12 Years a Slave
யப்பா இருபது மில்லியன் செலவிட்டு வந்த படம் நூற்றி என்பத்தி எட்டு மில்லியன் டாலர் வசூல் செஞ்சிருக்கு. அதுவும் ஒரு அடிமையின் அனுபவங்களை சொல்லும் படம் இப்படி குவித்திருப்பது அதிசயமே. மொத்தம் இருநூற்றி இருபது விருதுகளை வென்றபடம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படி ஒரு படம் வரமுடியுமா என்பதே எனக்கு பெரிய ஹாஆஆ.
சாலமோன் நார்தாப், ஒரு ஆப்ரோ அமெரிக்கன். கறுப்புக் கவிதையாக மனைவி குறும்கவிதைகளாக குழந்தைகள் இரண்டு. பெரும் அறைகளைக் கொண்ட நேர்த்தியான வீட்டில் ஐரோப்பிய கலாச்சாரத்தின் அத்துணை சாராம்சங்களையும் சமரசமின்றி அனுபவித்து வாழும் வாழ்வுதான் அவனது.
இனவெறிபிடித்த அன்றைய அமரிக்காவில் ஒரு கறுப்பின இசைக்கலைஞன் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறானே என்று வியந்திருக்கும் பொழுதே காட்சிகள் மெல்ல மாற ஆரம்பிகின்றன.
பிரவுன் மற்றும் ஹாமில்டன் என்னும் இரட்டையர் சலோமொனுக்கு வாசிங்டனில் ஒரு பணியைத் தருவதாக அழைகின்றனர். ஒரு பூங்காவில் அமர்ந்து கனவான்களுக்கே உரிய மெல்லிய் குரலில் இனிமையாக பேசுகிறார்கள். இரண்டுவாரப் பணி ஒவ்வொரு காட்சிக்கும் இரண்டு டாலர்கள் என்று பேரம் முடிய தனது குடும்பத்தினரிடம் விடைபெற்று வாஷிங்டன் அடைகிறான் சாலோமோன்.
மிகவும் ஆடப்மபரமான ஓர் விடுதியில் அறையை எடுக்கின்றனர். இரவு ஒரு மது விருந்து. விலை உயர்ந்த மது தாராளமாக கிடைகின்றது. விருந்தோம்பலின் உச்சத்தை அனுபவிக்கும் சாலோமோன் நன்றி பெருக்கில் நாக்குழறி நீங்க உண்மையிலேயே பெரிய மனுசங்கதான் என்கிறான்.
விடுதி அறைக்குப் போகும் வழியெல்லாம் வாந்தி எடுக்கும் அவனை ஒரு குழந்தையை அழைத்துச் செல்வது போல கருணையோடு அவனது அறைக்கு அழைத்துசென்று படுக்கவைகின்றனர் அந்த கனவான்கள். மெல்ல உணர்விழந்து தூங்க ஆரம்பிக்கிறான் சாலோமோன்.
விடியலின் வெளிச்சம் மெல்லப் பரவ கண்விழிக்கிறான். தனது கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருப்பதை உணர்கிறான். ஏதோ தவறு என்று பதறுகிறான்.
அறையின் கதவு மெல்லத் திறக்க ஒரு வெள்ளையன் வருகிறான். என்ன அடிமையே என்ற அழைக்கிறான்.
நான் அடிமை இல்லை, சுதந்திரமான மனிதன் என்கிறான். அந்த வெள்ளை நாய் சங்கிலியை இழுக்கிறது பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட அது வயலினிஸ்ட் சாலோமோனின் கைகால்களை இயக்கி அவனை நான்குகால் விலங்கு மாதிரி நிறுத்துகிறது.
வெள்ளை நாய் மெல்ல அறையோரத்தில் கிடந்த பலகை ஒன்றை எடுத்து சாலமோனின் முதுகை உரிக்கிறது. சில கொடூர தினங்களுக்குப் பிறகு சாலோமோன் அய்யா நான் அடிமைதான் என்று கதற ஆரம்பிக்கிறான்.
