வணக்கம்
கடந்த வாரம் சுமார் நூறு படங்களை உள்ளிட்டிருப்பேன் அவற்றில் ஒன்று
ஜேசிஐ புதுக்கோட்டை சென்ட்ரலில் குட்டீஸ்! |
நல்ல ஜோக் ஒன்று
நேற்று காரிகன் அவர்களின் பதிவை படிக்கையில் அதில் "எங்கள் ஊர் பிரகதாம்பாள் தியேட்டர்" என்று எழுதி இருந்தார்.ஜிலீர் என்றது எனக்கு ... ஏன் என்றால் காரிகன் ஒரு மாபெரும் இசை எழுத்தர். அவரது தளத்தில் எனது எனது முக நூல் கணக்கையும் மின்னஞ்சலையும் தந்துவிட்டு கொஞ்சம் ஜேசி கடமையை பார்த்துகொண்டிருந்தேன்.
திடீரென சந்திர சேகர் எனும் புது நட்பு வரவே அனேகமாக காரிகனாக இருக்கும் என்று நட்பினேன்..
உள்டப்பியில் வந்த சார் அடுத்த பதிவு எப்போ என்றார்?
இன்னாது நமக்கு இப்படி ஒரு ரசிக கண்மணியா!
அடுத்து உப்பு நீர் முதலை - நரனின் கவிதை தொகுப்பு என்றேன் ..
சார் நம்பர் வேணுமே
கொடுத்தேன்
ஒரு அழைப்பு
நான்: ஹலோ காரிகன் அய்யாவா?
குரல் : ஹலோ காரிகன் அய்யாவா?
இன்னாது நமக்கு இப்படி ஒரு ரசிக கண்மணியா!
அடுத்து உப்பு நீர் முதலை - நரனின் கவிதை தொகுப்பு என்றேன் ..
சார் நம்பர் வேணுமே
கொடுத்தேன்
ஒரு அழைப்பு
நான்: ஹலோ காரிகன் அய்யாவா?
குரல் : ஹலோ காரிகன் அய்யாவா?
(எக்கோ அடிக்குதே என்று சந்தேகம் வர)
நான் மீண்டும்: காரிகன் தானே பேசுறீங்க?
குரல் : காரிகன்தானே பேசுறீங்க?
தட் அவ்வ்வ்வவ்வ்வ் மொமென்ட் ...
சார் நான் மது மலர்த்தரு தளம் என்று சொல்ல
அப்போ நீங்க காரிகன் இல்லையா என்றார் ?
நண்பர் வார்த்தை விருப்பம் (காரிகனின் அவர்களின் தளம்) நான் அவருக்கு கொடுத்த முகநூல் முகவரியை வைத்து என்னைத் தொடர்ந்துவந்திருக்கிறார்.
காரிகன் குறித்து ஒரு அரைமணி நேரம் பேசியிருப்போம்..
அலோ உங்கள மாதிரி நானும் காரிகன் ரசிகன்தான்பா என்று சொல்ல இருவரும் சிரித்தோம் ..
எழுதுனா இப்படி எழுதனும் ... ஹாட்ஸ் ஆப் காரிகன் அய்யா...
மீண்டும் காரிகனின் தளம்
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in
நான் மீண்டும்: காரிகன் தானே பேசுறீங்க?
குரல் : காரிகன்தானே பேசுறீங்க?
தட் அவ்வ்வ்வவ்வ்வ் மொமென்ட் ...
சார் நான் மது மலர்த்தரு தளம் என்று சொல்ல
அப்போ நீங்க காரிகன் இல்லையா என்றார் ?
நண்பர் வார்த்தை விருப்பம் (காரிகனின் அவர்களின் தளம்) நான் அவருக்கு கொடுத்த முகநூல் முகவரியை வைத்து என்னைத் தொடர்ந்துவந்திருக்கிறார்.
காரிகன் குறித்து ஒரு அரைமணி நேரம் பேசியிருப்போம்..
அலோ உங்கள மாதிரி நானும் காரிகன் ரசிகன்தான்பா என்று சொல்ல இருவரும் சிரித்தோம் ..
எழுதுனா இப்படி எழுதனும் ... ஹாட்ஸ் ஆப் காரிகன் அய்யா...
மீண்டும் காரிகனின் தளம்
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in
---
சொத்து குறித்த இந்திய மனநிலை மாறிவருகிறதா?
