மெமரி கார்ட் 3

ஒரு சிறுகதைத் தொகுப்பு 

நந்தன் ஸ்ரீதரன் ஒரு அற்புதமான கவிஞர், நேர்த்தியான எழுத்துக்குச் சொந்தக்காரர். அவரது சிறுகதைத் தொகுப்பு தாழி என்கிற பெயரில் இப்போது நிலமிசைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது.


நான் தொகுப்பை ஸ்பரிசிக்க கிளர்வுடன் காத்திருக்கிறேன். 

முகநூல் தோழர் ஷான் கருப்புசாமி அவர்களின் நிலைத் தகவல் ஒன்று

ஒரு முகநூல் பிரபலத்தின் மிக நெருங்கிய உறவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு அவரே காரணமென்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதைப் பார்க்கிறேன். அது உண்மையாக இருக்கக் கூடாதென்று ஆவல். ஓடிவந்து குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அது பேரிடியாக இருக்கும். தன்னை நம்பி வீட்டுக்குள் அனுமதித்த உறவினரிடம் பணம் திருடிய பிரபலம் ஒருவரை இங்கே விஷயமறியாமல் பலர் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன். குறைந்த காலத்தில் நிறைய நண்பர்களைப் பெற்று ஞானி என்று கொண்டாடப்பட்ட என் அண்ணன் ஒருவர் இன்று மீண்டும் மதுவின் பிடியில் ஆழ்ந்துவிட்டார். ஊருக்கு ஆயிரம் புத்திமதிகள் சொன்னவர் இன்று தந்தையையும் மகனையும் அம்போவென்று விட்டு சாலையில் உருண்டு கிடக்கிறார். அது அவர் தனிப்பட்ட விஷயம் என்றாலும் அவரை நம்பி முகநூலில் நட்புக் கொண்டாடிய அனைவரும் மனதளவில் எத்தனை பாதிக்கப்பட்டு என்னிடம் வருந்தினார்கள் என்று அறிவேன். அது என்னுடைய தனிப்பட்ட வருத்தத்தைக் காட்டிலும் அதிக வேதனையாக இருந்தது. இது மாய உலகம் நண்பர்களே.. நாம் எப்படியாகத் தெரிய விரும்புகிறோமோ அதைத்தான் வெளியே தெரிய அனுமதிக்கிறோம். ஒவ்வொருவரும் அப்படித்தான். சிறிதளவு எல்லோரையும் நேசியுங்கள், சிறிதளவு எல்லோரையும் சந்தேகியுங்கள். என்னை உட்பட. காயங்களின் ஆழங்களாவது குறையும்.


