காலையில் என்ன பருகலாம்?

வணக்கம் தினத்தந்தியில் இருந்து ஒரு பகிர்வு ...

காலையில் என்ன பருகலாம்?
*******************************************
காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடித்தால்தான் பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிந்த மாதிரி இருக்கும். ஆனால் இது ஆரோக்கியமான பழக்கம்தானா என்ற கேள்வியும் அவர்கள் மனதுக்குள் ஒதுங்கிக் கிடக்கும்.

உண்மையில், நம் உடல் ஒருநாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது.


எனவே காலையில் நாம் முதன்முதலில் பருகுவது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டும்.

அப்படி, காலையில் நாம் பருகக்கூடியவற்றைப் பார்க்கலாம்...

தண்ணீர்: ஒருநாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

குளிர்ந்த நீரைப் பருகுவது நல்லதே. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.

வெறும் தண்ணீருக்குப் பதிலாக வெந்தயத் தண்ணீர் கூட அருந்தலாம். வெந்தயத்தை முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில், ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடாது.

ஆரோக்கியம் தரும் சாறுகள்:

அருகம்புல் சாறு: அல்சர் நோயாளிகளுக்கு ஏற்ற பானம் அருகம்புல் சாறுதான். ஆனால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் செடியை வீட்டில் அரைத்துச் சாறு எடுத்து, வெந்நீருடன் பருகுவது நல்லது.

வெள்ளைப்பூசணி சாறு: வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் முழுப் பலனையும் பெறலாம்.

இஞ்சிச் சாறு: இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இதனால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

நெல்லிச் சாறு: தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.

இளநீர்: இயற்கை தந்த வரப்பிரசாதங்களில் ஒன்றான இளநீர் உடலுக்கு நன்மை தந்தாலும் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது. ஏனெனில் இதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், வயிற்றில் புண்கள் ஏற்படலாம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

மேலும் வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம்.

நீராகாரம்: காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதை இன்றளவும் கிராமப்புறங்களில் பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதன் மூலம் உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கின்றன.

###$$$###
என்னமாதிரி மனிதர் இவர்? 
தீர்மானம், உறுதி, விடாமுயற்சி!

www.ted.com ஒரு முறை கற்றதும் பெற்றதுமில் குறிப்பிடப் பட்டது. பலமாதங்களுக்கு இதையே பார்த்துக்கொண்டிருந்தால் போதும் என்று சுஜாதா அவர்கள் குறிபிட்டிருந்தார்! உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.. 

ஆறு மதங்களில் ஒரு புதுமொழியை கற்கலாம் என்று சொல்லும் கிரிஸ் லான்ஸ்டேல் என்ன சொல்லுறார். கொஞ்சம் நீங்களும் பாருங்க...






Comments

  1. Anonymous14/10/14

    பயனுள்ள விரைவான பகிர்வு சார்..

    ReplyDelete
  2. அருமையான பகிர்வுக்கு நன்றி ..காலை எழுந்தவுடன் காபி என்பதே பலரின் விருப்பம் இன்க்ளூடிங் மீ :) அது பெருந்தவறு ..
    அருநெல்லிக்காயை பாதியாக வெட்டி ஒரு கோப்பை தண்ணீரில் இரவே ஊற வைத்து அடுத்த நாள் காலை அந்த நீரையும் குடிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோதரி ...
      ஆலோசனைக்கும்

      Delete
  3. வெந்தயம் + நீர், நீராகாரம், வெள்ளைப் பூசணி, நெல்லிக்காய் இவை எல்லாம் எடுத்துக் கொள்வதுண்டு. மற்றவை தெரிந்திருந்தாலும்.......இல்லை...

    ஆறு மாதத்தில் ஒரு மொழ் கற்பது கொஞ்சம் பார்க்கும் போதே நெட் தகராரு பின்னர்தான் பார்க்க முடியும் போல....

    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் டயட் ... ஆச்சர்யம்...
      வருகைக்கு நன்றி தோழர்

      Delete
  4. நல்லாருக்கு ...நல்ல விசயம் தான் ஆனா யாராவது செஞ்சுக்கொடுத்தா இன்னும் நல்லாருக்கும்ல...நல்ல பதிவு..முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா நல்லா கலாய்க்கிறீங்க

      Delete
  5. காலையிலேயே இஞ்சி தின்ன மங்கிமாதிரி ஆகணுமா )இதெல்லாம் நமக்கு ஒத்துவருமா )
    த ம 2

    ReplyDelete
  6. அருமையான பதிவும் பகிர்வும் சகோதரரே!..

    காலைமுதல் மதியம் வரை நான்கிலிருந்து ஐந்து கப் காப்பி எனக்குப் பிரதானம்!
    இல்லாவிடின் என் செயல்கள் - பணிகள் ஸ்தம்பித்துவிடும்!
    காலை ஆகாரம் தேடுவதுமில்லை எடுப்பதுமில்லை! அதற்குப் பதில் காப்பியேதான்! சுறுசுறுப்பும், நிறைந்த சக்தியும் கிடைக்கின்றது எனக்கு!

    திட்டுவது தெரிகிறது..:)) ஆனாலும் மாற்றத் தெரியவில்லை தெரியவில்லை என்பதைவிட முடியவில்லை என்பதே உண்மை!

    உங்கள் பதிவின் படி முயல்கிறேன்!
    வெற்றி அவனுக்குத்தான் தெரியும்..:)

    ReplyDelete
  7. அன்புள்ள அய்யா,

    காலையில் என்ன பருகலாம்? - தினத்தந்தியில் இருந்து ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறீர்கள்...ஆரோக்கியமான பழக்கத்திற்கு நல்ல ஆலோசனைகள் வழங்கியிருப்பது அருமை....
    இதெல்லாம் நடைமுறைப் படுத்த முடிந்தால் நல்லதுதான்....
    முடியுமா? என்பதுதான் கேள்வி...‘முடியனும்’ என்பதுதான் தங்களின் பதிலாக இருக்கும்...

    இருக்கட்டும்...இருக்கட்டும்...ஆகட்டும் பார்க்கலாம்...

    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    ReplyDelete
  8. நாளிதழில் படித்ததைவிட தங்கள் பதிவில் உற்சாகம் அதிகம். நன்றி

    ReplyDelete
  9. நல்ல பதிவு காலையில் tea must பின்னர் மலையில் ஒன்று இடையில் சில சமயங்களில் எடுப்பேன். வெந்தயம் ஊறவைத்து குடிப்பது வழக்கம் ரெகுலராக இல்லை. இப்பொழுது தங்கள் பதிவின் பின் காலையில் சிறிது நீர் அருந்திவிட்டு அரை மணித்தியாலத்தில் tea அருந்துவேன். எவ்வளவு நாளுக்கு தெரியலை பார்க்கலாம். மிக்க நன்றி சகோ பதிவுக்கு. வித்தியாசமான பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete

Post a Comment

வருக வருக