அப்ப்டீன்ன இன்னைக்கு நீ குளிக்கலாம் என்று அனுப்புகிறார்கள் அவனை. ஒரு திறந்தவெளியில் சக அடிமைகளோடு (பெண்கள் குழந்தைகள் உட்பட) முழு நிர்வாணமாய்க் குளிக்கிறான் அவன்.
அவனை விற்பனை செய்கிறார்கள். தொடர்கிறது ஒரு கப்பல் பயணம். அப்பட்டமான ஹியுமன் ட்ராஃபிக்கிங். பயணத்தில் பெண் அடிமைகளை தனது தேவைக்கு பயன்படுத்தும் இன்னொரு வெள்ளை நாய் இருக்கிறது.
ஒரு இரவில் அந்த நாய் ஒரு அடிமைப் பெண்ணை அணுக ஒரு ஆண் அடிமை ஏன் இப்படி என்று அவனது கையைப் பிடித்தாவாக்கில் உறைகிறான். மெல்ல கீழே இறங்கும் காமிரா அந்த அடிமையின் மார்பில் ஒரு கத்தி சொருகி நிற்பதைக் காட்டுகிறது.
வெகு சாதாரணமாக அவனது உடலை ஒரு கோணியில் சுற்றி தண்ணீரில் வீசிவிட்டு கப்பல் பயணத்தை தொடர்கிறது. ஒரு புள்ளியாய் மறையும் அந்த சாக்கு மூட்டையைப் பார்த்தவாறே கப்பலில் நிற்கிறான் வயலின்ஸ்ட் சாலோமோன்.
வில்லியம் போர்ட் எனும் பருத்திப் பண்ணைக்காரன் சாலமோனை வாங்குகிறான். கொடும் வெயிலில் வேலை. பல அடிமைகள் செத்து விழுகிறார்கள். சம்பவங்களின் அதிர்ச்சி சாலமோனை ஒரு அடிமையாகவே மாற்றிவிடுகிறது. தனது பணிகளை செய்ய ஆரம்பிக்கிறான். ஒருமுறை புத்திசாலித் தனமாக ஆற்றின் அக்கரையில் இருந்து இக்கரைக்கு மரங்களை கொண்டுவருகிறான்.
இதை செய்ததின் மூலம் அவன் தனது வெள்ளை மேற்பார்வையாளனின் ஈகோவை சுரண்ட. அவன் இவனுக்கு கடும்தொல்லைகளை தர ஆரம்பிக்கிறான். பார்க்கும் நமக்கே மேற்பார்வையாளனின் தாடையைப் பெயர்க்க தோன்ற சாலோமோன் ஒருமுறை வெடித்துவிடுகிறான். வெள்ளையனை கும்மி துவைத்து விடுகிறான். ஒரு அடிமை செய்யக்கூடாத தவறு இது.
சில மணிநேரத்தில் தனக்கு துணைக்கு இரண்டுபேரை அழைத்துக் கொண்டு வந்து சாலோமோனை தூக்கில் ஏற்றிவிடுகிறான் அவன். சரியாக கால் காற்றில் எழும்பும் நேரத்தில் இன்னொரு மேஸ்திரி அவர்களை விரட்டிவிடுகிறார் ஆனால் சாலோமோனை தொங்க விட்டுவிட்டு சென்றுவிடுகிறார். கால் விரல்கள் மட்டும் பூமியை அழுத்த கயிற்றில் சாகக் கிடக்கிறான் அவன்.
பண்ணையின் முதலாளி வில்லியம் போர்ட் கொஞ்சம் நல்லவர். அவர் அவனை இன்னொரு பண்ணைக்கு அனுப்பி விடுகிறார். போர்ட் அடிமைகளை கருணையோடு நடத்தியவர். ஆனால் புதிய முதலாளி எப்ஸ் அப்படி அல்ல. கொடூரன்.
அடிமைகளுக்கு சவுக்கடி, சாவு இதெல்லாம் சாதாரணம் என்கிற கேஸ். அதுவும் அடிமைப் பெண்களை அனுபவிப்பதை பைபிள் சரியென்று சொல்லீருக்கு தெரியும்ல என்பவன் அவன். சாலோமோனின் கொடூர நாட்கள் அவை. அங்கே பாட்ஸி எனும் பெண் அடிமையை சந்திக்கிறான். இருவருக்கும் ஒரு அழுத்தமான நட்பு உருவாகிறது.
