பிரியங்கா |
முகநூல் நண்பர் திரு.ரபீக் அவர்களின் பதிவொன்றைப் பகிர்கிறேன்.
பிரியங்கா! - யார் இவர்?
முகநூலில் மட்டுமல்ல என்னால் முடிந்தவரையிலும் முகத்திற்கு நேராகவும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன்.இந்தப் பெயரில் உள்ள எல்லாப் பிரபலங்களையும் தெரிந்திருப்பவர்களுக்கு, பிரபலப் படுத்தவேண்டிய இவரைத் தெரிந்திருக்கவில்லை.
சிலநாள்களுக்கு முன்பு ஒரு அமெரிக்கப் பேச்சாளரின் பேச்சின் மூலம் தான் எனக்கும் இந்தப் பிரியங்கா தெரியவந்தார்.
சரி, கல்யாணக்கோலத்தில் இருக்கிறாரே? ஆம் திருமணத்திற்கு அடுத்த நாளே கணவன் வீட்டிலிருந்து பிறந்தவீட்டிற்குத் திரும்பிய பிரியங்காவை இரண்டு மாதங்கள் கழித்து அழைத்து வந்தபோது ஊரே திரண்டு உற்சாகமாய் வரவேற்றபோது எடுத்த படமாம் இது.
கோபித்துக்கொண்டு போனவரை ஊர்கூடி அழைத்ததா? அப்படி என்ன செய்துவிட்டார் என்று வியப்பாய் இருக்கிறதல்லவா?
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரியங்கா, தனது 19ம் வயதில் (2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி) உத்திரப்பிரதேசத்தின் கொரக்பூர் மாவட்டத்தில் உள்ள விஷ்னுப்பூர் குர்து கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜித் என்பவரை மணக்கிறார்.
மணநாளின் மறுநாள் அதிகாலை நான்கு மணி. அறைக்கதவு தட்டப்படுவதறிந்து, பிரியங்கா கதவைத் திறக்கிறார்.வாசலில் நின்றிருந்த் மாமியார், “பிரியங்கா, பொழுது புலர்வதற்குள் காட்டுப் பக்கம் போய்க் காலைக்கடன்களை முடித்துவிடு.” என்கிறார்.“என்னது காட்டுப்பக்கமா?, இந்த இருட்டிலா?.. எனக்குப் பயமாக இருக்கிறது. நான் டாய்லெட்டி…..” முடிப்பதற்குள் மாமியார் இடைமறித்து,”அதெல்லாம் இங்குக் கிடையாது. நாங்களெல்லாம் காட்டுப்பக்கம் தான் போவோம். சீக்கிரம் போய்வா “ என்று கட்டளையிடுகிறார்.
செய்வதறியாது நின்றிருந்த பிரியங்கா, விடிந்ததும் கணவனை அழைத்து, “நீங்கள் எப்போது உங்கள் வீட்டில் கழிப்பறை கட்டுகிறீர்களோ, அப்போது வந்து என்னை அழைத்து வாருங்கள். நான் என் அம்மா வீட்டிற்குப் போகிறேன்” என்று கிளம்பிவிட்டார்.
அந்த அமெரிக்கப் பேச்சாளர்,.
’இது போன்ற இருள்நேரத்தில் பெண்கள் காட்டுப்பகுதிக்குச் சென்றால், குடிகாரர்களின் தொல்லை, விசப்பூச்சிகளின் பயம் மற்றும் அம்மாநில அமைச்சர் ஒருவரே சொன்னது போலக் கற்பழிப்பு போன்ற கொடுஞ்செயல்கள் நடப்பதற்குக் காரணியாய் அமைந்துவிடுகிறது. மேலும் இந்தியாவில் ஒரு சராசரி கிராமத்துப் பெண் கழிப்பறை இல்லாத காரணத்திற்காகக் கணவன் வீட்டை விட்டு வெளியேறுவது இதுவரை நடந்திராத ஒன்று என்று சொன்னதை இங்கு நினைவுகூற வேண்டியது அவசியமாகிறது.
இந்தச் சம்பவம் ஊர் முழுக்கப் பரவ ஆரம்பிக்கிறது. பேசப்படுகிறது.
வடஇந்தியப் பகுதிகளில் சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தரும் ‘சுலப் இன்டர்நேஷ்னல்’ என்ற அமைப்பு இந்தச் செய்தியினை அறிந்து, உடனடியாக அந்தக் கிராமத்திற்கு வருகிறது. பிரியங்காவின் வெளிநடப்பு உத்தியை வெகுவாகப் பாராட்டி, அவரின் வீட்டோடு ஒரு கழிப்பறையினைக் கட்டிக் கொடுத்தது. மேலும் இது போன்ற ஒரு புரட்சியான வெளிநடப்பு செய்து கிராமத்தில் கழிப்பறையின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக ரூபாய் இரண்டு லட்சம் பரிசும் வழங்கிக் கௌரவித்திருக்கிறது.
”இப்போது பிரியங்கா, வீட்டுவேலைகள் போகக் கிடைக்கும் நேரத்தில், கிராமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் இதுமட்டுமன்றி அருகில் உள்ள வேறுபல கிராமங்களுக்கும் சென்று கழிப்பறையின் அவசியம், சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார். இவரது முயற்சியினால் கிராமத்தில் நிறைய பேர் வீட்டோடு கழிப்பறையினை அமைத்திருக்கிறார்கள் . ’சுலப் இன்டர்நேஷ்னல்’ அவரைத் தனது விளம்பரத் தூதுவராக நியமித்திருக்கிறது. நேரம் கி்டைக்கும் போது நானும் அவருடன் சென்று உதவிபுரிகிறேன்” என்று பெருமையுடன் சொல்கிறார் பிரியங்காவின் கணவர் அமர்ஜித்!
”இனிவரும் காலங்களில் பஞ்சாயத்துத் தேர்தல் முதல் பார்லிமெண்ட் தேர்தல் வரையிலும் போட்டியிட விண்ணப்பிப்பவர்கள், எந்த அளவு சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டும்” என்கிறார் பிரியங்கா முத்தாய்ப்பாக.
அடடா, இவரைப் பற்றி அறியாமல் இருந்து விட்டோமேயென வருந்துகிறீர்களா?
என்ன செய்வது, நாம் நினைக்கும் பிரபலங்கள் தும்மினால் கூட மருந்துவமனையில் அனுமதி, கவர்னர் நலம் விசாரித்தார் என்று‘பில்ட்-அப்’ கொடுக்கப்பதை, அவர்களின் பேட்டிகள், பேச்சுகள் எல்லாம் ஏதோ இமாலய சாதனை புரிந்துவிட்டவர்கள் ‘ரேஞ்சு’க்கு உயர்த்தப்படுவதை நாம் புறக்கணிக்கத் தவறியதால், சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவோர் வெளிச்சத்திற்கு வராமல் புறக்கணிக்கப்படுவதற்கும் நாமே காரணமாய் அமைந்து விடுகிறோம் என்பதே உண்மை.
@Rafeeq----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: பிரியங்கா - யார் இவர் என்று நிலைத்தகவலிட்டிருந்த போது பதிலளித்த / கலந்து கொண்டோர் (upto 5:41 PM GST ) இந்த நோட்டில் TAG செய்யப்பட்டுள்ளனர்.
நண்பர் ரபீக் அவர்களின் முகநூல் பகிர்வு
செய்தித்துறையில் மிக நீண்டகால அனுபவம் கொண்ட ரபீக் அவர்களின் இந்தப் பதிவு நமது இந்தியாவிற்கு தேவையானது. நாட்டின் அவலங்களை வெளிச்சப் படுத்துவதோடு மட்டுமின்றி அதற்கான தீர்வையும் தருவதால் பகிர்ந்தேன்
அன்பன்
மது
பிரியங்கா பாராட்டிக்கு உரியவர்
ReplyDeleteநன்றி தோழர்...
Deleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை - பிரபலங்களைப் பற்றிய செய்திக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே தவிர இம்மதிரியான செய்திகளுக்கு இல்லை என்பது சுடும் நிஜம். மக்களும் இம்மாதிரியான செய்திகளை படிக்காமல் இருப்பது அதைவிட கொடுமை.
ReplyDeleteநன்றி உண்மையானவரே.
Deleteஅருமை!
ReplyDeleteஊருக்கு ஒரு பிரியங்கா அவசியம் இருத்தல் வேண்டும்!
நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் சகோ!
நன்றி சகோதரி
Deleteநல்லதொரு பதிவுதான் தோழரே பிரியங்கா போன்றவர்களை பாராட்ட வேண்டும்
ReplyDeleteகீழே மதுரை விழா பதிவு
http://killergee.blogspot.ae/2014/11/blog-post.html?showComment=1415704927486#c8574430856310576796
படங்களின்
Deleteநேர்த்தி அருமை
திரு ரபீக் அவர்களின் நடையில் கரந்தையார் தென்படுகிறார் தோழர்.
ReplyDeleteஇந்தக் கழிவறையை நம்நாட்டில் அறிமுகப்படுத்தப் பிரஞ்சுகாரர்கள் பட்ட பாட்டை அனந்தரங்கம பிள்ளையின் நாடகுறிப்பு ஆவணப்படுத்தியுள்ளது.
சமுதாயப் பெரிய மனிதர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பொது இடங்களில் இது போல அசுத்தப் படுத்தக் கூடாது என்கிற பிரெஞ்சு சட்டம் பெற்றது.
கடுமையாக்கப்பட்ட சட்டத்தில் “வெளிக்கு“ சென்ற பல ஆயிரம் பேர் பிட்டத்தில் பிரம்படி பெற்றனர்.
தாங்கள் ஆண்ட பகுதியில் சட்டத்தைக் கடுமையாக்கி இந்தியாவில் கழிவறைகளின் தந்தையராகப் பிரஞ்சு காரர்களே இருந்திருக்கின்றனர் எனத் தோன்றுகிறது.
சாதாரண மக்கள்தான் இப்படி..
அந்தக் காலத்து அரசர்கள் வெளிக்குப் போன கதை சுவாரசியமானது!
தங்களின் பகிர்வு புதிய தகவலை அறியத்தந்தது.
நன்றி
அரசு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நம்ம அரசியல்வாதிகள்..
Deleteவிரிவான தகவலுக்கு நன்றி...
ஜூவியில் படித்த விசயங்கள் நினைவில் வந்தன .
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இல்லையே தோழர்?
ReplyDeleteதமிழ் மனம் தற்காலிகமாக வேலை செய்யவில்லை இன்று காலை..
Deleteமாலை சரியாகிவிட்டது
த ம 2
ReplyDeleteநானும் படித்தேன் சகோ...வித்தியாசமான பெண்..த.ம.ஓட்டு 3
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteபாராட்டுக்குரிய பெண்மணி! செய்தித்தாள்களில் வந்தபோது படித்தேன்! ஆனால் எனக்கும் பெயர் நினைவில் இல்லை! நன்றி!
ReplyDeleteநன்றி ஸ்வாமிகள்
Delete//இனிவரும் காலங்களில் பஞ்சாயத்துத் தேர்தல் முதல் பார்லிமெண்ட் தேர்தல் வரையிலும் போட்டியிட விண்ணப்பிப்பவர்கள், எந்த அளவு சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டும்” என்கிறார் பிரியங்கா முத்தாய்ப்பாக.// மிக சரியாக சொல்லியிருக்கார் பிரியங்கா ..!!நல்ல பகிர்வு ..நன்றி சகோ
ReplyDeleteநன்றி சகோதரி
Deleteஇந்த தகவல் தெரியும். ஆனா அந்த பொண்ணு பெயர் இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன்.
ReplyDeleteநன்றி கவிஞரே.
Delete““மகாசுந்தர் வலைப்பூவில் ‘மது‘வைக் காணோம்!““
ReplyDeletehttp://mahaasundar.blogspot.in/2014/11/blog-post.html
நல்ல தகவல்.!பிரியங்கா என்ற தீப்பொறி அந்தப் பகுதிக்கே ஒளிகொடுத்துவிட்டது.
ReplyDeleteஅந்த ஒளி நாடெங்கும் பரவவேண்டும்..உண்மையானவர்கள் விளம்பரத்துக்குகாக எதையும் செய்வதில்லை.உலகமும் அவர்களை உடன் அங்கீகரிப்பதில்லை என்பது சாபக்கேடு.!?.பட்டுக்கோட்டையின் வரிகள் தான் நினைவுக்குவருகின்றன.
"உண்மை ஒருநாள் வெளியாகும் -அதில்
உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்.
