லூசி தைவானில் படிக்கும் ஒரு மாணவி. அவளது நண்பன் ஒருமுறை ஒரு பெட்டியை ஜாங் என்பவனிடம் கொடுத்துவர சொல்கிறான். லூசி மறுக்கிறாள். அவன் அந்தப் பெட்டியை அவளது கையில் விலங்கிட்டுவிடுகிறான்.
லூசிக்கு வேறு வழியில்லை சாவி உள்ளே ஜாங்கிடம் இருக்கு என்கிறான். சரி என்று பெட்டியை கொடுக்க செல்கிறாள் லூசி. அந்த பெரிய ஆடம்பர விடுதியின் வரவேற்பில் ஜாங்கை பார்க்க வந்திருப்பதாக சொல்கிறாள். படீர் என்கிறது துப்பாக்கி வெளியில் நின்றுகொண்டிருந்த பாய்பிரண்ட் காலி. ஒரு ஆறுபேர் லூசியை தூக்கிக் கொண்டுபோய் ஜாங்கின் ஆடம்பர அறையில் விடுகிறார்கள்.
தொடரும் ஒவ்வொரு காட்சியும் கொடூரமாக இருக்க லூசி பதறுகிறாள். கண்முன்னால் சில கொலைகளும் முகத்தில் தெறித்த ரத்தமும் லூசியை மட்டுமல்ல நம்மையும் பதறடிக்கின்றன.
இறுதியாக உனக்கு ஒரு வேலை தரேன் என்று சொல்கிறான் ஜாங். வேலையா வேண்டாம் என்கிற லூசி மீண்டும் ஒரு அறையின் உள்ளே மயக்கத்தில் இருந்து எழுகிறாள். அடிவயிற்றில் ரத்தம். ஒரு கட்டு. (டிக், டிக்,டிக் நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல). போதை மருந்து பை ஒன்றை அவளின் வயிற்றின் உள்ளே வைத்து தைத்து கடத்துகிறார்கள்.
இவளைப் போல் ஒரு மேலும் ஒரு மூன்றுபேரைப் பிடித்து அவர்களுக்கு ஒரு பாஸ்போர்ட்டை கொடுத்து ஊருக்கு போங்க என்று ஐரோப்பா முழுதும் அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் ஆண்கள். பாவம் லூசி பெண். பிரத்தியோகமான பிரச்சனைகள் ஆரம்பம் ஆகின்றது. அடைத்து வைத்திருக்கும் அறையில் ஒருவன் கைவைக்க அவனை தடுத்து முறைக்கிறாள். அந்த மொள்ளமாரி லூசியை கீழே தள்ளி வயிற்றில் உதைக்கிறான். இன்னொரு அடியாள் அவனை வெளியில் தள்ளிக்கொண்டு போய்விட அறையில் தனியே கிடக்கும் லூசியின் வயிற்றுக்குள் இருக்கும் பை உடைந்து அதன் போதை மருந்து அதீதமான அளவுகளில் உடலில் கலக்கிறது.
கொடூரமான் அவஸ்தையில் கிடக்கிறாள் அவள். இந்தக் காட்சியில் இருந்து படம் ஒரு பின்னோக்கிய திருப்பத்தில் அசுர வேகத்தில் பயணிக்கிறது. உண்மையில் CPH4 என்கிற போதைவஸ்துவைதான் அவள் வயிற்றுக்குள் வைத்திருகிறார்கள்.
போதை அதிகமானால் மிதக்கிற மாறிகீது என்பது இதுதானோ? |
CPH4 என்பது ஒரு நூராடிக் வகை போதை. கர்ப்பமான பெண்களில் உடலில் ஆறாவது மதத்தில் சுரக்கும் இது ஒரு உடலியல் அணுகுண்டு. குழந்தை உடலில் எலும்பு வளர்வதை தூண்டும் இது உடல் வளர்ச்சியை மேம்படுத்தும். இதைபோன்ற மருந்துகள் மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டுஉள்ளவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருவதும் தெரிந்ததே.
இந்த மருந்து லூசிக்கு அதீதமான திறன்களை வழங்குகிறது. அவளது மூளைத்திறன் உபயோக சதவிகிதத்தை இருபது மடங்காக உயர்திவிடுகிறது அது. (கற்பனையில் தான்)
கொஞ்சம் கொஞ்சமாக அவளது மூளைத்திறன் கூடிக்கொண்டே போகிறது. அப்போ என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
நாற்பது மில்லியன் டாலர்கள் தயாரிப்பில் நூற்றி நாற்பது மில்லியன் வசூல் செய்த படம் இது! இந்திய ரூபாய் மதிப்பில் 7754125484.00 ரூபாய்கள் வசூல். (யாரவது கொஞ்சம் எழுத்தில் தாங்க பார்க்கலாம்)
இந்தப் படம் லூக்கின் எழுத்தில் இயக்கத்தில் உருவானது வில்லன் கோய் மின் சிக்கை பிடிக்க கொரியாவிற்கு சென்று கதை சொல்லி ஒப்புகொள்ள வைத்திருக்கிறார்கள்.
பேராசிரியராக வரும் ஆப்ரிக்க அமெரிக்கன் மோர்கன் ப்ரீமேன். காவல் அதிகாரி அமர் வாகத் ஒரு எகிப்திய நடிகர். லுக் இப்படி மூன்று கண்டங்களைச் சேர்ந்த நடிகர்களை பல்வேறு கலாச்சரா மனிதர்களின் இருப்பும் கதைக்கு தேவை என்பதற்காகவே செய்திருக்கிறார்.
அமர் வாகத் |
படத்தில் லூசியாக வருவது ஸ்கார்லட் ஜோஹான்சன். பாடகி, நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். படத்தில் முதற்கட்டத்தில் பதறும் பொழுதும் சரி அடுத்தது பாய்ந்து அடிக்கும் பொழுதும் முத்திரை பதித்து விடுகிறார்.
குறிப்பாக வில்லன் கோய் மின் சிக்கின் கைகளில் கத்திகளைப் பதித்து இவர் பேசுகிற உடல் வளர்ச்சி வசனங்கள், அப்போது காட்டுகிற முகபாவங்கள் செமை. வாய்ப்பே இல்லை. படத்தின் வசூலுக்கு அம்மணியின் நடிப்பு ஒரு முக்கியமான காரணி.
கடைசிகட்ட காட்சிகளில் இசையும் காட்சியும் ஒரு களேபர விளையாட்டில் நம்மை அசத்துகின்றன. (இசை பிரான்சின் எரிக் செரா லூக்கின் ஆஸ்தான இசையமைப்பாளர்.)
உண்மையில் நாம் பத்துசத மூளைத் திறனைமட்டும்தான் பயன்படுத்துகிறோமா? இல்லை அது ஒரு கற்பனை. உண்மையில் அதற்கு மேலும் பயன்படுத்தலாம் என்கிறார்கள் மூளை அறிவியல் அறிஞர்கள். அப்புறம் என ஹாலிவுட் காரர்கள் இதைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள்?
அட பணம் பண்ண முடியுதுப்பா.. அதான்.
ஒரு தபா பார்க்கலாம்.
இயக்குனர் லுக் பெசன் |
தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக வருக நன்றி ...
Deleteதங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழர்
அன்புள்ள அய்யா,
ReplyDeleteலுக் பெசனின் லூசி திரைப்பட விமர்சனம் நன்றாக இருந்தது.
படத்தை நேரடியாக பார்க்கின்ற நிலைக்கு கொண்டு சென்றீர்கள்.
இந்திய ரூபாய் மதிப்பில் 775கோடியே41 இலட்சத்து 25 ஆயிரத்து 484ரூபாய்கள் வசூல் செய்து சாதனை படைத்திருப்பது வியப்பாக உள்ளது.
CPH4 என்பது ஒரு நூராடிக் வகை போதை. கர்ப்பமான பெண்களில் உடலில் ஆறாவது மதத்தில் சுரக்கும் இது ஒரு உடலியல் அணுகுண்டு. குழந்தை உடலில் எலும்பு வளர்வதை தூண்டும் இது உடல் வளர்ச்சியை மேம்படுத்தும். இதைபோன்ற மருந்துகள் மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டுஉள்ளவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருவதைத் தெரிந்து கொண்டோம். இந்த மருந்து லூசிக்கு அதீதமான திறன்களை வழங்குகிறது என்பதை தங்களின் விமர்சனம் மூலம் அறிந்து கொள்ள வைத்தது அருமை.
நன்றி.
ஆகா தமிழ் ஆசிரியர்கள் பன்முகத் திறமை உள்ளவர்கள் என்பது மீண்டும் நிருபணம் ஆகிவிட்டது ...
Deleteஎழுத்தில் தந்து கலக்கி விட்டீர்களே. ..
தங்கள் வருகைக்கு நன்றி ...
பணிகள் விழாவினால் தாமதம் ஆகிவிட்டன மன்னிக்கவும்...
