்களைக் கடந்தும், இனங்களை கடந்து மனிதர்கள் செயல்பட முடியும் என்பதற்கு

இவர்கள்தான் சாட்சி..

இவர்களை அய்யர் என்பது கீழ்த்தரமான அரசியல்.

அவர்கள் மனிதர்கள் பாவம் விட்டுவிடுங்கள் அப்படியே இருந்துவிட்டு போகட்டும்..

16.
இருப்பதே தெரியாமல் இருக்கும் சிறிய நாடு அது.

நோவா ஸ்காடியா. இங்கிருந்து ஒரு பாதிரியார் இறைப்பணிக்காக தமிழகம் வந்தார்.

தமிழை நன்கு கற்றவர். வரும் வழியில் தனது தமிழ்ப் புலமையை கப்பலில் இருந்த சக

தமிழர்களிடம் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஒருவழியாக சென்னை வந்தார். ஒரு குழு வரவேற்றது. அதில் ஒருவர் பேசிய தமிழின்

செழுமை பாதிரியாரை ரொம்பவே அசைத்துவிட்டது.

யாரப்பா நீ.

நான் ஒரு மீனவன்.

அதிர்ந்து போனார் பாதிரியார். இவ்வளவு செழுமை ஒரு மீனவனிடம் இருக்கிறதே.

அப்போ நான் நிறைய படிக்க வேண்டுமே என்று உறுதிகொண்டார்.

அவர் தமிழ் படித்தார். ஆழமாக. இந்த அகிலமே படித்து தமிழ் இலக்கியங்களை.

குறள் அகிலத்தின் சொத்தானது(நம்புங்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் குறளை

கொண்டாடுவதை விட அயல்நாட்டினர் அதிகம் நேசிக்கிறார்கள்!) காரணம் ஒரு

கிருஸ்துவ பாதிரி!

பின்னர் உனக்கு கிருத்துவத்தை பரப்ப தகுதியில்லை என்று திரும்ப அழைத்துக் 

கொண்டனர்.

பின்னே கொஞ்சுவாங்களா. வெள்ளை உடையை களைந்து காவியுடை தரித்து புலால்

மறுத்தார் அவர்.

நீ வேலைக்காக மாட்ட திரும்பிவா என்று அழைத்து விசாரித்தனர்.

இவர் தனது மாற்றத்திற்கான காரணம் என்று சொல்லி ஒரு தமிழ் செய்யுளை

ஆங்கிலத்தில் படித்துக் காட்ட விசாரணை அதிகாரி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

திருவாசகத்திற்கு உருகாதார் யார்?

ஒரு தமிழ் மாணவனாக அவர் உறங்கிக் கொண்டிருக்கலாம் ....

ஆனால் அவர் சேவைகள் ...

ஆமா யார பத்தி சொல்றேன்னு புரிகிறதா..?

< Dr.George Uglow Pope>

17.
உங்களுக்கே உங்களுக்கான தருணம் ...
ஒரு வாரத்தில் ஒரு மணிநேரத்தை ப்ரைவேட் டைமாக வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த நேரத்தில் அந்த வாரத்தை திட்டமிடுங்கள். யாரும் அணுகாத தனிமையில் அந்த

வாரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்களை ஒழுங்கு செய்யுங்கள்.
நினைவிருக்கட்டும் ஒரு வாரத்தை முன்னால் பார்ப்பதில் திட்டமிடுவதில் இருந்து ஒரு

மாதத்திற்கு மாறப் பாருங்கள். பின்னர் வருடம்

பின்னர் வாழ்க்கை ... ~!

திட்டத்தை செயல்படுத்துங்கள்.
‪#‎செவென்_ஹாபிட்ஸ்‬ ஆப் ஹைலி எபக்டிவ் பீப்பிள் என்கிற ஸ்டீவன் கவியின் நூலில்

இருந்து...

18.

சிறுவயதிலேயே சுஜாதா அறிமுகமானதால் எப்படியோ நான் கணிப்பொறிகளின்

காதலன் ஆனேன்.

புதுக்கோட்டையின் முதல் கணிப்பொறி நிறுவனம் எது என்று தெரியுமா?

திரு ராம்கி (ராமகிருஷ்ணன்) நடத்திய வித்யாபதி கணிபொறி பயிற்சி நிறுவனம்தான்.

சுப்பையா வேளாளர் பாத்திரக்கடையின் மூன்றாவது தளத்தில் செயல்படத் துவங்கியது.

திறப்பு விழா அன்று பச்சை சி.ஆர்.டி திரைகளில் மெமரி பாங் டெஸ்டிங் என்று ஓடி ஒரு

அரைமணிநேரம் கழித்து பொறுமையாய் வழிக்கு வரும்.

எங்கள் ஊர் மக்கள் பெரும்பாலர் கணிபொறி பற்றி ஒரு எழுத்துக் கூட அறிவதற்கு வெகு

முன்னராக ஆரம்பிக்கப் பட்ட ஒரு முயற்சி. எனவே எளிதில் வீழ்ந்துவிட்டது.

பின்னர் எழுந்தது மிதுன். ரொம்ப காலம் மிதுன் கணிபொறி நிறுவனம் வெகு

வெற்றிகரமாக இயங்கியது.

கணிபொறி உபயோகிப்பாளர் சங்கம் என்று துவங்கி புதுகையின் கணிபொறி

அடையாளமாக மாறிப்போன நைஸ் கணிப்பொறி பயிற்சி நிறுவனம் அப்புறம் வந்தது.

அப்புறம் ஆப்டெக், என்.ஐ.ஐ.டி, எஸ்.எஸ்.ஐ, இன்னும் எத்தனையோ கணிபொறி பயிற்சி

நிறுவனங்கள் வந்தன.

டாட் காம் பூம் பனாலான பிறகு சுனாமி வந்து சுருட்டிக்கொண்டு போனது போல்

அத்துணையும் காணோம். இப்போது நைஸ், எம்.ஐ.டி(இந்த இடத்தில மாஸ் கம்யூட்டர்

என்று இருந்தது முன்னர்!), அப்புறம் டி.எம்.சி.

டி.எம்.சி கொஞ்சம் பிரத்தியோகமானது. இதன் நிறுவனர் பல கிளைகளை நடத்துவதால்!

(பிராண்ட் விரிவாக்கம்?)

1995-96 வாக்கில் எனது நண்பர்கள் ஜெகன், கிருஷ்சுடன் நான் பணிபுரிய நண்பர்

ராஜேந்திரன் நடத்திய பைட்ஸ் என்கிற கணிப்பொறி நிறுவனமும் இந்தப் பட்டியலில்

உண்டு.

கணிப்பொறி நினைவுகள் தொடரும் ...

19.
விவாதங்களைத் கூடியவரை தவிர்க்க..

ஒருவேளை நீங்கள் ஈடுபட்டு விவாதத்தில் வென்றால் வெற்றி மட்டுமே உங்கள் பக்கம்

இருக்கும் விவாதத்தில் தோற்ற நண்பர் ஒரு நிரந்தர இழப்பாகிவிடுவார் ....

நான் சொல்லவில்லை ... ஆன்ட்ரூ டேல் கார்னீகி ... என்ன பொருள் பொதிந்த கருத்து..

20.
எங்களூர் மருத்துவர் ...
இருபத்தி ஐந்து காசுகளுக்கு மருந்து எழுதுவார். அதை எடுத்துக்கொண்டு எதிரே

இருக்கும் அவரது மருந்தகத்துக்கு சென்றால் பெரும் ஜாடிகளைப்பார்க்கலாம் (இப்போது

சோன்பப்டிகாரர்கள் வைத்திருக்கும் அதே ஜாடி) விதவிதமான வண்ணங்களில் மருந்துக்

கலவைகள் இருக்கும். கம்பவுண்டர்கள் (Compounders?) அவற்றை கலந்து தருவார்கள்.

அதிகப்பட்சமே பதினைந்து ரூபாய்களுக்குள்தான் இருக்கும் மருந்துகள்.

ராமச்சந்திரன் பிள்ளை ஆஸ்பத்திரி என்றால் தமிழகத்திற்கே தெரியும். பிள்ளை வெகு

அமைதியாக பரிசோதிப்பதும் மென்மையாகப் பேசியபடி யே ஊசி போடுவதும் இன்னும் 

என் நினைவடுக்குகளில் பத்திரமாக இருக்கிறது. இவரைப் பற்றி ஒரு செய்திப் படமே 

எடுக்கலாம்.

ஒருமுறை கைவிடப் பட்ட காச நோயாளி ஒருவரை இவர் குணப்படுத்த, துணி மில்லின்

முதலாளியான அவர் கிடத்தட்ட இரண்டு சுற்று துணிகளில் டாகடர் ராமச்சதிரன்

பிள்ளை என அச்சிட்டு தர அதை அவரது பேரன்களில் ஒருவர் (எனது பள்ளித் தோழர்) 

அணிந்து கொண்டு வந்தது நினைவில் இருக்கிறது.

இதுமாதிரி எவ்வளவோ விசயங்கள் அவரைப்பற்றி இருக்கிறது. இந்த மாதிரி மருத்துவ

 ஆளுமைகளை முன்னெடுப்பதே பொறுப்புள்ள ஊடகவியலார்களின் பணி.

அதை விடுத்தது அவர்கள் மீது கல் எறிந்தால்?

 பொதுமக்களை வழிநடத்தும், பொதுப்புத்தியை உருவாக்கும் பணி உங்களது.

பொறுப்புடன் செய்யுங்கள்.

குறைகளை பரபரப்புச் செய்தியாக்கும் நீங்கள் ஏன் நிறைகளை தவிர்க்கிறீர்?

ஒட்டுமொத்த சமூகமும் ஒரு நோஸ் டைவ் அடித்துக்கொண்டிருக்கும் இந்தத்

தருணத்தில் மருத்துவர்களை மட்டும் குறை சொல்வது தவறு.