தகப்பன்மார்கள் செய்கிற மாபெரும் தவறுகளில் ஒன்றாக சொத்து சேர்ப்பது இருந்துவருவதை வாரிசுகள் நிருபித்து வருகிறார்கள்.
மனித உறவுகள், நட்பு எல்லாவற்றையும் காலில் போட்டு மிதக்கிறது பலரின் சொத்தாசை ...
உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட்
நான் திராளான சொத்தை எனது வாரிசுகளுக்கு விடப்போவதில்லை, ஆனால் அதை எப்படி திரட்டுவது என்கிற அறிவையே அவர்களுக்கு கொடுப்பேன் என்கிறார் ...
இந்தியர் படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது...
--
டிசம்பர் 8,2014
நேற்று கொடிநாள் விழா மற்றும் பாரதி விழாவையும் ரோட்டரிகிரௌன் சிட்டி சங்கம் மற்றும் கவிராசன் அறக்கட்டளை இணைந்து நடத்தியது தெரிந்த விசயம்.
நெகிழ்வான விசயம் என்னவென்றால் முன்னாள் ராணுவத்தினரின் இல்லாள்கள் இருவருக்கு ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு பெண்மணிகளின் பொருளாதார நிலை அவர்களின் உடையிலேயே தெரிந்தது..
மனசை ரணபடுத்திய விஷயம் அது.
எங்களுடைய பங்களிப்பு இல்லாமல் தரப்படும் ஒரு மாச மளிகை சாமான்கள் எங்களில் பலபேர்க்கு குற்ற உணர்வையும் எங்களிடம் பங்களிப்புகள் எதுவும் கேட்காமல் விட்டுவிட்ட நண்பர் முருக பாரதி மீது கோபத்தையும் வரவழைத்தது.
விழாவின் சிறப்பு விருந்தினர் சங்கர ராம பாரதியின் பேச்சின் இடையே எல்லோருக்கும் வணக்கம் சார் நான் போய்ட்டுவரேன் என்று கூறி விழாவின் பாதியில் விடைபெற்றார் அவர்களில் ஒரு பெண்மணி.
போகும் பொழுது அவர் விழா அமைப்பாளர் திரு.முருக பாரதியிடம் ஒரு விசயம் கேட்டிருக்கிறார் பாருங்கள்...
ஆடிப்போய்விட்டேன்...
சார் ஒரு மாச மளிகை சாமான் கொடுத்தீங்க கூடவே ஒரு பாரதி கவிதை புஸ்தகம் ஒன்னையும் கொடுத்திருக்கலாமே ....
----
வேண்டுகோள் ஒன்று
நண்பர் பிரபஞ்சனை இன்று சந்தித்தோம். அறுவை சிகிச்சைக்குப் பின் அதே உற்சாகத்தோடு அதே நகைச்சுவை உணர்வோடு சிரித்து பேசியபடி இருந்தார். அது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. தொடர்ந்து சில நண்பர்கள், அவர் எப்படி இருக்கிறார். எப்போது பார்க்கலாம். அவருக்கு எப்படி உதவலாம் என்று என்னிடம் கேட்டவாறு இருந்தார்கள். சில நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். அதன் பின் அவருக்கு தெரிவித்து விட்டு சந்திக்கலாம். அவருக்கு நண்பர்கள் உதவ ஏதுவாக, அவர் வங்கிக் கணக்கை இத்துடன் அனுப்பி உள்ளோம். மருத்துவமனை செலவுகளை பாண்டிச்சேரி அரசாங்க உதவியுடன் அவர் ஒருவாறு சமாளித்துவிட்டாலும் அறுவை சிகிச்சைக்குப் பின்னான செலவுகளுக்கு அவருக்கு பணம் தேவைப்படும். நாளெல்லாம் தமிழ் பேசி எழுதி இயங்கிய அவருக்கு இந்நேரத்தில் நம்மால் இயன்ற தொகையை அனுப்புவது நம் கடமை என்றே கருதுகிறோம்.
நான் திராளான சொத்தை எனது வாரிசுகளுக்கு விடப்போவதில்லை, ஆனால் அதை எப்படி திரட்டுவது என்கிற அறிவையே அவர்களுக்கு கொடுப்பேன் என்கிறார் ...
இந்தியர் படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது...