ஒரு அறிவிப்பு

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
நிகழ்த்தும்
மக்கள் கலையிலக்கிய விழா
நாள்-3-1-2015
நேரம்- பிற்பகல்-3-00 மணி
இடம்-ஏர்வாடி,குட்டப்பட்டி- அஞ்சல்,மேட்டூர்-வட்டம், சேலம்-மாவட்டம்-636453
அமர்வு-1- பிற்பகல்-3-00 மணி
களரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை
ட்டிஜிருடு- ஆஸ்திரேலிய பழங்குடி இசை-குமார் அம்பாயிரம்
பொடோ-அஸ்ஸாமிய பழங்குடியினர் நடனம்- களரி கூத்துப்பள்ளி
மாணவர்
அமர்வு-2- பிற்பகல் 3-30 மணி
நூல் வெளியீடு
மாயப்பட்சி-கவிதைப்பிரதி-பா.ராஜா
மூன்றாம் துலுக்கு-சிறுகதைப்பிரதி-மயூரா ரத்தினசாமி
அழிபசி- கவிதைப் பிரதி- தவசிக்கருப்பசாமி
நிகழ்வில்.....
அம்மாபேட்டை கணேசன்
கோணங்கி
புது எழுத்து மனோன்மணி
ஸ்ரீநேசன்
க.பெரியசாமி
நக்கீரன்
இசை
கனகு
அமர்வு-3 பிற்பகல் 4 மணி
கூத்துச்செம்மல் விருது பெறுவோர்
----------------------------------------------
கலியப்பெருமாள்-மிருதங்கக் கலைஞர்-அடுக்குப்பாறை
பரமசிவம்-கூத்துக்கலைஞர்-எலிமேடு
தங்கவேலு-மிருதங்கக்கலைஞர்-செல்லமுடி
குருசாமி (எ)குண்டுக்கண்ணன்- கூத்துக்கலைஞர்-புள்ளாக்கவுண்டம்பட்டி
பானுமதி-கூத்துக்கலைஞர்- எலச்சிப்பாளையம்
முனுசாமி-கூத்துக்கலைஞர்-நல்லூர்
ஜெகனாதன்- கூத்துக்கலைஞர் -சீரகாப்பாடி
நாகப்பன்- கூத்துக்கலைஞர்-பாரப்பட்டி
கருணாகரன்-கூத்துக்கலைஞர்-எலச்சிப்பாளையம்
மாதேஸ் -கூத்துக்கலைஞர்-எலச்சிப்பாளையம்
சேகர்-கூத்துக்கலைஞர்-எலிமேடு
-----------------------------------------------------------
கலைச்சுடர் விருது பெறுவோர்
வெற்றிவேல் -கூத்துக்கலைஞர்-எலச்சிப்பாளையம்
பிரகாஷ்-கூத்துக்கலைஞர்- அத்தனூர்
தங்கமணி-கூத்துக்கலைஞர்- எலச்சிப்பாளையம்
சீனிவாசன்-கூத்துக்கலைஞர்-கோழிக்காட்டானூர்
மயில்சாமி-மிருதங்கக்கலைஞர்-துத்திப்பாளையம்
செங்கோட்டுவேல்-கூத்துக்கலைஞர்-துத்திப்பாளையம்
மோகன்குமார்-கூத்துக்கலைஞர்-திருச்செங்கோடு
அருள் குமார்-கூத்துக்கலைஞர்-எலிமேடு
பிரபு-கூத்துக்கலைஞர்-நல்லூர்
விஜயவர்மன்-மிருதங்கக்கலைஞர்-எலச்சிப்பாளையம்
------------------------------------------------------------------------
கூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்
இளவல் பொ-கவின் (எ) பசுபதி-மிருதங்கக்கலைஞர்
-----------------------------------------------------------------------------
அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது பெறுவோர்
ரெட்டியார்(எ)ராசேந்திரன்-கூத்துக்கலைஞர்- சுமைதாங்கி
சேகர்-மிருதங்கக்கலைஞர்-கூடலூர்
----------------------------------------------------------------------------
அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது பெறுவோர்
கருப்பண்ணன்-பொம்மலாட்டக்கலைஞர்-பெரிய சீரகாப்பாடி
செட்டியார்-முகவீணைக்கலைஞர்-நல்லூர்
பொன்னுச்சாமி-மிருதங்கக் கலைஞர்-அழகப்பன் பாளையம் புதூர்
குஞ்சுகண்ணு-முகவீணைக்கலைஞர்-கன்னந்தேரி
பொன்னான்-கூத்துக்கலைஞர்-குஞ்சாண்டியூர் சமத்துவபுரம்
நிகழ்வில்.....
மாயவன் -குருநாதன் -செல்லப்பன்
ராமாநுஜம் - பிரளயன்- லெனின்- ரவீந்திரன்
ராசேந்திரசோழன்- நாஞ்சில்நாடன் - தேவேந்திரபூபதி
ராஜாரவிவர்மா - முருகபூபதி- கமலக்கண்ணன்
லக்ஷ்மிசரவணக்குமார்
நன்றியுரை-மு.ஹரிகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------
அமர்வு-4மாலை -6-30மணி
ஹரிச்சந்திரா- தோற்பாவை நிழற்கூத்து
வழங்குபவர்-கணேசன் -அம்மாபேட்டை
உதவி-ரமேஷ்-அம்மாபேட்டை
மிருதங்கம்-நடராஜன்-அம்மாபேட்டை
முகவீணை குமார்-மணியாரன் கொட்டாய்
ஹார்மோனியம் - தருமன்-அம்மாபேட்டை
---------------------------------------------------------------------------------
8 மணிக்கு-இரவு உணவு
அமர்வு-5 இரவு-9-00 மணி
துரோபதை வஸ்திரபங்கம்-கூத்து
பங்கேற்பு
ஏகாபுரம் சுப்ரு- கூலிப்பட்டி சுப்ரமணி
மெய்வேல்-நொறுக்கம்பாளையம்
ஐயந்துரை-கோரைக்காடு
சின்னு-கோரைக்காடு
செல்வம்-கரட்டூர்
கனகு-பாச்சாலியூர்
தருமன்-சீரகாப்பாடி
சீனிவாசன்-கோழிக்காட்டானூர்
செந்தில்-சேடப்பட்டி
தாளம்-குழந்தையப்பன்-ஒண்டிக்கடை
தாளம்-சுந்தரம்-கோனேரிப்பட்டி
ஹார்மோனியம்-மணி- காட்டூர்
முகவீணை-செல்வம்-கண்டர்குல மாணிக்கம்
மிருதங்கம்- சேகர்-கூடலூர்
சிறப்பு செய்வோர்
பெருமைக்குரிய வாத்தியார்கள-மதிப்பிற்குரிய படைப்பாளர்கள்
நிகழ்விடம்
சேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது
தொடர்புக்கு
இர.தனபால்
அறங்காவலர்
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
9677520060
9894605371
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன
------------------------------------------------------------------------------------------
மணல்வீடு நடத்தும் நூல் அறிமுக கூட்டம்
நாள்-11-1-2015
நேரம்-காலை-10-30 மணி
நிகழ்விடம்-சந்திரலேகா ஸ்பேசஸ்-நெ.1-பெசன்ட் நகர் பீச்- சென்னை
மாயப்பட்சி-கவிதைப்பிரதி-பா.ராஜா
நூல் அறிமுகம்-வெய்யில்-நறுமுகை ராதாகிருஷ்ணன்
மூன்றாம் துலுக்கு-சிறுகதைப்பிரதி-மயூரா ரத்தினசாமி
நூல் அறிமுகம்-ஜே.பி.சாணக்யா-இளங்கோகிருஷ்ணன்
அழிபசி- கவிதைப் பிரதி- தவசிக்கருப்பசாமி
நூல் அறிமுகம்-தமிழச்சி தங்கப்பாண்டியன்--கரிகாலன்
அமர்வை சிறப்பிக்க
பெருமாள் முருகன்
அப்பணசாமி
பாலசுப்ரமணியம்
வடிவேல்
ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி நவிழ்தல்
விவேகானந்தன்
தொடர்புக்கு
9677520060
9894605371


