விடைபெற்றார் காப்டன் அப்பாஸ் அலி

காப்டன் அப்பாஸ் அலி, இந்திய தேசிய ராணுவம் 
எனது முகநூல் நண்பர் ஜே.முகைதீன் பாட்சா அவர்களின் பதிவு ஒன்று 

94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி அக்டோப்பேர் 11 அன்று  அலிகாரில் காலமானார்கள். (இன்னாலில்லாஹி...).

புரட்சித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் "இந்தியன் நேஷனல் ஆர்மி"யில் தன் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிவர்.


ஐஎன்ஏ ‍வில் கேப்டனாக பணியாற்றிய அவர், பர்மா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் ராணுவ வீரராக களப் பணியாற்றினார்.

பிரித்தானிய அரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல்மரண தணடனை வழங்கியது.

1947ல் தேச விடுதலைக்கு பிறகு இந்திய அரசால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் இந்திரா காந்தி அம்மையாரின் எமர்ஜென்சி பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களுடன் சேர்ந்து தேசநலனுக்காக மீண்டும் போராடி கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார்.

இவரைப் போன்ற தேசத்தின் மாவீரர்களை நினைவு கூற இன்றைய மீடியாவுக்கும் நவீன‌ தேசபக்தர்களுக்கும் நேரம் இருக்காது என்கின்றபடியால் நாம் தான் இது போன்ற செய்திகளை சரித்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். சகோதர சமுதாய மக்களுக்கு இம்மாதிரியான செய்திகள் சென்றடைய வேண்டும்.


Comments

  1. அறியாத தலைவரின் அறிமுகத்திற்கு நன்றி சார்.. அண்ணாரது ஆன்ம இளைப்பாற்றுக்கு வேண்டுவோம்...

    ReplyDelete
  2. புதிய தகவல்....அவர் சொல்லியிருக்கும் அந்த இறுதி வரிகள் சத்தியமே! இல்லையென்றால் இப்போது இவரைப் பற்றித் தெரிந்திருக்காதே! நல்ல பகிர்வு நண்பரே!

    ReplyDelete
  3. எனக்கு சுதந்திர போராட்டம் குறித்து கணிசமான அக்கறை உண்டு .... எனவே பகிர்ந்தேன் தோழர்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக