வந்தாரை வம்புக்கு இழுக்கும் சங்கம் முகநூல் பக்கத்தில் இருந்து
ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..!
சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!
கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!
கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட
்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!
கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!
கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!
கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!
கேள்வி;- மகாத்மா காந்தி..
எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!
கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள்
செய்யும் அவரவர் வீட்டில்..!
கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
மாணவன் சரியாக
தானே பதிலளித்துள்ளான்..???
மாணவன் சரியாகத்தானே பதில் அளித்திருக்கிறான். இதற்கு போய் முட்டை மதிப்பெண்களை கொடுக்கலாமா?
ReplyDeleteவருகைக்கு நன்றி சொக்கன்...
Deleteஎன்னைப் போல ஒரு வம்புக்கார மாணவன்
ReplyDeleteநன்றி தமிழரே
Deleteஆமாம் சரியாகத் தானே பதிலளிதுள்ளான்.மிகுந்த நகைச்சுவை கொண்ட பதிவு மிகவும் நன்றக உள்ளது சகோ ! மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் .....!
ReplyDeleteநன்றி சகோதரி..
DeleteSuper Super Super
ReplyDeletefrom Devakottai
வருக
Deleteஇந்தியாவிற்கும் எனது வலைப்பூவிற்கும்
கொஞ்சமென்ன வஞ்சகமே இல்லாம சிரிச்சேன் சகோதரரே!
ReplyDeleteஎன்னமா யோசிக்கிறாங்க...! அருமை!
நன்றி சகோதரி...
Deleteஒவ்வொரு பதிலும் கல கல.. உண்மையில் இதைவிட பொருத்தமான பதில்களை மாணவர்கள் எழுதுவோம்.. ஆசிரியர்கள் தான் மார்க் போடுவதில்லை... ஹா ஹா ஹா ..
ReplyDeleteநன்றி ஜெய்
Deleteஆஹா நானும் படித்தேன்...தவறுன்னு சொல்ல முடியாதுல்ல..
ReplyDeleteஉண்மையில் சரிதான்..
Deleteநன்றி சகோதரி
மது நண்பரே ! ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே ரசித்தோம். சரியான பதில்கள் தானே ! அதுவும் தாஜ்மகால் பதிலும், மாம்பழ ஜூஸ் பதில், திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது வீட்டில் பதில் அருமை....செம
ReplyDeleteபகிர்வு அருமை..!
ReplyDeleteதொடர்கிறேன்.
தொடருங்கள் அடுத்த இரண்டு பதிவுகளுமே அனுமதிபெற்ற பகிர்வுகள்தான் பதினெட்டு இருபது தேதிகளில் காலை ஆறு முப்பதுக்கு வெளியாகும்.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteகொஞ்சம் சிரிக்கலாமா...கொஞ்ச நஞ்சமல்ல...நன்றாகவே சிரித்துக் கொண்டே பதிலை இரசித்துப் படிக்கமுடிந்தது...அவன் பெற்ற மதிப்பெண்னுடன் ஒரு பத்து மதிப்பெண் சேர்த்துக் கொடுங்கள்.
நன்றி.
கொடுத்துட்டா போச்சு...
Deleteதாமத்திற்கு மன்னிக்கவும்.
இந்த புத்திசாலிக்கு முட்டை போட்டது தப்புதானே சார்!
ReplyDeleteஆம் அய்யா...
Deleteஇவ்வளவு அறிவாளியான பையன் சோர்ந்து விடக் கூடாதுன்னுதான் ...பொறிச்சு சாப்பிட முட்டை கொடுத்துட்டாங்களே )சந்தோசப் பட வேண்டியதுதானே )
ReplyDeleteஉங்களின் ஹாஸ்யம் எனது குழல்விளக்கை ஒளிர வைத்தது
Deleteநன்றி பகவானே..
நாளைக்கு "இவரே" வாத்தியாராகி இது மாதிரி மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தால் பெரிய பிரச்சினையாகிவிடும்னு இப்போவே "முற்காப்பா" இருக்காங்க போல!
ReplyDeleteசிறப்பான பதில்கள். ஆசிரியருக்குத் தான் தெரியல! :))))
ReplyDeleteரசித்தேன் நண்பரே.