குறுநகை 
எல்லோரும் நலம் என்றே நினைக்கேன்..



நூலக புத்தகங்கள் சரிபார்ப்பு, பதிவேடுகள் பராமரிப்பு கணிப்பொறி வேலை என பள்ளி இந்த கல்வியாண்டின் குறும் பருவத்தின் நிறைவில் கால் வைக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கும் நான் அடுத்த பருவத்திற்கும் தயாராகிற புள்ளியில் இருப்பதால் பதிவுகள் காத்திருக்கின்றன.

உங்கள் பதிவுகளை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் எனினும் எனக்கு பதிவிடகொஞ்சம் இடைவெளி தேவைப்படுகிறது இத்துணைக்கும் கானகன் மற்றும் நரனின் கவிதைத் தொகுப்புகளைப் படித்து அவற்றைப் பற்றிய என்னுடைய வாசிப்பு அனுபவத்தை தயாராக வைத்திருந்தாலும் உள்ளிட தாமதம் ஆகிறது.

தேவதைகள் வீடும், காணமல் போன கவிதைகளும் அப்படியே ... இன்னபிற திரைப்படங்கள், அறிவியல் பதிவுகள் நீண்ட காத்திருப்பில் இருக்கின்றன!
எல்லாம் வரும் விரைவில்.

நன்றிகளுடன் 
அன்பன் 
மது

Comments

  1. நிறைய விஷயங்கள்... நிறைவாய்...
    உங்கள் பணி முடித்து வாருங்கள்... வாசிக்க காத்திருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர்

      Delete
  2. மெமரிகார்டு பல தகவல்களைக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது . அதுவும் சேலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைதெரிவித்தமைக்கு நன்றி அண்ணா !!

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒருமுறை சேலம் வந்துள்ளேன் ஒரு பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒரு சி.டி கடை இருந்தது .... அத்துணைத் தரமாக இருந்தன சீடிக்கள்.. நல்லபடங்கள் சிலவற்றை நல்ல பிரிண்டில் வாங்க முடிந்தது..

      Delete
  3. குறுநகை புரிய வைக்கும் அருமைடான தகவல்கள்..

    ReplyDelete
  4. கடைசிப் படம் அழகு.
    உங்கள் வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, பதிவுகளை எழுதுங்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க உண்மையானவரே
      வருகைக்கு நன்றி

      Delete
    2. நீங்க சொல்றதைப் பார்த்தால் அவரை பொய்யானவர்னு சொல்றது மாதிரி இருக்கு...

      Delete
    3. கு வில் ஆரம்பித்து ம் முடியும் ஒரு பத்திரிக்கை இதைதான் செய்யும்... எதார்த்தமா பேசினா அடுத்தவர்களிடம் பதார்த்தமாக போட்டுவிட்டு எண்டா வாயத் திறந்தோம் என்று யோசிக்க வைக்கும்

      இப்போது அதை பாரதிராஜா மணிவண்ணன் மேட்டரில் ஆ வியும் செய்து காட்டியது..

      இப்போ உங்க முறை என்ன அண்ணாத்தே..
      வேணாம் அண்ணாத்தே மீ பாவம்
      வலிக்குது
      அவ்வ்வ்வவ் ...

      Delete
  5. வணக்கம்
    மனதை கவரும் கதையாக உள்ளது.. ஏனைய தகவலையும் பகிர்ந்துள்ளீர்கள் நானும் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழர் ரூபன்
      வருகைக்கு நன்றி

      Delete
  6. அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர்.

      Delete
  7. Replies
    1. வாக்கிற்கு நன்றி

      Delete
  8. மெமரி கார்ட் தலைப்பு அருமை
    ஷான் கருப்பசாமி முகநூல் பக்கம் உங்கள் மூலம் எட்டிப் பார்த்தேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. அய்யா
      வருக
      வணக்கம்
      ஷான் தனது தொழில் நுட்பக் கட்டுரைகளுக்காக பிரபலமானவர்.
      அவரது தளம் சென்றுள்ளீரா ?
      நன்றிகள்

      Delete
  9. அனுபவித்துப் பகிரும் விதம் மிகச் சிறப்பு சகோதரரே!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி...

      Delete
  10. எப்படி ? தோழரே இவ்வளவு விடயங்கள் கொடுக்கிறீர்கள் ? ஆச்சர்யமாக இருக்கிறது தொடரட்டும் வருகிறேன்
    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. வருக தோழர்
      நன்றி வாக்கிற்கும் வருகைக்கும் வியப்பிற்கும்

      Delete
  11. நல்ல விசயங்கள்! அதுவும் அந்தப் புகைப்படம் ஆஹா! அருமை! அழகு!

    வாங்க நண்பரே! தங்கள் பணி தீர்த்துவிட்டுப் பதிவிடுங்கள்! நாங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. வருக தோழர்
      நலம் தானே..

      Delete
  12. அன்புள்ள அய்யா,

    மெமரி கார்ட் 3-இல் சிறுகதைத் தொகுப்பு தாழி என்கிற பெயரில் இப்போது நிலமிசைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது அறிந்தேன்.

    சிறிதளவு எல்லோரையும் நேசியுங்கள், சிறிதளவு எல்லோரையும் சந்தேகியுங்கள் .... எல்லோரையும் வெறுத்தும் ஒதுக்க வேண்டாம்... எல்லோரையும் எளிதில் நம்பிவிடவும் வேண்டாம் என்று நல்ல சிந்தனையைப் பகிர்ந்தீர்கள்.
    களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
    நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா பற்றிய செய்தி அறிந்தேன். மகிழ்ச்சி.

    ஒன்றாய் இருக்கும் விலங்குகள்....
    விலங்குகளை மாட்டிக்கொண்டு
    வில(க்)கி நிற்கும் மனிதர்கள்!
    படமே பாடமாய்.... அருமை.
    நன்றி.

    ReplyDelete
  13. #நான் தொகுப்பை ஸ்பரிசிக்க கிளர்வுடன் காத்திருக்கிறேன். #விரைவில் ஸ்பரிசித்து எங்களுக்கும் கிளர்ச்சி ஊட்டுங்கள் :
    த .ம 8

    ReplyDelete
  14. அவசரமான உலகில் அவசரம் அவசரமாய் ஒரு ப்திவு.
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. கரீட்டா சொன்னீங்க

      Delete
  15. முக நூலில் கிசு கிசு கூட உண்டா? மெமரி கார்ட் தகவல்கள் சிறப்பு! அந்த பூனை-நாய்க்குட்டி படம் அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுவாமிகள்

      Delete
  16. பதிவுக்கு முத்தாய்ப்பு நிறைவில் உள்ள புகைப்படம்.

    ReplyDelete
    Replies
    1. முனைவருக்கு நன்றி ..

      Delete
  17. இன்றைய " மெமரி கார்ட் " அளவை வைத்து மதிப்பிடக்கூடாது...உள்ளே அவ்வளவு விசயங்களை அடக்கலாம்...

    உங்கள் பதிவும் அப்படியே !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete

Post a Comment

வருக வருக