எப்ஸின் கொடூரம் கடவுளுக்கே பொறுக்காது போயிருக்க வேண்டும். பருத்திப் புழு ஒன்று பரவ பண்ணை அழிகிறது. எப்ஸ் அடிமைகளை ஜட்ஜ் டர்னரின் பண்ணைக்கு குத்தகையில் அனுப்புகிறான். அங்கே கொஞ்சம் சுதந்திரமாக இருக்கிறான் சாலோமோன்.
குத்தகை முடிந்ததும் மீண்டும் எப்ஸின் பண்ணைக்கு வருகிறான். சக அடிமை ஒருவனிடம் என் நண்பனுக்கு கடிதம் ஒன்று இருக்கிறது அதை தபால் பெட்டியில் போட்டுவிட்டால் நான் விடுதலை அடைந்து விடுவேன் செய்கிறாயா என்கிறான். இதற்கு அவனுக்கு தனது (ஜட்ஜ் டர்னர் தந்தது) சிறு நகைகள் இரண்டையும் தருகிறான். அந்தப் பரதேசி எப்ஸிடம் போட்டுவிட்டுவிட பிரச்னை ஆரம்பம் ஆகிறது. லெட்டரா அப்படீன்னா என்ன என்று கேட்டுத் தப்பும் சாலோமோன் அந்தக் கடிதத்தை இருட்டில் ரகசியமாக எரிக்கிறான்.
சாலோமோனின் தேவதூதன் பாஸ்( சத்தியமாக பெயர்தான்). பாஸுக்கு எப்ஸின் கொடூரம் அருவருப்பாக இருப்பதால் சாலோமோனுக்கு உதவுகிறான்.
கடிதத்தை படித்த சாலொமோனின் நண்பர் அவனை மீட்டு குடும்பத்தில் சேர்க்கிறார். மனைவி அவளது கணவனை அறிமுகம் செய்கிறாள். பெயரனுக்கு சாலோமோன் என்று பெயரிட்டுள்ளதைப் நாயகன் பார்ப்பதோடு படம் முடிகிறது.
சாலோமோன் பண்ணைக்கு போவதற்கு முன்னாலேயே அடிமைகளின் வேதனைகளை அழுத்தமாக பதிவு செய்துவிடுகிறது படம். குடும்பத்தோடு இருக்கும் அடிமைகளை பிரித்து விற்பது, அனைவரையும் நிர்வாணமாக குளிக்க வைப்பது என அமெரிக்காவின் அருவருப்பான பக்கங்களை சமரசமின்றி திரையில் காட்டியிருக்கிறார் ஸ்டீவ் மேக்வீன். இவர் ஒரு கருப்பர் என்பதால் படம் அழுத்தமாக வந்திருக்கிறது.
அட எங்க மனுவும் இதைத்தான்பா சொல்றார். எல்லாப் பயலும் தனக்கு வேண்டிய மாதிரித் தான் எழுதி வைத்திருக்கான்
பாட்ஸி படும்பாடு சொல்லில் அடங்காதது. ஒருபுறம் எப்ஸ் மறுபுறம் அவனது மனைவியின் தாக்குதல். ஒரு கனமான சரக்கு பாட்டிலை எடுத்து முகத்தில் அடிக்கிறாள் அவள். பாட்ஸியின் முகத்தில் நிரந்தரமாய்த் தழும்பு.
பாட்ஸி ஒரு வில்லை சோப்பிற்காக வாங்கும் கொடூர சவுக்கடி பார்பவர்களுக்கு நிச்யமாய் ஒரு மனஅழுத்தத்தைத் தரும்.
நிச்சயமாக வயது வந்தோருக்கான படம் இது.
கடிதத்தை எரிக்கும் காட்சி படமாக்கப்பட்ட விதம் ஒன்றே போதும். ஒரு எழுபது எம்.எம். திரையின் மையத்தில் ஒரு காகிதம் எரிகிறது. அணைகிறது. தாளெங்கும் கங்குகள், விண்மீன்கள் மாதிரி. மெல்ல மங்கி கருமை நிறைகிறது திரையை.
