ஹாலிவுட்காரர்களுக்கு இன்னாப்பா ஆச்சு என்று கேட்க வைக்கும் இன்னொரு காமிக்ஸ் அடாப்சன் டீனேஜ் மியுடன்ட் நிஞ்சா டர்டில்ஸ். படம்தான் பாப்பாக் கதை. வசூல் அதிரடி சரவெடி. 125 மிலியன் யு எஸ் டாலர்களில் தயாராகி 434.5 மிலியன் யு.எஸ் டாலர்களை வாரிச்சுருட்டியிருக்கிறது.
ஒரு சோதனைச் சாலையில் உயிர்வேதியல் பரிசோதனைகளுக்கு உட்படும் நான்கு ஆமைகள் மேம்படுத்தப்பட்ட ஆற்றலை அடைகின்றன. மனிதர்கள் மாதிரிப் பேசுவதோடு இல்லாமால் ஒரு கண்டைனர் ட்ரக்கையே தூக்கி வீசும் வலிமையைப் பெறுகின்றன. இவர்களை ஸ்பிலின்டர் என்கிற ஒரு மனித வடிவத்தை அடைந்த எலி நிஞ்சா வீரர்களாக மாற்றுகிறது.
இதுமாதிரிப் படங்கள் வில்லிங் சஸ்பென்சன் ஆப் டிஸ்பிலீப் வகை. எனவே லாஜிக்கேல்லாம் பார்க்காம ரசிக்கலாம்.
ஒரு காட்சியில் உடலில் புகுந்த துப்பாக்கி ரவைகளை உடலை முறுக்கி வெளிய தள்ளும் ஆமைகள் நமது ஹீரோக்களை விட அதிகம் விசிலைப் பெறக்கூடும்.
தொடரும் கண்டைனர் சேசிங் காட்சி நம்ம ஆட்கள் பார்த்தால் அரண்டுபோவார்கள். ஒரு பெரும் பனிமலைச் சரிவில் உருளும் கண்டைனர் லாரி அதன் கீழே ஆக்சன் சடுகுடு விளயாடும் ஆமைகள், ஐ ஆல்வேஸ் வான்டட் டு டூ திஸ் என்று ஒரு ஹம்வீக்கு கீழ கழியைக் கொடுத்து அதை நெம்பி எறியும் காட்சி, மைய விலக்கு விசையுடன் பறந்து இன்னொரு ஹம்வீயை காலிசெய்யும் காட்சி என நாம்ம ஆட்கள் யோசிக்காத கிளர்வூட்டும் ஆக்சன் தொகுப்பு.
ஆமை சண்டை போடும் அதை நாங்க காசு கொடுத்து தியேட்டரில் போய்பார்ப்போமாக்கும் என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் இது நிச்சயம் உங்களுக்கான படம் அல்ல.
பார்த்தால் அதற்காக வருத்தப்பட தேவைஇல்லாத படம்.
கிளைமாக்ஸில் சரிந்து சுழன்று விழும் கோபுரக் கம்பிகளிடையே அமர்ந்து சாகப் போகிறோம் என்று உணர்ந்தவுடன் ஆமைகள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் பாவமன்னிப்பு அறிக்கை செமை காமெடி.
ரகளையான படம்.
குழந்தைகள் ஒருமுறைப் பார்க்கலாம்.
கொஞ்சமாக இருந்தாலும் படத்தைப் பற்றி நிறைவான கருத்து...
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.
நன்றி அய்யா.
Deleteநன்றி நண்பரே
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteTeenage Mutant Ninja Turtles-தங்களின் விமர்சனம் படித்தேன். ஆமை முயல் கதைதான் கேட்டிருக்கிறோம். ஆமை அதீத ஆற்றலைப் பெற்று ஸ்பிலின்டர் என்கிற ஒரு மனித வடிவத்தை அடைந்த எலி நிஞ்சா வீரர்களாக மாற்றி செய்யும் அட்டகாசங்களை... காமிக்ஸ் போன்றவற்றை விளக்கமாக கூறியது படம் பார்ப்பதைப் போல சொல்லியிருந்தீர்கள்...!
நன்றி.
நன்றி அய்யா.
Deleteஆமையின் அட்டகாசங்களை அதிசயிக்க வைத்ததை விட ,இந்த படம் வாரிக்குவித்த வசூல் அதிசயிக்க வைக்கிறது :)
ReplyDeleteத ம 1
வணக்கம் பகவானே
Deleteநன்றி
நல்லதொரு அலசல் தோழரே...
ReplyDeleteநன்றி தோழர்
Deleteமுன்பெல்லாம் ஆனந்தவிகடனில் இதே மாதிரி ஹாலிவுட் பட விமர்சனங்களை படித்து இருக்கிறேன்! இப்பொது நீங்கள் அசத்துகிறீர்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteநன்றி ஸ்வாமிகள்
Deleteஅருமையான விமர்சனம் நண்பரே..
ReplyDeleteநன்றி தோழர்
Deleteபார்த்தேன், ரசித்தேன். நன்றி.
ReplyDeleteநன்றி முனைவரே
Deleteவழக்கம் போல அருமையான நகைச்சுவை இழையோடும் விமர்சனம்!
ReplyDelete