--
டிசம்பர் 8,2014
நேற்று கொடிநாள் விழா மற்றும் பாரதி விழாவையும் ரோட்டரிகிரௌன் சிட்டி சங்கம் மற்றும் கவிராசன் அறக்கட்டளை இணைந்து நடத்தியது தெரிந்த விசயம்.
நெகிழ்வான விசயம் என்னவென்றால் முன்னாள் ராணுவத்தினரின் இல்லாள்கள் இருவருக்கு ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு பெண்மணிகளின் பொருளாதார நிலை அவர்களின் உடையிலேயே தெரிந்தது..
மனசை ரணபடுத்திய விஷயம் அது.
எங்களுடைய பங்களிப்பு இல்லாமல் தரப்படும் ஒரு மாச மளிகை சாமான்கள் எங்களில் பலபேர்க்கு குற்ற உணர்வையும் எங்களிடம் பங்களிப்புகள் எதுவும் கேட்காமல் விட்டுவிட்ட நண்பர் முருக பாரதி மீது கோபத்தையும் வரவழைத்தது.
விழாவின் சிறப்பு விருந்தினர் சங்கர ராம பாரதியின் பேச்சின் இடையே எல்லோருக்கும் வணக்கம் சார் நான் போய்ட்டுவரேன் என்று கூறி விழாவின் பாதியில் விடைபெற்றார் அவர்களில் ஒரு பெண்மணி.
போகும் பொழுது அவர் விழா அமைப்பாளர் திரு.முருக பாரதியிடம் ஒரு விசயம் கேட்டிருக்கிறார் பாருங்கள்...
ஆடிப்போய்விட்டேன்...
சார் ஒரு மாச மளிகை சாமான் கொடுத்தீங்க கூடவே ஒரு பாரதி கவிதை புஸ்தகம் ஒன்னையும் கொடுத்திருக்கலாமே ....
----
வேண்டுகோள் ஒன்று
நண்பர் பிரபஞ்சனை இன்று சந்தித்தோம். அறுவை சிகிச்சைக்குப் பின் அதே உற்சாகத்தோடு அதே நகைச்சுவை உணர்வோடு சிரித்து பேசியபடி இருந்தார். அது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. தொடர்ந்து சில நண்பர்கள், அவர் எப்படி இருக்கிறார். எப்போது பார்க்கலாம். அவருக்கு எப்படி உதவலாம் என்று என்னிடம் கேட்டவாறு இருந்தார்கள். சில நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். அதன் பின் அவருக்கு தெரிவித்து விட்டு சந்திக்கலாம். அவருக்கு நண்பர்கள் உதவ ஏதுவாக, அவர் வங்கிக் கணக்கை இத்துடன் அனுப்பி உள்ளோம். மருத்துவமனை செலவுகளை பாண்டிச்சேரி அரசாங்க உதவியுடன் அவர் ஒருவாறு சமாளித்துவிட்டாலும் அறுவை சிகிச்சைக்குப் பின்னான செலவுகளுக்கு அவருக்கு பணம் தேவைப்படும். நாளெல்லாம் தமிழ் பேசி எழுதி இயங்கிய அவருக்கு இந்நேரத்தில் நம்மால் இயன்ற தொகையை அனுப்புவது நம் கடமை என்றே கருதுகிறோம்.
ரவிசுப்பிரமணியன் - வெளி ரங்கராஜன்
Bank Account Details:
Name : Prapanchan
Indian Bank A/c Num : 403 441 392
Peters Road Branch, Royapet, Chennai – 14.
IFSC Code : ID IB 000 R 047
CBS Code : 1302
CIF : 01 03 44 66 18
தகவல் வெளியிட்டது ரவி
___
அப்புறம் ரொம்ப முக்கியமான விசயம் விடுதல் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஒருமணி நேரத்திற்கும் கூட ஆச்சு... இனி நீங்க கட் பேஸ்ட் பண்ணிக்கலாம்!
குறுக்கு வழி
Bank Account Details:
Name : Prapanchan
Indian Bank A/c Num : 403 441 392
Peters Road Branch, Royapet, Chennai – 14.
IFSC Code : ID IB 000 R 047
CBS Code : 1302
CIF : 01 03 44 66 18
தகவல் வெளியிட்டது ரவி
___
அப்புறம் ரொம்ப முக்கியமான விசயம் விடுதல் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஒருமணி நேரத்திற்கும் கூட ஆச்சு... இனி நீங்க கட் பேஸ்ட் பண்ணிக்கலாம்!