திரைக்கதைக்கும், கதை நகர்வுக்கும் உயிர் கொடுத்த பல விசயங்களில் இந்த காட்ச்சியும் ஒன்று. அந்த காகிதத்தை வாங்க தனது உயிரையே பணயம் வைத்திருப்பான் சாலோமோன்.
செரினிட்டி படத்தில் ஈவு இறக்கமற்ற கொலைகாரனாக நடித்த சிவ்டல் எஜோபோர் இந்தப் படத்தில் ஒரு வயலின் இசைக்கலைஞராகவும் அடிமையாகவும் அசத்தியிருக்கிறார்.
அடிமைகளுக்கு சவுக்கடி, சாவு இதெல்லாம் சாதாரணம் என்கிற கேஸ். அதுவும் அடிமைப் பெண்களை அனுபவிப்பதை பைபிள் சரியென்று சொல்லீருக்கு தெரியும்ல என்பவன் அவன். சாலோமோனின் கொடூர நாட்கள் அவை. அங்கே பாட்ஸி எனும் பெண் அடிமையை சந்திக்கிறான். இருவருக்கும் ஒரு அழுத்தமான நட்பு உருவாகிறது.
எப்ஸின் கொடூரம் கடவுளுக்கே பொறுக்காது போயிருக்க வேண்டும். பருத்திப் புழு ஒன்று பரவ பண்ணை அழிகிறது. எப்ஸ் அடிமைகளை ஜட்ஜ் டர்னரின் பண்ணைக்கு குத்தகையில் அனுப்புகிறான். அங்கே கொஞ்சம் சுதந்திரமாக இருக்கிறான் சாலோமோன்.
குத்தகை முடிந்ததும் மீண்டும் எப்ஸின் பண்ணைக்கு வருகிறான். சக அடிமை ஒருவனிடம் என் நண்பனுக்கு கடிதம் ஒன்று இருக்கிறது அதை தபால் பெட்டியில் போட்டுவிட்டால் நான் விடுதலை அடைந்து விடுவேன் செய்கிறாயா என்கிறான். இதற்கு அவனுக்கு தனது (ஜட்ஜ் டர்னர் தந்தது) சிறு நகைகள் இரண்டையும் தருகிறான். அந்தப் பரதேசி எப்ஸிடம் போட்டுவிட்டுவிட பிரச்னை ஆரம்பம் ஆகிறது. லெட்டரா அப்படீன்னா என்ன என்று கேட்டுத் தப்பும் சாலோமோன் அந்தக் கடிதத்தை இருட்டில் ரகசியமாக எரிக்கிறான்.
சாலோமோனின் தேவதூதன் பாஸ்( சத்தியமாக பெயர்தான்). பாஸுக்கு எப்ஸின் கொடூரம் அருவருப்பாக இருப்பதால் சாலோமோனுக்கு உதவுகிறான்.
கடிதத்தை படித்த சாலொமோனின் நண்பர் அவனை மீட்டு குடும்பத்தில் சேர்க்கிறார். மனைவி அவளது கணவனை அறிமுகம் செய்கிறாள். பெயரனுக்கு சாலோமோன் என்று பெயரிட்டுள்ளதைப் நாயகன் பார்ப்பதோடு படம் முடிகிறது.
பதறவைக்கும் காட்சிகள்
முதல் பத்து நிமிடங்களில் ஓடை மாதிரி ஆரம்பிக்கும் படம் நாயகன் அடிமையானவுடன் நகரும் நிமிடங்கள் எல்லாமே ரெட் வையரா ப்ளூ வையரா வகைதான்.சாலோமோன் பண்ணைக்கு போவதற்கு முன்னாலேயே அடிமைகளின் வேதனைகளை அழுத்தமாக பதிவு செய்துவிடுகிறது படம். குடும்பத்தோடு இருக்கும் அடிமைகளை பிரித்து விற்பது, அனைவரையும் நிர்வாணமாக குளிக்க வைப்பது என அமெரிக்காவின் அருவருப்பான பக்கங்களை சமரசமின்றி திரையில் காட்டியிருக்கிறார் ஸ்டீவ் மேக்வீன். இவர் ஒரு கருப்பர் என்பதால் படம் அழுத்தமாக வந்திருக்கிறது.