கனகச்சிதமான விமர்சனம். ஆங்கிலம் புரியாதவர்கள் கூட உங்கள் விமர்சனத்தை படித்துவிட்டு படம் பார்த்தால் எளிதில்புரிந்துகொள்வார்கள்.
ReplyDeleteநான் இந்த படத்தை பார்த்தது மோர்கன் ப்ரீமேனுக்காக ! நம்மூர் கெளரவ நடிகர்களைப்போல கொடுத்த வேடத்தை கச்சிதமாய் செய்து ஈர்க்க கூடிய நடிகர் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
மோர்கன் ஒரு அல்டிமேட் ஸ்டார்...
Deleteஇந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவில் முனியாண்டி விலாசில் கூட வேலைபார்க்க முடியாது...
ஆனால் மோர்கனின் பர்பாமென்ஸ் ...
தொடர்ந்து அவரை பார்த்து வருகிறேன் முதலில் அதிகம் ரசித்தது செயின் ரியாக்சன் படத்தில்...
மனிதர் அதிமுக்கியமான ஹாலிவுட் நட்சத்திரம்...
லூசியை ஒரு தபா பார்க்கத்தூண்டுகிறது உங்கள் விமர்சனம் !
ReplyDeleteதம+1
ஒருதபா பார்க்கலாம் சொல்லும் அறிவியல் செய்திகள் ஏராளம்...
Deleteஇறுதிகட்ட காலப் பயணம் அதன் பின்னணி இசை அருமை...
பாருங்க...அப்புறம் சொல்லுங்க...
ஹப்பா அருமையான விமர்சனம்! ரொம்ப அழகா எழுதறீங்க தோழரே! இதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும்! கலக்குங்க! நாங்களும் நிறைய படம் பார்க்கறவங்கதான்....அதுவும் ஆங்கிலப் படங்களும்......ஆனாலும் எழுத வரமாட்டேங்குது.....ம்ம்ம் உண்மையச் சொல்லணும்னா...நாங்க வலைத்தளம் ஆரம்பித்த புதிதில், ஆங்கிலப் படத்தின் விமர்சனம் தங்கள் வலைப்பூவில் னிறைய வாசித்து அப்படியே தொடர ஆரம்பித்ததுதான்...நண்பரே!
ReplyDeleteஆங்கிலப் படங்கள் பார்ப்பது எனது பொழுதுபோக்கு. ஒரு குற்ற உணர்வு கூட ஒன்று தோழர் பிரபுவை பார்க்கும் வரை. அவர் ஒரு நாளைக்கு இரண்டு படம் பார்ப்பவர் ... அதி தீவிர வாசகர், முனைவர்.
Deleteபடம் பார்ப்பது தவறில்லை என்று நான் முடிவெடுத்ததற்கு அவர் ஒரு காரணம்
உண்மையை சொன்னால் அவரது ஆழமான விமர்சனகள் வலைப்பூவில் வந்தால் அவர் மட்டுமே முன்னணி திரை விமர்சகராக இருப்பார்! எந்த சந்தேகமும் வேண்டாம்.
நான் எழுதுவது விமர்சனம் அல்ல ஸ்பாயிலர்! கதையை சொல்லாமல் எழுதவது தான் விமர்சனம். நான் எனது பார்வையாள அனுபவத்தை பகிர்கிறேன். இருந்தும் திரட்டிகளில் ஸ்பாயிலர் என்று சேர்க்க முடியாத காரணத்தினால் திரை விமர்சனம் என்று போங்காட்டம் ஆடிக்கொண்டிருகிறேன்.
விமர்சனம் என்றால் அதை பிரபு எழுதவேண்டும்.. அது விமர்சனம் ஆனால் அவர் வாசிப்பு அடிமை எனவே எழுதுவதில்லை ..
உங்களது ஆங்கிலப் படத்திற்கான விமர்சனத்தை படிக்கும்பொழுது எனக்கு பழைய நினைவு மனதில் ஊஞ்சல் ஆடுகிறது. அதாவது எனது ஊரில்(புதுச் சேரி/புதுவை மாநிலம்)உள்ள "ரத்னா தியேட்டரில்" தான் அனைத்து ஆங்கிலப் படங்களும் திரையிடுவார்கள். அப்போது வெளில் உள்ள சுவரில் அந்தப் படத்திற்கான கதையின் சுருக்கத்தை மிக அருமையான அழகுத் தமிழில் எழுதி வைப்பார்கள். அப்படி ஒரு சிறப்பான விமர்சனமாகவே அது அமைந்திருக்கும் என்பதை எங்கள் ஊர்வாசிகள் அனைவரும் நன்கறிவர். அதையே தோற்கடித்து விட்டது உங்களது விமர்சன உத்தி! பாரட்டுக்கள்!
