மெமரி கார்ட் 2 memory card 2

ஒரு காணொளி
இப்படி ஒரு குழந்தை உண்மையிலேயே பேசினால் எப்படி இருக்கும். ஆஃப்ரா நன்றாக கருத்தை உள்வாங்கி பேசியிருக்கிறாள். ரபீக் அவர்களின் தயாரிப்பு அல்லவா?
ஒரு தபா பாருங்க


ஒரு திரைப்படம்
சீல் பாட்ரோல் 2014


முன்னாள் நேவி சீல் ஒருவன் ப்ளாக் ஜாக் என்கிற கூலிப்படையில் சேர்ந்து ஆபத்தில் இருக்கும் ஒரு விஞ்ஞானியையும் அவரது மகளையும் மீட்க விழைகிறான். கதை என்னவோ ஸ்ட்ராங் ஆனால் படம் படு மொக்கை.


ப்ரீடேட்டர் போல வந்திருக்க வேண்டிய படம், காண மயிலாட என்கிற பாடல் தான் நினைவுக்கு வந்தது. எவ்வளவு உழைப்பு பொருள் செலவு இருந்தும் ஏன் இப்படி சொதப்புகிறார்கள்?

எனக்கு நேர விரயம்தான்.

படத்தின் மிகப் பெரும் பலவீனங்களில் ஒன்று துருத்தும் இசை, இன்னொன்று காயலான் கடை சரக்காக வந்து நிற்கும் அந்த மிருகம். போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளில் கோட்டை விட்டுவிட்டார்கள். அல்லது இந்தப் படத்துக்கு இது போதும் என்று தயாரிப்பாளர் முடிவெடுத்திருக்கக் கூடும்.
**********
கிரிட் மென்பொருள்
இப்படி ஒரு மென்பொருள். பெரிய விசயம்தான் லெட்சக்கனக்கான வரிகளில்  கோடிங் எழுத வேண்டாம் இனி. கிரிட் வாழ்க ...


*****
மீட்பர்கள்
பனிப் பிரதேசங்களில் கோடை காலத்தில்  காய்ந்து போன பாலை நிலங்களை வளப்படுத்தும் ஒரு அற்புத முயற்சி. வெங்கட் நாகராஜ் அவர்களின் அறிமுகம்
சப்போர்ட் பண்ணலாமே.

***********
நிகில் நிகழ்வு ஒன்று
கந்தர்வகோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 22/11/20134 அன்று வாழ்வியல் திறன் பயிற்சிகள் நடந்தது. நண்பர் மணிகண்டன் கந்தர்வகோட்டை அரிமாக்களை தொடர்புகொண்டு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.

பயிற்சியாளர்கள் தயானந்தன், தேவராஜன், நீதிராஜன், விஜய் குப்தா, முத்துக்குமார், குமரகுரு என்கிற பெரும் பட்டாளம்  திரு ஆர்.ஆர்.கணேசன் அவர்களின் தலைமையில் பயிற்சிகளை வழங்கினர்.

அற்புதமான மாணவிகள் தயா அண்ணனிடம் ஒரு குழந்தை வந்து சொல்லியிருக்கிறது. "வருஷ ஆரம்பத்திலேயே வந்திருக்கலமில்ல எங்களுக்கு இன்னும் பயனுடையதாக இருந்திருக்கும். அடுத்த வருசமாவது ஆரம்பத்திலேயே வாங்க. "

இது தான் பரம சந்தோசம்.

பயிற்சியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு சாதித்துவிட்டார்கள். வாழ்த்துக்கள் தோழர்களே.

சில படங்கள்
வலது புரம் முதலில் இருப்பவர் திரு.மணிகண்டன்.

எஸ்.பி.கெ குமார குரு 

மாணவியர்களில் ஒரு பகுதி 

தேவா ஜி, முத்து ஜி, ஆர்.ஆர்.ஜி 
வணக்கம்
மீண்டும் சந்திப்போம்
மது 

Comments

  1. நல்ல விடயங்கள் உங்கள் மெமரிக் கார்ட் மூலம் அறிந்தேன்!
    வியப்பும் மகிழ்வுமாக அருமை!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. ஆஃப்ரா அருமை! குரல் சுண்டி இழுக்கின்றது. மனதும் வலிக்கின்றது! "நீ (ங்கள்) சாதாரணக் குழந்தை (கள்) அல்ல. தேவதை!/தேவன்!(கள்)

    மொக்கப்படத்திற்கு எவ்வளவு டாலர்கள்!? (னம்ம ஊரிலயும்தான்) அதை இந்தக் குழந்தைகளுக்குச் செலவழிக்கலாமோ?!

    ஐஸ் மேன் பற்றி வெங்கட் ஜி மற்றும் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் பாசிட்டிவ் செய்தியிலும் வாசித்தோம்..இங்கு காணொளி! அருமை.

    நிகில்! பாராட்டுக்கள்! வாழ்த்துகக்ள்! இன்னும் சேவை பெருகித் தொடர....

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா வருகைக்கும் கருதுக்கும்

      Delete
  3. வியப்பான விசயம் தோழரே...

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யா,

    மெமரி கார்ட் 2 பார்த்தேன்...

    பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சில் உள்ள கனவுகள்...
    எண்ணங்கள்... ஏக்கங்கள்... எதிர்பார்ப்புகள்... ஏமாற்றங்கள்...
    உரிமைக்குரல்கள்... அவர்களுக்கு உதவ முன்வரும் சமூக
    ஆர்வலர்கள்... நாளை அவர்கள் வாழ்வில் சந்தோசம் துளிர்விடும்...
    என்ற நம்பிக்கைகளை பிரதிபலிக்கச் செய்திருக்கிறது....
    Don Bosco Institute of Communication Arts (D B I C A) வழங்கிய

    ‘I am child’ ஆவணப் படம் . அதில் குரல் கொடுத்த அப்ராஸ் குழந்தையிடம் சோகம் இழையோடியது. குழந்தைகளின் புகைப்படங்கள் அருமை.


    பனிப் பிரதேசங்களில் கோடை காலத்தில் காய்ந்து போன பாலை நிலங்களை வளப்படுத்தும் ஒரு அற்புத முயற்சி Ice Stupa Artificial Glacier ஐஸ் வைத்ததைக் கண்டு அசந்து போனேன்.

    கந்தர்வகோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிகில் நிகழ்வு கண்டேன்...

    மிகுந்த மகிழ்ச்சி.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அய்யா ...

      Delete
  5. //"வருஷ ஆரம்பத்திலேயே வந்திருக்கலமில்ல எங்களுக்கு இன்னும் பயனுடையதாக இருந்திருக்கும். அடுத்த வருசமாவது ஆரம்பத்திலேயே வாங்க. "//
    படிக்கும்போதே மனம் மகிழ்ச்சி அடைகின்றது நண்பரே

    ReplyDelete
  6. நன்றி தோழர் ..

    ReplyDelete
  7. பிஞ்சுக் குழந்தைகளின் குரல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது ,அந்த குழந்தைகளின் கனவு நிறைவேற பாடுபடுவோம் .ஸ்கிரிப் எழுதிய ஹாரிஸ் பாராட்டப் பட வேண்டியவர் !மெமரி கார்ட் மூலம் பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுகள் !
    த ம 3

    ReplyDelete

Post a Comment

வருக வருக