பைபிள் அனுமதி
அடிமைப் பெண்களை அனுபவிப்பது பைபிள் கொடுத்த உரிமை என்பது எப்சின் வாதம். இது தொடர்பான காட்சிகள் எல்லாமே கொடூரம். குறிப்பாக கொடூரன் எப்ஸ்சயே கதறி அழவிடும் அடிமை ஒருத்தியும் உண்டு படத்தில்!அட எங்க மனுவும் இதைத்தான்பா சொல்றார். எல்லாப் பயலும் தனக்கு வேண்டிய மாதிரித் தான் எழுதி வைத்திருக்கான்
பாட்ஸி படும்பாடு சொல்லில் அடங்காதது. ஒருபுறம் எப்ஸ் மறுபுறம் அவனது மனைவியின் தாக்குதல். ஒரு கனமான சரக்கு பாட்டிலை எடுத்து முகத்தில் அடிக்கிறாள் அவள். பாட்ஸியின் முகத்தில் நிரந்தரமாய்த் தழும்பு.
பாட்ஸி ஒரு வில்லை சோப்பிற்காக வாங்கும் கொடூர சவுக்கடி பார்பவர்களுக்கு நிச்யமாய் ஒரு மனஅழுத்தத்தைத் தரும்.
நிச்சயமாக வயது வந்தோருக்கான படம் இது.
ஒளிப்பதிவு
கடிதத்தை எரிக்கும் காட்சி படமாக்கப்பட்ட விதம் ஒன்றே போதும். ஒரு எழுபது எம்.எம். திரையின் மையத்தில் ஒரு காகிதம் எரிகிறது. அணைகிறது. தாளெங்கும் கங்குகள், விண்மீன்கள் மாதிரி. மெல்ல மங்கி கருமை நிறைகிறது திரையை.
திரைக்கதைக்கும், கதை நகர்வுக்கும் உயிர் கொடுத்த பல விசயங்களில் இந்த காட்ச்சியும் ஒன்று. அந்த காகிதத்தை வாங்க தனது உயிரையே பணயம் வைத்திருப்பான் சாலோமோன்.
செரினிட்டி படத்தில் ஈவு இறக்கமற்ற கொலைகாரனாக நடித்த சிவ்டல் எஜோபோர் இந்தப் படத்தில் ஒரு வயலின் இசைக்கலைஞராகவும் அடிமையாகவும் அசத்தியிருக்கிறார்.
வசூலை மட்டுமல்ல விருதுகளையும் குவித்த படம் என்பது உங்களுக்கே தெரியும்.
சரி உண்மையான சாலோமோன் நார்த்தப் என்ன ஆனார். வேறு என்ன வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த அவர் தனது எஞ்சிய வாழ்க்கையை கறுப்பின மக்களுக்காக அடிமை முறை ஒழிப்பிற்காக செலவிட்டார்.
எதற்கும் பார்ப்போம் என்று தன்னைக் கடத்தியவர்கள்மீது ஒரு சட்டப் போராட்டத்தை துவங்கினார். அன்று நிலைமை ஒன்றும் சொல்லுகிற மாதிரி இல்லை. வெள்ளையர் நீதி கருப்பருக்கு மறுக்கப்பட்ட நாட்கள் அவை.
அவர் எழுதிய சுயசரிதம்தான் இன்று படமாக வந்திருக்கிறது.
எங்கே எப்படி இறந்தார் என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.
ஒரு தபா பாருங்க தப்பில்ல.
அன்பன்
மது
விமரிசனம் வாசிக்கும்போதே பதற வைக்குது !!உண்மையாக நிஜ வாழ்வில் இக்கொடுமைகளை அனுபவித்தவங்க என்ன பாடு பட்டிருப்பாங்க !!
ReplyDeleteஅவங்க திருந்தீட்டாங்க
Deleteநாமதான் இன்னும் மாறல...
நன்றி சகோதரி ...