பொறுமை எல்லாம் புலியாகும் -அதில்
பொய்யும் புரட்டும் பலியாகும்.!"
...அது சரி..எண்ணப் பறவையில் ஏன் மது இல்லை என "வெண்பா வேந்தர்" கேட்கிறார்..?
அண்ணா வருக வணக்கம்
Deleteநன்றி
செய்தித்தாளிலோ வேறு எதிலோ அண்மையில் படித்த நினைவு.
ReplyDeleteபகிர வேண்டிய செய்தி. பிரியங்கா இந்தப் பிரியங்கா வையே முன்னுதாரணமாகக் கொண்டு, கட்சியையும் நாட்டையும் சுத்தப்படுத்தலாம். பகிர்வுக்கு ந்ன்றி மது.
நன்றி அண்ணா.
Deleteபாராட்டப்பட வேண்டிய பெண்....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி தோழர் குமார்.
Deleteஅட இப்போதுதான் நண்பர் விமலின் பதிவில் கழிப்பறை குறித்த விசயங்களை படித்துவிட்டு இங்கே வந்தால், நீங்கள் பிரியங்கா மூலம் அதுகுறித்து கூறியுள்ளீர்கள்...
ReplyDeleteவிமல் அவர்களின் சுட்டி
http://pazhaiyapaper.blogspot.in/2014/11/toilet-and-sanitation.html
நன்றி சீனு.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteபிரியங்கா! - யார் இவர்? முகநூல் நண்பர் திரு.ரபீக் அவர்களின் பதிவொன்றைப் பகிர்ந்தததை படித்தறிந்தேன்.
தமிழகத்தில் அநேக கிராமங்களில் வீடுகளில் கழிவறைகள் இல்லாத நிலைமைதான் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
கிராமத்துப் பெண் கழிப்பறை இல்லாத காரணத்திற்காகக் கணவன் வீட்டை விட்டு வெளியேறுவது இதுவரை நடந்திராத ஒன்றுதான். பிரியங்காவை பெருமைப்படுத்திய ’சுலப் இன்டர்நேஷ்னல்’ அவரின் வீட்டோடு ஒரு கழிப்பறையினைக் கட்டிக் கொடுத்தது. மேலும் இது போன்ற ஒரு புரட்சியான வெளிநடப்பு செய்து கிராமத்தில் கழிப்பறையின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக ரூபாய் இரண்டு லட்சம் பரிசும் வழங்கிக் கௌரவித்திருக்கிறது எண்ணி அந்த அமைப்பிற்கு நன்றியும்...பிரியங்ககாவுக்கு பாராட்டையையும் தெரிவித்துக் கொள்வோம்.
பிரியங்காவை பற்றி நான் படித்துள்ளேன். இவரைத் தாங்கள் அறிமுகப்படுத்திய விதம் சிறப்பாக உள்ளது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபெண்கள் சமுதாயத்திற்கே முன்னுதாரணமாக விளங்கும் பெண்! பாராட்டி, வாழ்த்தப்பட வேண்டியப் பெண்! எத்தனை கிராமங்களில் பெண்கள் நம் தமிழகத்திலும் கருவேலங்காட்டை நாடிச் செல்கின்றனர்! இந்தப் பிர்யங்கா கண்டு கொள்ளப்பட்டாரே! விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதற்கு! அதுவே மிகப் பெரிய விஷயம்! வாழ்த்துவோம்! அவரை!
ReplyDeleteஇப்பெண்ணைப் பற்றியும், கழிப்பறையின் அவசியத்தை வலியுறுத்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு மிகப் பெரிய அழகான விரிவான கட்டுரை, பல மாதங்களுக்கு முன் பதிவர் விவரணம் நீலவண்ணன் அவர்கள் அருமையாக எழுதியிருந்தார். தற்போது அவரை வலைத்தளத்தில் காணவில்லை. ஏனென்று தெரியவில்லை. மிகவும் அருமையான பதிவர்! (தங்களைப் போன்று!)
பிரியங்கா என்றவுடன் நல்ல காலம் எங்களுக்கு வேறு பிரியங்கா எல்லாம் நினைவுக்கு வரவில்லை! பக்கத்து வீட்டுக் குட்டிப் பெண்தான் நினைவுக்கு வந்தாள்!