ReplyDeleteமேலும் எனது கல்லூரி பருவத்தின் போது நல்ல படங்களை முதல் நாளில் முதல் காட்சியில் பார்த்துவிட்டு அந்தப் படத்திற்கான விமர்சனத்தை தமிழ் வார/மாத/இதழ்களான "இதயம் பேசுகிறது மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்களில் எழுதி வெளிவந்து வாசகர்களின் பாராட்டை பெற்ற நினைவினை இந்த சமயத்தில் தங்களால் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
நண்பரே! தாங்கள் தந்த அறிவுரைப்படி எனது வலைப் பூவின் கருத்திடும் பகுதியை மாற்றி அமைத்துள்ளேன். நன்றி!
புதுவை வேலு
http://www.kuzhalinnisai.blogspot.fr
வருக்கைக்கு நன்றி தோழர்.
Deleteவிமர்சன முன்னோடியின் வருகை மகிழ்வு
ஆஹா ! இந்த படத்துக்கு நானும் விமர்சனம் எழுதலாம்னு யோசிச்சிட்ருந்தேன் . நீங்க எழுதிருக்கறத பாத்ததும் அந்த அபாய முடிவ கைவிட்டுட்டேன் அண்ணா ! அருமையான விமர்சனம் .
ReplyDeleteஇந்த படத்தோட பாஸிட்டிவ் விஷயமே ஸ்பாய்லர் தான் ணா ! ஸ்பாய்லர சொன்னா மட்டும்தான் இந்த படத்த பாப்பாங்க ! இல்லாட்டி , இதுவும் ஒரு ஹாலிவுட் குப்பைனு ஒதுக்கிடுவாங்க .
இந்த படத்தோட மேஜர் கான்செப்ட் , ஆராய்ச்சியாளர்களெல்லாம் இதுவரைக்கும் கண்டுபிடிச்சது , மனிதனின் மூளை அதிகபட்சமா 15 சதவீதம் வரை வேலை செய்யும் . ஒருவேளை அது 100 % வேலை செஞ்சா எப்படி இருக்கும் ?
அடுத்து லூசிங்றது உலகின் முதல் பெண்மனித குரங்குக்கு வச்ச பேர் ணா .
மோர்கன் இந்த படத்துல மனித மூளைய பத்தி விளக்கற காட்சிகள் அனைத்தும் அப்பட்டமான அறிவியல்பூர்வ தியரிகள் . படத்துக்காக சில அறிஞர்கள புடிச்சி , அதகேட்டு தெரிஞ்சிருக்கிறார் டைரக்டர் .
இந்த படத்துல என்ன பிரமிப்புல ஆழ்த்துன காட்சினா , கடைசியில உலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அப்படிங்றத , வெறும் ஒரு நிமிஷ கிராபிக்ஸ்ல அட்டகாசமா காட்டிருப்பாங்க !!!
கண்டிப்பா ஒரு தடவ பாக்கவேண்டிய படம் இது !!!
கண்டிப்பாக எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் எதிர்காலத்தில் இப்படியும் நடக்குமா என்பது தான் கேள்வி. கவிஞர் கண்ணதாசன் எழுதியை போல பறவையை கண்டான் விமானம் படைத்தான் எதனை கண்டான் மதங்களை படைத்தான்.மனிதன் மாறிட்டான்
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDelete'லூசி' கதாபாத்திரத்திற்கு ஸ்கார்லட் ஜோஹன்சன் நல்ல தேர்வு. லுயிக் பெசோன் ஒரு திறமையான பிரெஞ்சு இயக்குனர். இவரின் மற்றொரு திரைபடம் அர்சூன் நடிப்பில் 'சூரியப்பார்வை' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
ReplyDeleteGood movies
ReplyDeleteஐயா CPH4 பற்றிய முழு மருந்தியல் விளக்கங்கள் தமிழில் இருந்தால் கொடுங்கள் அதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது
ReplyDeleteஒரு தடவை இல்ல சகோ... பல முறை பாதாச்சு. அற்புதமான படம். வேண்டுமெனில் சொல்லுங்கள்... ஒரிஜினல் dvd வாங்கி தமிழ் வெர்சன் ரிப் பண்ணி வைத்துள்ளேன் என் drive லிங்க் தருகிறேன். டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். Collectionல் இருக்க வேண்டிய படம். என் மெயில் id jazzicindia@gmail.com
ReplyDelete