குறுக்கு வழி
சந்திப்போம்
அன்பன்
மது
அன்பன்
மது
ஒருவாரத்துல இவ்ளோ விஷயங்களா !! அருமை அண்ணா ! உங்களின் முகநூல் கணக்கு விபரம் கொடுத்தீர்களென்றால் நானும் நட்புகோரிக்கை அனுப்புவேன் !!
ReplyDeleteமுதல் வருகைக்கு முதல் நன்றி ..
Deleteமுகநூலில் இணைந்ததற்கு நன்றி
நாமெல்லாம் ஒரே கண்ட்ரி ! நமக்குள்ள எதுக்குணா நன்றி !
Deleteசும்மாநாச்சுக்கும் சொன்னேன்ணா ! நான் தான் உங்க கிட்ட நன்றி சொல்லனும்
ரேடியோ கால இசையை நானும் ரசித்தேன் !
ReplyDeleteத ம 2
நன்றி பகவானே
Deleteஅருமையான விடயங்கள். நட்பு மலர எவ்வளவு ஆனந்தம் இல்லையா சகோ ! ஆனந்தம் தொடரட்டும் வாழ்த்துக்கள் .....!
ReplyDeleteவீட்டில் ஒரு முக்கியமான விசேஷத்தை வைத்துக்கொண்டிருந்தாலும் தளம் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி
Deleteசுவையான தகவல்களின் தொகுப்பு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம் மாம்ஸ்
ReplyDeleteஇப்படி எல்லாம் கலக்கினா எப்படி? எல்லாம் விசயமும் ஒரே பதிவில். மிகவும் ரசித்து படித்தேன். நட்புகள் மலருவதில் அவ்ளோ மகிழ்ச்சி.
வணக்கம் மாப்ஸ்...
Deleteகலக்கல் கொஞ்சம் அதிகம்தான்
நண்பர் மது,
ReplyDeleteஇவ்வளவு நடந்திருக்கா? ரொம்ப நன்றி.
உங்கள் முகநூல் வந்து பார்த்தேன். அந்த சந்திர சேகர் யாரென்று தெரிந்து கொண்டேன். நம் நண்பர்தான்.
மற்றவர்களைப் பாராட்டுவதிலும் உங்களைப் சிலரே மிகவும் தாராளமாக இருக்கிறார்கள். இதுவன்றோ பண்பு!
நன்றி இசைப்பதிவரே ....
Deleteமுக்நூலில் உங்களைத் தேடுகிறேன் ...
"//சொத்து குறித்த இந்திய மனநிலை மாறிவருகிறதா? //" - கண்டிப்பாக மாற வேண்டும்.
ReplyDeleteஅணைத்து தகவல்களும் அருமை.
நன்றி உண்மையானவரே
Deleteஅருமையான தகவல்கள் நண்பரே
ReplyDeleteநன்றி
நன்றி தோழர்
Deleteதம 3
ReplyDeleteஆச்சரியமா இருக்கு உங்களை நினைச்சா சகோ!
ReplyDeleteஎப்படி இத்தனை விடயங்களை அவ்வளவு சீக்கிரத்தில உங்களால
சேகரிசுட முடிகிறது..!
அவசியமான அருமையான விடயங்கள் அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
நான்கு நாட்கள் காப் இருக்கே சகோதரி ...
Deleteகொஞ்சம் சேகரித்தேன் அவ்வளவே
நன்றி
நகைச்சுவை ஸூப்பர் தோழரே.. நல்ல விசயங்களும் கூடவே,,,, வலைச்சரம் வருக...