இத்திரைப்படத்தைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. தங்களின் பதிவு மூலமாக முழுமையாக படம் பார்த்ததை உணர்ந்தேன். படம் பார்ப்பதைப் போலவே தங்களது பதிவு உள்ளது. நன்றி.
ReplyDeleteநீங்கள் பார்க்க வேண்டிய படம் முனைவரே.
Deleteஅழகிரி என்கிற எழுத்தாளரை நீங்கள் விக்கியில் பதிந்திருந்தீர்கள்.
அவரது மகன் திரு. டி.வி.எஸ். சோமு என்னிடம் சொன்னார்.
அவரிடம் சொன்னேன் இது முனைவரின் பணி என்று
நற்பணி தொடர்க
படித்தவுடன் உறையவைக்குது உங்கள் பதிவு. இது போன்ற படங்கள் தமிழ் வருவது இல்லை.
ReplyDeleteநன்றி..!
பெரியார் படத்தை சத்தியாராஜ் குஷ்பூவிற்காக பார்த்த சமூகம் நமது ...
Deleteஇந்த லெட்சணத்தில் தமிழில் படம் இப்படியா ...
இருபது மிலியன் டாலர்களில் ஒரு பங்குதாரர் பிராட் பிட் ஒரு முன்னணி நடிகர் இங்கு அப்படி யாரும் படம் எடுக்க துணிய மாட்டார்கள்.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் வாட்டகுடி இரணியன் என்கிற முயற்சியை சொல்லலாம், அதுவே பகிரதப் பிரயத்தனங்களுக்கு பின்னரே வர முடிந்தது.
வணக்கம்
ReplyDeleteதங்களின் திரை விமர்சனம் வழி இப்படம்பற்றிஅறியக்கிடைத்தது.. தங்களின் தேடலுக்கு எனது பாராட்டுக்கள் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோதர் ரூபன்
Deleteநம்ம ஊர் ஆயிரத்தில் ஒருவன் கதை போல இருக்கிறதே :)
ReplyDeleteத ம 2
இதை விட இந்தப் படத்தை கேலி செய்ய முடியாது... ஹ ஹா ஹ
Deleteபார்த்தீங்கன்னா நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.
அது எப்படி மது, எந்த இடத்திலும் தமிழிலோ ஆங்கிலத்திலோ படத்தின் தலைப்பே வராமல் எழுதியிருக்கிறீர்கள்? ஒருவேளை படத்தின் பெயரே HISTORY OF A SLAVE என்பதுதானா? படிக்கும்போதே படத்தைப் பார்த்தாக வேண்டும் என்று எனக்கொரு பரிதவிப்பை ஏற்படுத்திவிட்டீர்கள் எங்க பார்க்குறது? சிடி கடையிலா நெட்டிலா? இந்த விவரத்தையும் தயாரிப்பில் பங்களிப்பு விவரங்களையும் சேர்த்து எழுதினா எங்களுக்கும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்ல? பகிர்வுக்கு நன்றி மது.
ReplyDeleteகுறிப்பிட்டதற்கு நன்றி
Deleteஆனால் முதல் படத்தில் இருகிறதே தலைப்பு
இருப்பினும் இப்போது கொடுத்துவிட்டேன்.
படம் உங்கள் வீட்டிருக்கு வரும் எனது குவியலில் தேடவேண்டும் ...
நிச்சயம் பார்க்கிறேன் தோழர்.
ReplyDeleteத ம கூடுதல் 1
விமர்சனம் வழக்கம் போல அருமை! பயங்கரமான படமா இருக்கும் போல....
ReplyDeleteநினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சம் நடுங்குகிறது நண்பரே
ReplyDeleteஎன்ன வொரு வாழ்க்கை
தம 4
ReplyDeleteநன்றி தோழர்
Deleteவிமர்சனமே மனசு கலங்குகிறது...
ReplyDeleteபார்க்க வேண்டிய படம். பதறவைக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில் வெள்ளை போலீஸ்காரரர் கருப்பின ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் கழுத்தில் கால் வைத்து நெறித்துக் கொன்ற நிறவெறி நினைவுக்கு வருகிறது.
ReplyDelete