குறைகளை மட்டுமே வெளிச்சமிடுவதும் நிறைகளை காணமல் விடுவதும் சமூக

வளர்ச்சிக்கு உதவாது.

21.
காலை ஆறுமணிக்கு ஒரு போன் ...

சார் வந்துருங்க நான் வந்துட்டு இருக்கேன்.


வீரமணி பள்ளியின் முன்னாள் மாணவன்.

கணிப்பொறிஅறையின் மின் பிரச்சனைகளை சரி செய்ய வருவதாக சொன்னான்.

எனக்கு முன்னரே வந்து பள்ளியில் காத்திருந்தான். சில வினாடிகளில் சொன்னான் சார்

இங்கே பாருங்க எர்த்தில் பவர் வருது. வேற டெஸ்ட்டரில் தெரியாது. இது டபாரியா ஒரு

ரெசிஸ்டர்கூட இருக்கும் எனவே சரியாக் காட்டும் என்றான். ஆமா பள்ளிக்கு

வைச்சுகோங்கன்னு ஒன்னு கொடுத்தேனே எங்கே என்றான். நான் முழித்தேன்.

பிரச்சனைக்கு காரணம் சரியான எர்திங் இல்லாததே என்று சொல்லி ஒரு மளிகைக்

கடை லிஸ்டை நீட்டினான்.

இன்னாபா என்றால் இதெல்லாம் வேணும் சரிபண்நீரலாம் என்றான்.

போகும் பொழுது வேண்டாம் என்று சொன்னவன் கைகளில் ஒரு நூருரூபாயைத்

திணிக்க கொஞ்சம் பாடுபட்டேன்.

முன்னாள் மாணவர்களோடு நட்போடும் தொடர்போடும் இருப்பது அவசியம். வீரமணி

பார்த்த வேலைக்கு எங்கள் பள்ளியின் ஆஸ்தான எலக்ட்ரீசியன் அசால்டாக ஆயிரம்

ரூபாய் கேட்பார்.

நன்றி வீரமணி.

22.
பத்தாம் வகுப்பிற்கு தண்ணீர் பற்றிய பாடத்தை நடத்தி முடித்தாயிற்று.

அடுத்த தலைமுறைக்காவது தண்ணீர் இருக்குமா? 

கேள்விகளை இந்தத் தலைமுறை உணர்ந்து கொண்டால் பிழைக்கும் பூமி.. அதோடு 

சேர்ந்து அடுத்த தலைமுறையும் ... 

ரொம்பவே நடுக்கத்தை கொடுத்த ஒரு பாட அலகு 

பிள்ளைகள் தண்ணீர் குறித்த செய்திகளை கத்தரித்து சுவர்களில் ஓட்ட 

ஆரம்பித்திருக்கிரார்கள்..

Comments

  1. Anonymous27/9/14

    அனைத்து நிலைத் தகவகளும் அருமை, கால் மீது கால் போடுவது மேற்கத்திய நாடுகளில் சாதாரணமானது என்றுதான் நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் கலாசாரம் அது ..
      இருந்தாலும் ...

      Delete
  2. வணக்கம் சகோ.அரிய தேவையான தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  3. அதகளம்தான் .....

    எல்லாமே அருமை! எஸ் ரா அவரது தளத்தில் ஏற்கனவே வாசித்த்துவிட்டடோம்! யப்பா.....என்னம்மா எழுதியிருக்காரு! உண்மைய்மே!

    பாட்டு ரொம்பவே பிடிச்சுருச்சு! எங்கப்பா பிடிச்சீங்க!?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ... தோழர்

      பாட்டைப் பிடித்த இடம் gaana.com ustop 10

      Delete
  4. தண்ணீர்?!! ம்ம்ம்ம் இப்பல்லாம் ரோட்டுல நடந்து போயிட்டு இருக்கும் போது ரொம்ப தாகம் எடுத்து, கைல தண்ணீ இல்லாம, பக்கத்துல கடையும் இல்லாம, ஏதாவது ஒரு வீட்டுல தண்ணீ கேட்டோம்னு வைங்க.....தண்ணி தரதுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப யோசிக்கறாங்க.! சில வீட்டுல பளிச்சுனு சொல்றாங்க...தண்ணிக் கஷ்டம்னு...சிலர் தராததற்கு ஒரு வேளை நாம் யாரோ, தண்ணி கேக்கறாப்புல கேட்டுட்டு அவங்க வீட்டுல ஏதாவது திருடிடுவோமோன்ற பயம் கூட இருக்கலாம்....ஆனாலும் தண்ணீர் என்பது அரிய பொகிஷமாகி வருவது மனிதன் செய்யும் செயல்களுக்கு சுற்றுப் புறத்தை மாகுபடுத்தும் செயலுக்குத் திரும்பி சொல்லாமல் அடிக்கும் சாபக் கேடு!

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழர் ..
      வருகைக்கு நன்றி

      Delete
  5. ஞானி அவர்களைப் பற்றிய உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு !
    தம 2

    ReplyDelete

Post a Comment

வருக வருக