ReplyDeleteஆகா வலைச்சரம் வராமலா.. வருகிறேன்
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteநான் புதுக்கோட்டையில் 1986-87- களில் புள்ளியியல் துறையில் 10ஏ ஒன்னாக தற்காலிகமாக ‘களப் பணியாள’ராகப் எட்டு மாதங்கள் பணியாற்றினேன். (‘பிரகாதாம்பாள் தியேட்டர்’ என்றே நினைக்கின்றேன்) அதன் அருகில் அலுவலகம் இருந்தது. மணவையிலிருந்து திங்கள் கிழமை புதுகை வருகை புரிந்து அங்கேயே அலுவலகத்தில் தங்கியிருந்து... அந்த மாவட்டத்தில் உள்ள எட்டு ஊர்களுக்குச் சென்று பனைமரக்கணக்கெடுக்க வேண்டிய வேலை... இரவில் அலுவலகத்திலேயே தங்கிக் கொள்வேன். வெள்ளியன்று வீடு திரும்புவேன். ‘நாணாஸ்’ என்று பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்து நடத்திய தேநீர் கடையில் தினந்தோறும் தேநீர் குடிப்போம். மிக நன்றாக இருக்கும். இரண்டு தேநீர் கடைகளில் தேநீர் குடிப்போம். அவ்வளவு அருமையாக இருக்கும். அது போல தேநீர் சுவையாக டீக்கடைகளில் குடிக்கவே இல்லை.... இப்பொழுது அந்தக் கடைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. கும்பகோணத்து நண்பர் திரு.சேவியர் அந்த அலுவலகத்தில் பணியாற்றினார். அவரும் நானும் சேர்ந்து மாலையில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சாலைவழியாக ஒரு சுற்று சுற்றி வருவது தினந்தோறும் நடக்கும் வழக்கும்.
எம்.ஜி.ஆர். இற்ந்து ஜானகி அம்மாள் முதல்வராக இருந்த பொழுது தியேட்டருக்கு சிறிது தூரத்தில் இருக்கும் மைதானத்தில் திருமிகு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் கூட்டம் கேட்டிருக்கிறேன். அப்பொழுது அவரே முதல்வர் போல மரியாதை கொடுக்கப்பட்டது. ‘பிரகதாம்பாள் தியேட்டர்’ என்றவுடன் பழையன கழியாமல் இருந்தது நினைவில் நிழலாடியது.
‘எங்களுடைய பங்களிப்பு இல்லாமல் தரப்படும் ஒரு மாச மளிகை சாமான்கள் எங்களில் பலபேர்க்கு குற்ற உணர்வையும் எங்களிடம் பங்களிப்புகள் எதுவும் கேட்காமல் விட்டுவிட்ட நண்பர் முருக பாரதி மீது கோபத்தையும் வரவழைத்தது.’
-உண்மையான சமூக அக்கறை தங்களின் எழுத்தில்...!
நன்றி.
அய்யா மணவையாரே
Deleteபுதுகை என்கிற ஒரு வார்த்தை இத்துணை நினைவுகளை உங்களிடம் கிளரிவிட்டதா..?
ஆகா உங்களுக்கு பின்னால் அய்யா காரிகன் அவர்களின் பின்னூட்டத்தையும் பாருங்கள் உங்கள் இருவரையும் விட்டால் என்னுடைய உணவகப் பதிவு எல்லாவற்றையும் காலி செய்துவிடுவீர்கள் போல ..
அன்புள்ள அய்யா,
Deleteதிரு.காரிகன் அய்யா அவர்களின் பின்னூட்டத்தையும் பார்த்தேன், நன்றி. இரண்டு தேநீர் கடைகள் இருந்தது. ஒன்று மோகன்ஸ் கபே என்று நினைக்கிறேன். மோகன்ஸ் கபே ஒரு வேளை உணவுவிடுதியாக இருந்தால்... அதில் நாங்கள் டிபன் சாப்பிடுவோம்.... பிரபலமான ஹோட்டல்.... ஒருமுறை நண்பர் திரு.கும்பகோணம் நண்பர் சேவியர் அவர்களுடன் டிபன் சாப்பிட்டுவிட்டு... பில்லைக் கையில் வைத்துக்கொண்டு முதலாளியிடம் ஒரு பொங்கல்...இரண்டு இட்லி காபி எவ்வளோ? என்று கேட்டார். கல்லாவில் இருந்தவர் கணக்கு போட்டு ஒரு தொகை சொன்னார். பில்லை காண்பித்தார் ... பில்லில் தொகை அதிகமாக இருந்தது.... அப்பொழுதெல்லாம் பில் எழுதித்தானே கொடுப்பார்கள். பிறகு உரிய தொகையைக் கொடுத்துவிட்டு வந்தோம். ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடவேண்டும் என்று சொல்வார்களே அது அப்பொழுது நினைவுக்கு வந்தது!
இருந்தாலும்கூட எப்பொழுதும் பில்களை செக் பண்ணுகிற வழக்கம் என்னிடம் இருந்தது இல்லை. இப்பொழுதான் கணிணி வந்துவிட்டதே. தவறாக இருக்காது என்கிற நம்பிக்கை.
இதற்கு முந்தைய பதிவை எழுதிகிற பொழுது... நாம ஒன்று எழுதினால் இவன் சம்பந்தமே இல்லாமல் இவன் கதையை எழுதிக் கொண்டிருக்கிறானே என்று சங்கடப்படுவீர்கள் என்று நினைத்தேன்... எழுதி வெளியிட்ட பிறகுதான் நினைத்தேன். பவாயில்லை... அப்படி நினைக்காததற்கு மிக்க நன்றி.
சுவையான தகவல்கள் சார்.
ReplyDeleteஅய்யா காரிகன் அவர்களை வாசிக்கிறேன்...
வணக்கம் பரிவை
Deleteநான் எழுதிய கடிதங்களை மதுரையில் படித்த எனது நண்பர் கார்த்திக் படித்துவிட்டு டி குடித்து விட்டு படிப்பார்...
இப்போ அய்யா காரின்கனின் பதிவுகளை படிக்கும் பொழுது அது தான் நினைவுக்கு வருகிறது
திரு மணவை ஜேம்ஸ்,
ReplyDeleteஇனிப்பான பல பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள். புதுகை ராஜ வீதியில் மாலை நேரங்களில் ஒரு நடை போய்வந்தாலே எதோ நியுயார்க் வீதிகளைச் சுற்றியது போல மகிழ்ச்சி கிடைக்குமே. வரும் வழியில் அந்த பட்டதாரி இளைஞர்களின் மோகன்ஸ் கபே வில் ஒரு தேநீர் அல்லது காபி அருந்துவது ஆஹா... 15 பைசாவுக்கு இத்தனை சுகமா என்று எண்ணத் தோன்றும். மோகன்ஸ் கபே வைத்தான் நீங்கள் நானாஸ் என்று சொல்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அதே தெருவின் மூலையில் இருந்த மற்றொரு கடைதான் நானாஸ். நீங்கள் சொல்வதுபோல மோகன்ஸ் டீ, காபி போன்று நான் வேறு எங்கும் கண்டேதேயில்லை. அத்தனை அமிர்தமான சுவை. அவர்கள் சங்கர் கணேஷ் ரசிகர்கள். பெரும்பாலும் அவர்களது பாடல்களே அங்கு டேப்பில் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கு எதிரில் இருந்த சக்தி மியுசிகல்ஸ் தான் எங்களது புண்ணிய தலம். இப்போது இருக்காது என்று நினைக்கிறேன்.
நிறைய பேசத் தோன்றுகிறது. பார்க்கலாம் பிறகு.
பதினைந்து பைசாவிற்கு டீ ?
Deleteநாங்கள் காலையில் தனிபயிற்சி செல்வதாக கூறிவிட்டு ஐந்தரை மணிக்கெல்லாம் பாடல்கள் அலறும் (புதுப் புது அர்த்தங்கள்) மோகன்ஸ் கபேவில் காபி அருந்திய பொழுது அதன் விலை இரண்டு ரூபாய்!
இப்போது மோகன்ஸ் கபே இல்லை (இரண்டு பெரும் சிக்கல்கள் நிகழ்ந்ததால்) அந்தக் கடையில் பணியில் இருந்த அவர் உறவினர்கள் இருவர் இப்போது இரண்டு கடைகளாக நடத்தி வருகின்றனர்.
ஹலோ மது
ReplyDeleteகுணசேகர் என்பவர் உங்கள் தளத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் . ஒருவேளை அதுவும் நீங்கள்தானா? இதற்கு முன்னாலும் உங்கள் தளத்தை அலசி இருக்கிறேன் . ஒரு சமூக அக்கறை உள்ள மனிதர் நீங்கள் என்பது உங்களின் எழுத்துக்களில் தெரிகிறது . காரிகன் அவர்களோடு கைகோர்த்திருக்கிறீர்கள். ஒரே ஊர்காரர் ஆகிவிட்டீர்கள் . எனக்கும் புதுக்கோட்டை பரிச்சயம்தான் ! அடிக்கடி நானும் வந்திருக்கிறேன் . என் பெரியம்மா பையனோடு நானும் அந்த மோகன்ஸ் கபேயில் தேநீர் அருந்தி இருக்கிறேன் . பிரஹதம்பாவில் படம் பார்த்திருக்கிறேன் . உங்களோடு சேர்ந்து பழைய நினைவுகளை நானும் அசை போடுகிறேன் .
வருக திரு சால்ஸ்
Deleteகாரிகனின் பரந்துபட்ட இசை ரசனை எனக்குப் பிடிக்கும் ... தமிழைத் தாண்டிய குறிப்பாக நான் தமிழுக்கு இணையாக ரசிக்கும் பல ஆங்கிலப் பாடல்களை காரிகனின் பதிவு மூலமே அறிந்தேன்..
அத்துடன் எல்லோரும் எழுதுகிற பொழுது காரிகன் செதுக்குகிறார் என்கிற எண்ணமும் எனக்கு உண்டு.
இதெயெல்லாம் அறிந்த பின்னர் தான் அவர் பல ஆண்டுகள் புதுகையில் இருந்தவர் என்கிற விவரம் தெரியும்.
பதிவுகள் பின்னூட்டங்கள் மூலம் தான் தொடர்பு.
அவர் எழுதுவது உங்களுக்குப் ஒருவேளை (?) பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் எனது ரசனைக்கு அது உன்னதமான எழுத்தாக தெரிகிறது. எனவேதான் அவரை கொண்டாடுகிறேன். அப்புறம் நீங்கள் இளையராஜாவிடம் காசு வாங்காத வக்கீல் மாதிரி பல விசயங்களை சொல்கிறீர்கள்.
எனக்கு உறுதியாகத் தெரியும் ஓராயிரம் பதிவுகள் அவரை ஆதரித்து வந்தாலும் அவரது இடம் இன்னும் மேலே போகப் போவது இல்லை. அல்லது ஒருகோடி பதிவுகள் அவரை திட்டி வந்தாலும் அவரது புகழ் மங்கப் போவது இல்லை. அவர் ஒரு தனிப் பிறவி. அவரை சார்ந்து எழுதுகிற பொழுது மிகக் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
அடுத்த தலைமுறை படிக்கிற பொழுது ராஜாவின் இசையை இன்னொரு இருபதாண்டுகள் கழித்தும் தேடிக் கேட்க வேண்டியது போல் எழுதவேண்டிய கடமை ராசாவை ரசிக்கும் பதிவர்களுக்கு இருக்கிறது. உங்களிடம் இந்த திறன் தென்படுகிறது. வாழ்த்துக்கள் தொடர்வோம்
மது,
ReplyDeleteஆம். 15 பைசாவுக்கு டீ. 25 பைசாவுக்கு காபி மோகன்ஸ் கபே வில் அப்போது. அதாவது எனக்கு நினைவு தெரிந்த அன்று. அங்குதான் கன்னிப்பருவத்திலே படத்தின் நடைய மாத்து பாடலை அதிரடியாக கேட்டு ரசித்திருக்கிறேன். பின்னர் 35,50,75,1.00 என்று விலை ஏறியது நான் கண்ட உண்மை. அவர்கள் இப்போது பிரிந்து விட்டார்கள் என்பது நடைமுறை யதார்த்தமே. Can good things remain the same always?
காலை ஐந்தரை மணிக்கு கேளடி கண்மணி என்கிற பாடல் ஒரு ப்ரௌன் நிற ஒலிபெட்டியில் இருந்து அதீத சப்தத்துடன் ஒலிக்கும். தேநீர் கேட்டால் அதில் கொஞ்சம் பூஸ்ட் தூவித் தருவார்கள்.
Deleteஇதற்காகவே வாடிக்கையாளர்கள் பலர் உண்டு.
இதற்கு எதிரே இருந்த சக்தி காசெட்ஸ்? நினைவடுக்குகளைத் தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை.
ஆனால் இதற்கு அருகே இருந்த பி.வி.ஆர். ரெக்கார்டிங் சென்ட்டர் எனது உண்டியல் சேமிப்பை பலமுறை பதம் பார்த்திருக்கிறது. இன்னமும் இருக்கின்றன அந்த காசட்ஸ் !
நான் மிகவும் மதிக்கும், ரசிக்கும் நண்பர் காரிகன் பற்றி மிக சுவாரஸ்யமாக எழுதி ஆர்ம்பித்துள்ளீர்கள்.
ReplyDeleteதமிழ் மற்றும் ஆங்கில இசை அறிவுடன் வசிய எழுத்தும் கைக்கூட பெற்றவர் காரிகன்.
" பிள்ளைகள் நன்றாக இருக்க சொத்து சேர்க்கிறேன் " என்பதைவிட முட்டாள்த்தனமான கடமை இருக்கமுடியாது என தோன்றுகிறது !
" சார் ஒரு மாச மளிகை சாமான் கொடுத்தீங்க கூடவே ஒரு பாரதி கவிதை புஸ்தகம் ஒன்னையும் கொடுத்திருக்கலாமே .... "
என்னிடம் வார்த்தைகள் இல்லை !
இன்று காலை எனது வலைப்பூவில் " விடாது துரத்திய விஷ்ணுபுரம் ! " பதிவுக்கான பின்னூட்டத்தில் நண்பர் புதுவைவேலு " நமது புதுவையின் பிரபஞ்சனை எப்படி மறந்தீர்கள் " என உரிமையாக கோபப்பட்டிருந்தார். மறக்கவில்லை என தொடங்கி, விடுபட்ட காரணத்தை விளக்கிவிட்டு உங்கள் தளம் வந்தால்...
அவர் குணமடைந்து எழுத்துப்பணி தொடர வேண்டுகிறேன்.
நன்றி
சாமானியன்
வருக ஸாம்
Deleteமகிழ்வான வருகை, நன்றிகள்
நண்பர் கீல்லர்ஜீ என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை என் தளம் தேடி வந்து தெரிவித்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
ReplyDeleteசாமானியன்
நன்றி தோழர்
Deleteஎப்படி மிஸ் ஆனது உங்களது இந்தப் பதிவு...ம்ம்ம்
ReplyDeleteகாரிகன் அவர்களின் தளம் வாசிக்கின்றோம். அருமையான பாடல்களைப் பற்றிய தொகுப்பு ...ஹப்பா ...
அந்த ஜோக்..ஹஹ...
ஆம்! அப்பாக்கள் மாற வேண்டும். வாரன் பஃபெட் சொல்லியிருப்பது சரியே...நல்ல ஒரு கருத்து....சொத்திற்கு மட்டும் இல்லை எல்லாவற்றிற்குமே பொருந்துமோ...ஸ்பூன் ஃபீட் பண்ணுவதற்கும் கூடத்தான்....
" சார் ஒரு மாச மளிகை சாமான் கொடுத்தீங்க கூடவே ஒரு பாரதி கவிதை புஸ்தகம் ஒன்னையும் கொடுத்திருக்கலாமே .... " மனம் நெகிழ வைத்துவிட்டது...
பிரபஞ்சன் அவர்கள் நலம் பெற பிரார்த்தனைகள்...குறித்தும் கொண்டோம்....
வருக ஆசானே..
Deleteகருத்துக்கு நன்றி
வருக வருக ... நன்றி
Deleteமது,
ReplyDeleteஆம் பி வி ஆர் என்றொரு கசெட் கடை பிறகு வந்தது. அப்போது சக்தி மியுசிகல்ஸ் இல்லை என்று நினைக்கிறேன். அதற்குள் நான் திருச்சியில் கசெட்டுக்கள் வாங்க ஆரம்பித்திருந்தேன். புதுகை பற்றி பேசினால் இது ஒரு சார்பானதாக மாறிவிடும். எதோ என்னுடைய டயரியை படித்தது போலிருக்கும்.
உங்களின் புரிதலுக்கும் என்னைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டிற்கும் எனது நன்றி.
வருக இசைப் பதிவரே
Deleteகருத்துக்கு நன்றி
தெரியாத பல செய்திகள் செவி வழி செய்தி உள்பட(செல்போன் மூலம் கேட்கும் செய்தி) தொகுப்புகள் நிறைந்த அறிவு சார்ந்த தோப்பாக அல்லவா இருக்கிறது!
ReplyDeleteஅப்பப்பா! அருமை!
தொடருவேன் இனி என்றும்!
நன்றி
புதுவை வேலு
எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாரய்!) 18/12/20014
வருக வருக ...
Deleteவருகைக்கு நன்றி
சுவாரஸ்யமான தகவல்கள்..
ReplyDeleteநன்றி சகோதரி ...
Delete